வாழ்க்கையின் ஆழமான அர்த்தத்தை அறிய டோர்ஜே ஷுக்டேனுன்
மாநகரங்களில் வாழும் மக்கள் அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அங்குள்ள பரபரப்பான வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டவர்களாகிறார்கள். ஆணோ பெண்ணோ எந்த வயதாக இருந்தாலும், எந்த இனமாக இருந்தாலும், நகரங்களில் வாழ்பவர்கள் அறிவாற்றலையும், உடல் உழைப்பையும் பயன்படுத்தி வாழ்கிறார்கள். சிலர் தங்கள் வேலை அட்டவணையை நிமிடக் கணக்கில் கூட த் திட்டமிடுகிறார்கள்! நீண்ட நேர வேலையின் காரணமாக நகரத்தில் வசிப்பவர்கள் எப்பொழுதும் ஆரோக்கியமன முறையில் அண்மைய மின்னியல் சாதனங்களைப் பயன்படுத்தி வலைதலத்தின் வழி தூரத்தில் ஊள்ளவர்களை அடிக்கடி தொடர்பு கொள்கிறார்கள்.
நகர வாழ்க்கையில் பலதரபட்ட மக்களைச் சந்திப்பதன் வழி பல கலாச்சாரங்கள், புதிய பொழுதுபோக்கு அம்சங்கள் ஆகியவற்றை எதிர்கொள்ளும் வாய்ப்புகள் நிறைய கிட்டும். ஆகவே வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தை அறியாமல் வழிதவறிச் செல்லும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. அவர்கள் வேலையின் எதிபார்ப்பினால் ஏற்படும் அழுத்தத்தின் காரணமாக ஓய்வெடுத்து கொள்ள முடியாததால் வாழ்க்கையின் ஆழமான அர்த்தத்தைப் பற்றி சிந்திக்கத் தவறுகிறார்கள். அன்றாடும் வாழ்க்கையில் எதிர்நோக்கும் பிரச்சனைகளாலும், சவால்களாலும் அமைதியான சூழலை ஏற்படுத்திக் கொண்டு இந்த மனித வாழ்க்கையில் நமக்குக் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.
வாழ்க்கையின் ஆழமான அர்த்தம்
நம்மில் பெறும்பாலோருக்கு வாழ்க்கை என்பது, நாம் தொட்டு உணரக்கூடிய பொருள்களைத் தேடி அதிகம் சேர்த்து வைப்பதாகும். நம்முடைய பதவி உயர்விலிருந்து பொருளாதார பாதுகாப்பைத் தேடி குடும்ப உறவை வழுப்படுத்தி பேரும் புகழும் அடையும் நாம், அதே நேரத்தில் நமது அந்தஸ்தை நிலைநாட்ட பரிசுகளூம், பணமும் கொடுக்கவேண்டி இருக்கும்.
நமது வாழ்க்கையில் கனவுகளையும், இலக்குகளையும் அடைந்திருந்தாலும் நமக்குள் ஒரு வெற்றிடம் இருப்பதை உணர்வோம். நம்மைச் சுற்றி உற்றார் உறவினர்கள், நண்பர்கள் இருந்தாலும் கூட நாம் தனித்திருப்பதாக எண்ணுவோம். புதிய மின் பொருள்கள் வாங்குவது, விடுமுறைக்குச் சுற்றிப் பார்க்கச் செல்வது, கட்டணங்களைக் கட்டுவது போன்ற தேவைகளைப் பூர்த்தி செய்தாலும் நாம் ஏன் நிறைவாக இல்லை என்ற கேள்வி நமக்குள் எழும். நமக்குள் இருக்கும் நமது அறிவுக்கு அப்பால் உள்ள ஒன்றைத் தேடி அதனுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சிலர் இதை ஆன்மீகத்தை வளர்ப்பது என்று நினைத்து விடலாம்.
வாழ்க்கையின் ஆழமான அர்த்தத்தைத் தெரிந்துகொள்வது என்பது நமக்குள் இருக்கும் திறமைகளை அறிவதும் ஏற்றுக்கொள்வதும் ஆகும். நம்மிடம் உள்ள உயர்ந்த பண்புகளையும் திறமைகளையும் நாம் அறிந்து கொண்டு நம்மிலும் உயர்ந்தவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டோமானால், அது நமக்கு புத்துணர்ச்சியையும், மன அமைதியையும் கொடுக்கும். இம்மையைக் கடந்து இன்னும் அதிகமானவற்றை இவ்வுலக வாழ்க்கையில் அடைய முடியும்.
டோர்ஜே ஷுக்டேன் உங்களுக்கு வழிகாட்டட்டும்
திபெத்திய பௌத்தர்களுக்கு பலம் வாய்ந்த தெய்வம் ஒன்று உண்டு. அவர் பெயர் தர்மா காவளர். அவர் நம்மை வழிநடத்தி நமக்குள் இருக்கும் ஆன்மீக சக்தியை உணர வைப்பார். காவளர் என்றால் நமக்குக் காவலாக இருந்து, வாழ்க்கையில் வழிதவறிச் செல்லாமல் பாதுகாப்பவர். எல்லா தர்மா காவளர்களையும் விட டோர்ஜே ஷுக்டேன் நம்முடம் மிகவும் இணக்கமாக இருக்கக் கூடியவர். அவருடைய வழி காட்டல் நமக்குத் துரிதமாக பயனளிக்கக்கூடியது.
நிறம், இனம், ஆண் பெண், சமயம் இவையனைத்தையும் கடந்ததுதான் அறிவொளி பொருந்திய தர்மா காவளர் டோர்ஜே ஷுக்டேனை வணங்குவது. அவர் நமது கனவுகளை நிறைவேற்றவும், இலக்குகளை அடையவும் விரைவாக உதவி செய்வார். நமது இலக்கு, கனவு இவற்றை அடைவதற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் தடைகளை அகற்றுவார். மற்றவர்களுக்கு உதவி செய்யும் வகையில் இருக்கும் நமது இலக்குகளுக்கும், கனவுகளுக்கும் வரும் தடைகளை உடனே அகற்றுவார். அவரை காக்கும் தெய்வம், அல்லது நம்முடன் இருக்கும் ஆன்மீக நண்பர் எனலாம். அவர் எல்லா நேரமும் நம்மை கவனித்துக்கொண்டும், இரவும் பகலும் காவளராகவும் இருப்பார். டோர்ஜே ஷுக்டேனை அன்றாடும் வணங்குபவர்களுக்கு அதிசயங்கள் நிகழும், ஞானமும் இரக்கக் குணமும் கூடும். வாழ்க்கையில் ஏற்படும் எல்லா தடைகளையும் அகற்றி முன்னேற்றத்திற்கு வழிகாட்டுவார்.
1. வேலை முன்னேற்றத்திற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும்
டோர்ஜே ஷுக்டேன் தடைகளை அகற்றி பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்பையும் திறனையும் அதிகரிப்பார். வியாபாரம், வேலை இவற்றில் நமக்கு சகல நன்மைகளும் கிடைக்க வழி வகுப்பார்.
2. உடல் நலம், சிகிட்சை மற்றும் நீண்ட ஆயுளுக்கும்
டோர்ஜே ஷுக்டேனை வணங்குவது நீடித்த ஆயுளுக்குச் சமம். அவரை வணங்குவதால் நோய்கள் குறையும், ஆயுள் கூடும், சிகிட்சை பெறுபவர், சிகிட்சை அளிப்பவர் இருவரின் ஆத்மாவும் சுத்தமாகும்.
3. பாதுகாப்புக்கு
டோர்ஜே ஷுக்டேன் நம்மை எதிர்மறை ஆற்றல், இயற்கைப் பேரிடர், கெட்ட நோக்கம் உடையவர்கள், துன்பத்தை உண்டாக்கும் மந்திரங்கள், தடைகளை ஏற்படுத்தும் ஆவிகள் இவை அனைத்தில் இருந்தும் நம்மைக் காப்பாற்றுவார்.
4. நட்புக்காக
டோர்ஜே ஷுக்டேனை வணங்குவதால் நம்மோடு தொடர்பில் இருப்பவர்களிடையே சந்தோஷத்தை உண்டாக்குவார். நாம் சந்தோஷமாக இருப்பதால் கோபம், பொறாமை போன்ற குணங்களை மறக்கிறோம். ஆகவே நம்மைச் சுற்றி இருப்பவர்களிடையே உடன்பாடான சிந்தனையைத் தூண்டுகிறோம்.
5. சுய முன்னேற்றம்
டோர்ஜே ஷுக்டேன் தெளிவான சிந்தனையையும், அமைதியையும் கொடுப்பார். நாம் நல்ல ஞானத்தைப் பெறவும், நம்மைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளும் திறனைப் பெறவும் உதவுவார்.
6. ஆன்மீக முன்னேற்றம்
டோர்ஜே ஷுக்டேன் தடைகளை அகற்றி தகுந்த முறையில் தொடர்ந்து வெற்றிகரமான ஆன்மீக பயிற்சியை மேற்கொள்வதற்கு உகந்த வளமான நிலையை உறுவாக்குவார்.
நிவர்த்தி செய்யும் டோர்ஜே ஷுக்டேனின் பயிற்சியின் நன்மைகளை விளங்கிக் கொண்டோமானால், அவர் மேல் நம்பிக்கை வைத்து அவருடைய ஆன்மீக வழிகாட்டலையும் ஏற்றுக்கொள்வோம். டோர்ஜே ஷுக்டேன் நம்மை ஆன்மீகத்தை உணரும் வகையில் வழி நடத்தி வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தை உணர்த்துவார்.
கர்மாவும் டோர்ஜே ஷுக்டேனும்
வாழ்க்கையில் பொதுவாக ஏற்படும் குழப்பங்களை நன்கு விளங்கிக்கொள்ள வேண்டுமென்றால் திசெம் ரின்போச்சேயின் “The Living Buddha Within” என்ற புத்தகத்தைப் படிக்கவேண்டும். இந்த புத்தகத்தைப் படிப்பதனால் வாழ்க்கையில் நடக்கும் காரணகாரியங்கள் வழி நமது கர்மாமை நன்கு விளங்கிக்கொள்ள முடியும்.
நமது முன்வினையைப் பொருத்தே நமது வாழ்க்கையில் நன்மை, தீமை அனைத்தும் நடக்கும். அதேபோல் இப்பொழுது செய்யும் செயல்களின் அடிப்படையில் மனதில் மாற்றம் ஏற்பட்டு அதுவே நமது எதிர்கால நடப்பை நிர்னையிக்கும். இதன் அடிப்படையில், நாம் எதிர்மறையான செயல்களைக் கட்டுப்படுத்தாவிட்டால் அவை இரட்டிப்பாகிவிடும். இந்த நேர்மையற்ற செயல்களால் நமது மனதில் பொறாமை, கோபம், சோம்பல், தவறான சிந்தனைகள் இவையெல்லாம் ஏற்பட்டு நம்மை மேலும் சிரமத்திற்கு உள்ளாக்கி நமது வாழ்க்கையையும், ஆன்மீக சிந்தனையையும் பாதிக்கச் செய்யும்.
இந்த நவீன உலக மக்களுடன் திடமான, இணக்கமான உறவுடன் இருக்கும் டோர்ஜே ஷுக்டேன், நமது தீய கர்ம வினைகளைக் குறைத்து நல்ல கர்ம வினைகளையும் புன்னியங்களையும் (ஆன்மீக வழியில்) அதிகரித்து நமது பிரச்சனைகளைத் தீர்த்து வெற்றி அடைய செய்வார். திசெம் ரின்போச்சேயின் இந்த போதனையை “Discovering Yourself” (கர்ம வினைகளும் நமது எண்ணங்களும் பற்றிய நூல்) என்ற தலைப்பிலான புத்தகத்தைப் படித்து கர்ம வினைகளைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்.
Or view the video on the server at:
https://video.tsemtulku.com/videos/DiscoveringYourself.mp4
மேலும் பல சுவாரஸ்யமான இணைப்புகளுக்கு:
- தனேஷ்வரர் பகவான் டோர்ஜே ஷுக்டேன்
- புனிதர் பாபா சாவான் சிங் : தெய்வீகத்தன்மை கொண்ட சீக்கிய மத குரு
- தைப்பூசம் – முருகப்பெருமானின் விழா
- மலேசியாவில் இந்தியர்கள்
- மலேஷியா பாரம்பரிய ஆடைகள்
- மலேசியாவில் விசாக தினம்
- டோர்ஜே ஷுக்டேன் அவர்களை எல்லா இடங்களுக்கும் கொண்டு செல்வோம்! (ஆங்கிலம், திபெத், சீனம், ஹிந்தி, தமிழ் மற்றும் நேபாளம்)
- நாவில் சுவையூறும் 25 வகையான மலேசிய உணவுகள்
- ஆயுள், நன்மைகள் மற்றும் செல்வத்தை பெருக்க டோர்ஜே ஷுக்டேன் கியான்ஸே
- கருப்பு மாந்திரீகம் மற்றும் தீய சக்திகளை விரட்டும் டோர்ஜே ஷுக்டேன் திராக்சே
- டோர்ஜே ஷுக்டேன் அடைக்கலம் :விருப்பங்களை நிறைவேற்ற சத்தி வாய்ந்த பயிற்சி
- Kechara Forest Retreat
- Vajrasecrets: Wealth Vase
- Vajrasecrets: Yang Dzay Rilbu
Please support us so that we can continue to bring you more Dharma:
If you are in the United States, please note that your offerings and contributions are tax deductible. ~ the tsemrinpoche.com blog team
DISCLAIMER IN RELATION TO COMMENTS OR POSTS GIVEN BY THIRD PARTIES BELOW
Kindly note that the comments or posts given by third parties in the comment section below do not represent the views of the owner and/or host of this Blog, save for responses specifically given by the owner and/or host. All other comments or posts or any other opinions, discussions or views given below under the comment section do not represent our views and should not be regarded as such. We reserve the right to remove any comments/views which we may find offensive but due to the volume of such comments, the non removal and/or non detection of any such comments/views does not mean that we condone the same.
We do hope that the participants of any comments, posts, opinions, discussions or views below will act responsibly and do not engage nor make any statements which are defamatory in nature or which may incite and contempt or ridicule of any party, individual or their beliefs or to contravene any laws.
Please enter your details