டோர்ஜே ஷுக்டேன் அவர்களை வேண்டி சிறிய பிரார்த்தனை
மார்ச் 6, 2015-ல் முதன் முறையாகப் பதிவேற்றப்பட்டது.
(திசெம் ரின்போச்சே)
செல்வம்1, அமைதி2 மற்றும் பாதுகாப்பு3 ஆகியவற்றை தினசரி வேண்டுதல்
திசெம் ரின்போச்சே அவர்களால் எழுதப்பட்டது.
பல எண்ணற்ற தெய்வீக சக்திகள் சொர்க்கத்தில்4 உள்ளன. அந்த தெய்வீக சக்திகள், எல்லா உயிரினங்களுக்கும் நன்மை தரும் பொருட்டு, நமக்கு வெவ்வேறான தெய்வத்தன்மை வாய்ந்த அம்சங்களை5 காண்பிக்கின்றன. ரூபாகாயா6 வடிவங்களில் உள்ள அனைத்து சக்திகளும் கருணை, திறமை மற்றும் ஞானம் ஆகியவைகளைக் கொண்டுள்ளன. நாம் மகிழ்ச்சியாக, கவலையாக, நம்பிக்கையற்று, வழி தவறி, குழப்பமாக, காலியாக மற்றும் எல்லா வகையான உணர்ச்சிகளையும் அனுபவிக்கும் பொழுது அவர்களை வழிபடுகின்றோம். நாம் இந்த உணர்ச்சிகளை நம் பயிற்சியற்ற மனதின் காரணத்தால் தொடர்ந்து அனுபவிக்கின்றோம்.
எங்கள் இயல்புகளை புரிந்தவரான, உயர்ந்த ஞானம் பெற்ற மனிதரான டோர்ஜே ஷுக்டேன் அவர்களே, எங்களை ஒரு பெற்றோர் தங்கள் ஒரே குழந்தையை நேசிப்பது போல் உங்களுடன் எல்லா நேரங்களிலும் நெருக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.
தெய்வீக சக்திகளுக்கு எங்களிடமிருந்து படையல்கள் மற்றும் பரிசுகள் தேவையில்லை. எனினும், உயர்ந்த மஞ்சுசிரி7 டோர்ஜே ஷுக்டேன் அவர்களே நாங்கள் உங்களுக்கு, தேநீர், ஊதுபத்திகள் மற்றும் மந்திரங்களை உங்களுக்கு வழங்குகின்றோம். எங்களை ஆசிர்வதித்து, எங்களின் வாழ்க்கையில் ஒரு அம்சமாகவும், எங்களோடு இணைந்திருந்தும், நல்ல சம்பவங்களுக்கும் தீய சம்பவங்களுக்கும் அறிகுறிகள் காண்பிப்பீராக. தீயவை வரும் பொழுது, அவற்றை உடனடியாக நீக்குவீராக. உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளதால், சோர்ந்து களைத்துப்போன எங்கள் உள்ளங்களில் நல்ல எண்ணங்களை அதிகரிப்பீராக.
கஷ்டங்கள், சிக்கல்கள், குழப்பங்கள் தோன்றும் பொழுது, மிகவும் சக்தி வாய்ந்த, புனிதமான, எல்லாம் அறிந்த உங்களை நாங்கள் வேண்டுகிறோம். எங்களை, எங்கள் குடும்பங்களை, எங்கள் அன்புக்குரியவர்ளை, சுற்றுப்புற சூழலை மற்றும் எங்கள் செல்லப் பிராணிகளை ஆசீர்வதிப்பீராக. மெய்யறிவு மற்றும் நம்பிக்கை கொண்டு நான் அமைதி கொள்வேனாக.
ஓ புனிதமான பகவான்8 டோர்ஜே ஷுக்டேன் அவர்களே, நான் உங்களை வேண்டுகிறேன். வட்டமான தொப்பி, மூன்று காவி உடை அணிந்த பிக்குவே9, சுதந்திரம் எனும் வாளை ஏந்தி, நீதி, ஞானம் மற்றும் ஆசைகளை நிறைவேற்றும் ஆபரணத்தை இறுகப் பிடித்திருப்பவரே, தீய சக்திகளை அடக்கும் உயர் சிங்கத்தின் மேல் சவாரி செய்பவரே, என் விருப்பங்களை நிறைவேற்றுங்கள். என்னுடைய விருப்பங்கள், மிகச்சிறந்த விருப்பங்களாக இல்லாமல் இருக்கலாம். நான் உங்கள் ஞானத்திற்கு சரணடைந்து நான் வேண்டும் பலன்களாக இல்லாமல் இருந்தாலும் பலன்களை எதிர்பார்க்கின்றேன். தயவு கூர்ந்து, என்னையும், மற்றவர்களையும் சுதந்திர உலகில் சேர்ந்திட ஆசீர்வதிப்பீராக.
உயர்ந்த பகவான் டோர்ஜே ஷுக்டேன் அவர்களே, என் வாழ்க்கையில் ஒரு பகுதியாக இருக்க என் உள்ளம் கனிந்து வேண்டுகிறேன். எங்கள் குடும்பங்களை ஆசீர்வதித்து, மெய்யறிவை கொடுத்து, ஆறுதலாக இருந்து, அதாவது நான் மற்றவர்களுக்கு நேரம் காலம் பார்க்காமல் சேவை புரிந்து, தன்னிலமற்ற மனப்பான்மையுடன், என் சுயநலத்தால் என் அன்புக்குரியவர்களுக்கு கஷ்டமான நிலைமையை உருவாக்காமல், மற்றவர்கள் மீதும் கவனம் செலுத்த துணைபுரிவீராக.
நான் என்னை நேசிப்பவர் மீதும், என்னை வெறுப்பவர் மீதும் அன்பானவனாக, விவேகமுள்ளவனாக, கருணையுள்ளவனாக, சகிப்புத்தன்மையுடையவனாக, மன்னிக்கும் குணம் கொண்டவனாக இருக்க ஆசீர்வதிப்பீராக. டோர்ஜே ஷுக்டேன் அவர்களே, உங்களை நெருங்கும் பொருட்டு, எங்களின் சாதரண நிலையை நாங்கள் சரணடைகின்றோம்.. தேவையற்ற கருத்துக்கள், திட்டங்கள், பிடிமானங்கள் ஆகியவற்றை நாம் கைவிட வேண்டும். கடைசியாக, என் இறுதிக் கணத்தில், நான் இவ்வுலகை விட்டு போகும் தருவாயில், நான் செய்த புண்ணிய செயல்களே கடைசியில் என் பின்னால் வரும். எல்லா உலக பொருட்களும், என்னை சுற்றியுள்ளவர்களும் என்னை விட்டு பிரிந்து விடுவர்.எப்பொழுதும் இதை உணர்ந்து நான் செயல்பட வேண்டும்.இந்த முக்கியமான தருணத்தில், ஆற்றலும் இரக்கமும் கொண்ட டோர்ஜே ஷுக்டேன் அவர்களே, ,நான் ஆன்மீக வளர்ச்சியில் வானளவிற்கு10 முன்னேறிச் செல்ல உங்கள் பார்வை என் மீது விழட்டும்.
என் பிரார்த்தனைகளை நிறைவேற்றவும், சித்திகளைப்11 பெறவும் நான் உங்களுக்கு தேநீரையும் என் நம்பிக்கையும் கொடுக்கின்றேன். உங்கள் மந்திரங்களை ஓதுவதால், குணமும், அமைதியும், அன்பும், நீண்ட வாழ்வும் சன்யாதவைப்12 பற்றிய சரியான கருத்துக்களும் உண்டாகட்டும்.
நிம்மதி, அமைதி மற்றும் மெய்யறிவிற்கான மந்திரம்: ஓம் பென்ஸா விகி பிதானா சொஹா
(இந்த மந்திரத்தை தினந்தோறும் ஒரு ஜெபமாலை அல்லது அதற்கு மேல் ஓதுவதால் நன்மை கிட்டும்.ஒவ்வொரு வருடமும் எப்பொழுதாவது, இந்த மந்திரத்தை 100,000 முறை அல்லது அதற்கு மேல் ஓதுங்கள்.)
நான் விரைவில் அக ஒளி, கருணை, அன்பு மற்றும் ஞானம் அடைய நான் இந்த மனமார்ந்த பிரார்த்தனையை, அனைத்தும் அறிந்த தேவலோக மற்றும் மிக உயர்ந்த பாதுகாவலர் டோர்ஜே ஷுக்டேன் அவர்களுக்குச் சமர்பிக்கின்றேன்.
டோர்ஜே ஷுக்டேனுக்கான இந்த தினசரி பிரார்த்தனையை, 25-ஆவது H.E. திசெம் ரின்போச்சே அவர்கள் வியாழக்கிழமை, 26-ஆம் திகதி பிப்ரவரி மாதம் 2015-ல் விடியற்காலை 2.03 மணிக்கு டத்தின் எம்ஜேவிற்காக எழுதினார். டோர்ஜே ஷுக்டேனுக்கு நிறைய சடங்குகள், வழிபாடுகள் மற்றும் உரைகள் இருக்கின்றன. ஆனால், நிறைய பொறுப்புகள் இருக்கும் நபர்களுக்கும் போதிய நேரமில்லாதவர்களுக்கும் இது பொருத்தமானதாக இருக்கும். டத்தினுக்கு எளிமையாய் இருக்க வேண்டுமென்பதற்காக நான் இதனை எழுதினேன். இந்த பிரார்த்தனையை யார் வேண்டுமானாலும் எப்பொழுதிலும் பயன்படுத்தலாம். வார்த்தைகள் என்பது நமது எதிர்பார்ப்புகளையும் ஆசைகளையும் வெளிப்படுத்தும் ஒரு முறைதானே. வார்த்தைகள் மீது கவனம் செலுத்துவது தேவையற்றது, ஆனால், நமது ஆசைகளை எடுத்துரைக்க அவை நமக்கு தேவைப்படுகின்றது. இந்த சிறிய மற்றும் சுருக்கமான பிரார்த்தனை டத்தினுக்குப் பயனுள்ளதாக இருக்கும் பட்சத்தில், இதனை நான் அனைவருக்கும் கிடைக்கும் படி செய்கிறேன். யார் வேண்டுமானாலும் எம்மதமாயினும் எந்தவொரு அனுமதியும் பெறாமல் இப்பிராத்தனையில் ஈடுபடலாம். டோர்ஜே ஷுக்டேன், மதம், இனம், சமயக் கோட்பாடு மற்றும் பின்புலன் பாராமல் உதவி புரிவார். நான் இதனை எழுதுவதற்கு ஊன்றுகோலாக இருந்தது டத்தின் ஆவார். உலக அமைதி புத்தர் மற்றும் பாதுகாவலர் டோர்ஜே ஷுக்டேனை ‘தொடர்பு’ கொள்ள இருக்கும் பலரும் டத்தினுக்கு நன்றி உரைக்க வேண்டும். எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். சர்வ மங்களம்!
1 சம்பத்தி
2 ஷாந்தி
3 சுரக்ஷா
4 ஞானத்தின் வழி தோன்றிய பல்வகை ஆதிக்கங்கள்
5 ஆறு பரமிதாக்கள் வைத்டிருக்கும் மிக உயர்ந்த ஒருவர். திபெத்திய மொழியில் மற்றும் சமஸ்கிருதத்தில், இவை : (1) ஜின்பா (தானம், “தயாள குணம்”), (2) சூல்திரிம் (ஷிலா, “நன்னெறிகள்”), (3) சோபா (கிஷாந்தி, “பொறுமை, ஏற்றுக் கொள்ளுதல், அமைதி, மன்னிக்கும் குணம்”), (4) சொன்று (விர்யா, “ஆனந்தமான முயற்சிகள், சிரத்தை, உற்சாகம்”), (5) சம்டென் (தியானம், “தியான ஒரு முக சிந்தனை”) மற்றும் (6) ஷெராப் (பிரஜ்னா, “ஞானம்-விழிப்புணர்வு வித்தியாசப்படுத்துதல், உள்ளொளி”).
6 அவதாரங்கள்/ துல்கு
7 ஆர்ய போதிசாத்தவர் என்பவர் அக ஒளி அடைந்த அனைவரின் உச்ச நிலை ஞானமாவார்.
8 புத்த மத பாலி வேதங்களில், கடவுளின் பெயெரெச்சமாக, கெளதம புத்தருடன் சொல் ஒன்றை இணைத்து அவரை பகவான் புத்தர் என்று குறிப்பிடப்படுகின்றது (இதை ‘கடவுள் புத்தர் அல்லது ‘ஆசிர்வதிக்கப்பட்டவர்’ என்ற சொற்றொடர்களுடன் மொழிபெயர்க்கப்படுகின்றது). பகவான் என்ற சொல்லை மற்ற தேரவடின், மகாயான மற்றும் தாந்திரிக் புத்த உரைகளில் காணலாம்.
9 முழு அனுமதி பெற்ற துறவி
10 நல்ல எதிர்கால மறுபிறவிகள் மற்றும்/அல்லது ஞானம் பெற்றவர்களின் புனித பூமி
11 மன அமைதி அளிக்கும் அல்லது அசாதாரணமான திறமைகள் போன்றவற்றை வழங்கும் பொதுவான குறிக்கோள்கள், உதாரணத்திற்கு தடைகளை நீக்குதல், மழை வருவித்தல்/நிறுத்துதல், காண முடியாத தீய சக்திகளை அடக்குதல், வளங்களை தருவித்தல், உயர் தொலை நோக்கு பார்வை மற்றும் பல.
12 நமது தோன்றலைப் பற்றிய சரியான பார்வை; வெற்றிடம்
உலகம் முழுதும் வாழும் நண்பர்களே,
என்னைப் பின்பற்றினால் எளிதாக இருக்கும் என்பதினால், உங்களின் வசதி கருதி, நான் இந்த பிரார்த்தனை ஓதுவதை பதிவு செய்துள்ளேன். நான் அந்த காணொளியை பதிவேற்றம் செய்துள்ளதோடு யூடியூப் இணைப்பையும் இங்கே வழங்கியிருக்கின்றேன். உங்களைப் பாதுகாத்திடவும் உங்களின் தேவைகளை வழங்கிடவும் அதோடு உங்களின் ஆன்மீக வளர்ச்சிக்காகவும், சக்திமிகு மற்றும் கருணைமிகு டோர்ஜே ஷுக்டேனை நினைத்து , நீங்கள் இந்த பிரார்த்தனையை தினமும் ஓதுவீர்கள் என்று நான் நம்புகின்றேன். அன்புடன், திசெம் ரின்போச்சே.
Or view the video on the server at:
https://video.tsemtulku.com/videos/AboutDS.mp4
மேலும் பல சுவாரஸ்யமான இணைப்புகளுக்கு:
- தனேஷ்வரர் பகவான் டோர்ஜே ஷுக்டேன்
- புனிதர் பாபா சாவான் சிங் : தெய்வீகத்தன்மை கொண்ட சீக்கிய மத குரு
- தைப்பூசம் – முருகப்பெருமானின் விழா
- மலேசியாவில் இந்தியர்கள்
- மலேஷியா பாரம்பரிய ஆடைகள்
- மலேசியாவில் விசாக தினம்
- டோர்ஜே ஷுக்டேன் அவர்களை எல்லா இடங்களுக்கும் கொண்டு செல்வோம்! (ஆங்கிலம், திபெத், சீனம், ஹிந்தி, தமிழ் மற்றும் நேபாளம்)
- நாவில் சுவையூறும் 25 வகையான மலேசிய உணவுகள்
- கேச்சாரா ஃபோரெஸ்ட் ரீட்ரீட்டிற்கு கியான்ஸே சிலை வந்தடைந்துள்ளது
- டோர்ஜே ஷுக்டேன் அடைக்கலம் :விருப்பங்களை நிறைவேற்ற சத்தி வாய்ந்த பயிற்சி
- கேச்சாரா ஃபோரெஸ்ட் ரீட்ரீட்டிற்கு கியான்ஸே சிலை வந்தடைந்துள்ளது
Please support us so that we can continue to bring you more Dharma:
If you are in the United States, please note that your offerings and contributions are tax deductible. ~ the tsemrinpoche.com blog team
DISCLAIMER IN RELATION TO COMMENTS OR POSTS GIVEN BY THIRD PARTIES BELOW
Kindly note that the comments or posts given by third parties in the comment section below do not represent the views of the owner and/or host of this Blog, save for responses specifically given by the owner and/or host. All other comments or posts or any other opinions, discussions or views given below under the comment section do not represent our views and should not be regarded as such. We reserve the right to remove any comments/views which we may find offensive but due to the volume of such comments, the non removal and/or non detection of any such comments/views does not mean that we condone the same.
We do hope that the participants of any comments, posts, opinions, discussions or views below will act responsibly and do not engage nor make any statements which are defamatory in nature or which may incite and contempt or ridicule of any party, individual or their beliefs or to contravene any laws.
Please enter your details