உடைமை, ஒரு புதிய கெச்சாரா கேளிச்சித்திரம்
கெச்சாரா ஃபோரஸ்ட் ரிட்ரீட்டில் காலை நேர மத்தியில் புனிதமானவர் திசெம் ரின்போச்சே எங்களில் சிலரை தனது அறைக்கு அழைத்தார். நாங்கள் அவருக்கு முன்னால் அமர்ந்தபோது, ரின்போச்சே தனது குழந்தைப் பருவத்தில் நியூ ஜெர்சியில் வசித்த சில கதைகளைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார். ரின் போச்சேவின் அருமையான நினைவுகளில் ஒன்று, அந்த காலத்திலிருந்தே உள்ளூர் கடையிலிருந்து கேளிச்சித்திரங்கள் வாங்குவதற்காக தனது வளர்ப்புத் தாயுடன் வெளியே சென்று பின்னர் அவற்றை ஒன்றாகச் சேர்ந்து படித்தது ஆகும்.
அடுத்த சில மணி நேரங்களில் தொடர்ந்து, ரின்போச்சே இந்தியாவில் காடன் மடாலயத்திற்குள் நுழைந்ததிலிருந்து அவரது வாழ்க்கையின் பிற்பகுதி வரை எங்களிடம் கூறினார். அங்கு அவர் இருந்தபோது இந்து தெய்வங்களின் சிக்கலான கதைகளை கேளிச்சித்திரங்களின் வழி சிறு குழந்தைகளுக்கு எளிதில் புரிந்துகொள்ளக் கூடியதாகவும், பெரியவர்களுக்கு மிகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லக் கூடிய விதத்தில் எவ்வாறு சொல்ல முடியும் என்பதையும் கண்டார். இந்த தருணத்தில், அவர் கூறியதை நிரூபிக்கும் வகையில், ரின்போச்சே தனக்கு மிகவும் விருப்பமான இந்திய கேளிச்சித்திர வெளியீட்டாளர், அமர் சித்ராவின் வண்ணமயமான கேளிச்சித்திர புத்தகங்களை எங்களுக்கு வழங்க தொடங்கினார்.
ரின்போச்சேவுடன் சிறிது நேரம் செலவழிக்கும் அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்குத் தெரியும் ரின்போச்சே பல விஷயங்களில் ஆர்வம் காட்டியுள்ளார் – ஸ்டார் ட்ரெக் மற்றும் பிக்ஃபூட் முதல் பசித்தவர்களுக்கு உணவளிப்பது, குறைந்த அதிர்ஷ்டசாலிகளுக்கு உதவுவது,ஆக்கப்பூர்வமான கட்டிடக்கலை மற்றும் இயற்கையை ரசித்தல் வரை. ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, ரின்போச்சே புத்ததர்மத்தைப் பற்றி ஆர்வமாக இருந்தார். அவரது மிகக் குறுகிய வாழ்க்கையில், ரின்போச்சே புத்தரின் போதனைகளை இன்னும் பரவாத இடங்களுக்குக் கொண்டு சென்றார், மேலும் தர்மத்தைப் பரப்புவதற்கு இணையத்தைப் பயன்படுத்துவதில் முன்னோடியாக இருந்ததன் மூலம் அதை இன்னும் மில்லியன் கணக்கானவர்கள் அணுகும்படி செய்தார்.
ரின்போச்சேவின் வெற்றிக்கான இரகசியம் தர்ம பாதுகாவலர் டோர்ஜே ஷுக்டேன், மற்றும் ரின்போச்சேவின் நம்பிக்கையும் மற்றும் இந்த அறிவொளி பெற்ற பாதுகாவலர் தெய்வத்தை நம்புவதும் பழமையானது அல்ல.
இது மீண்டும் நம்மை அந்த அற்புதமான காலை நேரத்தில் ரின்போச்சேவின் அறைக்குக் கொண்டு வருகிறது, அறையினுள் டஜன் கணக்காக நிரப்பப்பட்ட அமர் சித்ரா கேளிச்சித்திர கதைகள் இப்போது வழங்கப்படுகின்றன. வாழ்க்கையில் சவால்களை சமாளிக்க டோர்ஜே ஷுக்டேன் எவ்வாறு மக்களுக்கு உதவினார் என்பதற்கான பல கதைகளையும் ரின்போச்சே பகிர்ந்து கொண்டார். கருணா தேர்ந்தெடுத்த வழி, வரலாற்றின் மிகச் சாதுரிய தப்பித்தல் மற்றும் வெளிச்சத்தை நோக்கி போன்ற இந்த அற்புதமான கதைகள் கெச்சாரா கேளிச்சித்திரங்களுக்கு உத்வேகமாக இருக்கின்றன.
ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன்பு காலை நேரத்தில் அவரது அறையில் ரின்போச்சே சொன்னது போல, கெச்சாரா கேளிச்சித்திரங்களின் சமீபத்திய கதையின் தலைப்பு உடைமை. மலேசியாவின் பேராக் மாநிலத்தில் உள்ள பழைய ஈயச் சுரங்க தலைநகரான ஈப்போவில் கிருஷ்ணாவின் குடும்பத்தினர் அனுபவித்த சூனியம் பற்றிய ஒரு கதை இது.
சூனியத்தை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துவது உலகளவில் மிகவும் போட்டித்தன்மையுடன் பிரபலமடைந்து வருவதால் அதன் பங்கு அதிகமாகிக் கொண்டு வருகிறது. வழக்கமாக முன்னோக்கி செல்ல விரும்பும் போட்டியாளர்களால் அல்லது பழிவாங்கும் கருவியாக அனுப்பப்படுவதால், உண்மையில், கெச்சாராவில் உள்ள எங்கள் உருப்பினர்கள் பலர் உதவிக்காகவும் இருண்ட சூனியத்திலிருந்து பாதுகாப்பிற்காகவும் எங்களை அணுகுகிறார்கள்.
சூனியங்கள் யாரிடமிருந்து வந்தன அல்லது ஏன் என்பதற்கான எந்தக் குறிப்பும் இல்லாமல் தொலை தூரத்திலிருந்து ஏவப்படலாம். இந்த அமானுஷ்ய தாக்குதல்கள் மக்களின் தொழில்களை நாசப்படுத்தி, வாழ்க்கையை அழித்து மற்றும் பொருள் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் அழிவை ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது.
உடைமை, சூனிய பயன்பாட்டின் பேரழிவு பாதிக்கப்பட்டவருக்கு மட்டுமல்ல, அனைத்து குடும்ப உறுப்பினர்களிடையே பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதைக் காட்டுகிறது. இத்தகைய தாக்குதல்களில் இருந்து தப்பிக்காத பலரைப் போல் அல்லாமல், அதிஷ்டவசமாக, கிருஷ்ணாவின் குடும்பத்தினர் சக்திவாய்ந்த தெய்வமான டோர்ஜே ஷுக்டேனை சரியான நேரத்தில் அறிந்தார்கள்.
மங்சுஶ்ரீ – ஞான புத்தரின் ஒரு அவதாரம் டோர்ஜே ஷுக்டேன் – அவர் தேவர்களின் தெய்வீக உலகில் வசிக்கிறார். தெய்வங்களின் உலகம் மனித மண்டலத்திற்கு நெருக்கமாக இருப்பதால், ஒரு உலக கடவுளின் வடிவத்தில் டோர்ஜே ஷுக்டேன் நம்மிடம் வந்து கற்பனைக்கு எட்டக்கூடிய வகையில் விரைவாக உதவிகளை வழங்க முடியும். இந்திய கலாச்சாரத்தில், டோர்ஜே ஷுக்டேன் வஜ்ரா ருத்ரா – அறிவொளி விநாயகரின் மகன். அவர் அனைத்து தடைகளையும் நீக்கி அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றும் ஒரு சக்திவாய்ந்த பகவான்.
எனவே, டோர்ஜே ஷுக்டேன் கிருஷ்ணாவின் குடும்பத்தை எவ்வாறு காப்பாற்றினார்? பதில் உடைமையில் காணப்படுகிறது. கீழே உள்ள முழு கேளிச்சித்திர புத்தகத்தைப் படியுங்கள் அல்லது உங்கள் ஓய்வு நேரத்தில் படிக்க PDFஐ பதிவிறக்கம் செய்யவும்.
இதை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள், இது அனைத்தும் இலவசம்!
படியுங்கள் ‘உடைமை’ புரட்டல் வடிவத்தில்.
- அம்பு விசைகள், அம்பு பொத்தான்களைப் பயன்படுத்தவும் அல்லது பக்கங்களுக்கு இடையில் புரட்ட கிளிக் செய்து இழுக்கவும்.
- பக்கத்தைப் பெரிதாக்கவும் சிறிதாக்கவும் பெரிதாக்கு பொத்தானைப் பயன்படுத்தவும்
- சிறந்த காட்சி அனுபவத்திற்கு, முழுத் திரை பயன்முறையைப் பயன்படுத்தவும்.
- உங்கள் நண்பர்களுடன் பகிரந்துகொள்ளுங்கள்!
படிக்கவும் ‘உடைமை’ பட தொகுப்பு வடிவத்தில்
கெச்சாரா கேளிச்சித்திரத்துக்கு ஆதரவளியுங்கள்!
உடைமை புத்தகத்தைப் படித்து மகிழ்ச்சியடைந்திருப்பீர்கள் என எண்ணுகிறோம்.
சூத்திரங்கள் மற்றும் பாரம்பரிய தர்ம நூல்களை அச்சிடுவதைப் போலவே, இந்த கேளிச்சித்திரம் போன்ற நவீன வெளியீடுகளும் உயர்ந்த தகுதிகள் மற்றும் டோர்ஜே ஷுக்டேனின் பரம்பரை வளர காரணங்களை உருவாக்குகின்றன.
இந்த கேளிச்சித்திரங்களைத் தொடர்ந்து உருவாக்குவதற்கு, எங்களுக்கு அனைத்து உதவிகளும் தேவைப்படுகின்றன. உற்பத்தி செலவுகளை ஈடுகட்ட அன்பான ஆதரவாளர்களிடமிருந்து தாராளமான நன்கொடைகளை நாங்கள் முழுமையாக நம்பியுள்ளோம்.
உங்களால் ஒரு ஆதரவாளராக உதவ முடிந்தால் எங்கள் கெச்சாரா கேளிச்சித்திர நிதிக்கு நீங்கள் விரும்பிய தொகையைப் பங்களிக்க முடியும். உதவ அல்லது மேலும் அறிந்துகொள்ள, தயவுசெய்து தொடர்புகொள்ளுங்கள்: vajrasecrets.com/dharma-publishing-fund அல்லது தொடர்புகொள்ள care@kechara.com.
உங்கள் ஆதரவுக்கு நன்றி.
எங்களுடைய மற்ற கேளிச்சித்திரங்களைப் படிக்கவும்:
மேலும் சுவாரஸ்யமான தகவல்களுக்கு:
- கருணா தேர்ந்தெடுத்த வழி
- தெய்வ சக்தியின் மகிமை
- வாழ்க்கையின் ஆழமான அர்த்தத்தை அறிய டோர்ஜே ஷுக்டேனுன்
- உலகின் மிகப்பெரிய டோர்ஜே ஷுக்டேன் கோவில் மாடம்
- மலேசியாவில் உள்ள பெட்டாலிங் தெருவில் உற்சாகமூட்டும் டோர்ஜே ஷுக்டேன் விற்பனைக்கூடம்!
- கேச்சாரா ஃபோரெஸ்ட் ரீட்ரீட்டிற்கு கியான்ஸே சிலை வந்தடைந்துள்ளது
- டோர்ஜே ஷுக்டேன் அவர்களை வேண்டி சிறிய பிரார்த்தனை
- எனது கடவுள் என்னை எவ்வாறு குணப்படுத்தினார்
- நல்ல நட்புக்கு ஏற்றவர்
- டோர்ஜே ஷுக்டேனுக்கு ஊதுபத்தி காணிக்கை
- எனது அழகான ஆலயத்தைக் காண்க
- குணப்படுத்தும் தெய்வம் – லோமா கியோன்மா
- டோர்ஜே ஷுக்டேன் அவர்களை எல்லா இடங்களுக்கும் கொண்டு செல்வோம்! (ஆங்கிலம், திபெத், சீனம், ஹிந்தி, தமிழ் மற்றும் நேபாளம்)
- Dhaneshwar Bhagawan Dorje Shugden | धनेश्वर भगवान दोर्जी शुगदेन। | தனேஷ்வரர் பகவான் டோர்ஜே ஷுக்டேன் | धनेश्वर भगवान दोर्जे शुग्देन। | རྡོ་རྗེ་ཤུགས་ལྡན།
- தைப்பூசம் – முருகப்பெருமானின் விழா
- குவான் யின் நாள்
- மலேசியாவில் விசாக தினம்
Please support us so that we can continue to bring you more Dharma:
If you are in the United States, please note that your offerings and contributions are tax deductible. ~ the tsemrinpoche.com blog team
DISCLAIMER IN RELATION TO COMMENTS OR POSTS GIVEN BY THIRD PARTIES BELOW
Kindly note that the comments or posts given by third parties in the comment section below do not represent the views of the owner and/or host of this Blog, save for responses specifically given by the owner and/or host. All other comments or posts or any other opinions, discussions or views given below under the comment section do not represent our views and should not be regarded as such. We reserve the right to remove any comments/views which we may find offensive but due to the volume of such comments, the non removal and/or non detection of any such comments/views does not mean that we condone the same.
We do hope that the participants of any comments, posts, opinions, discussions or views below will act responsibly and do not engage nor make any statements which are defamatory in nature or which may incite and contempt or ridicule of any party, individual or their beliefs or to contravene any laws.
Please enter your details