வெளிச்சத்தை நோக்கி
கெச்சாரா கேளிச்சித்திரங்களின் சமீபத்திய வெளியீடான வெளிச்சத்தை நோக்கி, மலேசியாவில். நான்கு தலைமுறைகளாக உள்ள சீன குடியேறிகளை உட்படுத்திய ஒரு காவியக் கதை ஆகும். அப்போது மலாயா என்று அழைக்கப்பட்ட இந்த நாடு 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு வளமான பிரிட்டிஷ் காலனியாக இருந்தது. அந்த நேரத்தில் விலைமதிப்பற்ற இரண்டு பொருள்களான ஈயம் மற்றும் ரப்பர் மிக அதிகமாக இருந்தது. எனவே, தங்கள் சொந்த நாடுகளில் வறுமை, பஞ்சம் மற்றும் அரசியல் ஒடுக்குமுறையிலிருந்து தப்பி ஓடும் சீன,, இந்திய மற்றும் ஜாவானிய குடியேறிகளுக்கு பிரிட்டிஷ் மலாயா பிழைப்பு நடத்தும் இடமாக தெரிந்ததில் ஆச்சரியமில்லை. 19ஆம் நூற்றாண்டின் முடிவிலும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதிக்கும் இடையில், 1.5 மில்லியனுக்கும் அதிகமான சீன குடியேறிகள் மலாயாவில் இறங்கினர்.
பினாங்கு ஜார்ஜ் டவுனில் உருவாக்கப்பட்ட இந்த கதை, தான் ஓங், அவரது மனைவி மெய் மற்றும் அவர்களது மகன் ஆஹ் சின் ஆகியோர் மலாயா மண்ணில் காலடி வைத்த காலத்திலிருந்து தொடங்கி தான் குடும்பம் செல்வந்தரான கதையைக் காட்டுகிறது. தான் ஓங் அன்பும் பணிவும் உள்ள ஒரு நேர்மையான-நல்ல-கடின உழைப்பாளி. உதவிக் கரம் நீட்ட எப்போதும் தயாராக இருக்கும் தான் ஓங் தனது சக ஊழியர்களின் பாராட்டையும் அவரது முதலாளியான திரு ஹோவின் நம்பிக்கையையும் விரைவாக பெற்றார். விரைவாக முன்னேறி வந்த தான் ஓங்குடன் வெகு விரைவில் அவரது மகன் ஆஹ் சின், ஹோ டிரேடிங் நிறுவனத்தில் பணி புரிய இணைந்து கொண்டார். இரண்டாம் உலகப் போரின்போது தான் ஓங் இறந்த பிறகு திரு ஹோ, ஆஹ் சின்னுக்கு அவரது தந்தையின் விசுவாசமான சேவைக்கு வெகுமதி அளிக்கும் ஒரு வரமாக – ஒரு பாரம்பரிய சீன மருந்தகத்தைத் திறக்க அவருக்கு உதவியதன் மூலம் தான் ஓங்கின் கனவை நனவாக்கினார்.
தான் ஆஹ் சின் & சன் மெடிசன் ஹால், தாவர அடிப்படையிலான தயாரிப்புகளை மட்டுமே விற்கிறது, இதில் விலங்குகளால் உருவாக்கப்படும் பொருள்கள் எதுவும் இல்லை. இதற்குக் காரணம் தான் குடும்பத்தினர் கருணை தெய்வமான குவான் யின் மீது கொண்ட பக்தியாகும்.
தான் ஆஹ் சின் முதல் அவரது மகன் தான் ஹொக் செங் மற்றும் நான்காம் தலைமுறை வரை, தான் குடும்பம் தங்களுக்கென்று ஒரு வெற்றிகரமான வியாபாரத்தை ஏற்படுத்திக் கொண்டதோடு மட்டுமல்லாமல், உள்ளூர் சமூகத்தின் முதுகெலும்பாக அவர்களின் குடும்பத்தின் நற்பெயரையும் உருவாக்கிக் கொண்டார்கள்.
தனது வாழ்க்கையின் அந்திம காலத்தில் இருக்கும் தான் ஹொக் செங், குடும்ப வியாபாரத்தின் கட்டுப்பாட்டை தனது குழந்தைகளான ஜோன்சன் மற்றும் ரோஸிடம் விட்டுக்கொடுத்த தருணத்திலிருந்து வெளிச்சத்தை நோக்கி முக்கிய கதை தொடங்குகிறது. இரண்டு தலைமுறைகளின் கீழ் தான் ஆஹ் சின் & சன் மருந்து கூடம் ஒரு பெரிய நிறுவனமாக மாறியது. மற்றும் அவர்களுடைய தாத்தா பாட்டிகளின் பாரம்பரிய மூலிகை வைத்தியம் புதிய அடையாளமிடப்பட்டது. அவர்கள் தங்கள் சொந்த அளவிலான கரிம ஆரோக்கிய தயாரிப்புகளைக் கூட அறிமுகப்படுத்தினர்.
ஒரு தொடர்ச்சியான பயமுருத்தும் சம்பவங்களால் இறக்கம் காணும் வரை அனைத்தும் நன்றாக நடப்பதாக தெரிகிறது. சற்றும் எதிர்பாரா வண்ணம், வாடிக்கையாளர்கள் புதிதாக பாட்டலில் அடைக்கப்பட்ட பொருள்கள் அழுகி விட்டதை அறிகின்றனர். குணமடைதலுக்குப் பதிலாக மூலிகை மருந்துகளால் அவர்கள் நோய்வாய்ப்படத் தொடங்குகிறார்கள்.
ஒரு சோகம் குடும்பத்தைத் தாக்கும்போது தான் ஆஹ் சின் & சன் மருந்து நிறுவனத்தில் பேய். இருப்பதாக வதந்திகள் பரவத் தொடங்குகிறது. எனினும் ரோஸுக்கு இது முதல் அனுபவம், ஆதலால் நாம் வாழும் உலகம் நாம் உணர்ந்து கொண்டதை விட அதிகமாக உள்ளது என்ற உண்மையை ஏற்கத் தொடங்கினாள்.
சரிவின் விளிம்பில், தான் குடும்பத்திற்கு டோர்ஜெ ஷுக்டேன் வடிவத்தில் உதவி வருகிறது. டோர்ஜே ஷுக்டேன் ஒரு முழு அறிவொளி பெற்ற புத்தர், அவர் முந்நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு திபெத்தில். தோன்றினார். பாதுகாவலர் தெய்வத்தின் வடிவத்தைக் கொண்டிருக்கும் டோர்ஜே ஷுக்டேன் ஒருபோதும் உதவி கோருபவர்களின் பிரார்த்தனைகளுக்குப் பதிலளிக்க தவறியதில்லை, மேலும் உதவியை வழங்க அவர் விரைந்து செல்வது புராணக்கதை. 1959ஆம் ஆண்டில் தலாய் லாமா திபெத்திலிருந்து தப்பிக்க உதவுவதற்காக இந்த மிகச் சக்திவாய்ந்த பாதுகாவலர் தெய்வம் செய்த அற்புதங்களின் கதைகள் இன்றும் உணர்ச்சிகரமான விவாதங்களுக்கு உட்பட்டவை.
ஒரு அறிவொளி பெற்றவராக, டோர்ஜே ஷுக்டேனின் இயல்பு ஞானத்தின் தன்மை மற்றும் அவரது நடவடிக்கைகள் மற்றவர்களின் துன்பங்களைப் போக்க இரக்கத்தால் தூண்டப்படுகின்றன. தீர்க்க முடியாத தடைகளாக இருந்தாலும் கூட, மக்களுக்குத் தேவைப்படும்போதும் உதவியைக் கொண்டுவரும் டோர்ஜே ஷுக்டேனின் அசாதாரண தன்மையால், அவர் வேண்டுதலை நிறைவேற்றுபவர் என்று போற்றப்படுகிறார்.
அவரது பல திறன்களில், அமானுஷ்ய இடையூறுகளை அகற்றுவதில், வேதனைக்குள்ளான ஆத்மாக்களை சமாதானப்படுத்துவதில் மற்றும் பிற உலக மனிதர்களை அடிபணியச் செய்வதில். டோர்ஜே ஷுக்டேன் தனது செயல்திறனுக்காக நன்கு அறியப்பட்டவர். உதவி செய்வதற்கு அவர் தனது இரக்கக் குணத்தை எவ்வாறு பயன்படுத்துகிறார்? இதற்கான பதில் வெளிச்சத்தை நோக்கியினுள் காணப்படுகிறது. கீழே உள்ள முழு கேளிச்சித்திர புத்தகத்தைப் படியுங்கள் அல்லது உங்கள் ஓய்வு நேரத்தில் படிக்க PDFஐ பதிவிறக்கம் செய்யவும்.
இதை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள், இது அனைத்தும் இலவசம்!
படியுங்கள் ‘வெளிச்சத்தை நோக்கி’ புரட்டல் வடிவத்தில்.
- அம்பு விசைகள், அம்பு பொத்தான்களைப் பயன்படுத்தவும் அல்லது பக்கங்களுக்கு இடையில் புரட்ட கிளிக் செய்து இழுக்கவும்.
- பக்கத்தைப் பெரிதாக்கவும் சிறிதாக்கவும் பெரிதாக்கு பொத்தான்களைப் பயன்படுத்தவும்.
- சிறந்த காட்சி அனுபவத்திற்கு, முழுத் திரை பயன்முறையைப் பயன்படுத்தவும்.
- உங்கள் நண்பர்களுடன் பகிரந்துகொள்ளுங்கள்!
‘வெளிச்சத்தை நோக்கி’ பட தொகுப்பு வடிவத்தில் படிக்கவும்
கெச்சாரா கேளிச்சித்திரத்துக்கு ஆதரவளியுங்கள்!
‘வெளிச்சத்தை நோக்கி’ புத்தகத்தைப் படித்து மகிழ்ச்சியடைந்திருப்பீர்கள் என எண்ணுகிறோம்.
சூத்திரங்கள் மற்றும் பாரம்பரிய தர்ம நூல்களை அச்சிடுவதைப் போலவே, இந்த கேளிச்சித்திரங்கள் போன்ற நவீன வெளியீடுகளும் உயர்ந்த தகுதிகள் மற்றும் டோர்ஜே ஷுக்டேனின் பரம்பரை வளர காரணங்களை உருவாக்குகின்றன.
இந்த கேளிச்சித்திரங்களைத் தொடர்ந்து உருவாக்குவதற்கு, எங்களுக்கு அனைத்து உதவிகளும் தேவைப்படுகின்றன. உற்பத்தி செலவுகளை ஈடுகட்ட அன்பான ஆதரவாளர்களிடமிருந்து தாராளமான நன்கொடைகளை நாங்கள் முழுமையாக நம்பியுள்ளோம். உங்களால் ஒரு ஆதரவாளராக உதவ முடிந்தால் எங்கள் கெச்சாரா கேளிச்சித்திர நிதிக்கு நீங்கள் விரும்பிய தொகையைப் பங்களிக்க முடியும். உதவ அல்லது மேலும் அறிந்துகொள்ள, தயவுசெய்து தொடர்பு கொள்ளுங்கள்: vajrasecrets.com/dharma-publishing-fund அல்லது தொடர்புகொள்ள care@kechara.com.
உங்கள் ஆதரவுக்கு நன்றி.
எங்களுடைய மற்ற கேளிச்சித்திரங்களைப் படிக்கவும்:
மேலும் சுவாரஸ்யமான தகவல்களுக்கு:
- கருணா தேர்ந்தெடுத்த வழி
- தெய்வ சக்தியின் மகிமை
- வாழ்க்கையின் ஆழமான அர்த்தத்தை அறிய டோர்ஜே ஷுக்டேனுன்
- உலகின் மிகப்பெரிய டோர்ஜே ஷுக்டேன் கோவில் மாடம்
- மலேசியாவில் உள்ள பெட்டாலிங் தெருவில் உற்சாகமூட்டும் டோர்ஜே ஷுக்டேன் விற்பனைக்கூடம்!
- கேச்சாரா ஃபோரெஸ்ட் ரீட்ரீட்டிற்கு கியான்ஸே சிலை வந்தடைந்துள்ளது
- டோர்ஜே ஷுக்டேன் அவர்களை வேண்டி சிறிய பிரார்த்தனை
- எனது கடவுள் என்னை எவ்வாறு குணப்படுத்தினார்
- நல்ல நட்புக்கு ஏற்றவர்
- டோர்ஜே ஷுக்டேனுக்கு ஊதுபத்தி காணிக்கை
- எனது அழகான ஆலயத்தைக் காண்க
- குணப்படுத்தும் தெய்வம் – லோமா கியோன்மா
- டோர்ஜே ஷுக்டேன் அவர்களை எல்லா இடங்களுக்கும் கொண்டு செல்வோம்! (ஆங்கிலம், திபெத், சீனம், ஹிந்தி, தமிழ் மற்றும் நேபாளம்)
- Dhaneshwar Bhagawan Dorje Shugden | धनेश्वर भगवान दोर्जी शुगदेन। | தனேஷ்வரர் பகவான் டோர்ஜே ஷுக்டேன் | धनेश्वर भगवान दोर्जे शुग्देन। | རྡོ་རྗེ་ཤུགས་ལྡན།
- தைப்பூசம் – முருகப்பெருமானின் விழா
- குவான் யின் நாள்
- மலேசியாவில் விசாக தினம்
Please support us so that we can continue to bring you more Dharma:
If you are in the United States, please note that your offerings and contributions are tax deductible. ~ the tsemrinpoche.com blog team
DISCLAIMER IN RELATION TO COMMENTS OR POSTS GIVEN BY THIRD PARTIES BELOW
Kindly note that the comments or posts given by third parties in the comment section below do not represent the views of the owner and/or host of this Blog, save for responses specifically given by the owner and/or host. All other comments or posts or any other opinions, discussions or views given below under the comment section do not represent our views and should not be regarded as such. We reserve the right to remove any comments/views which we may find offensive but due to the volume of such comments, the non removal and/or non detection of any such comments/views does not mean that we condone the same.
We do hope that the participants of any comments, posts, opinions, discussions or views below will act responsibly and do not engage nor make any statements which are defamatory in nature or which may incite and contempt or ridicule of any party, individual or their beliefs or to contravene any laws.
Please enter your details