குணப்படுத்தும் தெய்வம் – லோமா கியோன்மா
(திசெம் ரின்போச்சே)
புத்தர்கள் போதனைகளை வழங்கும்போது, அது குறிப்பாக கேட்பவர்களுக்குப் பயனளிக்கும். கேட்பவர் புத்தரின் போதனைகளைப் பின்பற்றி ஞானம் பெறும்போது, அந்த நபர் மற்றொரு புத்தராக மாறுகிறார், மேலும் அந்த நபர் மற்றவர்களுக்குக் கற்பிக்கக்கூடும். எனவே தற்போதுள்ள புத்தர்களின் எண்ணிக்கை வரம்பற்றது, மேலும் தோன்றக்கூடிய புத்தர்களின் எண்ணிக்கை இன்னும் தீர்மானிக்கப்படவில்லை, அது நமது தனிப்பட்ட நடைமுறைகளைப் பொறுத்தது.
நாம் ஒரு புத்தரைப் பற்றி நினைக்கும்போது, சாக்கியமுனி புத்தரைப் பற்றி நினைக்கிறோம், ஆனால் உண்மையில் வேறு பல புத்தர்கள் இருக்கிறார்கள். சாக்கியமுனியைத் தவிர வேறு எந்த புத்தர்களும் இல்லை என்று நாம் சொன்னால், அறிவொளி பெற்ற மனிதர்களாக நாம் மாறுவதற்கு ஒரு வழியாக விளங்கும் தர்ம போதனைகளை புத்தர் ஏன் கொடுத்தார் எனும் உண்மையான காரணத்தை நீக்குகிறோம் – ஆகவே, புத்தர் சாக்கியமுனி தர்மத்தைக் கற்பித்த காலத்திலிருந்து இப்போது வரை, கடந்த 2500 ஆண்டுகளாக, எந்த சீடர்களும் அறிவொளி அடையவில்லை என்பது சாத்தியமில்லை. புத்தரின் காலத்திலிருந்து ஒரு தனி மனிதர் கூட அறிவொளி பெற்றிருக்கவில்லை அல்லது புத்தர் சாக்கியமுனிக்கு முன்னர் புத்தர்கள் யாரும் இல்லை என்று தர்க்கரீதியாக கருத முடியாது.
நடைமுறையில் இந்த நேரத்தில் பலர் புத்தர்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள், கடந்த காலத்தில் பலர் புத்தர்களாக மாறினார்கள் மற்றும் எதிர்காலத்திலும் பலர் புத்தர்களாக மாறுவார்கள், ஆகவே, தர்கரீதியாக அதிகமான புத்தர்கள் இருக்கிறார்கள் என்று ஏற்றுக்கொள்வது பாதுகாப்பானது. அனைத்து புத்தர்களின் மதகுருவுக்குள் அறிவொளிக்கு முன்னர் அவர்களின் குறிப்பிட்ட உந்துதல்களைப் பொறுத்து பல வகையான புத்தர்கள் உள்ளனர். அத்தகைய புத்தர்களில் ஒருவர்தான் குணப்படுத்தும் வகையைச் சார்ந்த புத்தர் லோமா கியோன்மா அல்லது பிதா பர்னசாவரி.
பிதா பர்னசாவரியின் பயிற்சி மிகவும் புனிதமானது மற்றும் மிக உயர்ந்தது, ஏனெனில் இது குறிப்பாக கர்மாவையும் மற்றும் நோய்களால் நம் உடலை அழிக்கும் காரணங்களையும் சுத்தகரிப்பதில் கவனம் செலுத்துகிறது. நோய்கள் மற்றும் உடல் நலக் குறைவுகள் ஆகியவை நம் பயிற்சிக்கு மிகப் பெரிய தடைகளாகும், ஏனென்றால், சில நேரங்களில் நாம் குணமடைகிறோம், சில நேரங்களில் அவற்றிலிருந்து மீள முடியாமல் போகிறோம். நாம் குணமடையவில்லை என்றால் நமது கடைபிடிக்கும் போதனையில் நம்பிக்கை இருப்பதற்காக, பயிற்சி பெறவும், ஆசிரியர்களைச் சந்திக்கவும், நம்பவும், ஆன்மீக முதிர்ச்சியை வளர்க்கவும் மற்றொரு விலைமதிப்பற்ற மனித உடலை எப்போது அடைவோம் என்று நமக்குத் தெரியாது.
எனவே, இந்த தெய்வமான பிதா பர்னசாவரி போதனைகளைக் கடைபிடிக்கும் பொழுது, குறிப்பாக நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கர்மாவையும், நோய்களை வெளிப்படுத்தக்கூடிய கர்மாக்களை சுத்தகரிப்பதை நோக்கமாகக் கொண்டது அல்லது நாம் நோய்வாய்ப்பட்டு நோயால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தால், இந்த பயிற்சி நாம் எடுக்கும் மருந்துகளுடன் இணைந்து நாம் குணமடைய உதவும். தினந்தோறும் நாம் இந்த பயிற்சியைச் செய்கிறோமென்றால், அவருக்கு ஒரு எளிய பீடத்தை அமைக்கலாம் அல்லது இருக்கும் பீடத்தில் அவரைச் சேர்க்கலாம். அது ஒரு சிலை, த்சா த்சா, படம் அல்லது அவருடைய ஓவியமாக இருக்கலாம் அல்லது அவருக்காக சிறப்பாக நாம் ஒரு பீடத்தை அமைக்கலாம். எந்த வகையிலும், அவர் ஒரு முழு அறிவார்ந்த புத்தர் ஆகையால் எந்த மோதலும் இல்லை.
அவருடைய பயிற்சிக்கு குறிப்பாக தீட்சை தேவைப்படுகிறது ஆனால் லாமாவிடமிருந்து நேரடியாக நடைமுறைகளைப் பெறவோ அல்லது லாமாவிடமிருந்து அவரது பயிற்சிகளின் துவக்கங்களைப் பெறவோ வாய்ப்பில்லாத அனைவருக்கும் ஏதாவது ஒன்றைத் தொகுக்க நான் நேரத்தை ஒதுக்கியுள்ளேன். ஆகவே உங்கள் உடல் குணமடையவும், உங்கள் ஆன்மாவைக் குணப்படுத்தவும் உங்கள் மனதை மற்றும் மனநோய்களைக் குணப்படுத்தவும் நீங்கள் ஒவ்வொரு நாளும் அச்சிட்டுப் பயன்படுத்தக்கூடிய ஒரு நடைமுறை பயிற்சியை நான் தொகுத்துள்ளேன்.
இந்த நேரத்தில் மற்றும் காலத்தில் நம் உணவு நச்சுத்தன்மையுள்ளதாகவும், காற்று நச்சுத்தன்மையுடனும், நீர் நச்சுத்தன்மையுடனும், தரை மிகவும் மாசுபட்டதாகவும் இருக்கின்றது கடந்த காலங்களில் நாம் கேள்விப்படாத பல வகையான நோய்கள் தோன்றுகின்றன. லோமா கியோன்மா அல்லது பிதா பர்னசாவரி புதிய நோய்கள், வைரஸ் நோய்கள், தொற்று நோய்கள் மற்றும் ஆபத்தான, உயிருக்கு ஆபத்தான நோய்களை எதிர்த்துப் போராடுவதில் மிகவும் வலிமையானவர். அவருடைய பயிற்சியைச் செய்வது நோய்களைக் குணப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஆறு பரமிதாக்களைப் பயிற்சி செய்வதன் மூலம் நாம் தகுதிகளை அடையும் வழியையும் உருவாக்குகின்றது . ஆறு பரமிதாக்கள் வழியாக நாம் அடையும் பொழுது , எதிர்காலத்தில் நாம் ஒரு முழுமையான அறிவொளி பெற்றவராக மாறுவதற்கான காரணங்களையும் உருவாக்குகிறோம். எனவே பிதா பர்னசாவரியைப் பின்பற்றுவதன் மூலம் , விதைக்கும் விதைகள் எதிர்காலத்தில் முழு அறிவொளி பெறுவதற்கான காரணங்கள் உருவாவதற்கு சாத்தியமாகிறது.
சாதனா என்றழைக்கப்படும் நான் தொகுத்த நடைமுறை பயிற்சியை தினசரி செய்யலாம், அல்லது அதற்கென நேரத்தை ஒதுக்கி வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமை, விடுமுறை, ஒரு வார விடுமுறை அல்லது இரண்டு வார விடுமுறை எடுத்து நீங்கள் அவருடைய நடைமுறையிலும், மந்திரத்திலும் கவனம் செலுத்துங்கள். நீங்கள் அவருடைய மந்திரத்தை ஒவ்வொரு நாளும், ஒரு மாலை, ஒரு ஜெப மாலை அல்லது இன்னும் அதிகமாக நீங்கள் செய்யலாம். நீங்கள் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் இன்னும் அதிகமாக செய்வது நல்லது. நீங்கள் எவ்வளவு செய்ய விரும்புகிறீர்கள் என்பது உங்களைப் பொருத்தது. அவருடைய மந்திரத்தை ஓதிய பிறகு மருந்துகளின் கூடுதல் செயல்திறனுக்கான ஆசீர்வாதமாக நீங்கள் உட்கொள்ளப்போகும் மருந்துகள் அல்லது மேற்பூச்சு மருந்துகளின் மேல் ஊதலாம். திபெத்தியில் உள்ள லோமா கியோன்மாவை நீங்கள் ஆரோக்கியமாக இருந்தாலும் தினமும் பயிற்சி செய்வது சிறந்தது. இந்த நடைமுறையைச் செய்து நீங்கள் விரும்பும் ஒருவருக்கு அல்லது செல்லப் பிராணிக்கு அர்ப்பணிக்கலாம். குடிக்க வேண்டிய தண்ணீரில் அல்லது செல்லப் பிராணிகளை ஆசீர்வதிப்பதற்காக நீங்கள் மந்திரத்தை ஊதலாம். விலங்குகள் முன்னிலையில் விலங்குகள் கேட்கும் வண்ணம் அவருடைய மந்திரத்தை ஓதுவது நல்லது. தொடர்ச்சியாக நோய்கள் உள்ள இடத்திலும் அல்லது தூய்மை இல்லாத இடத்திலும் இந்த நடைமுறையைச் செய்வது நல்லது. அவருடைய நடைமுறை மற்றும் மந்திரங்கள் உச்சரிக்கப்படும் சூழல் ஆசீர்வதிக்கப்படுகிறது.
இந்த நடைமுறைக்குத் துவக்கம் தேவையில்லை. நான் மீண்டும் கூறுகிறேன், நான் தொகுத்த இந்த சாதனாவுக்கு துவக்கம் அல்லது முன் அனுமதி தேவையில்லை. நீங்கள் தினசரி ஜெபமாகவோ அல்லது நேரத்தை ஒதுக்கியோ சுயமாக ஈடுபடலாம். துவக்கத்தைப் பெற்று மற்றும் இன்னும் விரிவான நடைமுறையைப் பெற விரும்புபவர்களுக்காக அதனுடன் லோமா கியோன்மாவின் விரிவான நடைமுறையை இணைத்துள்ளேன். இது ஓபுஸ்குலா திபெத்தியா என்று நான் அழைத்த ஒரு புத்தகத்தின் பாரம்பரியத்தில் உள்ளது. எனவே இவை உங்களுக்காகவும் உங்கள் வசதிக்காகவும் லோமா கியோன்மாவின் படத்தை தரவிறக்கம் செய்யக்கூடியதாக சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த தொகுப்பை உருவாக்குவதன் மூலம், இந்த நடைமுறையின் பலன்களை நீங்கள் பெறுவீர்கள் என்று நம்புகிறேன். உங்களில் பலர், நோய்களைத் தடுத்து நற்பலன்களைச் சேகரிக்கக்கூடிய ஆசீர்வாதத்தை ஆறு பரமமிதாக்களின் மூலம் பெறுவீர்கள் மற்றும் அதே சமயத்தில் உங்களுக்கு நோய்கள் இருந்தாலும் குணப்படுத்திக்கொள்ளவும் முடியும். நான் மீண்டும் கூற விரும்புகிறேன், நீங்கள் மருந்துகளை நிறுத்த வேண்டும் என்று அர்த்தமல்ல. மிகவும் பயனுள்ள இந்த லோமா கியோன்மா அல்லது பிதா பர்னசாவரியின் குணப்படுத்தும் நடைமுறைகளுடன் உங்கள் மருந்துகளையும் நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த நடைமுறையை உங்களிடம் கொண்டு வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. எனது எழுத்தாளர் குழுவினரின் ஆராய்ச்சி மற்றும் தொகுப்பிற்கு நன்றி. அவர்கள் இல்லாமல் இதை நான் உங்களிடம் முன்வைத்திருக்க முடியாது. குணப்படுத்தும் இந்த மாபெரும் பெண் புத்தரால் அவர்களும் மற்றும் எல்லோரும் எப்போதும் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.
திசெம் ரின்போச்சே
அறிமுகம்: திபெத்திய மருத்துவ மரபில் உடல்நலக் குறைவு மற்றும் நோய்கள்
திபெத்திய மரபில், நல்ல ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் ஒருவரின் ஆண்மீகப் பாதையிலிருந்து பிரிக்கப்படுவதில்லை மற்றும் திபெத்திய மருத்துவம் பௌத்த கருத்துகள் மற்றும் எண்ணங்களில் மூழ்கியுள்ளது. நோய் மற்றும் உடல்நலக் குறைவு அறியாமையாலும் மற்றும் கர்மாவாலும் ஏற்படுவதாக திபெத்திய மருத்துவ பயிற்சியாளர்கள் நம்புகின்றனர். அறியாமை மூன்று விஷங்களுக்கு வழிவகுக்கிறது – இணைப்பு (ஆசை) கோபம் (வெறுப்பு) மற்றும் மன இருள் (குழப்பம்) – இவை மூன்று ‘மனநிலை’ அல்லது தவறுகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. இணைப்பு மனநிலை காற்றோடு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது; பித்தத்திற்கு கோபம்; மற்றும் கபத்திற்குக் குழப்பம்.
இணைப்பு, திபெத்திய மொழியில் ‘லுங்’ எனப்படும் காற்றில் ஏற்றத்தாழ்வை உருவாக்குகிறது. காற்று என்பது உடல் வாயுக்களை விட மேலும் அதிகமாக குறிப்பிடுகிறது, ஆனால் மனம் மற்றும் உணர்ச்சி நிலைகளுடன் நேரடியாக தொடர்புடைய ஒரு சக்தியை உள்ளடக்கியது. காற்று அல்லது லுங், சுவாசம், தசை செயல்பாடு, உணர்ச்சி செயல்பாடுகள், பேச்சு மற்றும் சிறுநீர் கழித்தல் போன்ற உடல் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துகிறது.
கோபம் அல்லது வலுவான வெறுப்பு மனநிலை பித்தத்துடன் தொடர்புடைய ஏற்றத்தாழ்வைத் தூண்டுகிறது. பித்தம் ஏற்றத்தாழ்வு நிலையில் இருக்கும்போது, அது கல்லீரல் நோய்கள், மஞ்சள் காமாலை, மோசமான வளர்சிதை மாற்றம், முக்கிய ஆற்றல்கள் பிரச்சனை மற்றும் உடல் வெப்பம் போன்ற வடிவங்களில் வெளிப்படுகிறது.
குழப்பம் மூன்றாவது மனநிலை, கபம் தொடர்பானது. இது மோசமாக இருக்கும்போது, ஆஸ்துமா, நிணநீர் சிக்கல்கள் மற்றும் காசநோய் போன்ற தொற்று நோய்களை ஏற்படுத்தும்.
வியாதி மற்றும் நோய்க்கான மற்றொரு முதன்மைக் காரணம் கர்மா ஆகும், இது நமது கடந்தகால வாழ்க்கையிலிருந்து பாவமான அல்லது தவறான செயல்களின் விளைவாகும். அடிப்படையில் நோய்கள், 42 வகையான காற்றுக் கோளாறுகள், 26 வகையான பித்தக் கோளாறுகள் மற்றும் 33 வகையான கபக் கோளாறுகள் என மொத்தமாக 101 -க வகைப்படுகின்றன. பின்னர் கடந்தகால வாழ்க்கையின் கர்மாவில் தோன்றிய 101 கோளாறுகளும் அவற்றில் உள்ளன. அவை முந்தைய வாழ்க்கையில் செய்த தவறுகளின் விளைவாக ஏற்படும் தீவிரமான நோய்கள் என பொதுவாக கருதப்படுகின்றன. பொதுவாக, ஒன்பது முக்கிய ஆபத்தான நோய்கள் உள்ளன. அவை பாரம்பரியமாக கர்மவிணை நோய்களாகக் கருதப்படுகின்றன.
- ஆயுட்காலம் காற்றின் நுகர்வு (வாழ்வின் மூன்று தூண்கள்: ஆயுட்காலம், கர்மா மற்றும் அதிர்ஷ்டம்).
- எதிரி” ஆக மாறிய மனநிலை.
- தவறான உணவு, நடத்தை மற்றும் சிகிச்சையின் விளைவுகள்.
- வெளிப்புற காரணிகளால் ஒரு முக்கிய உறுப்பு (எ.கா: மூளை, இதயம் போன்றவை) காயம் அல்லது சேதம்.
- ஆயுட்காலம் காற்றை உட்கொண்ட மேம்பட்ட காற்றுக் கோளாறுகள்.
- “அளவுக்கு அதிகமான” காய்ச்சல் (தாமதமான காய்ச்சல் சிகிச்சை).
- உறைந்த உடல் (தாமதமான குளிர் சிகிச்சை).
- சிகிச்சையைத் தாங்கக் கூடிய உடலின் இயலாமை (உடல் ரீதியாக மிகவும் பலவீனமானது மற்றும் உடல் ஏற்றுக்கொள்ளாத மருந்து).
- தீய சக்திகளால் திருடப்பட்ட LHA (நபரின் நுட்பமான உடல்).
(ஆதாரம்: http://www.tibetanmedicine-edu.org/index.php/faq)
அறியாமை மற்றும் கர்மா என்ற கருத்துக்கள் பௌத்த மதத்தின் ஆய்வு மற்றும் நடைமுறையில் மையமாக இருப்பதால், திபெத்திய மருத்துவ மரபில் குணப்படுத்துவது என்பது உயிரியல் மருத்துவ சிகிச்சையின் செயல்பாடு மட்டுமல்ல, உடல்நலக் குறைவு மற்றும் நோய்களை அடிப்படையாக அகற்றப்படும் செயல்முறையாகும். எனவே திபெத்திய மருத்துவத்தில் குணப்படுத்துவதற்கான அடிப்படை தத்துவம் உண்மையில் ஆன்மீக சுத்தகரிப்பு ஆகும்.
குணப்படுத்தும் தெய்வம்: லோமா கியோன்மா (பிதா பர்னாசவரி)
திபெத்திய பௌத்த மதத்தில், மிகவும் திறமையான குணப்படுத்தும் தெய்வங்களில் ஒன்று லோமா கியோன்மா, அவர் பிதா பர்னாசவரி என்றும் அழைக்கப்படுகிறார். அவளுடைய பெயர் ‘இலைகள் அணிந்த மலை மெண்டிகண்ட்’ என்றும் காடு அவளுடைய வீடு என்றும் பொருள்படும். அவள் இருக்கும் வனத்தின் மர்மங்களை நன்கு அறிந்திருப்பதால், எல்லா நோய்களையும், நோய்களுக்கான காரணங்களையும் சமாதானப்படுத்தவும் மற்றும் அடிபணியவும், தீங்கு விளைவிக்கும் ஆவிகளை அழித்து வாழ்க்கையை வளப்படுத்தி நல்ல ஆரோக்கியத்தையும் தருகிறாள். லோமா கியோன்மாவின் மிகப்பெரிய திறன் இதுதான், அவரது சடங்கின் மூலம் மிகக் கடுமையான நோய்களைக் குணப்படுத்த முடியும் என்று அறியப்படுகிறது.
லோமா கியோன்மாவின் சமஸ்கிருத பெயர் பர்னாசவரி, இதற்கு அறியாமையின் முக்காட்டை நீக்கி, அதிலிருந்து எழும் நோய்களை, குறிப்பாக தொற்று நோய்களைத் தடுக்கக்கூடிய மலைத் துறவிகள் என்று பொருள். அவரது சமஸ்கிருத பெயரில் ‘சவரி’ என்ற சொல் புல் மற்றும் மயில் இறகுகளால் ஆன பாவாடை அணிந்து, வில் மற்றும் அம்புகளால் வேட்டையாடும் பண்டைய சவரா பழங்குடியினரைக் குறிக்கிறது. இயற்கையை அடிப்படையாகக் கொண்ட சவராக்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் வன வாழ்விடங்களின் பரிச்சயம் காரணமாக, மூலிகைகள் மற்றும் தாவரங்களின் மருத்துவம் மற்றும் குணப்படுத்தும் அதிசய பண்புகள் பற்றிய அறிவு அவர்களுக்கு இருந்தது.
வரலாற்று ரீதியாக, லோமா கியோன்மா தனது வாழ்க்கையைப் பண்டைய இந்தியாவின் காடுகளில் தனியாக தியானித்து, இலைகளை மட்டுமே அணிந்துகொண்டு, காடுகளின் விளைச்சலில் ஜீவித்து, அதே நேரத்தில் கூறுகளைப் படிப்பதில் கவனம் செலுத்தி, இறுதியில் மீறிய ஞானத்தை அடைந்த ஒரு இந்திய யோகினியாக நினைவுகூரப்படுகிறார். இருப்பினும், சில கதைகளில் அவர் ஒரு அரக்கி என்றும் விவரிக்கப்படுகிறார். சில மரபுகளில் அவர் ‘இலை ஆடை அணிந்த குவான் யின்’ என்றும் அழைக்கப்படுகிறார்.
லோமா கியோன்மா தாராவின் வெளிப்பாடாகவும் கருதப்படுகிறார். ‘இருபத்து ஒன்று தாராக்களுக்குப் புகழ்’ என்பதில் லோமா கியோன்மா 20 ஆவது தாராவாக, எல்லா நோய்களையும் தடுக்கும் லாமோ ரித்ரோட்மா (மருத்துவ தாரா) என கருதப்படுகிறார். லாமோ ரித்ரோட்மாவின் புகழ், அவரது வலது கண் நோய்கள் மற்றும் தொற்று நோய்கள் அனைத்தையும் எரிக்கும் எரியும் கதிர்களை வெளியிடுகிறது என்று கூரப்படுகிறது.
லோமா கியோன்மாவின் தனித்துவம் என்னவென்றால், அவர் சுத்தகரிக்கக் கூடிய நோய்கள் மற்றும் நோய்களின் பட்டியல் விரிவானது என்றாலும் தொற்று நோய்கள் மற்றும் SARS, AIDS, H1N1 போன்ற ஆபத்தான தொற்று நோய்களைக் குணப்படுத்துவதில் அவர் ஒரு “நிபுணர்” என்று கருதப்படுகிறார். திபெத்திய பௌத்த தத்துவத்தில், பிரபஞ்சம் மிகப் பெரிய குணப்படுத்தும் சக்தியைக் கொண்டுள்ளது மற்றும் ஒரு குணப்படுத்துபவர் இந்த உலகலாவிய சக்தியை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அறிந்தால் எந்த நோயையும் சுலபமாக குணப்படுத்த முடியும். முடிவான அர்த்தம் என்னவென்றால், ஒரு குணப்படுத்துபவர் மீறிய ஞானத்தை அடைய முடிந்தால், மிகவும் ஆபத்தான துன்பங்கள், அவற்றின் காரணங்கள் மற்றும் பலன்களைக் கூட அவரால் குணப்படுத்த முடியும்.
பௌத்த மதத்தில் லோமா கியோன்மாவைப் பற்றி பரவலாக உள்ளது, மற்றும் அவர் சூத்திரங்கள், தாந்திரீகங்கள் இரண்டிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறார். அவர் கிரியா தாந்திரீகத்தைச் சேர்ந்தவர் என்றாலும், தாந்திரீகத்தின் நான்கு வகுப்புகளிலும் அவர் தோன்றுகிறார். ஐந்து தியானி புத்தர்களின் அமைப்பில், அவர் கர்மா நடவடிக்கை குடும்பத்தைச் சேர்ந்தவர் மற்றும் புத்தரின் அறிவொளி நடவடிக்கைகளின் விரைவான செயல்திறனை வலியுருத்தும் அமோகசித்தியின் ஞானமாகக் கருதப்படுகிறார். எனவே லோமா கியோன்மா தொற்று நோய்களைக் குணப்படுத்தக்கூடிய சிறப்பு பண்புடன் தோன்றிய புத்தரின் வெளிப்பாடாகும்.
உதாரணமாக
லோமா கியோன்மா பல வடிவங்களில் தோன்றும்போது (இரண்டு கைகளுடன் கோபமாக, கருப்பு நிறத்தில்; நான்கு கைகளுடன் கோபமாக, நீல நிறத்தில்; இரண்டு கைகளுடன் அமைதியாக, பச்சை நிறத்தில்; இரண்டு கைகளுடன் கோபமாக, சிவப்பு நிறத்தில்; செக்யூ பாரம்பரியத்தில் மூன்று முகங்களுடன் மஞ்சள் நிறத்தில்), அவருடைய முக்கிய வடிவம் ஆறு கைகளுடன் மூன்று முகங்கள் கொண்ட தங்க மஞ்சள் நிறம்.
அவளுடைய பிறதான முகம் மஞ்சள் நிறமாகவும், ஒரே நேரத்தில் அமைதியாகவும் கோபமாகவும், மூன்று கண்களுடன் மற்றும் அவளுடைய தலைமுடி ஒரு பாம்போடு உயர்த்தி கட்டப்பட்டுள்ளது. அவளுடைய இடது முகம் சிவந்து உணர்ச்சிகளின் வெளிப்பாடாகவும் மற்றும் அவளது வலது முகம் அமைதியான மனநிலையுடன் வெண்மையாகவும் காணப்படுகிறது. அவள் தங்கம் மற்றும் நகைகள் கொண்ட கிரீடம் மற்றும் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறாள். சில சமயங்களில் அவள் ஒரு நீண்ட பாம்பு நெக்லஸ் மற்றும் இலைகளின் கிரீடம் அணிந்திருப்பதாக சித்தரிக்கப்படுகிறாள்.
அவளுடைய மேல் உடல் சிவப்பு பட்டு தாவணியால் மூடப்பட்டிருக்கும் மற்றும் அவளது கீழ் உடல் மஞ்சள் பட்டு நாடாவுடன் கட்டப்பட்ட நறுக்கப்பட்ட இலைகளின் பாவாடையால் மூடப்பட்டிருக்கும். அவள் ஒரு பெரிய தாமரை மலரால் ஆதரிக்கபடும் நிலவு வட்டில் நிற்கிறாள். அவளுடைய வலது குதிகால் ஆதரவாக வலது முழங்கால் தனது இருக்கையை அழுத்துகிறது, மேலும் அவளது இடது கால் பாரம்பரியமாக நுரையீரல் தோரணை என்று அழைக்கப்படுகிறது, இது லோமா கியோன்மா தாக்குதலுக்குத் தயாராக இருப்பதைக் குறிக்கிறது.
அவள் தனது மூன்று வலது கைகளில், வஜ்ரா, ஒரு கோடரி மற்றும் ஒரு அம்பு வைத்திருக்கிறாள். தனது மூன்று இடது கைகளில், சுருக்குக் கயிறு, வில் மற்றும் பழங்கள், பூக்கள் மற்றும் இலைகளுடன் புதிதாக வெட்டப்பட்ட மரக் கிளையை வைத்திருக்கிறாள். லோமா கியோன்மாவின் கருவிகள் அவளது செயல்பாட்டையும் நோக்கத்தையும் விவரிக்கின்றன – வஜ்ரா – சுருக்குக் கயிற்றை அச்சுறுத்தும் வகையில் பிடித்திருப்பது நோயை உண்டாக்கும் பேய்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் ஆவிகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான அவளது உடனடி நோக்கத்தைக் காட்டுகிறது. அவர்களைப் பிடித்த பின், அவர்களின் தீங்குகளை கோடரி கொண்டு வெட்டி தீர்க்கிறாள் அல்லது அம்பு வில்லைக் கொண்டு அவர்களின் இதயங்களைத் துளைத்து தீங்கற்றவர்களாக ஆக்குகிறாள். லோமா கியோன்மாவின் வஜ்ரா அவளது அழியாத தன்மையும் நோய்கள் உட்பட அனைத்து நிகழ்வுகளின் உண்மையான தன்மையைப் பற்றிய அவளது வளைந்து கொடுக்காத நுண்ணறிவையும் குறிக்கிறது. இந்த நுண்ணறிவின் காரணமாக, நோய்களின் இறுதி உறுதியற்ற தன்மையையும் அதன் மூலம் மிகவும் சக்திவாய்ந்தவற்றைக் கூட அகற்றுவதற்கான வாய்ப்பையும் அவள் காண்கிறாள்.
இறுதியாக, அவள் முழு உடல் உயிர்ச்சக்தியின் தோற்றம், தசை மற்றும் உருண்டை உடலுடன் இளமை ஆகியவை இந்தியாவின் நல்ல ஆரோக்கியத்தின் அறிகுறியாகும். அவளுடைய கட்டுக்கோப்பான வடிவம் பேய் ஏற்படுத்தும் நோய்களை மிதிக்கும் திறனைக் குறிக்கிறது.
லோமா கியோன்மா அல்லது பித பர்னாசவரியின் உயர் தெளிவுத்திறன் படங்களைப் பதிவிறக்க இங்கே கிளிக் செய்க.
பிரார்த்தனைகள்
லோமா கியோன்மாவின் நோய் தீர்க்கும் திறன்கள் காட்சிப்படுத்துதல் மற்றும் மந்திர பாராயணதந்தின் மூலம் செயல்படுத்தப்படுகின்றன.
தி செம் ரின்போச்சேவால் தொகுக்கப்பட்ட லோமா கியோன்மா சாதனா
இந்த நடைமுறை பாரம்பரிய ஆதாரங்களில் இருந்து 23 ஏப்ரல் 2015 அன்று புனிதர் தி செம் ரின்போச்சேவால் தொகுக்கப்பட்டது.
[குறிப்பு: இந்த நடைமுறையை தினமும் பயிற்சி செய்ய விரும்பும் எவரும் செய்யலாம். இதற்கு எந்த துவக்கங்களும் தேவையில்லை, திபெத்தியில் அல்லது ஆங்கிலத்தில் படிக்கலாம்.]
பிரார்த்தனை உரையை இங்கே பதிவிரக்கம் செய்யலாம்.
விழுந்து வணங்குதல்
(பீடத்தின் முன் மூன்று முறை விழுந்து வணங்குதல்)
அடைக்கலம் கேட்டல்
(3X உச்சரித்தல்)
நமோ குருவே
நமோ புத்தா ய
நமோ தர்மா ய
நமோ சங்கா ய
நான் குருவிடம் அடைக்கலமாகிறேன்
நான் புத்தரிடம் அடைக்கலமாகிறேன்
நான் தர்மாவிடம் அடைக்கலமாகிறேன்
நான் சங்காவிடம் அடைக்கலமாகிறேன்
அளவிடமுடியாதவை நான்கு
செம் சென் தம் ச்சாய் டெ வா டாங்
டெ வாய் க்யு டாங் டென் பார் க்யூர் ச்சிக்
செம் சென் தம் ச்சாய் டுக் ஙெல் டாங்
டுக் ஙெல் க்யி க்யு டாங் டெல் வார் க்யூர் ச்சிக்
செம் ச்சென் தம் ச்சாய் டுக் ஙெல் மெ பாய் டெ வா டாங்
மி ட்ரெல் வார் க்யூர் ச்சிக்
செம் வாய் டாங் ஞொம் ஞெ ரிங் ச்சாக் டாங் ஞி டாங்
ட்ரெல் வாய் டாங் ஞொம் லா நாய் பார் க்யூர் ச்சிக்
அனைத்து உணர்வுள்ள மனிதர்களுக்கும் மகிழ்ச்சியும் அதன் காரணங்களும் இருக்கட்டும்,
அனைத்து உணர்வுள்ள மனிதர்களும் துன்பங்களிலிருந்தும் அதன் காரணங்களிலிருந்தும் விடுபடட்டும்,
அனைத்து உணர்வுள்ள மனிதர்களும் ஒருபோதும் துக்கமற்ற பேரின்பத்திலிருந்து பிரிக்கப்படக்கூடாது,
அனைத்து உணர்வுள்ள மனிதர்களும் சார்பு, இணைப்பு மற்றும் கோபம் இல்லாமல் சமநிலையில் நிலைத்திருக்கட்டும்.
காட்சிப்படுத்துதல்
வெறுமையிலிருந்து நகைகளுடன் மேரு மலை பூக்களும் பழங்களும் நிறைந்த காடுகளாக எழுகிறது, அதன் மேல் PAM என்ற எழுத்தில் இருந்து தாமரை எழுகிறது, AH ல் இருந்து ஒரு நிலவு வட்டு, இது மஞ்சள் PAM வடிவத்தில் ஒருவரின் சொந்த உணர்வு, இது ஒளியின் கதிர்களை வெளிப்படுத்தி ஆர்யா மனிதர்களுக்குப் பிரசாதமாக படைக்கிறது. இந்த ஒளி அனைத்து உயிரினங்களின் நோய்களையும் துன்பங்களையும் நீக்குகிறது. ஒளி மீண்டும் PAM எழுத்தில் சேகரிக்கப்பட்டு, தங்க நிறத்தில் மூன்று முகங்களையும் ஆறு கரங்களையும் கொண்டு பகவதி பர்னாசவரியாக மாறுகிறது.
முக்கிய முகம் கோபம் மற்றும் நேர்த்தியுடன் மஞ்சள் நிறமாக வெளிப்படுகிறது. அமைதியான வெளிப்பாட்டுடன் வெண்மையான வலது முகம். ஆசையின் வெளிப்பாட்டுடன் இடது முகம் சிவந்திருக்கும். ஒவ்வொரு முகத்திற்கும் மூன்று கண்கள் உள்ளன. முதல் வலது கை நிமிர்ந்த வஜ்ராவையும், இரண்டாவது கோடரி, மூன்றாவது அம்பையும் வைத்திருக்கிறது. முதல் இடது கை அச்சுருத்தும் சைகையில் விரல்களில் சுற்றப்பட்ட சுருக்குடன் கூடிய ஒரு கயிற்றை வைத்திருக்கிறது, இரண்டாவது பூக்கள், பழங்கள் மற்றும் இலைகளுடன் ஒரு கிளையை வைத்திருக்கிறது, மூன்றாவது ஒரு வில் வைத்திருக்கிறது. வலது காலின் குதிகால் இரகசிய பகுதிக்கு எதிராக தூக்கப்பட்டிருக்கிறது. வலது காலில் உள்ள பாதமும் உள்ளங்காலும் தரையைத் தொடுகிறது. இடது காலில் உள்ள உள்ளங்காலும் தரையைத் தொடுகிறது. அவள் பாதி நின்ற நிலையிலும், பாதி உட்கார்ந்த நிலையிலும் நேர்த்தியாக காட்சியளிக்கிறாள்.
அவள் நகைகள் மற்றும் பூக்களால் அழங்கரிக்கப்பட்டிருக்கிறாள், மேலும் சிவப்பு பட்டு மேல் ஆடை மற்றும் மர இலைகளில் கீழ் ஆடை அணிந்திருக்கிறாள். ஒரு வெள்ளைப் பாம்பை மார்பு ஆபரணமாகவும், பாதி தலைமுடி மேல் முடிச்சிலும் பிணைக்கப்படுள்ளதால், அவள் இளமை மற்றும் அழகுடன் பூத்துக் குழுங்குகிறாள், மேலும் ஒரு உற்சாகமான மற்றும் சற்று கோபமான வெளிப்பாட்டைக் கொண்டிருக்கிறாள். எரியும் ஒளியின் மத்தியில் அமர்ந்திருக்கும் அவள், நெற்றியில் ஓம் என்ற வெள்ளை எழுத்துடனும், தொண்டையில் AH என்ற சிவப்பு எழுத்து மற்றும் இதயத்தில் நீல நிற HUM உடன் அலங்கரிக்கப்பட்டிருக்கிறாள். ஒரு சூரிய வட்டில் இதயத்தின் உள்ளே மஞ்சள் நிற PAM என்ற எழுத்து ஒளிக்கதிர்களை வெளிப்படுத்தி உண்மையான தெய்வம் பர்னாசவரி மற்றும் அவரது பரிவாரங்களை தனது இயற்கையான உறைவிடத்திலிருந்து அழைக்கிறது.
(உங்களுக்கு முன்னால் மிகவும் வலுவாக காட்சிப்படுத்துங்கள்…)
லோமா கியோன்மாவின் இதயத்திலிருந்து, வெளிச்சங்கள் வெளியேறி உண்மையான லோமா கியோன்மாவை அழைக்கின்றன, மேலும் அனைத்து புத்தர்களும் போதிசத்துவர்களும் அவளுக்குள் கரைந்து போகின்றனர். அவளும் அவர்களும் ஒன்று. எல்லா புத்தர்களின் சாராம்சமும், குறிப்பாக குணப்படுத்தும் பொருள்களும் அவளிடம் உள்ளன.
பிரசாதங்களை ஆசீர்வதிக்கவும்
ஓம் ஆஹ் ஹும் (3x)
பிரசாதங்கள்
ஓம் பர்னாசவரி சபரிவரா அர்ஹம் ப்ரதிட்ச சோஹா
ஓம் பர்னாசவரி சபரிவரா பட்யம் ப்ரதிட்ச சோஹா
ஓம் பர்னாசவரி சபரிவரா புபெ ப்ரதிட்ச சோஹா
ஓம் பர்னாசவரி சபரிவரா துபெ ப்ரதிட்ச சோஹா
ஓம் பர்னாசவரி சபரிவரா அலோகே ப்ரதிட்ச சோஹா
ஓம் பர்னாசவரி சபரிவரா கண்டே ப்ரதிட்ச சோஹா
ஓம் பர்னாசவரி சபரிவரா நிவிடே ப்ரதிட்ச சோஹா
ஓம் பர்னாசவரி சபரிவரா ஷப்த ப்ரதிட்ச சோஹா
புகழ்
மாயைப் போன்ற ஞானம், நான் உங்களை வணங்குகிறேன்,
இது அனைத்து புத்தர்களின் அதிசயத்திலிருந்து எழுகிறது
இந்த தேவியின் நடைமுறையை எவர் செய்தாலும்
எல்லா நோய்கள், தீமைகள் மற்றும் தடைகளை என்றென்றும் அமைதிபடுத்துகிறது.
மந்திரங்களை உச்சரித்தல்
எங்களுக்கு முன்னால் லோமா கியோன்மாவிலிருந்து தங்க விளக்குகளைக் காட்சிபடுத்துங்கள். வெளிச்சம் நம்மை நோக்கி வந்து நம் உடலின் நோயுற்ற அல்லது குணமடையத் தேவைப்படும் பல்வேறு இடங்களைத் தாக்குகிறது. நோய் (கள்) நம் உடலில் இருந்து வெளியேற்றப்படுகிறது என்பதையும், நம் உடல் லோமா கியோன்மாவில் ஆற்றல், ஒளி வடிவாக நிரப்பப்பட்டிருக்கிறது என்பதையும் நினையுங்கள்.
மந்திரத்தின் சாரம்
ஓம் பிஷாத்சி பர்னாசவரி ஹ்ரி ஹ ஹும் பட் சோஹா
(மந்திரத்தின் சாரத்தை ஓதும்போது காட்சிபடுத்துதல் செய்யுங்கள்)
செயல் மந்திரம்
ஓம் பிஷாத்சி பர்னாசவரி சர்வ ட்சார ப்ராஷமனயே சோஹா (7x)
நீண்ட மந்திரம்
தயாத்தா /ஓம் அம்ரிதெ / அஸ்வஸ்தங்கே /
மமரா / மமரா / ஷாமவரா /
ஷாம உபஷாம துனுபி /
நுதுதுதுது முலெ சோஹா /
நம ஷவர்னன்ன /
ஓம் பிஷாட்ஸி பர்ன ஷவரி விஷாட்ஸி சோஹா/
ஓம் பர்ன ஷவரி ஹும் பட்
ஓம் அங்குரெ / மங்குரெ பர்ன ஷவரியே சோஹா /
ஒம் பிஷாட்ஸி பர்ன ஷவரி சோஹா /
சர்வ மாரி பஷமனி /
சர்வ துஸ்தனனி வண்ட முகன ஹும் பட் சோஹா
(ஓதுங்கள் 3x)
பிரசாதங்களை ஆசீர்வதிக்கவும்
ஓம் அஹ் ஹும் (3x)
தோமா பிரசாதம்
ஒருவரின் இதய மையத்திலிருந்து ஒளியின் கதிர்களை வெளிப்படுத்தி பிதா பர்னாசவரியையும் அவரது பரிவாரங்களையும் அழைத்தல்.
பென்ஸா சமாட்சா
(இவ்வாறு அழைக்கிறது)
ஓம் பிஷாத்சி பர்னாசவரி சபரிவரா இடாம் பாலிம் க்ரிஹன பய க்ரிஹன பய சர்வ ட்சவரா ப்ராஷமனயே சோஹா
(ஓதுங்கள் 3x)
பிரசாதங்கள்
Oஓம் பர்னாசவரி சபரிவரா அர்ஹம் பிரதிட்ச சோஹா
ஓம் பர்னாசவரி சபரிவரா பட்யம் பிரதிட்ச சோஹா
ஓம் பர்னாசவரி சபரிவரா புபெ பிரதிட்ச சோஹா
ஓம் பர்னாசவரி சபரிவரா துபெ பிரதிட்ச சோஹா
ஓம் பர்னாசவரி சபரிவரா அலோகே பிரதிட்ச சோஹா
ஓம் பர்னாசவரி சபரிவரா கண்டே பிரதிட்ச சோஹா
ஓம் பர்னாசவரி சபரிவரா நிவிடே பிரதிட்ச சோஹா
ஓம் பர்னாசவரி சபரிவரா ஷப்த பிரதிட்ச சோஹா
புகழ்
மாயை போன்ற ஞானம், நான் உங்களை வணங்குகிறேன்,
இது அனைத்து புத்தர்களின் அதிசயத்திலிருந்து எழுகிறது
இந்த தேவியின் நடைமுறையை யார் செய்கிறாரோ
எல்லா நோய்கள், தீமைகள் மற்றும் தடைகள் என்றென்றும் சமாதானப்படுத்தப்படுகிறது
கோரிக்கைகள்
தயவுசெய்து இந்த பிரசாதத்தை எடுத்துக்கொள்ளுங்கள்,
மற்றும் யோகி நானும் மற்றவர்களும் நோயிலிருந்து விடுபடட்டும்.
நமக்கு நீண்ட ஆயுள், சக்தி, புகழ்,
மற்றும் அதிர்ஷ்டம், கண்ணியம் மற்றும் பெரும் செல்வம் கிடைக்கட்டும்.
எல்லா செயல்களிலும் அமைதி, அதிகரிப்பு போன்றவற்றை எங்களுக்கு வழங்குங்கள்.
Mஉறுதிமொழி வைத்திருப்பவர்கள் எப்போதும் பாதுகாக்கட்டும்
மற்றும் அனைத்து சாதனைகளையும் அடைய எங்களுக்கு உதவுங்கள்.
அகால மரணம், நோய், தீமைகள், இடையூறுகள், தடைகள்,
கெட்ட கனவுகள், கெட்ட அறிகுறிகள், சகுணங்கள் மற்றும் மோசமான நடவடிக்கைகள் ஆகியவற்றை அவர்கள் சமாதானபடுத்தட்டும்.
உலகில் அமைதி, நல்ல பயிர்கள் மற்றும் தானியங்கள் அதிகரிப்பு இருக்கட்டும்.
தர்மம் செழிக்கட்டும், இதனால் எல்லா நன்மைகளும் அதிகரிக்கும்.
என் மனதில் உள்ள அனைத்தும் நிறைவேறட்டும்.
ஞான மனிதர்கள் திருமபும்படி கோருங்கள்
ஓம் பென்ஸா மு
(லோமா கியோன்மாவும் அவரது அறிவொளி பரிவாரங்களும் உங்களுடன் கலப்பதைக் காட்சிப்படுத்துங்கள்)
அர்ப்பணிப்பு
இந்த நடைமுறையின் மூலம் சேகரிக்கப்பட்ட நல்லொழுக்கங்களால்
நான் விரைவில் பிதா பர்னாசவரி நிலையை அடையவேண்டும்
மற்றும் விதிவிலக்கு இல்லாமல் அனைத்து உயிரினங்களையும்
அறிவொளி நிலைக்கு வழிநடத்துங்கள்.
திபெத்திய ஓபஸ்குலாவிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட லோமா கியோன்மா சாதனா
மஞ்சள் லோமா கியோன்மாவின் நடைமுறை குறிப்பாக நோய்களுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களால் மட்டுமே செய்ய முடியும்
பிரார்த்தனை உரையை இங்கே பதிவிரக்கம் செய்க.
அடைக்களம் மற்றும் அறிவொளியின் மனதை உருவாக்குதல்
முழுமையான அறிவொளி வரும் வரை நான்
புத்தர்களின், தர்மம் மற்றும் உச்ச சபையில், தஞ்சம் அடைகிறேன்,
கொடுப்பதன் மூலமும் பிற பரிபூரணங்களாலும் நான் சேகரிக்கும் தகுதியின் மூலம்,
எல்லா உயிரினங்களுக்காக நான் புத்த மதத்தை அடையவேண்டும்.
தாமரை மற்றும் சந்திரன் வட்டில் ஒருவரின் இதயத்தில் PAM என்ற எழுத்து உள்ளது
இதிலிருந்து ஒளிக்கதிர்கள் வெளிப்படுகின்றன,
குரு அக்க்ஷோப்யாவால் அலங்கரிக்கப்பட்டு புத்தர்கள் மற்றும்
போதிசத்துவர்களால் சூழப்பட்ட பித பர்னாசவரியை அழைக்கிறது.
அறிவொளி மனிதர்களை அழைக்கிறது
ஓம் வஜ்ர சமத்ஜா
விழுந்து வணங்குதல்
நமோ குருபயா
நம பர்னாசவரி புத்த போதிசத்துவ சபரிவரேப்ய
(தொடர்ந்து சிரம் தாழ்த்தி வணங்குதல்)
பிரசாதங்கள்
ஓம் பர்னாசவரி சபரிவரா அர்ஹம் பிரதிட்ச சுவாஹா
ஓம் பர்னாசவரி சபரிவரா பட்யம் பிரதிட்ச சுவாஹா
ஓம் பர்னாசவரி சபரிவரா புஸ்பே பிரதிட்ச சுவாஹா
ஓம் பர்னாசவரி சபரிவரா டுபெ பிரதிட்ச சுவாஹா
ஓம் பர்னாசவரி சபரிவரா அலோகே பிரதிட்ச சுவாஹா
ஓம் பர்னாசவரி சபரிவரா கண்டே பிரதிட்ச சுவாஹா
ஓம் பர்னாசவரி சபரிவரா நிவிட்யே பிரதிட்ச சுவாஹா
ஓம் பர்னாசவரி சபரிவரா ஷப்த அஹ் ஹும் சுவாஹா
(தொடர்ந்து படையல் செய்தல்)
போதுசித்தர் சபதம்
நான் மூன்று நகைகளில் தஞ்சம் அடைகிறேன்.
எனது ஆரோக்கியமற்ற செயல்களுக்கு நான் வருந்துகிறேன்.
எல்லா உயிரினங்களின் தகுதியிலும் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
அறிவொளி வரும் வரை நான் போதிசித்தத்தை கடைப்பிடிப்பேன். (3x ஓதுங்கள்)
ஓம் வஜ்ரா மு
(ஞான மனிதர்கள் புறப்படுகிறார்கள்)
நான்கு அளவிட முடியாதவை
அனைத்து உயிரினங்களும் மகிழ்ச்சியுடனும்
மற்றும் மகிழ்ச்சியின் காரணங்களுடனும் இருக்கட்டும்.
அனைத்து உயிரினங்களும் துன்பத்திலிருந்தும்
மற்றும் துன்பத்தின் காரணங்களில் இருந்தும் விடுபடட்டும்.
அனைத்து உயிரினங்களும் துன்பத்திலிருந்து
விடுபட்டு மகிழ்ச்சியுடன் இருக்கட்டும்.
நெருக்கமாக உள்ளவர்களுடன் இணைப்பு இல்லாமலும்
தூரத்தில் உள்ளவர்களுடன் வெறுப்பு இல்லாமலும்
அனைத்து உயிரிணங்களுடனும் சமநிலையில் இருக்கட்டும்.
(இவ்வாறு நான்கு அளவிடமுடியாதவற்றைப் பற்றி தியானியுங்கள்)
ஓம் சுவாபவ சுத்த சர்வ தர்ம சுவாபவ சுத்தோ ஹம்
(இதனால் வெறுமையில் கரைதல்)
பூக்கள் மற்றும் காடுகளுடன் வெறுமையிலிருந்து நகைகள் நிறைந்த மேரு மலை எழுகிறது, அதன் மேல் PAM என்ற எழுத்தில் இருந்து தாமரை எழுகிறது, AH ஒரு நிலவு வட்டு, இது ஒரு மஞ்சள் PAM வடிவத்தில் ஒருவரின் சொந்த உணர்வு, இது ஒளிக்கதிர்களை வெளிப்படுத்தி ஆர்யா மனிதர்களுக்குப் பிரசாதமாக படைக்கிறது. இந்த ஒளி அனைத்து உயிரினங்களின் நோய்களையும் துன்பங்களையும் நீக்குகிறது. ஒளி மீண்டும் PAM என்ற எழுத்தில் சேகரிக்கப்பட்டு, பகவதி பர்னாசவரியாக, தங்க நிறத்தில், மூன்று முகங்களையும் ஆறு கரங்களையும் கொண்டு மாறுகிறது.
மஞ்சள் நிறமான முக்கிய முகம், கோபம் மற்றும் நேர்த்தியுடன் வெளிப்படுகிறது. அமைதியான வெளிப்பாட்டுடன் வெண்மையான வலது முகம். ஆசையின் வெளிப்பாட்டுடன் இடது முகம் சிவந்திருக்கும். ஒவ்வொரு முகத்திற்கும் மூன்று கண்கள் உள்ளன. முதல் வலது கை நேரான வஜ்ராவையும், இரண்டாவது கோடரி, மூன்றாவது அம்பையும் வைத்திருக்கிறது. முதல் இடது கை அச்சுறுத்தும் சைகையில் விரல்களில் ஒரு வஜ்ரா சுருக்குக் கயிற்றை வைத்திருக்கிறது, இரண்டாவது பூக்கள், பழங்கள் மற்றும் இலைகளுடன் ஒரு கிளையை வைத்திருக்கிறது, மூன்றாவது ஒரு வில் வைத்திருக்கிறது. வலது காலின் குதிக்கால் இரகசிய பகுதிக்கு எதிராக உயர்த்தப்பட்டிருக்கிறது. வலது காலின் பாதமும் முழங்காலும் ஒரே இருக்கையைத் தொடுகிறது மற்றும் இடது காலின் பாதமும் இருக்கையைத் தொடுகிறது. இவ்வாறு அவள் பாதி நின்ற நிலையிலும், பாதி உட்கார்ந்த நிலையிலும் நேர்த்தியான முறையில் காட்சியளிக்கிறாள்.
அவள் நகைகள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறாள், மேலும் சிவப்பு பட்டு மேல் ஆடை மற்றும் மர இலைகளைக் கீழ் ஆடையாகவும் அணிந்திருக்கிறாள். ஒரு வெள்ளைப் பாம்பை மார்பு ஆபரணமாகவும், தலை முடியின் பாதி மேல் முடிச்சில் பிணைக்கப்பட்டுள்ளதால், அவள் இளமை மற்றும் அழகுடன் பூத்துக் குலுங்குகிறாள், மேலும் ஒரு உற்சாகமான மற்றும் சற்று கோபமான வெளிப்பாட்டைக் கொண்டிருக்கிறாள். எரியும் ஒளியின் மத்தியில் அமர்ந்திருக்கும் அவள், நெற்றியில் வெள்ளை ஓம் எழுத்துடன், தொண்டையில் சிவப்பு AH மற்றும் இதயத்தில் நீல HUM உடன் அலங்கரிக்கப்பட்டிருக்கிறாள். ஒரு சூரிய வட்டில் இதயத்தின் உள்ளே மஞ்சள் PAM எழுத்து ஒளியின் கதிர்களை வெளிப்படுத்தி தனது இயற்கையான இடத்திலிருந்து உண்மையான தெய்வம் பர்னாசவரியையும் மற்றும் அவரது பரிவாரங்களையும் அழைக்கிறது.
வஜ்ரா சமாஜா
ட்சா ஹும் பம் ஹொ
மீண்டும் ஒளிக்கதிர்களை வெளிப்படுத்துகிறது, அனைத்து ததகதாவைத் தொடங்கும் தெய்வங்களை அழைக்கிறது.
வஜ்ரா சமாஜா
பிரசாதங்கள்
ஓம் வஜ்ரா அர்ஹம் பிரதிட்ச சுவாஹா
ஓம் வஜ்ரா பட்யம் பிரதிட்ச சுவாஹா
ஓம் வஜ்ரா புஸ்பெ பிரதிட்ச சுவாஹா
ஓம் வஜ்ரா டுபே பிரதிட்ச சுவாஹா
ஓம் வஜ்ரா அலோகெ பிரதிட்ச சுவாஹா
ஓம் வஜ்ரா கண்டெ பிரதிட்ச சுவாஹா
ஓம் வஜ்ரா நைவிட்யே பிரதிட்ச சுவாஹா
ஓம் வஜ்ரா ஷப்த பிரதிட்ச சுவாஹா
ஓ எல்லா ததகதாக்களும், தயவுசெய்து எனக்கு தீட்சை வழங்கவும்.
(இவ்வாறு கோருகிறது)
எல்லா ததகதாக்களும் பிறந்த தருணத்தில் தீட்சை பெற்றதைப் போலவே, இப்போது நாம் தெய்வங்களின் தூய நீரால் தீட்சை வழங்குகிறோம்.
ஓம் சர்வ ததகதா அபிஷேகதா சமயா ஶ்ரீயே ஹும்
(இதைச் சொல்லி, குவளைகளின் நீரைக் கொண்டு தீட்சை வழங்கப்படுகிறது.)
முழு உடலையும் துவக்கத்திலிருந்த அமிர்தத்தால் நிரப்பி, அனைத்து கறைகளையும் தூய்மைப்படுத்துகிறது. அதிகப்படியான நீர் கிரீடத்திலிருந்து வெளியே வந்து புத்தர் அக்க்ஷோப்யாவாக மாறுகிறது.
(பின்னர், கிரியா தாந்திரா பாரம்பரியத்தின்படி பிரசாதங்களை ஆசீர்வதியுங்கள்.)
ஓம் வஜ்ரா அம்ர்தா குண்டலி ஹனா ஹனா ஹும் பட்
ஓம் ஸ்வபவ சுத்த சர்வ தர்ம ஸ்வபவ சுத்தோ ஹம்
எல்லாம் வெறுமை. தனக்கு முன்னால் உள்ள வெறுமையிலிருந்து, ஓம் என்ற எழுத்து தோன்றுகிறது, இது எட்டு விசாலமான நகைப் பாத்திரங்களாக மாறுகிறது. அந்த ஒவ்வொரு பாத்திரத்திலும் ஓம் என்ற எழுத்துக்கள்: வாய்க்கு நீர், கால்களுக்கு நீர், பூக்கள், தூபங்கள் மற்றும் பல தெளிவான, தடையற்ற மற்றும் விண்வெளி போன்று விரிவான தெய்வீக பொருள்களாக மாறுகின்றன.
ஓம் அர்ஹம் அஹ் ஹும்
ஓம் பபட்யம் அஹ் ஹும்
ஓம் புஸ்பெ அஹ் ஹும்
ஓம் டுபெ அஹ் ஹும்
ஓம் அலோகே அஹ் ஹும்
ஒம் கண்டே அஹ் ஹும்
ஓம் நைவிட்யெ அஹ் ஹும்
ஓம் ஷப்த அஹ் ஹும்
(பின்னர், முன்பு போலவே அனைவரையும் காட்சிப்படுத்தி பிரசாதங்களைப் படையுங்கள்)
பிரசாதங்கள்
ஓம் பர்னாசவரி சபரிவரா அர்ஹம் பிரதிட்சயே சுவாஹா
ஓம் பர்னாசவரி சபரிவரா பட்யம் பிரதிட்சயே சுவாஹா
ஓம் பர்னாசவரி சபரிவரா புஸ்பே பிரதிட்சயே சுவாஹா
ஓம் பர்னாசவரி சபரிவரா டுபே பிரதிட்சயே சுவாஹா
ஓம் பர்னாசவரி சபரிவரா அலோகே பிரதிட்சயே சுவாஹா
ஓம் பர்னாசவரி சபரிவரா கண்டே பிரதிட்சயே சுவாஹா
ஓம் பர்னாசவரி சபரிவரா நைவிட்யே பிரதிட்சயே சுவாஹா
ஓம் பர்னாசவரி சபரிவரா ஷப்த பிரதிட்சயே சுவாஹா
புகழ்ச்சிகள்
அனைத்து புத்தர்களின் அதிசயத்திலிருந்து எழுகிறது
மாயைப் போன்ற ஞானம், நான் உங்களை வணங்குகிறேன்.
இந்த தேவியின் நடைமுறையை யார் செய்கிறாரோ, எல்லா நோய்கள்,
தீமைகள் மற்றும் தடைகள் என்றென்றும் சமாதானப்படுத்தப்படுகிறது.
மந்திர பாராயணம்
மந்திரத்தின் சாராம்சம்
ஓம் பிஷாட்சி பர்னாசவரி ஹ்ரி ஹ ஹும் பட் சுவாஹா
அதிரடி மந்திரம்
(எத்தனை முறையும் ஓதலாம்)
ஓம் பிஷாட்சி பர்னாசவரி சர்வ ட்ஸ்வரா பிரஷமனயே சுவாஹா
நீண்ட மந்திரம்
(நீங்கள் பர்னாசவரியின் நீண்ட மந்திரத்தை ஓத விரும்பினால்)
தட்யதா / ஓம் அம்ர்தெ / அஷ்வஸ்தங்கே/
மமரா / மமரா / ஷாமவரா/
ஷாம உபஷாம துனுபி /
நுதுதுதுது முலே சுவாஹா /
நாம ஷவர்னன்ன /
ஓம் பிஷாட்சி பர்ன ஷவரி விஷாட்சி சுவாஹா /
ஒம் பர்ன ஷவரி ஹும் பட்
ஓம் அங்குரே / மங்குரே பர்ன ஷவரியே சுவாஹா /
ஓம் பிஷாட்சி பர்ன ஷவரி சுவாஹா /
சர்வ மாரி பஷமனி /
சர்வ டுஸ்தனனி வண்ட முகன ஹும் பட் சுவாஹா /
(இவ்வாறு ஓதுங்கள்)
(வெள்ளை தோர்மா கிரியா தாந்திராவுக்கு ஏற்றவாறு ஆசீர்வதிக்கப்படவேண்டும்)
ஓம் வஜ்ரா அம்ர்தா குண்டலி ஹானா ஹானா பட்
ஓம் சுவாபவா சுத்த சர்வ தர்ம சுவாபவா சுத்தோ ஹம்
YAM என்ற எழுத்தின் வெறுமையில் இருந்து ஒரு காற்று மண்டலம் தோன்றுகிறது, அதன் மேல் RAM என்ற எழுத்திலிருந்து ஒரு தீ மண்டலம் தோன்றுகிறது. AH என்ற எழுத்திலிருந்து வெளியே வெள்ளையாகவும் உள்ளே சிவப்பாகவும், பெரியதாகவும் மற்றும் விசாலமாகவும், ஐந்து இறைச்சிகள் மற்றும் ஐந்து அமிர்தங்களைக் கொண்டு ஒரு மண்டை ஓடு தோன்றுகிறது, அவை மூன்று சொற்களைக் கொண்டு [ஓம் அஹ் ஹும்] பாராயணம் செய்வதன் மூலம் சுத்தகரிக்கப்பட்டு மாற்றப்பட்டு பெருக்கப்படுகின்றன. அந்த பொருள்கள் அனைத்தும் ஞான அமிர்தத்தின் வரையருக்கப்படாத கடலாக மாறுகின்றன.
ஓம் அஹ் ஹும் (மூன்று முறை பாராயணம் செய்யுங்கள்)
தோர்மா பிரசாதம்
ஒருவரின் இதய மையத்திலிருந்து ஒளியின் கதிர்கள் வெளிப்படுகிறது, பித பர்னாசவரி தெய்வத்தையும் அவரது பரிவாரங்களையும் அழைக்கிறது.
வஜ்ரா சமாட்ஜ
(இவ்வாறு அழைக்கிறது)
ஓம் பிஷாட்சி பர்னாசவரி சபரிவரா இடம் பாலிம் கிர்ஹனா பய கிர்ஹனா பய சர்வ ட்சவர பிரஷமனயே சுவாஹா
(மூன்று முறை உச்சரிக்க வேண்டும்)
(பிறகு பிரசாதங்களைப் படைக்க வேண்டும் மற்றும் முன்பு போல் வாழ்த்த வேண்டும்)
பிரசாதங்கள்
ஓம் பர்னாசவரி சபரிவரா அர்ஹம் ப்ரதிட்ச சுவாஹா
ஓம் பர்னாசவரி சபரிவரா பட்யம் ப்ரதிட்ச சுவாஹா
ஓம் பர்னாசவரி சபரிவரா புஸ்பெ ப்ரதிட்ச சுவாஹா
ஓம் பர்னாசவரி சபரிவரா டுபெ ப்ரதிட்ச சுவாஹா
ஓம் பர்னாசவரி சபரிவரா அலோகே ப்ரதிட்ச சுவாஹா
ஓம் பர்னாசவரி சபரிவரா கண்டே ப்ரதிட்ச சுவாஹா
ஓம் பர்னாசவரி சபரிவரா நைவிட்யே ப்ரதிட்ச சுவாஹா
ஓம் பர்னாசவரி சபரிவரா ஷப்ட ப்ரதிட்ச சுவாஹா
புகழ்ச்சிகள்
அனைத்து புத்தர்களின் அதிசயத்திலிருந்து
மாயைப் போன்ற ஞானம் எழுகிறது, நான் உங்களை வணங்குகிறேன்.
இந்த தேவியின் நடைமுறையை யார் செய்கிறாரோ, எல்லா நோய்கள்,
தீமைகள் மற்றும் தடைகள் என்றென்றும் சமாதானப்படுத்தப்படுகிறது.
கோரிக்கைகள்
தயவுசெய்து இந்த பிரசாதத்தை எடுத்துக்கொள்ளுங்கள்,
மற்றும் யோகி நானும் மற்றவர்களும் நோயிலிருந்து விடுபடட்டும்.
நமக்கு நீண்ட ஆயுள், சக்தி, புகழ் மற்றும் அதிர்ஷ்டம்,
கண்ணியம் மற்றும் பெரும் செல்வம் வழங்கப்படட்டும்.
அனைத்து செயல்களில் சமாதான அதிகரிப்பு போன்றவற்றை எங்களுக்கு வழங்குங்கள்.
உறுதுமொழி வைத்திருப்பவர்கள் எப்போதும் பாதுகாக்கப்படட்டும்
மற்றும் அனைத்து சாதனைகளையும் அடைய எங்களுக்கு உதவுங்கள்.
அகால மரணங்கள், நோய், தீமைகள், இடையூறுகள், கெட்ட கனவுகள்,
கெட்ட அறிகுறிகள், சகுணங்கள் மற்றும் மோசமான நடவடிக்கைகளை அமைதி படுத்துங்கள்.
உலகில் அமைதி, நல்ல பயிர்கள் மற்றும் தானியங்கள் அதிகரிப்பு இருக்கட்டும்.
தர்மம் அதிகரிக்கட்டும், இதனால் எல்லா தெய்வங்களும் தோன்றட்டும்.
என் மனதில் உள்ளவை அனைத்தும் நிறைவேறட்டும்.
(விரும்பிய நோக்கங்களுக்காக இவ்வாறு கோரிக்கைகள் வைப்பது)
ஓம் வஜ்ரா மு
(இவ்வாறு ஞான மனிதர்கள் புறப்படுமாறு கோருகிறார்கள்)
அர்ப்பணிப்பு
இந்த நடைமுறையின் மூலம் சேகரிக்கப்பட்ட நல்லொலுக்கங்களால் நான் விரைவில்
பித பர்னாசவரி நிலையை அடைய வேண்டும்,
மற்றும் விதிவிலக்கு இல்லாமல்,
எல்லா உயிரினங்களையும் அறிவொளி நிலைக்கு வழிநடத்துங்கள்.
Please support us so that we can continue to bring you more Dharma:
If you are in the United States, please note that your offerings and contributions are tax deductible. ~ the tsemrinpoche.com blog team
DISCLAIMER IN RELATION TO COMMENTS OR POSTS GIVEN BY THIRD PARTIES BELOW
Kindly note that the comments or posts given by third parties in the comment section below do not represent the views of the owner and/or host of this Blog, save for responses specifically given by the owner and/or host. All other comments or posts or any other opinions, discussions or views given below under the comment section do not represent our views and should not be regarded as such. We reserve the right to remove any comments/views which we may find offensive but due to the volume of such comments, the non removal and/or non detection of any such comments/views does not mean that we condone the same.
We do hope that the participants of any comments, posts, opinions, discussions or views below will act responsibly and do not engage nor make any statements which are defamatory in nature or which may incite and contempt or ridicule of any party, individual or their beliefs or to contravene any laws.
Please enter your details