வரலாற்றின் மிகச் சாதுரிய தப்பித்தல்!
இப்போது முதன் முறையாக கேளிச்சித்திர வடிவத்தில், பரிசுத்தமானவர் தலாய் லாமா எவ்வாறு காப்பாற்றப்பட்டார், ஏன் இந்தக் கதை “வரலாற்றில் மிக அருமையான தப்பிக்கும் கதைகளில் ஒன்று” என்று அழைக்கப்படுகிறது என்பதை அறிய உண்மையான கதையைப் படியுங்கள்.
பல நூற்றாண்டுகளாக அணுக முடியாத, மேக மூட்டமான மலை உச்சிகளால் சூழப்பட்ட இமையமலையில் உயரமான இடத்தில் அமைந்துள்ள திபெத், லாமாக்கள் மற்றும் யோகிகளின் கதைகள் மற்றும் அவர்களின் விசித்திரமான வெற்றிகளால் நிரப்பப்பட்ட மந்திரம் மற்றும் மர்மங்கள் நிறைந்த நிலம். இதுபோன்ற எல்லா கதைகளையும் விட, திபெத்திய மக்களால் மிகவும் மதிக்கப்பட்ட ஆன்மீகத் தலைவரான பரிசுத்தமானர் 14வது தலாய் லாமா 1959ல் சீன மக்களின் விடுதலை இராணுவத்தின் பிடியில் இருந்து இரகசியமாக தப்பித்து இந்தியாவுக்குப் பயணம் செய்த கதையைப் போல் சில மட்டும் உலக மக்களின் இதயங்களை ஈர்த்துள்ளது.
தலாய் லாமாக்கள் திபெத்தைப் பாதுகாப்பதற்காகவும், அங்கு பாதுகாக்கப்பட்டுள்ள புத்தரின் உண்மையான போதனைகளைப் பரப்புவதற்காகவும் மீண்டும் அவதாரம் எடுப்பதாக சத்தியம் செய்துள்ள மரியாதைக்குறிய மனிதர்கள். தேவைப்படும் காலங்களில் தலாய் லாமாக்கள் சிறந்த ஆன்மீக சக்தியைக் கட்டளையிட்டு அழைப்பதற்கு அறிவொளி பெற்ற மனிதர்களின் தயவும் உதவிகளும் உள்ளன.
மார்ச் 1959ல் சீனா லாசாவைக் கைப்பற்றுவதற்கு முன்னதாக, தலாய் லாமா தனது கோடைகால அரண்மனையில் வசித்து வந்தார். அங்கு பல்லாயிரக்கணக்கான திபெத்திய மக்கள் தங்கள் அன்பான தலைவரை புற நகரிலிருந்து வரும் சீன இராணுவத்திடமிருந்து பாதுகாக்க அரண்மனையைச் சுற்றிலும் முகாமிட்டிருந்தனர். இப்பொழுது திபெத்தின் எழுச்சி என்று அழைக்கப்படும் தலாய் லாமா மார்ச் மாதத்தில் அந்த அதிர்ஷ்டமான வாரத்தில் சிறந்த தர்ம பாதுகாவலரான டோர்ஜே ஷுக்டேனின் ஆலோசனையை நாடினார்.
மதிப்புமிக்க தேவ வாக்கு சொல்லும் பங்லுங் மூலம் டோர்ஜே ஷுக்டேன் வழங்கிய படிப்படியான வழிகாட்டல்கள் மற்றும் ஆபத்து காலங்களில் அசைக்கப்படவேண்டிய மாய வாள் ஆகியவற்றின் உதவியால் தலாய் லாமா, சீன இராணுவத்தினால் சுற்றிவலைக்கப்பட்டிருந்த போதிலும் அவர்களின் கண்களில் படாமல் நழுவி ஆபத்தான மலைப்பகுதிகள் வழியாக பாதுகாப்பாகவும் பாதிப்பில்லாமலும் இந்தியாவுக்குள் நுழைந்தார்.
பரிசுத்தமான 14வது தலாய் லாமாவின் உதவி ஆசிரியரான புனிதர் த்ரிஜாங் ரின்போச்சேவின் சுயசரிதையில் தலாய் லாமா விமானம் மூலம், தப்பித்துச் சென்று அடைக்களம் புகும் உண்மைக் கதையையும் திபெத்திய மக்களின் கலாச்சாரம் மற்றும் மதத்தின் எதிர்காலத்திற்காக பரிசுத்தமானவரை திபெத்திலிருந்து பாதுகாப்பாக வெளியே கொண்டு வருவதற்கான ஒவ்வொரு முக்கிய நடவடிக்கைகளுக்கும் பின்னால் தர்ம பாதுகாவலர் டோர்ஜே ஷுக்டேன் இருந்தார் என்பதையும் ‘வரலாற்றின் மிகச் சாதுரிய தப்பித்தல்’ என்ற இந்தக் கதை கூறுகிறது.
தலாய் லாமாவின் தப்பித்தலில் டோர்ஜே ஷுக்டேனின் ஒருங்கிணைந்த பங்கு, தலாய் லாமா பயணத்தின் போது அவருடைய குழுவில் சென்ற சேர மே மடத்தின் மூத்த அதிகாரிகள் கையெழுத்திட்ட, நேரில் கண்ட சாட்சிகளின் வாக்குமூலங்களால் மேலும் உறுதிபடுத்தப்படுகிறது. திபெத்திய எதிர்ப்பு போராளிகள் கூட – சுஷி காங்ட்ருக் – பல ஆண்டுகளுக்கு முன்பு டோர்ஜே ஷுக்டேனின் உத்தரவின் பேரில் உருவாக்கப்பட்டது. இந்த அறிவொளி தர்ம பாதுகாவலர் தலாய் லாமாவின் சாதுரியமான தப்பித்தலுக்கான வழிகளை வகுக்கும் சக்தியாக இருந்திருக்கிறார் என்பது மறுக்க முடியாத சான்று.
திபெத்திலிருந்து தப்பித்தல், வரலாற்றில் ஒரு சிறந்த தருணம் என்பது மறுக்க முடியாத உண்மை. இது உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த குறிப்பிட்ட கதை மரியாதைக்குறிய திசெம் ரின்போச்சேவுக்கு மிகவும் விலைமதிப்பற்றது ஏனெனில், இது தர்ம பாதுகாவலர் டோர்ஜே ஷுக்டேனின் தொலைநோக்கு ஞானம், மிகுந்த இரக்கம் மற்றும் விசித்திரமான, அதிசயமான மற்றும் உன்னதமான குணங்களைக் காட்டுகிறது. தலாய் லாமாவை திபெத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றியதன் மூலமும், அவரை உலக அரங்கின் கவனத்தை ஈர்க்கச் செய்ததன் மூலமும் திபெத்திய பாதுகாக்கப்பட்ட புத்த பாரம்பரியங்களையும் போதனைகளையும் டோர்ஜே ஷுக்டேன் நம் அனைவருடனும் பகிர்ந்துகொள்கிறார். இன்று திபெத்திய புத்த மதம் டோர்ஜே ஷுக்டேனின் அறிவொளி செயல்களால் வேரூன்றியும் உலகின் ஒவ்வொரு நாட்டிலும் பரவியும் வருகிறது.
ஒரு பாதுகாவலர் தெய்வத்தின் வடிவத்தில் முழு அறிவொளி பெற்ற புத்தராக இருக்கும் டோர்ஜே ஷுக்டேன் தொடர்ந்து தேவைப்படும் அனைவருக்கும் உதவுகிறார். உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் ஆசீர்வாதங்களுக்காகவும், நல்ல அதிர்ஷ்டத்துக்காகவும் அவரை நம்பியிருப்பதன் மூலம் பயனடைந்துள்ளனர். ‘மிகச் சாதுரிய தப்பித்தல்’ போலவே, டோர்ஜே ஷுக்டேனின் தயார்நிலை மற்றும் மிகக் கடினமான தருணங்களில் கூட உதவி தேவைப்படும்போது அவர்களுக்கு விரைவாக உதவி செய்யும் தன்மை பற்றிய அசாதாரண கதைகளை இன்றும் மக்கள் சாட்சியங்களாக வைத்துள்ளனர்.
கீழே உள்ள முழு கேளிச்சித்திர புத்தகத்தைப் படியுங்கள் அல்லது உங்கள் ஓய்வு நேரத்தில் படிக்க PDF ஐ பதிவிறக்கம் செய்யவும். இதை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள், இது அனைத்தும் இலவசம்!
படியுங்கள் ‘மிகச் சாதுரிய தப்பித்தல்’ புரட்டல் வடிவத்தில்.
- அம்பு விசைகள், அம்பு பொத்தான்களைப் பயன்படுத்தவும் அல்லது பக்கங்களுக்கு இடையில் புரட்ட கிளிக் செய்து இழுக்கவும்.
- பக்கத்தைப் பெரிதாக்கவும் சிறிதாக்கவும் பெரிதாக்கு பொத்தானைப் பயன்படுத்தவும்
- சிறந்த காட்சி அனுபவத்திற்கு, முழு திரை பயன்முறையைப் பயன்படுத்தவும்.
- நண்பர்களுடன் பகிரவும்!
படிக்கவும் ‘மிகச் சாதுரிய தப்பித்தல்’ பட தொகுப்பு வடிவத்தில்
கெச்சாரா கேளிச்சித்திரத்துக்கு ஆதரவளியுங்கள்
மிகச் சாதுரிய தப்பித்தல் புத்தகத்தைப் படித்து மகிழ்ச்சியடைந்திருப்பீர்கள் என எண்ணுகிறோம்.
சூத்திரங்கள் மற்றும் பாரம்பரிய தர்ம நூல்களை அச்சிடுவதைப் போலவே, இந்த கேளிச்சித்திரம் போன்ற நவீன வெளியீடுகளும் உயர்ந்த தகுதிகள் மற்றும் டோர்ஜே ஷுக்டேனின் பரம்பரை வளர காரணங்களை உருவாக்குகின்றன.
இந்த கேளிச்சித்திரங்களைத் தொடர்ந்து உருவாக்குவதற்கு, எங்களுக்கு அனைத்து உதவிகளும் தேவைப்படுகின்றன. உற்பத்தி செலவுகளை ஈடுகட்ட அன்பான ஆதரவாளர்களிடமிருந்து தாராளமான நன்கொடைகளை நாங்கள் முழுமையாக நம்பியுள்ளோம்.
இந்த கேளிச்சித்திரங்களைத் தொடர்ந்து உருவாக்குவதற்கு, எங்களுக்கு அனைத்து உதவிகளும் தேவைப்படுகின்றன. உற்பத்தி செலவுகளை ஈடுகட்ட அன்பான ஆதரவாளர்களிடமிருந்து தாராளமான நன்கொடைகளை நாங்கள் முழுமையாக நம்பியுள்ளோம். உங்களால் ஒரு ஆதரவாளராக உதவ முடிந்தால் எங்கள் கெச்சாரா கேளிச்சித்திர நிதிக்கு நீங்கள் விரும்பிய தொகையைப் பங்களிக்க முடியும். உதவ அல்லது மேலும் அறிந்துகொள்ள, தயவுசெய்து தொடர்பு கொள்ளுங்கள்: vajrasecrets.com/dharma-publishing-fund அல்லது தொடர்புகொள்ள care@kechara.com.
உங்கள் ஆதரவுக்கு நன்றி.
மேலும் கெச்சாரா கேளிக்கை சித்திரங்களை பற்றி அறிந்து கொள்ளவும் எங்களின் முதல் வெளியீடான ‘ கருணா ஒரு வழியைக் கண்டுப்பிடிக்கிறார்’ படிக்கவும் இங்கே அழுத்தவும்.
மேலும் சுவாரஸ்யமான தகவல்களுக்கு:
- கருணா தேர்ந்தெடுத்த வழி
- தெய்வ சக்தியின் மகிமை
- வாழ்க்கையின் ஆழமான அர்த்தத்தை அறிய டோர்ஜே ஷுக்டேனுன்
- உலகின் மிகப்பெரிய டோர்ஜே ஷுக்டேன் கோவில் மாடம்
- மலேசியாவில் உள்ள பெட்டாலிங் தெருவில் உற்சாகமூட்டும் டோர்ஜே ஷுக்டேன் விற்பனைக்கூடம்!
- கேச்சாரா ஃபோரெஸ்ட் ரீட்ரீட்டிற்கு கியான்ஸே சிலை வந்தடைந்துள்ளது
- டோர்ஜே ஷுக்டேன் அவர்களை வேண்டி சிறிய பிரார்த்தனை
- எனது கடவுள் என்னை எவ்வாறு குணப்படுத்தினார்
- நல்ல நட்புக்கு ஏற்றவர்
- டோர்ஜே ஷுக்டேனுக்கு ஊதுபத்தி காணிக்கை
- எனது அழகான ஆலயத்தைக் காண்க
- குணப்படுத்தும் தெய்வம் – லோமா கியோன்மா
- டோர்ஜே ஷுக்டேன் அவர்களை எல்லா இடங்களுக்கும் கொண்டு செல்வோம்! (ஆங்கிலம், திபெத், சீனம், ஹிந்தி, தமிழ் மற்றும் நேபாளம்)
- Dhaneshwar Bhagawan Dorje Shugden | धनेश्वर भगवान दोर्जी शुगदेन। | தனேஷ்வரர் பகவான் டோர்ஜே ஷுக்டேன் | धनेश्वर भगवान दोर्जे शुग्देन। | རྡོ་རྗེ་ཤུགས་ལྡན།
- தைப்பூசம் – முருகப்பெருமானின் விழா
- குவான் யின் நாள்
- மலேசியாவில் விசாக தினம்
Please support us so that we can continue to bring you more Dharma:
If you are in the United States, please note that your offerings and contributions are tax deductible. ~ the tsemrinpoche.com blog team
DISCLAIMER IN RELATION TO COMMENTS OR POSTS GIVEN BY THIRD PARTIES BELOW
Kindly note that the comments or posts given by third parties in the comment section below do not represent the views of the owner and/or host of this Blog, save for responses specifically given by the owner and/or host. All other comments or posts or any other opinions, discussions or views given below under the comment section do not represent our views and should not be regarded as such. We reserve the right to remove any comments/views which we may find offensive but due to the volume of such comments, the non removal and/or non detection of any such comments/views does not mean that we condone the same.
We do hope that the participants of any comments, posts, opinions, discussions or views below will act responsibly and do not engage nor make any statements which are defamatory in nature or which may incite and contempt or ridicule of any party, individual or their beliefs or to contravene any laws.
Please enter your details