மலேசியாவில் இந்தியர்கள்
நான் கடந்த 20 ஆண்டுகளாக மலேசிய நாட்டில் வாழ்ந்து வருகின்றேன். என்னுடைய இந்த காலகட்டத்தில், நான் மலேசிய நாட்டில் உள்ள அனைத்து பாரம்பரியங்கள் மற்றும் கலாச்சாரங்கள் மீதும் மிகுந்த மரியாதையும் புரிந்துணர்வையும் செலுத்தி வந்துள்ளேன். இந்த புரிதலே, என்னை மலேசிய நாட்டினைப் பற்றி மேலும் எழுதுவதற்கு தூண்டுகோளாக அமைந்துள்ளது.
இந்திய மக்கள், பிரிட்டிஷ் காலனித்துவத்திற்கு முன்பாகவே தங்களின் வர்த்தக தொடர்புகளை விரிவுபடுத்தவும் மற்றும் செல்வாக்கையும் நம்பிக்கைகளையும் பரப்பவும் இந்த பிரதேசத்திற்கு குடியேறினர். பிரிட்டிஷ் தனது காலனித்துவத்தைத் தொடங்கியபோது, இந்தியர்களை தற்பொழுது மலேசியா மற்றும் சிங்கப்பூர் என அழைக்கப்படும் பிரிட்டிஷ் மலாயாவிற்கு குடியேற்றி போலீஸ்துறை, அரசாங்க வேலைகள் அல்லது தோட்ட தொழிலாளர்கள் போன்ற பல வகையான துறைகளில் வேலை செய்ய ஊக்குவித்தது. இரண்டாம் உலகப் போரின் போதும் அதன் முடிவிற்குப் பிறகும் (1936-1945), நிறைய இந்தியர்கள் இந்திய தேசிய ராணுவத்தில் சேவை செய்வதற்காக சென்று விட்டதால், மலேசியாவில் இந்தியர்களின் தொகை சரியத் தொடங்கியது. அதோடு, நிறைய பிரிட்டிஷ் நிறுவனங்களும் பிரிட்டீஷ் மலாயாவை விட்டு வெளியேறத் துவங்கின.
இன்று, இந்தியர்களின் தாக்கத்தைப் பல வகைகளில் மலேசிய கலாச்சாரத்தில் காண முடிகின்றது. உதாரணத்திற்கு, மலாய்மொழி, மலாய் உணவுகள் மற்றும் மலாய் நாட்டுப்புறக் கதைகளில் காணலாம். இந்த கட்டுரை மலேசிய இந்தியர்களின் வரலாறு, அவர்களின் தனித்துவமிக்க விழாக்கள், புகழ்பெற்ற மலேசிய இந்திய பிரமுகர்கள் மற்றும் மலேசிய கலாச்சாரங்களில் இந்தியர்களின் தாக்கம் ஆகியவற்றைப் பற்றியதாகும்.
திசெம் ரின்போச்சே
இந்தியர்கள் மலேசியாவிற்கு குடியேற்றம்
பிரிட்டிஷ் காலனித்துவத்திற்கு முன்பு
பிரிட்டீஷ் காலனித்துவத்திற்கு முன்பு, வர்த்தகம் புரியவும், தங்கள் மதம், ஆட்சி மற்றும் தாக்கத்தைப் பரவச் செய்யவும் இந்தியர்கள் தீபகற்ப மலாயாவிற்கு (இப்பொழுது தெற்கு மலேசியா என்றழைக்கப்படுகின்றது) வருகை புரிந்தனர். இந்தியர்களின் தாக்கத்தை பழமை வாய்ந்த அரசாட்சிகளில் காணலாம். உதாரணத்திற்கு பெரும்பான்மை இந்துவாக இருந்து பின் இஸ்லாமிய சுல்தானமாகிய பழைய கெடாவும் ஒன்றாகும். அக்கால கட்டத்தில் கெடா, கடாரம் என்றழைக்கப்பட்டது. அம்மாநிலம், பல்லவர் (4-ஆம் – 9-ஆம் நூற்றாண்டு கி.பி) மற்றும் சோழர் (9-ஆம்- 13-ஆம் நூற்றாண்டு கி.பி) போன்ற சக்திவாய்ந்த அரசாட்சிகளுடன் நீண்ட மற்றும் சுமூகமான உறவைக் கொண்டிருந்தது.
1025-ல், பேரரசர் முதலாம் ராஜேந்திர சோழர் (1014 – 1044 கி.மு) தனது படைகளைத் தலைமை தாங்கி ஸ்ரீ விஜயா அரசாட்சி மற்றும் இன்றைய மலேசியா மற்றும் இந்தோனோசியா ஆகியவற்றின் பல இடங்களைத் தாக்கினார். இந்த படையெடுப்பின் மூலம் தமிழ் வர்த்தகர்களுக்கு மலேசியா உட்பட பல தென்கிழக்காசிய நாடுகளுக்குள் பிரவேசிக்க வாய்ப்பு கிட்டியது. சோழ சாம்ராஜ்ஜியத்திடம் மிகப்பெரிய கப்பல் ஒன்று இருந்தது. அது, இன்றைய கங்கை, மலேசியா மற்றும் சுமாத்ராவிற்கு பயணம் மேற்கொண்டதன் மூலம் இந்திய வர்த்தகர்கள் மற்றும் சமயப்பரப்பாளர்கள் பயணிப்பதற்கு உதவியாக இருந்தது. இன்றும், பழைய கெடா மக்கள் மற்றும் இந்தியர்கள் தொடர்பில் இருந்ததற்கான அடையாளம் இருக்கின்றது. , தென் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த போதும், முன்பு சோழ சாம்ராஜ்ஜியத்திற்கு உட்பட்ட தஞ்சாவூரில், கடாரம் கொண்டான் என்றொரு கிராமம் இருக்கின்றது. அக்கிராமத்தில், கடாரங்காய் அல்லது கடாரம் கூழ் என்று ஒரு வகையான ஆரஞ்சு பழம் இருக்கின்றது. இது மலேசியாவிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டது.
பிரிட்டீஷ் காலனித்துவத்தின் போது
18-ஆம் நுற்றாண்டில், பிரிட்டிஷ், தீபகற்ப மலாயாவைத் தன் வசப்படுத்தி, இன்றைய மலேசியா மற்றும் சிங்கப்பூரை பிரிட்டிஷ் மலாயா என்று பெயரிட்டது. இந்தியர்களின் ஆங்கில மொழி புரிதல் காரணமாக இந்திய தொழிலாளர்கள் பிரிட்டிஷ் மலாயாவிற்கு வருவதை பிரிட்டிஷ் மிகவும் ஆதரித்தது. இந்தியர்கள், தொழிலாளர்களாகவும், காவல் துறையினராகவும் அரசாங்க அதிகாரிகளாகவும் மற்றும் ராணுவ அதிகாரிகளாகவும் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். இந்த காலகட்டத்தில் பிரிட்டிஷ் மலாயாவிற்கு குடிபெயர்ந்த இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் தங்களின் குடும்பங்களை இந்தியாவில் விட்டு வந்த ஆண்களாவர். ஆதலால், பிரிட்டிஷ் மலாயாவிற்கு வந்த ஆண்கள் தங்களின் குடும்பங்களைக் காண அவப்பொழுது அல்லது ஒரேடியாக இந்தியாவிற்கு திரும்பியதால், இந்தியர்களின் மக்கள் தொகை ஏற்ற இறக்கமாகவே இருந்தது.
20-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், சுமார் 120,000 இந்தியர்கள் பிரிட்டிஷ் மலாயாவில் வாழ்ந்தனர். இந்த எண்ணிக்கை 30 வருட காலத்தில் 433% பெருகி 1931- ஆம் ஆண்டிற்குள், சுமார் 640,000 இந்தியர்கள் வாழ துவங்கி விட்டனர். இரண்டாம் உலகப் போரின் போது, இந்திய மக்களின் தொகை பெருவாரியாக சரிந்தது. அதற்குக் காரணம், அவர்கள் தங்களின் நாட்டு ராணுவத்திற்குச் சேவை செய்வதற்காக திரும்பி சென்று விட்டனர். 1931-ஆம் ஆண்டிலிருந்து 1957-ஆம் ஆண்டு வரை, இந்தியர்களின் எண்ணிக்கை 28% அதாவது சுமார் 820,000 வரை மட்டுமே அதிகரித்தது.
1946-ஆம் ஆண்டிற்கும் 1948-ஆம் ஆண்டிற்கும் இடையில், மலாயா யூனியனை அமைப்பதில் தோல்வி கண்ட பிரிட்டிஷ் அதிகாரிகள், 1948-ஆம் ஆண்டு மலாய் ஆட்சியாளர்களை அங்கீகரித்த மலாயா கூட்டமைப்பை நிறுவியது. 31-ஆம் திகதி ஆகஸ்ட் மாதம் 1957-ல் மலாயா கூட்டமைப்பு பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து சுதந்திரம் அடைந்து பிரிட்டிஷ் காலனித்துவத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தது. மலாயா கூட்டமைப்பு தனது சுதந்திரத்தை அறிவித்த பின்னும் பிரிட்டிஷ் மலாயாவை விட்டு வெளியேறிய பின்னும், இந்தியர்களின் எண்ணிக்கை மேலும் சரியத் தொடங்கியது.
16-ஆம் திகதி செப்டம்பர் மாதம் 1963-ல், மலேசிய கூட்டமைப்பு, மலேசியா என்று நிறுவப்பட்டது. இதில், மலாயா கூட்டமைப்பில் இருந்த பழைய உறுப்பின மாநிலங்களுடன் புதிய உறுப்பினர்களாக சிங்கப்பூர், வட போர்னியோ மற்றும் சரவாக் இணைந்து கொண்டது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு சிங்கப்பூர் கூட்டமைப்பில் இருந்து விலகிக் கொண்டது.
பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்குப் பின்
இன்றும், இந்தியர்கள் மலேசியாவிற்குள் குடியேறிக் கொண்டு இருக்கின்றார்கள். அவர்கள் நிபுணர்கள், உணவகங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் மற்றும் மலேசிய இந்தியர்களைத் திருமணம் புரிந்து கொண்டவர்கள் ஆகியோர் ஆவர்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு
மலேசிய மக்களின் மொத்த தொகை ஜூலை மாதத்தின் படி 30,949,962 ஆகும். அவர்களில் இந்தியர்கள் மொத்தம் 6.7% அல்லது சுமார் இரண்டு மில்லியன் மக்களாவர். 90% இந்தியர்கள் தமிழ் சமூகத்தைச் சார்ந்தவர்கள். மீதமுள்ள 10% தெலுங்கு, மலாயாளம், பஞ்சாபி, குஜராத்தி, சிந்தி ஆகிய சமூகத்தினைச் சார்ந்தவர்களாவர். இந்திய மக்கள் தங்களின் சமூகத்தின்படி பல மொழிகளில் உதாரணத்திற்கு தமிழ், தெலுங்கு, மலாய், இந்தி மற்றும் பஞ்சாபி ஆகிய மொழிகளில் உரையாடுகின்றனர்.
மதங்கள்
காலனித்துவத்திற்கு முன்பும் காலனித்துவத்தின் போதும் மலேசிய குடியேறிகள் பெரும்பாலும் புத்த மதம் அல்லது இந்து மத்தைச் சார்ந்திருந்தனர். இருப்பினும், இன்று, மற்ற இனத்தினருடன் இணைந்ததால் சில இந்தியர்கள் இஸ்லாம் மற்றும் கிறிஸ்த்துவம் போன்ற மற்ற மதங்களையும் பின்பற்றுகின்றனர்.
மலேசிய கலாச்சாரத்தில் இந்தியர்களின் தாக்கம்
உள்ளூர் நாட்டுப்புற கதைகள்
பல உள்ளூர் மலாய் நாட்டுப்புற கதைகள் இந்தியர்களின் மகாபாரதம் மற்றும் இராமயணம் போன்ற புராணக்கதைகளின் தாக்கத்தைக் கொண்டிருக்கின்றன. இவற்றின் மிகப் பழமை வாய்ந்த கதைகள் முதலில் இந்திய மொழிகளான சமஸ்கிருதம் மற்றும் பல்லவத்தில் எழுதப்பட்டன. அவை:
- ஸ்ரீ ராமர் சரித்திரம் – இது, கதை மாந்தர்கள் மற்றும் சூழ்நிலைகளின் சிறு மாற்றத்துடன் இந்திய புராணமான இராமயணத்தின் தழுவல்.
- மேரோங் மஹாவங்சா அல்லது கெடாவின் சரித்திரக்குறிப்பு என்றும் அறியப்படுகின்றது – இது ஓர் இளவரசரும் கெடா மாநிலத்துடனான அவரின் உறவைப் பற்றியும் விளக்கும் தமிழ் இலக்கியம். இக்கதை சோழ சாம்ராஜ்ஜியத்திலிருந்த வர்த்தகர்களைப் பற்றியும் அவர்களின் பரிவர்த்தனைகள் பற்றியும் விளக்குகின்றது.
- பஞ்சதந்திர கதைகள் – இந்தியாவின் மிருக நீதிக்கதைகளின் தொகுப்பின் தழுவல்.
- பாயான் புடிமான் கதை – சுகாசப்தத்தி என்ற இந்திய இலக்கியத்தின் தழுவல். இது ஒரு கிளி தனது முதலாளி வழி தவறிப் போகக்கூடாது என்பதற்காகக் கூறும் கதையாகும்.
மொழி
இந்தியர்களின் தாக்கம் மலாய் மொழியிலும் இருக்கின்றது. பல மலாய் வார்த்தைகள் இந்தி, சமஸ்கிருதம் மற்றும் தமிழ் போன்ற மொழிகளிலிருந்து தோன்றின.
இந்திய சொற்களஞ்சியத்திலிருந்து தோன்றிய மலாய் வார்த்தைகள்:
மலாய் சொற்கள் | ஆங்கில மொழிப்பெயர்ப்பு | அசல் சொற்கள் | அசல் மொழி |
Agama | Religion | அகமா | சமஸ்கிருதம் |
Aksara | Alphabet letter | அக்சரா | சமஸ்கிருதம் |
Anugerah | Grace, blessings | அனுகிரஹா | சமஸ்கிருதம் |
Asmara | Passion | ஸ்மாரா | சமஸ்கிருதம் |
Buat | Do | வுவாட் | சமஸ்கிருதம் |
Bumi | Earth | பூமி | சமஸ்கிருதம் |
Cendana | Sandalwood | சந்தனா | சமஸ்கிருதம் |
Dobi | Laundry | டோபி | இந்தி |
Duka | Grief | துகா | சமஸ்கிருதம் |
Kapal | Boat | கப்பல் | தமிழ் |
Kedai | Stall | கடை | தமிழ் |
Kuil | Temple/ shrine | கோவில் | தமிழ் |
Kuda | Horse | குட்டா | சமஸ்கிருதம் |
Maha | Great | மஹா | சமஸ்கிருதம் |
Mangga | Mango | மாங்காய் | தமிழ் |
Wanita | Women | வனிதை | தமிழ்/தெலுங்கு |
Mutiara | Pearl | முத்து | தமிழ் |
Kakak | Older sibling | அக்கா | தமிழ் |
மலேசிய இந்தியர்களுடன் தொடர்புடைய பண்டிகைகள்
பத்துமலையில் தைப்பூச திருவிழாக் கொண்டாட்டம்
தைப்பூசம், சிவபெருமான் பார்வதியம்மையாரின் புதல்வரான போர்க்கடவுள் முருகப்பெருமானுக்கு மரியாதை செலுத்தும் விழாவாகும். இவ்விழா, தமிழ் நாட்காட்டியின் தை மாதத்தில் வரும் பெளணர்மியில் (ஜனவரியில் அல்லது பிப்ரவரி மாதத்தில்) கொண்டாடப்படுகின்றது. தைப்பூசத்திற்கு முதல் நாள், முருக பக்தர்கள் தங்களின் நன்றியை முருகப்பெருமானுக்கு தன்னிலை மறந்து காவடி ஆட்டம் அல்லது சுமை ஆட்டம் மூலம் வெளிப்படுத்துவார்கள். பக்தர்கள் பெரும்பாலும் பால்குடங்களை முருகப்பெருமானுக்கு சுமந்து சென்று செலுத்துவதோடு தங்களின் உடல்களில் அலகு குத்திக் கொள்வார்கள். இவ்விழாவின் போது முருகப்பக்தர்கள் தன்னிலை மறந்து இருக்கும் காட்சிகளைக் காணலாம்.
தைப்பூசம் மலேசியாவிலுள்ள பெரும்பாலான இந்து ஆலயங்களில் கொண்டாடப்பட்டாலும், பத்துமலையில் உள்ள ஸ்ரீ சுப்ரமணியர் சுவாமி ஆலயத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது.
தீபாவளி – தீப ஒளித்திருநாள்
தீபாவளி அல்லது தீவாளி என்பது ஒவ்வொரு வருடமும் இந்து நாட்காட்டியின் கார்த்திகை மாதத்தில் வரும் 15-ஆம் நாள் கொண்டாடப்படும் தீப ஒளித்திருநாளாகும். இப்பண்டிகை செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் வளமான வாழ்வை வழங்கும் இலட்சுமி தெய்வத்திற்கு மரியாதை செலுத்தும் பண்டிகையாகும். பண்டிகைக்கு முன்பு, இலட்சுமி தெய்வத்தின் பக்தர்கள் அவரின் வருகை வேண்டி தங்களின் வீட்டைச் சுத்தப்படுத்துவார்கள். நிறைய கடைகள் உதாரணத்திற்கு, லிட்டல் இந்தியா, பிரிக்ஃபில்ஸ்ஸில் வீட்டை அலங்கரிக்கும் பொருட்கள் விற்கப்படும். அதோடு மட்டுமில்லாது, வருகையாளர்கள் கண்கவர் இந்திய பாரம்பரிய உடைகளையும் ஆபரணங்களையும் காணலாம். தீபாவளிக்கு ஒரு நாள் முன்பு, பக்தர்கள் வீட்டில் அல்லது ஆலயத்திற்குச் சென்று இறைவனை வழிபடுவார்கள். அதன்பின், தங்களின் உறவினர்களுடன் ஒன்று கூடி தீயவற்றை விலக்கும் ஒளியைக் குறிக்கும் அகல்விளக்குகளை ஏற்றி விருந்துண்டு மகிழ்வர்.
விஷு
விஷு, மலையாளிகளின் புத்தாண்டாகும். இப்புத்தாண்டு மலையாள நாட்காட்டியின் மேடம் மாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்படுகின்றது (ஏப்ரல் மாதத்தில் இரண்டாவது வாரத்தில் வரும்). மலையாளிகளுக்கு விஷு, இறைவனை வழிபடுவதற்கும் இந்து கடவுள்களுக்குப் பிரசாதங்கள் வழங்கவும் மிக புனிதமான நாள். இந்த மகிழ்ச்சி நிறைந்த நன்னாளில், மலையாள பெரியவர்கள் கைநீட்டம் அல்லது பணங்களை இளையவர்களுக்கு வழங்குவது வழக்கமாகும்.
ஓணம்
ஓணம் மலையாளிகளின் அறுவடை திருநாள் ஆகும். இத்திருநாள் மலையாள நாட்காட்டியில் வரும் சிங்கம் மாதத்தில் கொண்டாடப்படுகின்றது (ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம்). ஓணம் பண்டிகை நாற்று நடும் இறுதி நாளையும், விஷ்ணுவின் ஐந்தாவது அவதாரமான மகாபலி அரசர் பாதாள உலகத்திலிருந்து மீண்டும் வந்த நாளையும் கொண்டாடும் திருநாளாகும்.
உகாதி
உகாதி தெலுங்கு சமூகத்தினரின் புத்தாண்டு கொண்டாட்டமாகும். இப்புத்தாண்டு இந்திய பஞ்சாங்க நாட்காட்டியில் வரும் சைத்ர மாதத்தில் கொண்டாடப்படுகின்றது (மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் வரும்). உகாதிக்கு ஒரு நாள் முன்பு, தெலுங்கு சமூகத்தினரின் தங்களின் வீட்டைச் சுத்தப்படுத்தி மாவிலைகள் மற்றும் கலர் அரிசிகள், மாவு, மணல் மற்றும் பூவிதழ்கள் கொண்டு போடப்படும் வர்ண ரங்கோலி கோலங்களால் அலங்கரிப்பதோடு புத்தாடைகளும் வாங்குவார்கள். உகாதிக்கு முதல் நாளன்று, வீட்டுப் பெரியவர்கள் முன்னின்று குடும்பத்துடன் எதிர்வரும் ஆண்டிற்காக ஆசியும், ஆரோக்கியமான உடல், செல்வம் மற்றும் மகிழ்ச்சி வேண்டி இந்து தெய்வங்களுக்கு பூஜை செய்வார்கள்.
மலேசியாவிலுள்ள இந்தியர்களுடன் தொடர்புடைய குறிப்பிடத்தக்க இடங்கள்
மலேசியாவில் இந்திய கலாச்சாரங்களைப் பிரதிபலிக்கும் புகழ்பெற்ற இரண்டு இடங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.
லிட்டல் இந்தியா, பிரிக்ஃபில்ஸ்
கேஎல் சென்ட்ரல் நிலையத்திலிருந்து நடக்கும் தூரத்தில் இருக்கும் பிரிக்ஃபில்ஸ்ஸில் லிட்டல் இந்தியா இருக்கின்றது.மலேசிய அரசாங்கம் மக்கள் குடியிருப்பு இடத்தினை மாற்றியமைத்து இந்திய சமூகத்திற்கும் அவர்களின் தொழிலுக்கும் அவ்விடத்தினை மையமாக்கி லிட்டல் இந்தியா என்று அறியப்பட்டது. அக்டோபர் மாதம் 2010-ல் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மலேசிய பிரதமர் முகமட் நஜிப் துன் அப்துல் ரசாக் ஆகிய இருவரும் பிரிக்ஃபில்ஸ் லிட்டல் இந்தியாவை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தனர்.
கேஎல் சென்ட்ரல் நிலையத்திலிருந்து நடக்கும் தூரத்தில் இருக்கும் பிரிக்ஃபில்ஸ்ஸில் லிட்டல் இந்தியா இருக்கின்றது.மலேசிய அரசாங்கம் மக்கள் குடியிருப்பு இடத்தினை மாற்றியமைத்து இந்திய சமூகத்திற்கும் அவர்களின் தொழிலுக்கும் அவ்விடத்தினை மையமாக்கி லிட்டல் இந்தியா என்று அறியப்பட்டது. அக்டோபர் மாதம் 2010-ல் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மலேசிய பிரதமர் முகமட் நஜிப் துன் அப்துல் ரசாக் ஆகிய இருவரும் பிரிக்ஃபில்ஸ் லிட்டல் இந்தியாவை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தனர்.
லிட்டல் இந்தியா, பிரிக்ஃபில்ஸ் சுற்றிப் பார்த்தல்
போக்குவரத்து
லிட்டல் இந்தியா, பிரிக்ஃபில்ஸ் செல்ல நிறைய வழிகள் உண்டு:
- மோனோரயில் – வருகையாளர்கள் கேஎல் மோனோரயில் எடுத்து துன் சம்பந்தன் நிலையத்தில் இறங்கலாம்
- இலகு தொடருந்து போக்குவரத்து (எல்ஆர்டி) – வருகையாளர்கள் கெளானா ஜெயா பாதை செல்லும் எல்ஆர்டி எடுத்து கேஎல் சென்ட்ரல் நிலையத்தில் இறங்கலாம்.
- இரயில் – வருகையாளர்கள் கேடிஎம் இரயில் சேவை அல்லது விரைவு இரயில் சேவை (ஈஆர்எல்) எடுத்து கேஎல் சென்ட்ரல் நிலையத்தில் இறங்கலாம்.
- பேருந்து – வருகையாளர்கள் பிரிக்ஃபில்ஸ் வழியில் செல்லும் ரேபிட்கேஎல் பேருந்துகளில் செல்லலாம். மேல் விவரங்களுக்கு ரேபிட்கேஎல் இணையத்தளத்தை http://www.myrapid.com.my/ வலம் வாருங்கள்.
தங்கும் வசதி
லிட்டல் இந்தியா, பிரிக்ஃபில்ஸ்ஸில் தங்குவதற்கு விரும்பினால், இந்த பகுதியில் இருக்ககூடிய இடங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன (தயவு செய்து உங்களின் தேவைக்கு ஏற்ப உள்ள இடங்களைப் பற்றி மேல் விவரங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்):
- OYO ரூம் பிரிக்ஃபில்ஸ் லிட்டல் இந்தியா
முகவரி:
My Signature Hotel Little India
130 Jalan Thamby Abdullah
Kuala-Lumpur, KL Sentral, 50470
Wilayah Persekutuan Kuala Lumpur
Malaysia
தொலைபேசி எண்: +6010 4011 393 - எலோஃப்ட் கோலாலம்பூர் சென்ட்ரல் ஹோட்டல்
Address:
No. 5 Jalan Stesen Sentral 5,
Kuala Lumpur Sentral
50470 Kuala Lumpur
Malaysia
தொலைபேசி எண்: +603 2723 1188
பத்துமலை
கல்மலை என்று ஆங்கிலத்தில் கூறப்படும் பத்துமலை, கோலாலம்பூரிலிருந்து 13 கிலோமீட்டரில் இருக்கும் சிலாங்கூரில் அமைந்திருக்கும் இந்து ஆலயமாகும். இவ்வாலயம் போர்க்கடவுளான முருகப்பெருமானுக்காக கட்டப்பட்டது. தைப்பூச திருநாளின் முக்கிய தலமாய் விளங்கும் பத்துமலை ஆண்டுதோறும் பல்லாயிரகணக்கான பக்தர்களையும் சுற்றுலா பயணிகளையும் ஈர்க்கின்றது. பார்வையாளர்கள் கோவில் குருக்களிடமிருந்து ஆசிகள் பெறலாம்.
இம்மலையின் பெயர், சுண்ணாம்பு மலை மற்றும் மூன்று முக்கிய குகைகளைக் கடந்து வரும் கல் நதியினால் தோன்றியது. இங்கே மூன்று முக்கிய குகைகள் இருக்கின்றன: மலைக்குகை அல்லது கதீட்ரல் குகை, விலா குகை மற்றும் ராமாயண குகை.
ஸ்ரீ சுப்ரமணியர் சுவாமி ஆலயம்
முகவரி:
Batu Caves
68000 Selangor
Malaysia
தொலைபேசி எண்: +603 6189 6284
தொலைநகல்: +603 6187 2404
மின்னஞ்சல்: batu_caves@yahoo.com
கோவில் குகை அல்லது கதீட்ரல் குகை
இப்பகுதியில் கோவில் குகைதான் மிகப்பெரிய குகை என்பதோடு அது முருகப்பெருமனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. குகையின் வெளிப்புறத்தில், பார்வையாளர்கள் உலகின் மிக உயரமான அதாவது 42 மீட்டர் உயரமான தங்கத்திலான முருகப்பெருமானின் உருவச்சிலையைக் காணலாம். கோவில் குகையை அடைய வேண்டுமெனில், பார்வையாளர்கள் 272 படிகளைக் கீழ்தளத்திலிருந்து ஏறி செல்ல வேண்டும். கோவில் குகைக்குள் நுழைய கட்டணம் ஏதுமில்லை. ஆனால், பார்வையாளர்கள் விருப்பப்பட்டால் நன்கொடைகள் வழங்கலாம்.
விலா குகை
விலா குகை பத்துமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இக்குகைக்குள் இந்து தெய்வங்களின் சிலைகள் அடங்கிய கலைக்கூடமும் அருங்காட்சியகமும் அமைந்துள்ளன. விலா குகைக்குள் நுழைய, அனைத்துலக பார்வையாளர்கள் ஒருவருக்கு RM15 மற்றும் மலேசிய பிரஜைகள் ஒருவருக்கு RM7 கட்டணம் செலுத்த வேண்டும்.
இராமாயண குகை
சுண்ணாம்பு குன்றின் இடது புறத்தில் இராமயண குகை அமைந்துள்ளது. இராமயண குகைக்குச் செல்லும் வழியில், 15 மீட்டர் உயரமான பச்சை நிற ஹனுமான் சிலையைப் பார்வையாளர்கள் காணலாம். பத்துமலையில் நிறைய குரங்குகள் வசிப்பதால், இச்சிலை அவ்விடத்தில் கட்டப்பட்டிருக்கலாம்.
ஹனுமான் சிலையுடன், பார்வையாளர்கள் விஷ்ணுவின் ஏழாவது அவதாரமாக கருதப்படும் இராமரின் கோவிலைக் காணலாம். இராமயண குகைக்குள் இருக்கும் சுவர்களில் இராமயண கதையின் ஓவியங்கள் வரையப்பட்டு இருக்கும். இராமயண குகைக்குள் செல்வதற்கு பார்வையாளர்கள் RM5 கட்டணம் செலுத்த வேண்டும்.
பத்துமலையைச் சுற்றிப் பார்த்தல்
பத்துமலை, வடக்கு கோலாலம்பூரின் மைய நகரத்திலிருந்து சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. தைப்பூச திருவிழாவின் போது, கேஎல் சென்ட்ரல் நிலையத்திலிருந்து பத்துமலைக்கு பக்தர்களும் பார்வையாளர்களும் செல்வதற்காக சிறப்பு பேருந்து சேவை வழங்கப்படும். பார்வையாளர்கள் வாடகை வண்டி வசதியையும் பயன்படுத்தலாம். மற்றுமொரு போக்குவரத்து சேவையான கேடிஎம் இரயில் சேவையை (பத்து மலை – சிரம்பான் பாதை) பயன்படுத்தலாம் அல்லது பார்வையாளர்கள் கோலாலம்பூர் நகரத்திலிருந்து புறப்பட்டால், அவர்கள் ஒரு வழிப்பாதைக்கு RM5 கட்டணம் செலுத்தி கேஎல் சென்ட்ரலில் இருந்து கேடிஎம் ரயில் சேவையைப் பயன்படுத்தி கேஎல் சென்ட்ரல் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து வாடகை வண்டி மூலம் பத்துமலையை அடையலாம்.
மலேசியாவில் இந்திய உணவு வகைகள்
இந்தியர்களின் தாக்கத்தை மலேசிய உணவு வகைகளிலும் காணலாம். மலேசியாவிலுள்ள 90% இந்தியர்கள், தமிழ் சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதால், சில மலேசிய உணவுகளில் தென் இந்திய உணவுகளின் தாக்கம் இருப்பதோடு அவை மாமாக் உணவு வகைகள் என்று ஒன்றையும் உருவாக்கி விட்டன.
பொதுவாக, மலேசிய இந்திய உணவுகளில், கருவேப்பிலை, கிராம்பு, ஏலக்காய், இலவங்கப்பட்டை, போன்ற மசாலா பொருட்களோடு தேங்காய்களும் உள்ளடக்கியுள்ளன. மலேசிய இந்திய உணவுகளில் சில உதாரணங்கள் ஊறுகாய், அப்பம், அவியல், வாழை இலை உணவு, பிரியாணி சோறு, ரொட்டி சானாய், சப்பாத்தி மற்றும் பல.
உங்களுக்கு தரமான இந்திய உணவு உண்ண வேண்டுமெனில், மலேசியாவில் சில உணவகங்களில் நீங்கள் உண்ணலாம்:
- ஸ்பைஸ் ஆஃப் இந்தியா
முகவரி:
Level 4 Suria KLCC, Suria KLCC
Jalan Ampang
50088 Kuala Lumpur
Malaysia
தொலைபேசி எண்: +603 2164 9221
நேரம்: காலை மணி 11.30 முதல் இரவு மணி 10 வரை - சப்பாத்தி.காம்
முகவரி:
9B-2, Jalan Kemajuan
Seksyen 13,
Petaling Jaya
46200 Selangor
Malaysia
தொலைபேசி எண்:+603 7931 3106
நேரம்:காலை மணி 11.30 முதல் மாலை 2.30 வரை, மாலை 5.30 முதல் இரவு மணி 10.30 வரை - நமஸ்தே இந்திய உணவகம்
முகவரி:
4, Jalan Datuk Sulaiman
Taman Tun Dr Ismail
60000 Kuala Lumpur
Malaysia
தொலைபேசி எண்:+603 7724 1195
நேரம்: காலை மணி 10.00 முதல் இரவு மணி 10.00 வரை - சாகார் உணவகம் என்டிரியான் பெர்ஹாட்
முகவரி:
4, Lorong Maarof, Bangsar
59000 Kuala Lumpur
Malaysia
தொலைபேசி எண்:+603-2284 2532
நேரம்: நண்பகல் மணி 12.00 முதல் மாலை 3.00 வரை, மாலை 6.00 முதல் இரவு மணி 10.30 வரை
இந்திய பாரம்பரியத்தில் தோன்றிய புகழ்பெற்ற பிரமுகர்கள்
தங்களின் மிக நீண்ட வரலாற்றில், மலேசியாவின் மேம்பாட்டிற்கு இந்தியர்கள் பெரும் பங்களித்திருக்கின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட சில புகழ்பெற்ற இந்திய பிரமுகர்கள் பற்றி கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
சரித்திர புகழ்பெற்ற பிரமுகர்கள்
துன் ஃபாத்திமா
துன் ஃபாத்திமா மலாக்காவின் துன் முத்தாயிர் அவர்களின் மகளாவார். சுல்தான் மாம்மூட் ஷா, துன் ஃபாத்திமாவின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் கொன்று துன் ஃபாத்திமாவைத் திருமணம் செய்து கொண்டார். சுல்தானுக்கு மனைவியாவதற்கு முன், துன் ஃபாத்திமா துன் அலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். தாளா முடியா துயரத்தின் காரணமாக சுல்தானைத் திருமணம் செய்து சில வருடங்கள் வரை அவருக்கு குறைப்பிரசவம் ஆகிக் கொண்டே இருந்தது. துன் ஃபாத்திமா ஆண் வாரிசை ஈன்றால், அம்மகனுக்கே அரியணை வழங்குவதாக சுல்தான் உறுதியளித்தார். அதன்பின்பு, துன் ஃபாத்திமா 2 மகன்களும் 2 மகள்களையும் ஈன்றெடுத்தார்.
துன் ஃபாத்திமா மிகவும் புகழ்பெற்ற மற்றும் கவர்ந்திழுக்கும் ராணியாக திகழ்ந்தார். அவரின் பதவிகாலத்தில், அவர் கணவரைத் தவிர்த்து தன் குடும்பத்தினரைக் கொன்ற மற்ற அனைவருக்கும் தண்டனை வழங்கினார். போர்த்துகல் மலாக்காவை கைப்பற்றியதும், அவரின் இரு புதல்வர்களும் அங்கிருந்து சென்று தங்களின் சொந்த சுல்தானகத்தை உருவாக்கினார்கள். அவரின் முதல் மகனான், ராஜா ராடேன் அலி, பேராக் சுல்தானகத்தையும், அவரின் இரண்டாவது புதல்வர் சுல்தான் அலாவுதீன் ரியாட் ஷா II, ஜோகூர் சுல்தானகத்தையும் உருவாக்கினார்கள்.
துன் அலி, மலாக்கா (அலுவலகத்தில்: 1445-1456)
ஸ்ரீ நாரா டிராஜா துன் அலி, மலாக்கா சுல்தானகத்தின் நான்காவது பிரதமராவார். இவர் தமிழ் சமூகத்தைச் சார்ந்தவர். இவர் மலாக்கா சுல்தானகத்தில் மிகவும் சக்திவாய்ந்த பிரமுகராக திகழ்ந்தார். இவரின் தலைவரான, சுல்தான் அபு சாயிட் ஷா என்று அறியப்பட்ட ராஜா ஸ்ரீ பரமேஸ்வரா டேவா ஷாவின் (1444-1446) மறைவிற்கு பின், அவரின் மருமகனான, ராஜா கசிம் அவர்களை புதிய மலாக்கா சுல்தானாக பிரகடனப்படுத்தியதோடு அவருக்கு சுல்தான் முசாபர் ஷா (1445-1459) என்ற பட்டமும் வழங்கினார்.
மலாக்காவின் துன் முத்தாயிர் (அலுவலகத்தில்: 1500-1510)
துன் முத்தாயிர் மலாக்கா சுல்தானகத்தின் ஏழாவது பிரதமராவர். இவர் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த இஸ்லாமிய தலைவர். இவரின் பதவிக்காலத்தில், நிறைய இஸ்லாமிய அதிகாரிகள் அரசாங்க முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டனர். பெரும்பாலானோர் துன் முத்தாயிரின் உறவினர்கள் ஆவர். இந்த பாரபட்சத்தைக் கண்ட மலாக்கா துறைமுக தலைவரும் எதிர்க்கட்சியைச் சார்ந்தவருமான ராஜா முதலியார், அரியணையைக் கைப்பற்ற துன் முத்தாயிர் திட்டம் தீட்டுவதாக குற்றம் சாட்டினார். இதனைக் கேட்ட, சுல்தான் மாமூட் ஷா, துன் ஃபாத்திமாவைத் தவிர துன் முத்தாயிரின் அனைத்து குடும்ப உறுப்பினர்களையும் கொல்வதற்கு ஆணையிட்டார். துன் ஃபாத்திமாவை சுல்தான் திருமணம் செய்து கொண்டார்.
தொழிலதிபர்கள்
டோனி ஃபெர்னான்டஸ்
தான் ஸ்ரீ அந்தோனி ஃப்ரான்சிஸ் ஃபெர்னான்டஸ் அல்லது டோனி ஃபெர்னான்டஸ் 30-ஆம் திகதி 1964-ல் கோலாலம்பூரில் ஓர் இந்திய குடும்பத்தில் பிறந்தார். அவர் ஏர் ஆசியா எனப்படும் முன்னாள் அரசாங்க விமான சேவையை நஷ்டத்திலிருந்து காப்பாற்றி, அதனை உலகிலேயே மிகக் குறைந்த கட்டண விமான சேவையாக மாற்றியமைத்தார், அதோடு மட்டுமில்லாமல், அவர் ட்யூன் குறைந்த விலை தங்கும் விடுதிகள் மற்றும் கேதேர்ஹம் எஃப் 1 ஃபோர்முலா ஓன் தீம்மின் நிறுவனர் மற்றும் பங்குதாரர் ஆவார்.
ஆனந்த கிருஷ்ணன்
தட்பரானந்தம் ஆனந்த கிருஷ்ணன், 1-ஆம் திகதி ஏப்ரல் மாதம் 1938-ல் ஸ்ரீ லங்காவைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்தார். மெல்பேர்ன் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும் பின்பு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். அதன்பின் பல்வகை துறைகளைச் சார்ந்த நிறுவனங்களைத் தோற்றுவித்தார், அவற்றில், ஆஸ்ட்ரோ, ஜோன்ஸ்தன் ப்ரெஸ் பிஎல்சி ஊடக சேவை, மியாசாட் மற்றும் SES செயற்கைக்கோள்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களான பூமி அர்மாடா மற்றும் பெக்ஸ்கோ, தொலைதொடர்பு நிறுவனங்களான மெக்சிஸ், ஏர்செல், ஏக்சிஸ், ஸ்ரீ லங்கா டெலிகோம் ஆகியவவை உள்ளடக்கமாகும். 2016-ஆம் ஆண்டிற்கான ஃபோர்ப்ஸ் நாளிதழ், அவர் உலகப் பணக்காரர்களில் 158-ஆவது இடத்திலும் மலேசியாவில் 2-ஆவது இடத்திலும் இருப்பதாக குறிப்பிட்டிருந்தது.
கலை மற்றும் பொழுதுபோக்கு
வீ. நாகராஜ்
வீ. நாகராஜ் என்பவர் புகழ்பெற்ற படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆவார். இவர், 20-ஆம் திகதி நவம்பர் மாதம் 1962-ல் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்தார். இவர் மலேசிய கலைத்துறையில் கடந்த 30 ஆண்டுகளாக தொழில் புரிந்து வருகிறார். இவர் நிறைய மலாய் படங்களை இயக்கி இருக்கின்றார். உதாரணத்திற்கு, கிலா கிலா ரெமாஜா, மத்தி ஹிடுப் செமுலா, செப்பி இது இன்டா, கெலுஆர்கா 99 மற்றும் இன்னும் பல படங்களாகும். வீ. நாகராஜ் சிறந்த வளர்ந்து வரும் இயக்குனர் என்ற விருதினை தனது கசல் உத்துக் ரபியா என்ற படத்திற்காக வென்றார். அதோடு சென்னையில் நிகழ்ந்த மலேசிய இந்திய திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனருக்கான விருதையும் வென்றார்.
ஆர்வலர்கள் மற்றும் பொதுச்சேவையாளர்கள்
அம்பிகா ஸ்ரீனிவாசன்
டத்தோ அம்பிகா ஸ்ரீனிவாசன், மலேசிய வழக்கறிஞர் மற்றும் மனித உரிமை ஆர்வலர் ஆவார். இவர், 1956-ல் ஓர் இந்திய குடும்பத்தில் பிறந்தார். டத்தோ அம்பிகா, மகளிருக்கான உதவி அமைப்பின் உறுப்பினர் மற்றும் பங்கு வர்த்தகத் தொழில்துறை இடர்பாட்டுத் தீர்வு மையத்தின் இயக்குனராகவும் செயல்படுகின்றார். இவர் 24-ஆவது மலேசிய வழக்கறிஞர்கள் கழகத் தலைவராக 2007-லிருந்து 2009 வரை பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல்வாதிகள்
துன் டத்தோ ஸ்ரீ டாக்டர் மகாதீர் பின் முகமட் (1925)
துன் டத்தோ ஸ்ரீ டாக்டர் மகாதீர் பின் முகமட், மலேசியாவின் நான்காவது பிரதமராவார் (1981-2003). இவர் தற்பொழுது, சுதேச ஐக்கிய கட்சியின் தலைவராக பணிபுரிகின்றார். 10-ஆம் திகதி ஜூலை மாதம் 1925-ல் கெடாவை சார்ந்த ஒரு இந்திய குடும்பத்தில் பிறந்தார். தலைமையாசிரியரான இவரது தந்தை, இவரை கடினப்பட்டு படிப்பதற்கு ஊக்குவித்தார்.
துன் டத்தோ மகாதீர் மலேசிய அரசியலில் ஒரு முக்கிய பிரமுகராகத் திகழ்ந்தார். அவர் பல முக்கிய பதவிகளை வகித்தார். உதாரணத்திற்கு, மக்களவை உறுப்பினர் (1964-1969), மேலவை உறுப்பினர் (1972-1974), அணிசேரா நாடுகள் இயக்கத்தின் 24-ஆவது செயலாளர், கல்வி அமைச்சர் (1974-1977), வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் (1978-1981), தற்காப்புத்துறை அமைச்சர் (1981-1986), உள்துறை அமைச்சர் (1986-1999), நிதியமைச்சர் (2001-2003), நான்காவது துணைப்பிரதமர் (1976-1981) மற்றும் நான்காவது மலேசிய பிரதமர் (1981-2003) ஆகியவை ஆகும்.
தேவன் நாயர் செங்கரா வீடில் (1923-2005)
பொதுவாக, சி.வி. தேவன் நாயர் என்றறியப்படும் இவர், சிங்கப்பூரின் மூன்றாவது அதிபர் ஆவார். இவர் 5-ஆம் திகதி ஆகஸ்ட் மாதம் 1923-ல் கேரளா, இந்தியாவிலிருந்து மலாக்காவிற்கு வந்த ஒரு குடும்பத்தில் பிறந்தார். அவருக்கு 10 வயது இருக்கும் பொழுது, அவரின் குடும்பம் சிங்கப்பூரிற்கு குடிபுகுந்தனர். 1954-ஆம் ஆண்டில், சி.வி. தேவன் நாயர், 1959-லிருந்து 1990 வரை பிரதமாரக பதவி புரிந்த லீ குவான் யூ அவர்கள் தோற்றுவித்த மக்கள் செயல்கட்சியில் (பிஎபி) இணைந்தார். அதன்பின் அவர், மலேசிய மற்றும் சிங்கப்பூரின் அரசியலில் ஒரு முக்கிய புள்ளியாகத் திகழ்ந்தார். அவரின் வாழ்நாளில், அவர் பல முக்கிய பதவிகளை வகித்தார். உதாரணத்திற்கு, சிங்கப்பூர் ஜனநாயக செயல் கட்சியின் பொதுசெயலாளர் (1965 -1967), மலேசிய மக்கள் செயல்கட்சியின் பொதுச் செயலாளர் (1965), புங்சார், சிலாங்கூரின் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் (1964-1969), சிங்கப்பூர் அன்சோன் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் (1979 -1981) மற்றும் சிங்கப்பூரின் அதிபராக 1981-ல் இருந்து 1985 வரை பணிபுரிந்தார்.
வீ.தி. சம்பந்தன் (1919 -1979)
தி.சம்பந்தாங் என்றும் அறியப்படும் துன் திருஞானசம்பந்தன் த/பெ வீராசாமி, 1919-ல் சுங்கை சிப்புட், பேராக்கில் பிறந்தார். இவர் மலேசிய இந்திய காங்கிரஸ்ஸின் 5-ஆவது தலைவராக 1955-லிருந்து 1973 வரை பணிபுரிந்தார். அதோடு, மலேசியாவிற்கான சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தார். வீ.தி. சம்பந்தன் துங்கு அப்துல் ரஹ்மான் மற்றும் தான் செங் லோக் ஆகியோருடன் இணைந்து மலேசிய தந்தை என்றழைக்கப்படுகின்றார்.
தகவல் மூலம்
- https://en.wikipedia.org/wiki/Malaysian_Indian
- http://www.sabrizain.org/malaya/hindu2.htm
- http://www.forbes.com/profile/ananda-krishnan/
- http://www.worldometers.info/world-population/malaysia-population/
- https://www.quora.com/What-are-some-of-the-achievements-of-Chola-dynasty-of-South-India
- http://www.indexmundi.com/malaysia/demographics_profile.html
- http://www.littleindia.com/nri/1781-indians-in-malaysia-an-alienated-community.html
- http://www.indianhighcommission.com.my/index.html
- http://www.malaysia.travel/en/places/states-of-malaysia/kuala-lumpur/little-india-brickfields
- http://minorityrights.org/minorities/indians-2/
- http://www.malaysiasite.nl/indians.htm
- https://en.wikipedia.org/wiki/Tamil_place_names_in_Malaysia
- https://en.wikipedia.org/wiki/Rajendra_Chola_I
- https://en.wikipedia.org/wiki/Panchatantra
- http://www.ibtimes.co.uk/thaipusam-festival-hindus-facial-body-piercings-make-pilgrimage-malaysias-batu-caves-1486368
- http://www.wonderfulmalaysia.com/malaysia-thaipusam-hindu-festival.htm
- http://www.timeanddate.com/holidays/malaysia/deepavali
- http://www.wonderfulmalaysia.com/faq/deepavali.htm
- http://www.rappler.com/life-and-style/travel/45536-kuala-lumpur-ten-places
- http://www.malaysia-traveller.com/batu-caves.html
- http://www.kuala-lumpur.ws/attractions/brickfields.htm
- https://en.wikipedia.org/wiki/Batu_Caves
- https://en.wikipedia.org/wiki/Onam
- http://www.dgreetings.com/ugadi/ugadi.html
- http://www.telugu-malaysia.com/2013/05/kuchipudi-dance-for-ugadi-celebration.html
- https://en.wikipedia.org/wiki/Tun_Ali_of_Malacca
- https://en.wikipedia.org/wiki/Tun_Fatimah#First_Marriage_To_Tun_Ali
- https://en.wikipedia.org/wiki/Tony_Fernandes
- https://en.wikipedia.org/wiki/Ananda_Krishnan
- https://en.wikipedia.org/wiki/V._Nagaraj
- https://en.wikipedia.org/wiki/Devan_Nair
- https://en.wikipedia.org/wiki/Ambiga_Sreenevasan
- https://en.wikipedia.org/wiki/V._T._Sambanthan
- https://asianinspirations.com.au/asian-culture/all-about-malaysian-indian-culture/
- https://en.wikipedia.org/wiki/Malaysian_Indian_cuisine
மேலும் பல சுவாரஸ்யமான இணைப்புகளுக்கு:
- Emperor Ashoka the Great
- Nice Indian Food
- Diwali Celebrations in India
- Thaipusam – The Festival of Lord Murugan
- 10 of the world’s best meditation retreats in India
- Jiddu Krishnamurti – The Freedom Fighter
- The Unwanted Widows of India
- Courtesans of Ancient India
Please support us so that we can continue to bring you more Dharma:
If you are in the United States, please note that your offerings and contributions are tax deductible. ~ the tsemrinpoche.com blog team
முருகபெருமான் தமிழ்க்கடவுள் ! முருகு என்றால் அழகு, இளமை, மணம் என்ற பொருள் உண்டு ஆனால் கட்டுரையாளர் முருக பெருமானை “போர்க்கடவுள்” என்று முதன்மைபடுத்தி எழுதியுள்ளது கண்டிக்கத்தக்கது. “இனிய உளவாக இன்னாத கூறல்…” என்ற குறளுக்கொப்ப முருகபெருமானை குறிக்க இனிய பெயர்கள் இருக்கும்போது கட்டுரை ஆசிரியர் “போர்க்கடவுள்” என்று குறித்திருப்பது வெதனைகுறியது. கட்டுரையை வாசிப்பவர்களுக்குத் தவரான என்னத்தை ஏற்படுத்தும். சமய இயக்கங்கள், தமிழ் ஊடகங்கள் உடனடியாக இதனை கண்டிக்க வேண்டும்.
முருகர் அழகின் வடிவமாகக் கருதப்படுவது உண்மைதான். ஆனால், அதே சமயம் அவரைப் போர்க்கடவுள் என்றும் குறிப்பிடுவார்கள். இது முருகக்கடவுளைப் பற்றிய கட்டுரை இல்லையென்பதால் கட்டுரையாளர் முருகனை விவரித்து எழுதவில்லை. அதே சமயம், தைப்பூச திருநாள் பற்றிய பகுதியில் முருகரை போர்க்கடவுள் என்று குறிப்பிட்டதே பொருத்தமாகும். இடத்திற்கும் கட்டுரையின் கருத்தின் தேவைக்கும் ஏற்பவே வார்த்தைகளின் பயன்பாடு இருக்கின்றது. கருத்துப்பிழை ஏதுமில்லை எனும் பட்சத்தில் இம்மாதிரியான எதிர்மறை கருத்துக்களை பதிவு செய்ய வேண்டாம் என்பது என் கருத்து.
முருகன் போர்க்கடவுள் என்று பல கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளனர். அவற்றில் சில :-
http://www.jothidam.tv/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/
http://sengovi.blogspot.my/2010/11/blog-post_28.html?m=1
https://www.reuters.com/article/us-malaysia-festival/malaysians-ready-to-honor-hindu-god-of-war-fertility-idUSTRE70C0RP20110113