குவான் யின் நாள்
சென்ரெட்ஸிக் (திபெத்தில்) அல்லது குவான் யின், புத்த மதத்தில் எடுத்த அனைத்து அவதாரங்களையும் எனக்கு மிகவும் பிடிக்கும். எனது சிறுப்பிராயத்தில், நான் கருணை வேண்டி தியானம் இருந்ததோடு, நிறைய மந்திரங்களை ஓதுவேன். சென்ரெட்ஸிக், நான் வணங்கி வழிபட்ட புத்தர்களில் ஒருவர் என்பதை என்னால் ஒருமனதுடன் கூற முடியும்.
நான் மலேசியாவிற்கு வருவதற்கு முன்பு, எனக்கு சீன வடிவம் கொண்ட குவான் யின் மீது எப்பொழுதும் ஓர் ஈர்ப்பு இருந்தது. நான் அமெரிக்காவில் வசித்த பொழுது, குவான் யின் வரைபடம் ஒன்றை என் பூஜை அறையில் வைத்திருந்தது இன்னும் என் நினைவில் இருக்கின்றது. நான், குவான் யின் பற்றி ஜோன் ப்லோஃபெல்ட் எழுதிய புத்தகங்களைப் படித்ததுண்டு. அச்சமயத்தில், பின்னொரு நாள் நான் மலேசியாவிற்கு குடிபுகுந்து, கெச்சாரவைத் தொடங்கி புத்த சமூகத்தினரிடையே தர்மத்தைப் பகிர்வேன் என்று துளியளவும் நினைத்துப் பார்த்ததே இல்லை. மலேசிய சீன புத்த சமூகத்தினர், குவான் யின்னை பெரிதும் வழிபடுவதைக் கண்டு நான் பெரு மகிழ்ச்சி அடைந்தேன். அதன் மூலம் நான், குவான் யின் தோற்றம், அவரின் வரலாறு, அவரை வழிபடுவதன் நோக்கம் மற்றும் குவான் யின் நாள் கொண்டாட்டம பற்றி பல தகவல்களைத் தெரிந்து கொண்டேன்.
ஆகவே, குவான் யின் பற்றியும் அவரின் கொண்டாட்டங்கள், புகழ்பெற்ற கோவில்கள் மற்றும் அங்கே எப்படி செல்வது போன்ற தகவல்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். இக்கட்டுரையைப் படித்த பின், நீங்கள் குவான் யின்னை உங்கள் வீட்டிற்கு அழைத்து அவரின் சக்திவாய்ந்த பூஜைகளை மேற்கொள்வீர்கள் என்று நான் பெரிதும் எதிர்பார்க்கின்றேன். இக்கட்டுரை, மலேசியாவில் புத்த மதத்தினரால் கொண்டாடப்படும் குவான் யின் பற்றியும் அவரின் விழாக்கள் பற்றியும் ஆழமாய் தெரிந்து கொள்ள உதவும்.
திசெம் ரின்போச்சே
கருணைக்கடவுளான, குவான் யின் புத்த மதம் மற்றும் தாவோயிசத் மதத்தினரின் தெய்வமாகக் கருதப்படுகின்றார். மகாயான புத்த மத வழக்கத்தின்படி, புத்தரின் கருணை கொண்ட போதிசத்துவராக இவர் வணங்கப்படுகின்றார். மகாயான புத்த மதம் பின்பற்றப்படும் வடக்கு ஆசியான் நாடுகளில், இவரின் பல அவதாரங்களில் ஒன்றான குவான் யின் அவதாரம் மிகப் பிரபலமாகக் கருதப்படுகின்றது.
குவான் யின் மிகப்பிரபலமாகவும் பலனளிக்கும் தெய்வமாகவும் விளங்குவதால், தாவோயிசத் சமயத்தினரால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அழிவில்லாதவர் என்று போற்றப்படுவதோடு சீன தெய்வங்களில் மிகவும் பிரபலமானவராகவும் கருதப்படுகின்றார். அவர் வெள்ளை அங்கி அணிந்திருப்பதைப் போல் சித்தரிக்கப்படுகின்றார். அவரின் உருவப்படங்களைச் சுருள் ஓவியங்களிலும் வெள்ளை பீங்கான் சிலைகளிலும் காணலாம், இந்திய ஆண் போதிசத்துவரான அவலோகிதேஸ்வரரிலிருந்து குவான் யின் தெய்வம் தோன்றியதாக சீன புத்த சமயத்தினர் ஏற்றுக் கொண்டனர். புத்த மத பரிமாற்றத்தின் போது பட்டுப் பாதையின் வழி அவலோகிதேஸ்வரரின் வழிபாடு சீனாவிற்குள் கொண்டு வரப்பட்டது. ஆகையால், சில சமயங்களில் பாலினமற்ற, முத்திரைகளுக்கு அப்பாற்பட்ட, ‘நான்’ என்ற ஆணவத்தை விஞ்சியதைக் குறிப்பிடும் வண்ணம், குவான் யின் ஆணாகவும் பெண்ணாகவும் சித்தரிக்கப்படுகின்றார்.
தாமரை சூத்திரம்
அவலோகிதேஸ்வரர் அல்லது குவான் யின் பற்றிய முந்தைய பதிவுகள் சமஸ்கிருதத்தில் சதர்ம புண்டரிகா என்று அறியப்படும், தாமரை சூத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குவான் யின் அல்லது அவலோகிதேஸ்வரர் பற்றிய குறிப்புகள் இந்த பண்டைய கால சமஸ்கிருத பதிவேட்டில் அத்தியாயம் 25-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பகுதியில் அவரின் பெயர் “உலகத்தின் கண்ணீரை உணரும் ஒருவர்” என்று விளக்கப்பட்டிருக்கின்றது. இது, அவரின் குவான் ஷி யின் என்ற சீன பெயரின் நேரடி மொழிப்பெயர்ப்பாகும்.
இந்த அத்தியாயத்தில், அவலோகிதேஸ்வரர் புத்தர்களில் மிக உயர்ந்தவராக போற்றப்படுகின்றார். இந்த அத்தியாயத்தில் கூறப்படுவது என்னவென்றால், “எவரொருவர், உண்மையான பக்தியுடன் அவலோகிதேஸ்வரரை ஒரு கணம் வணங்குகின்றாரோ, அவருக்கு, எல்லா விதமான பிரசாதங்களையும் வழங்கி, கங்கை நதிக் கரையில் இருக்கும் மணல் துகள்களின் எண்ணிக்கைக் கொண்ட தெய்வங்களை வாழ்நாள் முழுதும் வணங்கினால் கிடைக்கப் பெறும் ஆசிர்வாதத்தைக் காட்டிலும் பன்மடங்கு கிடைக்கும்”. இப்பகுதியை அடித்தளமாய் கொண்டு, அவலோகிதேஸ்வரர், மகாயன புத்த சமயத்தில் மிக முக்கியமான ஒருவராய் வளரத் துவங்கினார்.
அதோடு மட்டுமில்லாமல், உலக உயிர்களுக்கு நன்மை அளிப்பதற்காக பல அவதாரங்களை எடுத்த அவலோகிதேஸ்வரரின் திறன்களை விளக்கும் பகுதி தாமரை சூத்திரத்தில், இருப்பது குறிப்பிடத்தக்கது. அவலோகிதேஸ்வரர், எந்தவொரு தோற்றத்திலும் தோன்றும் வல்லமை கொண்டவர் என்று இந்த அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, உலக தெய்வங்களான இந்திரன், பிரம்மா, சக்திவாய்ந்த அரசர்கள் அல்லது சக்கரவர்த்திகள், வைசரவண போன்ற தர்மத்தைக் காப்பவர்கள், புத்த அவதாரம், எந்தவொரு பாலினம், வயது, மனித வடிவம் அல்லது மனிதனற்ற உருவம்போன்ற வடிவங்களில் தோன்றி தர்மத்தை மானிடருக்கு போதிக்கும் திறமை கொண்டவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அவலோகிதேஸ்வரர் மற்றும் குவான் யின் ஆகிய இருவருக்கும் சீனா மற்றும் இதர கிழக்காசிய நாடுகளில் உள்ள பாரம்பரியத்தின்படி நிறைய தனித்துவமான குணாதியசங்களும் புனைவுகளும் சேர்த்துக் கொள்ளப்பட்டன. சீனாவில், ஆரம்ப சீன கலைகளில், குவான் யின் ஓர் ஆண் போதிசத்துவராக சித்தரிக்கப்பட்டதால், அவர் மார்பு வெளிப்படுத்தும் உடைகளிலும் மீசை வைத்திருப்பவராகவும் சித்தரிக்கப்பட்டார். அதன்பின், சீன கலைகள் குவான் யின்னை பெண் வடிவத்தில் சித்தரித்தனர். தாமரை சூத்திரத்தில் வழங்கப்பட்டிருக்கும் விளக்கத்தின்படி, சில பயிற்சியாளர்கள் குவான் யின் இரு பாலினமும் ஒருங்கே பெற்றவர் அல்லது பாலினம் அற்றவர் என்று நம்புகின்றனர்.
மியோஷான் புராணக்கதை
சீனாவில், குவான் யின் ஆரம்பத்தில் ஆண் வடிவத்தில் வணங்கப்பட்டாலும் பிற்காலத்தில் பெண் வடிவில் கருணை தெய்வமாக வணங்கப்பட்டார். இந்த பெண் தெய்வ மாற்றம் வடக்கு சாங் வம்சத்தின் போது (960-1126 கிபி) நிகழ்ந்ததோடு இது மியோஷான் எழுச்சி புராணக்கதையுடன் தொடர்புடையது.
வரலாற்றுக் கூற்றின்படி, மியோ ஷான் வழிபாடு முதன் முதலில் ஷியாங் ஷான் சியில் (நறுமணமுள்ள மலை மடாலயம்) ஜியாங் ஷி கி எழுதிய ஒரு கல்வெட்டின் (1031-1104 கிபி) மூலம் 1100 கிபியில் வெளிப்பட்டது. நறுமணமுள்ள மலை மடாலயம், ஆயிரம் கைகள் மற்றும் ஆயிரம் கண்கள் கொண்ட மிக அற்புதமான குவான் யின் சிலைக்கு புகழ்பெற்றதோடு, மிகச்சிறந்த கருணையான ஒன்று (டா பெய்) என்றும் அறியப்படுகின்றது. ஜியாங் தனது குறிப்புகளில், நறுமணமுள்ள மலை மடாலயத்தை, குவான் யின் தோன்றிய இடமாகக் குறிப்பிட்டிருக்கின்றார். இங்கே, குவான் யின் தனது சிறந்த கருணை தோற்றமான ஆயிரம் கைகள் மற்றும் கண்களுடன் தோன்றி மடாலயத்தைப் புனிதப்படுத்தினார். மியோ ஷான்னின் பீடம், புனித ஸ்தூபியாக புனிதமடைந்ததன் மூலம் நறுமணமுள்ள மலை மடாலயம் யாத்திரர்களின் புகழ்பெற்ற இடமாக அங்கீகாரம் பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
1164 கிபியில், புத்த சமயத்தின் குறிப்பை எழுதிய அக்கால பண்டிதர் சூ சியுவின் குறிப்பின்படி, குவான் யின், மியோ ஷான் இளவரசியாய் மறுபிறவி எடுத்ததாகக் கூறப்படுகின்றது. அவரின் தந்தை அரசர் மியோ சுவாங் யென், அவருடைய தாய் பவோ யிங் மற்றும் அவர்களுக்கு மூன்று மகள்கள் பிறந்தனர். மூத்தவர், மியோ யென், இரண்டாவது மகள், மியோ யின் மற்றும் கடைசி மகள் மியோ ஷான்.
மியோ ஷான் கருவில் இருக்கும் பொழுது, அரசியார் நிலவை விழுங்கி விட்டது போல கனவு கண்டார். குழந்தை பிறந்த பொழுது, பூமி குலுங்கியதோடு வாசமிக்க நறுமணங்கள் வீசி, வானத்திலிருந்து தெய்வலோக பூக்கள் மழை பொழிந்தது. மியோ ஷான் தெய்வோலக தெய்வங்களால் தூய்மைப்படுத்தப்பட்டது போல் மிகவும் தூய்மையாக பிறந்தார். அவரின் உடம்பில் உன்னதம் மற்றும் கம்பீரம் நிறைந்த புனித தடயங்கள் இருந்தன. மக்கள் அதிசயப்பட்டதோடு சிலர் புனித ஆத்மாவின் அவதார அடையாளங்கள் என கூறினர். அவரின் பெற்றோர் இந்த குறிகளைக் கண்டு ஆச்சரியம் அடைந்தாலும் அவர்கள் வேறு திட்டங்களைக் கொண்டிருந்தனர்.
போதிசத்துவர் பணிவான கன்னித்தன்மை உடைய துறவு பெண்ணாய் வளர்ந்தார். அவர் புத்தரின் உபதேசங்களை விரும்பி கேட்டதோடு இளவரசிகளையும் புத்த மதத்திற்குள் கொண்டு வந்தார். அவரின் தந்தை, கொடுங்கோல அரசன், ஆன்மீக நாட்டங்களிலிருந்து திசை திருப்புவதற்காக அவரை ஒரு பணக்காரனுக்கு மணமுடித்து வைக்க திட்டமிட்டார். அரசர், மியோ ஷான்னிடம் தனது திருமண திட்டத்தை வெளிப்படுத்தியபோது, இந்த திருமணம் மூன்று துர்திஷ்டங்களை போக்கினால் மட்டுமே தான் தனது தந்தையின் கட்டளையை ஏற்பதாக மியோ ஷான் பதிலளித்தார்.
அவரின் தந்தை, அந்த மூன்று துரதிர்ஷ்டங்கள் யாவை என ஆர்வத்துடன் வினவினார். மியோ ஷான், முதல் துரதிஷ்டம் முதுமை என விளக்கினார். இரண்டாவது துரதிஷ்டம் நோய் மற்றும் மூன்றாவது துரதிஷ்டம் மரணம் என விளக்கினார்., திருமணத்தால் இந்த மூன்று துரதிஷ்டங்களையும் போக்க முடியாதென்றால், தான் தனது வாழ்வை துறந்து ஆன்மிக வழியைப் பின்பற்றப் போவதாக இளவரசி அறிவித்தார்.
அவரின் விதிமுறைகளைக் கேட்டு கோபமுற்ற அரசர், தனது மகளின் உறுதியை தளர்த்துவதற்காக, அவரை அரச தோட்டத்தில் கடினமான வேலை செய்ய உத்தரவிட்டதோடு, அவரின் உணவையும் கட்டுபடுத்த உத்தரவிட்டார். ஆனாலும், மியோ ஷான் தனது உறுதியைக் கைவிடவில்லை. அவரின் தாயாரும் சகோதரிகளும் அவருடைய உறுதியை கைவிடும்படி வேண்டியபோதும், அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது. பிறகு, அவரின் தாயாரும் சகோதரிகளும் அரசரிடம் மன்றாடியதில் சற்றும் மனம் இறங்கிய அரசர், குவான் யின்னை வெள்ளை குருவி மடத்தில் நுழைவதற்கு அனுமதி அளித்தார். ஆயினும், அங்கே இருந்த மாடக்கன்னிகளிடம் மியோ ஷான்னுக்கு கடினமான வேலைகளைக் கொடுக்கும்படி உத்தரவிட்டார்.
பயந்து போன மாடக்கன்னிகள் அவருக்கு வெவ்வேறு விதமான வேலைகளைக் கொடுத்தனர் – விறகுகள் மற்றும் நீர் கொண்டு வருதல், சமையலறையில் உலக்கை, இடிக்கல் கொண்டு வேலை செய்தல் மற்றும் கோவிலின் காய்கறி தோட்டத்தைப் பராமரித்தல் போன்றவையாகும். அவரின் பராமரிப்பில் காய்கறிகள் குளிர்காலத்திலும் காய்த்ததோடு, அவை அதிசயமாக சமையலறைக்குப் பக்கத்திலேயே நேர்த்தியாக விழுந்தன. வருடங்கள் உருண்டோடிய போதும் மியோ ஷான் தனது முடிவில் உறுதியாக இருந்தார். காய்கறிகள் தோட்டத்தில் நடக்கும் அதியசங்களைப் பற்றி கேள்விப்பட்ட அரசர் கோபமுற்றார். அவர், மியோ ஷானின் தலையைத் துண்டித்து எடுத்து வருமாறும் அனைத்து மாடக்கன்னிகளையும் கொல்லுமாறு தனது வீரர்களிடம் உத்தரவிட்டார்.
வீரர்கள் கோவிலை அடைந்த பொழுது, பனிமூட்டம் தோன்றி அக்கோவிலை முழுவதும் மூடியது. பனிமூட்டம் விலகியதும், வீரர்கள் எல்லா இடத்திலும் மியோ ஷான்னைத் தேடினர். ஆனால், அவர்களால் மியோ ஷான்னைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இரக்கமுள்ள ஆத்மா ஒன்று அவரை அருகில் இருந்த மலையில் ஒளித்து வைத்ததாகவும் அவரை பல முறை இடம் மாற்றி இறுதியில் நறுமணமுள்ள மலையில் தங்க வைத்ததாகவும் அங்கே மியோ ஷான் அருகிலிருந்த மரங்களில் கிடைத்த பழங்களை உண்டும் ஓடையிலிருந்து நீர் குடித்தும் வாழ்ந்ததாகக் கூறப்படுகின்றது.
காலம் உருண்டோடியது. அரசர் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டு உறங்கவோ அல்லது உண்ணவோ முடியாமல் தவித்தார். அவர் தாளா முடியா வலியினில் அவதிப்பட்டதோடு அவரின் மேனி புண்களால் பாதிக்கப்பட்டது. அரண்மனை மருத்துவரால் அவரைக் குணப்படுத்த முடியவில்லை. அச்சமயத்தில், துறவி ஒருவர் அரண்மனைக்கு வருகை தந்து, தன்னால் அரசரைக் காப்பாற்ற முடியும் என்றார். ஆனால், அவரின் மருத்துவத்திற்கு கோபமற்ற ஒருவரின் கைகளும் கண்களும் தேவைப்பட்டது. இது நடக்கவியலாத ஒன்று என்றுணர்ந்த அரசர் ஏமாற்றமடைந்தார். அப்பொழுது அத்துறவி அரசரிடம் “நறுமணமுள்ள மலையினில், அதாவது அரசரின் தென்மேற்கு அரசாட்சியில், போதிசத்துவர் ஒருவர் ஆன்மீகத்தில் ஈடுபட்டிருக்கின்றார். உங்களின் வேண்டுகோளை நீங்கள் அவருக்குத் தெரிவித்தால், அவர் நிச்சயம் அதனை நிறைவேற்றுவார்” என்று கூறினார்.
அரசர் உடனே அரண்மனைக் காரியஸ்தரை தேவையான ஏற்பாடுகளைச் செய்வதற்கு உத்தரவிட்டார். அரண்மனை பிரதிநிதி மியோ ஷான்னிடம் சென்று, அரசரின் வேண்டுகோளைத் தெரிவித்தபோது, மியோ ஷான் “என் தந்தை மூன்று அணிகலன்களை அவமதித்ததோடு, அவர் குற்றமற்ற மாடக்கன்னிகளைக் கொன்றதன் மூலம் சங்கத்தைத் துன்புறுத்தி ஒடுக்கினார். அதன் பாவ பலன்களை அவர் தற்பொழுது அனுபவிக்கின்றார்” என்று கூறினார். பின்பு அவர் தனது விழிகளைப் பிடுங்கியதோடு தனது இரு கைகளையும் துண்டித்தார். அவற்றை ராஜ தூதரிடம் வழங்கினார். அரசர் தனது தவறான கொள்கைகளைக் கைவிட்டு தர்மத்தின் வழி நடக்கும்படி தான் புத்திமதி கூறியதாக ராஜ தூதரிடம் கூறினார்.
அந்த இரு பொருட்களும் வந்தவுடன், துறவி சீக்கிரமாக அவற்றைக் கொண்டு மருந்து தயாரித்தார். அரசர் அம்மருந்தினை உண்டவுடன் உடனேயே குணமடைந்தார். அவர் அந்த துறவிக்கு பல விதமான வெகுமதிகளை வழங்கினார். ஆயினும், அத்துறவி அவ்வெகுமதிகளை மறுத்து, “எனக்கு ஏன் நன்றி கூறுகின்றீர்கள்? உங்களுக்கு கண்களும் கைகளும் வழங்கியவருக்கு நன்றி கூறுங்கள்” என்று கூறி மறைந்தார். அத்துறவி திடீரென மறைந்ததும், ஒரு தெய்வீக சக்தியின் குறுக்கீட்டினை அரசர் உணர்ந்தார். அரசர் தனது வண்டியை வரவழைத்து, அரசியார் மற்றும் தனது இரு மகள்களுடன் போதிசத்துவருக்குத் தனது நன்றியினைத் தெரிவிக்க நறுமணமுள்ள மலைக்குச் சென்றார்.
அவர்கள் அவ்விடத்தினை அடைந்தவுடன், பேசுவதற்கு முன்பாகவே, அரசியார் தனது மகளான மியோ ஷானை அடையாளம் கண்டு கொண்டார். அவர்கள் கண்ணீர் தொண்டையை அடைப்பதை உணர்ந்தனர். மியோ ஷான், “அரசியாருக்கு மியோ ஷானை நினைவிருக்கின்றதா? என் தந்தையின் அன்பினை மனதில் கொண்டு நான் அவருக்கு எனது கண்களையும் கைகளையும் தந்து கடனை அடைத்து விட்டேன்” என்று கூறினார். இதனைக் கேட்ட மியோ ஷானின் பெற்றோர், அவரைக் கட்டியணைத்து கண்ணீர் சிந்தினர். அரசியார், தனது நாக்கினால் மியோ ஷானின் கண்ணீரைத் துடைக்க முற்பட்டபோது, தெய்வீக அதிசயம் ஒன்று அவர்களின் முன் நிகழ்ந்தது. தெய்வலோக மேகங்கள் அவர்களைச் சுற்றி படர்ந்து, வானத்திலிருந்து தெய்வீக இசையொன்று கேட்க, பூமி அதிர்ந்து தெய்வீக பூக்களின் மழை தூவியது.
மியோ ஷான், ஆயிரம் கைகள் மற்றும் ஆயிரம் கண்கள் கொண்ட குவான் யின்னாக மாறி காற்றில் மேலெழும்பி செல்ல துவங்கினார். பல்லாயிரக்கணக்கானவர்கள் வானில் தோன்றி, அவரின் கருணையைப் புகழ்ந்து பாடினர். அவர்களின் பாடல்கள் மலைகளையும் நதிகளையும் குலுக்கின. திடுமென, போதிசத்துவர் மீண்டும் மியோ ஷானாக மாறி புறப்பட்டார். அரசரும் அரசியும் மற்றும் இரண்டு சகோதரிகளும் இறுதி சடங்கைச் செய்து அந்த புனித பீடத்தைப் பாதுகாத்து பின் அம்மலையிலேயே ஸ்தூபி எழுப்பியதாகக் கூறப்படுகின்றது.
படிமவியல்
சாங் சம்ராஜ்ஜியத்திற்கு முன் (10-13-ஆம் நூற்றாண்டு கிபி) சீன மத கலைகளில், குவான் யின் மிகப்பிரபலமாக ஆண் வடிவத்தில் சித்தரிக்கப்பட்டார். இந்த கால கட்டத்திலும் அதன் பிறகும், குவான் யின் உலக உயிர்களின் துயரங்களைப் போக்குவதற்கு பெண் மற்றும் ஆணாகவும் தோன்ற முடியும் என்பதோடு குழந்தை பாக்கியமற்றவர்களுக்கு குழந்தை வரத்தினையும் வழங்க முடியும் என்று தாமரை சூத்திரத்தில் வழங்கப்பட்ட விளக்கத்திற்கு ஏற்ப குவான் யின் இரு பாலினத்தின் பிரதிநிதியாகக் கருதப்பட்டார்.
இது போதிசத்துவரின் கருணையையும் இரக்க குணத்தையும் பண்டைய கால சீன மக்களிடம் நிருபித்தது. அவர் தாய் தெய்வமாகவும் கர்ப்பிணிப் பெண்களை மற்றும் கப்பல் பணியாட்களை ரட்சிப்பவராகவும் அறியப்பட்டதால் இன்று வணங்கப்படும் பெண் உருவத்தில் மிகப் பிரபலமடைந்தார். இன்று, போதிசத்துவர் குவான் யின் வெள்ளை அங்கி அணிந்த கருணையான பெண் போல எங்கும் சித்தரிக்கப்படுகின்றார். இவர், இரு கரம் கொண்ட இந்திய தெய்வமான அவலோகிதேஸ்வரர் பத்மபாணி அல்லது தாமரை ஏந்தியவர் போன்றவராவார்.
இருப்பினும், சாங் சாம்ராஜ்ஜியத்தின் முடிவில், குவான் யின், வடக்கு சாங் சாயலில் அங்கி அணிந்த ஆண் வடிவத்தில் தெய்வீகமாய் அமர்ந்திருக்கும் சித்திரங்கள் இன்னும் இருந்தன. அவர் பெரும்பாலும் கீழே பார்த்த வண்ணம் காட்சி தருவார். அது அவர் மக்களின் துயரங்களை எப்பொழுதும் கண்காணிப்பதை உணர்த்துவதாகும். இவ்வடிவம் நாளடைவில் ஒரு பெண் வெள்ளை அங்கி அணிந்து நகைகளற்ற நிலையில் அதாவது ஆன்மீகத்தை அடைந்தததை பிரதிநிதிக்கும் வண்ணம் மாறியது. அவர் புனித நீர் கொண்ட பீங்கான் ஜாடியை தனது இடது கரத்திலும் வில்லோ கிளை ஒன்றினை தனது வலது கரத்திலும் வைத்திருப்பார். அழுது வில்லோ, கருணையைப் பிரதிபலிப்பதாக சீனர்கள் நம்புகின்றனர். ஏனென்றால், வில்லோ மரங்கள் மென்மையாய் இருந்தாலும் அவற்றால் உறுதியான மரங்களையே சாய்க்க வல்ல பயங்கரமான இடி மின்னல்களைத் தாங்க முடியும். இந்த வில்லோ மரங்கள் ஜாடியின் உள்ளிருந்து தொங்குவது போல் சித்தரிக்கப்பட்டிருக்கும்.
குவான் யின்னின் மகுடத்தில், புத்தர் அபிதாபாவின் படம் பொறிக்கப்பட்டிருக்கும். இது பெரு மதிப்புமிக்க ஆன்மிக வழிகாட்டுதலுக்கான அடையாளமாகும். அவர் எப்பொழுதும் தனிந்தனியாக இருப்பதை போலவே சித்தரிக்கப்பட்டார். சில சமயங்களில் பறக்கும் நாகத்தின் மேல் அமர்ந்து, சீனாவின் தெற்கு கடற்பகுதிகளில் பயணித்ததாகவும் சில சமயங்களில் வெள்ளை கிளியின் துணையுடன் இருந்ததாகவும் கூறப்பட்டார்.
ப்ரெஷியஸ் க்ரோல் ஒஃப் தே பேரட்டில், குவான் யின்னின் சீடனாக மாறிய ஒரு கிளியின் கதை கூறப்பட்டுள்ளது. டாங் சாம்ராஜ்ஜியத்தின் போது, சிறிய கிளியொன்று தனது தாயாருக்கு உணவு தேடி வெளியே வந்த வேளையில் ஒரு வேடனால் பிடிக்கப்பட்டது. டாங் சம்ராஜ்ஜியத்தின் போது கிளிகள் வீட்டுப் பிராணிகளாய் வளர்க்கப்பட்டன. கூண்டிலிருந்து தப்பி அது வந்தபோது தனது தாயார் இறந்து விட்டதை அறிந்தது. அக்கிளி தனது தாயாரின் மரணத்தை எண்ணி வருந்தியதோடு அவரின் இறுதி சடங்கையும் செய்தது. தாயாரின் மரணம் அக்கிளியை குவான் யின்னின் சீடனாக மாறத் தூண்டியது. இந்த கிளி பெரும்பாலும் வெள்ளை நிறத்தில் சித்தரிக்கப்படுவதோடு குவான் யின் வலது பக்கத்தில் முத்து அல்லது மணியைத் தனது அலகினில் பிடித்துக் கொண்டு நிற்கும். நாளடைவில் அக்கிளி, மகன் அல்லது மகளின் பற்றுதலை விளக்கும் குறியாக மாறி விட்டது.
ஆயிரம் கைகள் கொண்ட குவான் யின்
மற்றுமொரு குவான் யின்னின் பிரபலமான தோற்றம், ஆயிரம் கை கொண்ட குவான் யின் ஆகும். இந்த தோற்றம் கரண்டவியூகா சூத்திரத்திலிருந்து தோன்றியது ஆகும். இந்த சூத்திரத்தில் அவலோகிதேஸ்வரர் “ஆயிரம் கைகள் மற்றும் ஆயிரம் கண்கள் கொண்ட ஒருவர்” என்று போற்றப்படுகின்றார். சில சமயங்களில் இவரை எல்லா புத்தர்களுக்கும் மற்றும் இந்து தெய்வங்களுக்கும் முதன்மையானவர் என்றும் போற்றுகின்றனர்.
மற்றுமொரு பிரபலமான புத்த புராணம், ‘குவான் யின் மற்றும் தெற்கு கடல்களின் முழுக்கதையில்’ குறிப்பிடப்பட்டுள்ளது. அப்புராணக்கதையில் துயரத்திலிருந்து உலக உயிர்களை விடுதலை செய்யும் வரை அல்லது பிறப்பு, இறப்பு என்ற சமஸ்கிருத சுழற்சியிலிருந்து உலக உயிர்களை மீட்கும் வரை தான் ஓய்வெடுக்க போவதில்லை என்று குவான் யின் சபதம் எடுத்ததாக கூறப்படுகின்றது. உலக உயிர்களின் துயரங்களைப் போக்குவதற்குச் சிரமப்பட்ட குவான் யின்னின் தலை பதினொரு துண்டுகளாய் பிளவுற்றது. அபிதாபா புத்தர் தோன்றி உடைந்த ஒவ்வொரு பகுதியையும் முகமாக மாற்றி உலக உயிர்களின் துயரங்களைக் கேட்கும்படி செய்தார். அழுகுரல்கள் கேட்டு துன்புறும் உயிரினங்களுக்கு உதவ முயன்றபோது அவரின் கைகள் ஆயிரம் துண்டுகளாய் துண்டாகின. அபிதாபா புத்தர் மீண்டும் தோன்றி துன்புறுபவர்களை அடைந்து உதவி புரிய அவருக்கு ஆயிரம் கைகளை வழங்கினார்.
குவான் யின் மற்றும் அவரின் சீடர்கள
குவான் யின் எப்பொழுதும் இரண்டு குழந்தைகள் அல்லது இரண்டு வீரர்கள் சூழ இருப்பது போல் சித்தரிக்கப்படுகின்றார். அவ்விரு குழந்தைகளும் அவரின் சீடர்கள் ஆவர். பெண் குழந்தை லோங் நு மற்றும் ஆண் குழந்தை ஷான் ச்சாய் அதாவது சுதானா என்ற உடல் ஊனமுற்ற இந்திய சிறுவனின் சீன பெயராகும். அவன் போட்டலாவிலிருந்து பயணித்து குவான் யின்னிடம் கல்வி கற்பதற்காக வந்தான். அவனைச் சோதிக்க நினைத்த குவான் யின், 3 வாள் ஏந்திய கொள்ளைக்காரர்கள் அனுப்பி போதிசத்துவரைத் தாக்க வருவது போல் செய்தார். குவான் யின்னை அவர்கள் துரத்த, குவான் யின் மலையிலிருந்து குதித்தார். அச்சிறுவன் சற்றும் தாமதிக்காமல் போதிசத்துவரைக் காப்பாற்ற நொண்டிக் கொண்டே மலையேறினான். அதிர்ஷ்டவசமாக குவான் யின் அவனைக் காப்பாற்றி அவன் காலை சரி செய்ததோடு அவன் தோற்றத்தையும் சரி படுத்தினார். குவான் யின் பிறகு அவனுக்கு முழு தர்மத்தையும் போதித்தார். மற்றுமொரு கதையில், ராஜ நாகத்தின் மகள், கெண்டை மீன் உருவம் எடுத்த போது மீனவனின் வலையில் சிக்கிக் கொண்டாள். வலையில் சிக்கிய அவளை மீனவன் விற்க முயன்ற போது, அவள் தெய்வலோகம் கேட்கும் வண்ணம் கத்தினாள். அவளின் உதவிக்குரல் குவான் யின்னுக்குக் கேட்டது. குவான் யின் ஷான் ச்சையை அம்மீனை விலை பேசி விடுதலை செய்ய அனுப்பினார். ஆனால், இந்த அதிசய மீன் தங்களுக்கு சாகாவரம் அளிக்கும் என்று நம்பிய மற்றவர்கள் அதிக விலை கொடுக்க முன் வந்தததால் அவனால் ஏதும் செய்ய இயலவில்லை.
குவான் யின் குறுக்கீட்டு தனது அசரீரி குரலால், “ஓர் உயிரை எடுக்க நினைப்பவரை விட, எவரொருவர் ஓர் உயிரைக் காப்பாற்ற முனைகின்றாரோ அவருக்கே அவ்வுயிர் சொந்தமாகும்” என்று கூறினார். இதைக் கேட்டு பயமுற்று அவமானமடைந்த மக்கள், அம்மீனை ஷான் ச்சையிடம் கொடுத்தனர். ஷான் ச்சை அம்மீனை குவான் யின்னிடம் எடுத்துச் சென்றான். குவான் யின் அம்மீனை கடலில் மீண்டும் விட, ராஜ நாகத்தின் மகள் தனது பழைய தோற்றத்திற்குத் திரும்பி தன் தந்தையுடன் சேர்ந்தாள்.
தனது நன்றியுணர்வை வெளிப்படுத்த, ராஜ நாகம் தனது பேத்தி, லோங் நுவிடம் ஓர் ஒளிமுத்தினை வழங்கி அதனை குவான் யின்னிடம் அன்பளிக்க அனுப்பி வைத்தார். குவான் யின்னின் கருணையைக் கண்டு மகிழ்ந்து போன லோங் நு, தன்னை சீடராக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினாள். ஆகவே, இப்படித்தான் ஷான் ச்சையும் லோங் நுவும் குவான் யின்னின் சீடர்களாக சித்தரிக்கப்பட்டனர். இக்கதையின் மூலம் தான் டாங் காலத்து உடைகளை அணிந்த கன்னியாக ஃபுஜியன் குவான் யின் தன் கையில் மீன் கூடையை சுமக்கும் காட்சி சித்தரிக்கப்பட்டது.
மற்றுமொரு குவான் யின் தோற்றம் தெற்கு சீனா கடலோரப் பகுதிகளில் பிரபலமாக இருந்ததோடு கடல்வாழ் மக்களும் மீனவர்களும் வழிபட்டு வந்தனர். இந்த குவான் யின் தோற்றத்துடன் மற்றவற்றையும் 16-ஆம் நூற்றாண்டின் சீன கலைகளஞ்சியங்களில் சேர்த்ததோடு, அக்கால கட்டத்தின் தங்க தாமரை நாவல்களின் வரி ஓவியங்களிலும் சித்தரிக்கப்பட்டன.
மற்ற சித்தரிப்புக்களில் காணப்படும் இரண்டு வீரர்களில் ஒருவர், ஹான் சாம்ராஜ்ஜியத்தின் தளபதி, குவான் யு, அல்லது கீ லான் அல்லது சங்கத்தின் போதிசத்துவர் எனவும் அறியப்படுகின்றவர். இவர், சீன பாரம்பரியத்தின் காவிய குறிப்புகளான ‘மூன்று ராஜ்ஜியத்தில்’ இடம் பெருவதோடு ஜென் கோத்திர தலைவனாகிய ஸீ யீ (தியான் தை பள்ளியின் தோற்றுனர்) முன் தான் புத்தரின் உபதேசங்களையும் மடங்களையும் பாதுகாப்பதாக உறுதி எடுத்தார்.
குவான் யின்னுடன் இருக்கும் மற்றுமொரு வீரர், வெய் துவோ அல்லது ஸ்கந்த போதிசத்துவர். வெய் துவோ வஜ்ரபானி போதிசத்துவரின் மறுபிறவி என்று கூறப்படுகின்றது. அதோடு, மியோ ஷான் தன் கொடுங்கோல் தந்தையிடமிருந்து தப்பிக்க உதவிய தளபதிகளில் இவரும் ஒருவர் என்று நம்பப்படுகின்றது. மற்றுமொரு கதையில், மியோ ஷான்னும் தளபதியும் மியோ ஷான்னின் தந்தையால் கொல்லப்பட்டபின் அவர் போதிசத்துவராக மாறி குவான் யின்னைப் பாதுகாத்தாகவும் கூறப்படுகின்றது.
அபிதாபா புத்தரின் சீடராக குவான் யின்
சீன பாரம்பரியத்தின்படி, குவான் யின் போதிசத்துவர்களில் ஒருவராவர். அதோடு மட்டுமில்லாமல், அவர் அபிதபா புத்தர் மற்றும் போதிசத்துவர் மகாஸ்தமப்ராப்தா ஆகியோருடன் இருப்பது போல சித்தரிக்கப்படுகின்றார். இம்மூவரும், மேற்கத்திய புனித நிலத்தின் மூன்று ஞானிகள் என்று அறியப்படுவதோடு புனித நிலமான சுகாவதியின் முக்கிய வடிவங்களாக கருதப்படுகின்றனர். அதோடு மட்டுமில்லாமல், அவர் மற்ற போதிசத்துவர்களுடனும் புத்தர்களுடனும் இணைந்து சித்தரிக்கப்படுகின்றார். சில சமயங்களில் கோவில்களையும் நம்பிக்கையையும் காப்பாற்றும் போதிசத்துவர்களான மேலே குறிப்பிடப்பட்டுள்ள வீரர்களுடனும் இணைந்து சித்தரிக்கப்படுகின்றார்.
குவான் யின் நாள்
குவான் யின்னுடன் மூன்று பண்டிகைகள் தொடர்புடையவை ஆகும். அவரின் பிறந்த நாள், அவர் ஞானம் பெற்ற நாள் மற்றும் அவர் தனது வீட்டை விட்டு வெளியேறிய நாள் ஆகிய மூன்று பண்டிகைகளாகும்.. அவரின் பிறந்த நாள் இரண்டாவது லூனார் மாதத்தில் 19-ஆவது நாள் கொண்டாடப்படுகின்றது. அவர் ஞானம் பெற்ற நாள், ஆறாவது லூனார் மாதத்தில் 19-ஆவது நாள் கொண்டாடப்படுகின்றது. அவர் வீட்டை விட்டு வெளியேறிய நாள் ஒன்பதாவது லூனார் மாதத்தில் 19-ஆவது நாள் கொண்டாடப்படுகின்றது.
குவான் யின்னின் பிறந்த நாளன்று, பக்தர்கள் அவரின் கருணையையும் பரிவையும் நினைவு கூரும் வண்ணம் சைவமாக இருப்பார்கள். அவர்கள், கோவில்கள் அல்லது முக்கிய கோவின் சன்னதிகளுக்குச் சென்று அகர்பத்திகள், பூக்கள் மற்றும் உணவுகளை வழங்குவார்கள் – பெரும்பாலும் பழங்கள், சிறப்பு பண்டிகை கேக்குகள் அல்லது சைவ உணவுகள். மற்றுமொரு பிரபலமான காணிக்கை, குவான் யின்னின் சன்னதியில் எறியும் விளக்குகளுக்கு எண்ணெய் ஊற்றுதலாகும். குழந்தை வரம் கேட்கும் பக்தர்கள் பூஜைகள் மற்றும் அகர்பத்திகளை குவான் யின்னுக்கு வழங்குவார்கள். அவர்களுக்கு குழந்தை பிறந்ததும், அக்குழந்தையை குவான் யின் காலடியில் வைப்பார்கள். இதன் மூலம் ஆன்மீகத்தின் வழி அவர் அக்குழந்தையை தத்தெடுத்து நீண்ட ஆயுளை வழங்குவார் என்று நம்பப்படுகின்றது.
துறவிகள், இந்நாளில் தாமரை சூத்திரத்தில் இருக்கும் உலகின் கதவு என்ற அத்தியாயத்தை ஓதுவார்கள். இந்த அத்தியாயம் போதிசத்துவரின் கருணை மற்றும் பரிவைப் பற்றியும் உலக உயிர்களை ஏழு வகை அழிவிலிருந்து காக்கும் திறனையும் இரண்டு வகை வேண்டுதலை வழங்கும் திறனைப் பற்றியும் மற்றும் 32 அவதாரங்கள் எடுக்கும் திறனைப் பற்றியும் போற்றுகின்றது.
மலேசியாவில் குவான் யின் கோவில்கள்
மலேசியாவில், இஸ்லாம் மதத்திற்கு அடுத்து, புத்த மதம் இரண்டாவது பெரிய மதமாக கருதப்படுகின்றது. மலேசிய மக்கள் தொகையில், 19.2% மக்கள் புத்த மதத்தைச் சார்ந்தவர்களாவர். இருப்பினும், மற்ற சீன மதத்துடன் சேர்த்தால் இந்த எண்ணிக்கை 21.6%-ஆக உயரும். புத்த மதம் முக்கியமாக மலேசிய சீன மக்களாலும் மலேசிய இந்தியர்கள், மலேசிய சியாம் பர்மிய மக்களாலும் மற்றும் இலங்கை வழி மக்களாலும் பின்பற்றப்படுகின்றது.
பெரும்பாலான மலேசிய புத்த மதத்தினர் குவான் யின்னின் தீவிர பக்தர்கள் ஆவர். அதோடு நிறைய குவான் யின் கோவில்கள் மலேசிய முழுதும் இருக்கின்றன. சில குவான் யின் கோவில்களைப் பற்றி கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
கோலாலம்பூர் குவான் யின் கோவில்
இந்த கோவில் 1888-ஆம் ஆண்டில் சீன சமூகத்தினரால் கட்டப்பட்டு குவான் யின்னுக்குச் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த கோவிலின் கட்டிட வேலைப்பாடுகள் சீனர்களின் கலையுடனும் கொஞ்சம் பரோக் முறையிலும் இருக்கும். சமீபத்தில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட போதிலும் பழைய வேலைப்பாடுகள் அப்படியே இன்னும் இருக்கின்றன. இக்கோவிலின் பூஜை அறையில் முக்கிய பீடத்தில் சாக்கியமுனி புத்தரின் சிலையுடன் வலது புறத்தில் தெற்கு கடல் குவான் யின் சிலையும் இடது புறத்தில் ஆயிரம் கைகள் கொண்ட குவான் யின் சிலையும் இருக்கின்றன. இக்சிதிகர்பர் அல்லது நிலம் காக்கும் போதிசத்துவர் மற்றும் டிசாங் போன்ற சிலைகளும் உண்டு. தினமும் காலையில் 7 மணி தொடங்கி மதியம் 5 மணி வரை திறந்திருக்கும்.
வரலாற்றின்படி, இந்த கோவில் ஹோக்கியான் சீனர்களின் வழிபாட்டுத் தலமாக ஆரம்பித்தது. இப்பொழுது மெர்டேக்கா சதுக்கமாக அறியப்படும் திடலுக்குப் பக்கத்தில் சீனர்கள் இடுகாடு கட்டினர். இடுகாட்டிற்கு வரும் வருகையாளர்களுக்கு இந்த கோவில் மன ஆறுதலைத் தந்தது. 1920-ல், பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள் இக்கோவிலை வழிபாட்டுத் தலமாக அறிவித்து அதன் உரிமையை கோலாம்பூர் மற்றும் சிலாங்கூர் ஹோக்கியான் இயக்கத்திடம் வழங்கினர். துரதிஷ்டவசமாக, 1963-லும் 1989-லும் நிகழ்ந்த தீ விபத்தில் பாதிப்படைந்தது. பின்பு, மறுசீரமைப்பு செய்யப்பட்டது.
குவான் யின் கோவிலுக்குச் செல்லும் வழி
இந்த கோவில் மெர்டேக்கா வளையத்திற்கு எதிர் திசையில் மெர்டேக்கா அரங்கத்திற்கு பக்கத்தில் பெட்டாலிங் சாலையின் முடிவில் இருக்கின்றது. நீங்கள் பெட்டாலிங் சாலைக்குச் சென்று அங்கே வாகனத்தை நிறுத்தி விட்டு நடந்து இந்த கோவிலுக்குச் செல்லலாம். மகாராஜாலேலா மோனோரயில் நிலையத்தில் இறங்கினால், இன்னும் எளிதாக இந்த கோவிலுக்குச் செல்லலாம்.
குவான் யின் கோவில
முகவரி:
Jalan Maharajalela
50480 Kuala Lumpur
Malaysia
குவான் யின் கோவிலுக்கு அருகில் இருக்கும் தங்கும் இடங்கள்
- கோஸ்மிக் புத்திக் ஹோட்டல்
முகவரி:
No. 21 & 23
Jalan Maharajalela
Chinatown
50150 Kuala Lumpur
Malaysia
தொலைபேசி எண: +60 3 9226 3339 - OYO ரூம் மகாராஜாலேலா மோனோரயில் நிலையம
முகவரி:
21 Jalan Maharajalela
Chinatown
50150 Kuala-Lumpur
Malaysia
தொலைபேசி எண: +60 17 7584 3417 - கிரிட் 9 ஹோட்டல்
முகவரி:
9 Jalan Maharajalela
Chinatown
50150 Kuala Lumpur
Malaysia
தொலைபேசி எண: +60 3 9226 2629
குன் யாம் தோங் கோவில், கோலாலம்பூர்
குன் யாம் தோங் கோவில், குவான் யின் தர்ம சாம்ராஜ்ஜியம் என்றும் அறியப்படுகின்றது, இக்கோவில் 1880-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இது 1993-ஆம் ஆண்டு, தர்மா சாம்ராஜ்ஜிய புத்த சங்கத்தினரின் கைக்கு வரும் வரை, டெங் பி ஆன் கோவில் என்ற பெயரில் செயல்பட்டு வந்தது. அதன் பின் மறுசீரமைப்பு செய்யப்பட்டு 2006-ஆம் ஆண்டு மீண்டும் திறக்கப்பட்டது. உயர் அலுவலக கட்டிடங்கள் மற்றும் பேரங்காடிகள் இக்கோவிலைச் சுற்றி இருப்பதால், சலசலக்கும் நகரத்திற்கு நடுவில் ஓர் அமைதி சோலையாய் இக்கோவில் விளங்குகின்றது.
இதன் முக்கிய பூஜை மண்டபம், ‘சிறந்த அணிகலன் மண்டபம்’ என்று அழைக்கப்படுவதோடு தலா ஒரு டன் எடை கொண்ட மூன்று பெரிய தங்க புத்தர் சிலைகளைக் கொண்டுள்ளது. அவர்கள், சாக்கியமுனி புத்தர், மருத்துவ புத்தர் மற்றும் அபிதாபா புத்தர் ஆகியோர் ஆவர். இந்த கோவில் சன்னதியைத் தவிர்த்து பிரபலமான உணவு மண்டபம் இக்கோவிலின் பின்புறத்தில் உள்ளது. இங்கே மலிவான விலையில், ஆரோக்கியமான மற்றும் சுவையான சைவ உணவுகள் வழங்கப்படுகின்றன, இக்கோவிலில், நூலகமும் புத்தக கடையும் இருக்கின்றன.
குன் யாம் தோங் கோவிலுக்கு செல்லும் வழி
இந்த கோவில் ஜாலான் அம்பாங்கில் கோலாலம்பூரின் மையத்தில் இருக்கின்றது. இது சிட்டி வங்கி கோபுரத்திற்கும் கேஎல்சிசி பேரங்காடிக்கும் நடுவில் அதாவது மசீச கட்டிடத்திற்கு அருகில் இருக்கின்றது. நீங்கள் அம்பாங் பார்க் எல்ஆர்டி நிலையத்தில் இறங்கியும் செல்லலாம்.
குன் யாம் தோங் கோவில்
முகவரி:
Menara Citibank
165 Jalan Ampang
50450 Kuala Lumpur
Malaysia
தொலைபேசி எண: +60 3 2164 8055
ுன் யாம் தோங் கோவிலுக்கு அருகில் இருக்கும் தங்கும் இடங்கள
- கோருஸ் ஹோட்டல் கோலாலம்பூர
முகவரி:
Jalan Ampang
Hampshire Park
50450 Kuala Lumpur
Malaysia
தொலைபேசி எண: +60 3 2161 8888 - லீ ஏப்பல் பூத்திக் ஹோட்டல் (கேஎல்சிசி)
முகவரி:
160 Jalan Ampang
Kampung Baru
55000 Kuala Lumpur
Malaysia
தொலைபேசி எண: +60 3 2179 3777 - ஜிடாவர் ஹோட்டல
முகவரி:
199 Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia
தொலைபேசி எண: +60 3 2168 1919
குவான் யின் தெங் கோவில் பினாங்கு
குவான் யின் தெங் அல்லது கோங் ஹோக் கியோங் கோவிலில் குவான் யின் முக்கிய தெய்வமாக வணங்கப்படுகின்றார். இக்கோவில் ஜோர்ஜ்டவுன், பினாங்கில் உள்ள பழம்பெரும் கோவில்களில் ஒன்றாகும். இது 1728-ஆம் ஆண்டில், அப்பொழுது அதிக மதிப்பு கொண்ட 4,000 ஸ்பானிஷ் டாலர்களில் கட்டப்பட்டது. அந்த கால கட்டத்தில் வடக்கு மலாயாவில் மிக அற்புதமான சீன கட்டிடமாக இது விளங்கியது. இதற்குக் காரணம், மற்ற சீன கோவில்கள் அக்கால கட்டத்தில் இன்னும் கட்டப்படாமல் இருந்தது.
குவான் யின் தோங் கோவிலைப் பற்றி பல குறிப்புக்கள் இருந்த போதும் சிலது மட்டுமே அதிகாரப்பூர்வ ஏட்டில் பதிவு செய்துள்ளனர். உதாரணத்திற்கு, இரண்டாம் உலகப் போரின்போது, ஜப்பானியர்கள் கோவிலின் மீது குண்டு வீசினார்கள். அதிர்ஷ்டவசமாகவோ அல்லது தெய்வீக குறுக்கீடாலோ, அந்த குண்டு கோவில் முற்றத்தில் விழுந்ததால், கோவிலுக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை. இரண்டாம் உலகப் போரின் போது, பெரு வாரியான பினாங்கு மக்கள் எப்படி குவான் யின் தேங் கோவிலில் அடைக்கலம் புகுந்தனர் என்ற குறிப்பும் இருக்கின்றது.
குவான் யின் தேங் கோவிலுக்குச் செல்லும் வழி
இந்த கோவில் ஜோர்ஜ்டவுனில், சீனர் சாலை மற்றும் ஜாலான் கப்பிதான் கெளிங் (முன்பு பிட் சாலை என்று அறியப்பட்டது) ஆகியவற்றின் சந்திப்பில் இருக்கின்றது.
குவான் யின் தேங் கோவில்
முகவரி:
Jalan Masjid Kapitan Keling
George Town
10200 Penang
Malaysia
குவான் யின் தேங் கோவிலுக்கு அருகில் இருக்கும் தங்கும் இடங்கள்
- பால்ம் மேன்சன் புத்திக் சூட்ஸ்
முகவரி:
76 – 88 China Street
Georgetown
10200 Penang
Malaysia
தொலைபேசி எண்: +60 4 261 3609 - ரெட் இன் கோர்ட்
முகவரி:
35 B&C Jalan Mesjid Kapitan Keling
George Town
10200 Penang
Malaysia
தொலைபேசி எண்: +60 4 261 1144 - குயின்ஸ் ஹோஸ்டல
முகவரி:
20 & 22 Queen Street
Georgetown
10200 Penang
Malaysia
தொலைபேசி எண்: +60 13 489 6218
கேக் லோக் சி கோவில் பினாங்கு
கேக் லோக் சி கோவில், பினாங்கு ஹோக்கியனில் ‘பேரின்ப கோவில்’ அல்லது ‘சுகாவதி கோவில்’ என்றும் அறியப்படுகின்றது. சீன மென்டரின் மொழியில் ஜி லே சி என்று உச்சரிக்கப்படுகின்றது) ஆயிர் இத்தாம் பினாங்கில் அமைந்திருக்கும் மகாயான புத்தர் கோவில் ஆகும். இந்த கோவில் கடலை நோக்கி அமைந்திருப்பதால் மிகவும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதோடு மலேசியா வில் புகழ்பெற்ற புத்த கோவில்களில் இதுவும் ஒன்றாகத் திகழ்கின்றது.
இது புத்த மதத்தினருக்கு ஒரு புனித தலமாக விளங்குவதோடு பல்வேறு நாடுகளிலிருந்து உதாரணத்திற்கு ஹோங் கோங், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் இதர தென்கிழக்காசிய நாடுகளில் இருந்தும் பார்வையாளர்கள் வருகின்றார்கள். இந்த கோவிலின் கட்டிடம் 1890-ஆம் ஆண்டிலிருந்து 1930-ஆம் ஆண்டு வரை அதன் மடாதிபதியான பிவோ லீயான் என்பவரின் முயற்சியில் கட்டப்பட்டது. இதன் கவரக்கூடிய அம்சம் எதுவென்றால், ஏழு மாடி கொண்ட ஆறாவது ராமாவின் பகோடாவாகும். இது பத்தாயிரம் புத்தர்களின் பகோடா என்றும் அறியப்படுகின்றது. இதில் பளிங்கு மற்றும் வெண்கலத்தால் ஆன 10,000 புத்தர் சிலைகளும், 30 மீட்டர் (99 அடி) உயரம் கொண்ட வெண்கல குவான் யின் சிலையும் இருக்கின்றன.
கேக் லோக் சி கோவிலுக்குச் செல்லும் வழி
ஜோர்ஜ்டவுன், ஜாலான் ஆயிர் ஈத்தாம் மற்றும் ஜாலான் பசாரின் ஓரத்தில், கோவிலுக்கு வழிகாட்டும் மிகப்பெரிய அறிவிப்புப் பலகையைக் காண்பீர்கள். அந்த அறிவிப்புப் பலகையைத் தொடர்ந்து ஜாலான் பசார் சாலைக்கு வந்தால், ஒரு முச்சந்தியைக் காண்பீர்கள். அதில் இடது பக்கம் திரும்பவும். சாலையின் சிறிது தூரத்தில், இடது புறத்திற்குச் செல்லும் ஒரு குறுகிய பாதையைக் காண்பீர்கள். அதில் சென்றால், முக்கிய பாதைக்கு இட்டுச் செல்லும் படிக்கட்டுகள் வரும். நீங்கள் அந்த படிக்கட்டுகளில் மேலேறி பின் நினைவுப்பொருட்கள் விற்கும் கடைகள் கொண்ட நடைபாதையைக் கடப்பீர்கள்.
கேக் லோக் சி கோவில்
முகவரி:
86 S Jalan Kampung Pisang
Ayer Itam
11500 Penang
Malaysia
வலைத்தளம்: http://kekloksitemple.com
மின்னஞ்சல: email@kekloksitemple.com
தொலைபேசி எண்: +60 4 828 3317
கேக் லோக் சி கோவிலுக்கு அருகில் இருக்கும் தங்கும் இடங்கள்
- விஸ்தே கெஸ்ட்ஹஸ்
முகவரி:
134-K 1st Floor Jalan Paya Terubong
Ayer Itam
11600 Penang
Malaysia
தொலைபேசி எண்: +60 16 422 6879 - பாங் சூ மிங் கோன்செப்ட் கெஸ்ட்ஹஸ்
முகவரி:
1228 N3 & P3 Jalan Paya Terubong
Air Itam
Penang
11060 Malaysia
தொலைபேசி எண்: +60 19 477 7661 - ஃபாஸ்ட்புக் ஹோட்டல்
முகவரி:
1228L-3 Jalan Paya Terubong
Ayer Itam
11060 Penang
Malaysia
தொலைபேசி எண்: +60 19 477 7661
மேலும் பல சுவாரஸ்யமான இணைப்புகளுக்கு:
- மலேசியாவில் இந்தியர்கள்
- தைப்பூசம் – முருகப்பெருமானின் விழா
- நாவில் சுவையூறும் 25 வகையான மலேசிய உணவுகள்
- காவாய் டாயாக் – அறுவடை திருநாள் கொண்டாட்டம்
- டிராகன் படகு திருவிழா: பாரம்பரிய மற்றும் நவீன கலாச்சாரத்தின் இணைவு
- மலேசியாவில் முடியாட்சி முறை
- Chenrezig Ngesung Kundrol
- Blessing Eye Problems
- The Buddhist Protectors of the Chinese Zodiac
- Holy Place of Kuan Yin
- Ganapati Ragavajra
- 1000-Armed Kuan Yin-Foo Hai Ch’an Monastery
- Deaf Blind and Mute Transforms into 1,000 Arm Chenrezig
- Avalokiteshvara, Turkey Swamp, Marc & Me
- Visiting the Huge Kuan Yin in Pinang
- Something Simple for the Deceased
- Pu Tuo Shan
- The Meaning of OM MANI PADME HUNG
- Kuan Yin of Macau City
Please support us so that we can continue to bring you more Dharma:
If you are in the United States, please note that your offerings and contributions are tax deductible. ~ the tsemrinpoche.com blog team
DISCLAIMER IN RELATION TO COMMENTS OR POSTS GIVEN BY THIRD PARTIES BELOW
Kindly note that the comments or posts given by third parties in the comment section below do not represent the views of the owner and/or host of this Blog, save for responses specifically given by the owner and/or host. All other comments or posts or any other opinions, discussions or views given below under the comment section do not represent our views and should not be regarded as such. We reserve the right to remove any comments/views which we may find offensive but due to the volume of such comments, the non removal and/or non detection of any such comments/views does not mean that we condone the same.
We do hope that the participants of any comments, posts, opinions, discussions or views below will act responsibly and do not engage nor make any statements which are defamatory in nature or which may incite and contempt or ridicule of any party, individual or their beliefs or to contravene any laws.
Please enter your details