நல்ல நட்புக்கு ஏற்றவர்
அன்பு நண்பர்களே,
எனது குருவின் மறைவு என்னை மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக்கியது. சென்ற 30 வருடங்களாக புத்தரின் போதனைகளின் மூலம் நல்ல ஞானம் பெற்று நான் செல்லும் வழி எது என்று அறிந்து ஆறுதல் அடைந்தேன். எனது சிந்தனையில் அதிக குழப்பங்கள் இருந்தாலும், நான் புத்தரின் போதனைகளை முழுமையாக நம்பினேன். ஆனாலும் சில சமயங்களில் எனது கர்ம வினைகளால் பாதிக்கப்பட்டு மோசமான நிலைமைக்குத் தள்ளப்பட்டேன். நான் குருவுடன் இருந்த விலைமதிப்பற்ற காலங்களின் போதுதான் டோர்ஜே ஷுக்டேனின் வழிபாட்டை எனக்குக் கற்றுத் தந்தார். எதிர்காலத்தில் உனக்கு ஏற்படும் சிரமங்களும், பிரச்சனைகளும் இதன் வழி தீரும் எனக் கருணையுடன் கூறினார். எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர் இது நாள் வரை கற்றதை எல்லாம் எனக்குச் சிறப்பாக சொல்லிக் கொடுத்தார். எனது குரு என் மீது அன்பு வைத்திருப்பதுபோல் நானும் அவர் மீது அதிக அன்பும் நம்பிக்கையும் வைத்திருக்கிறேன் என்பது எனது குருவுக்கும் தெரியும். எதுவெல்லாம் எனக்குப் பயனாக இருக்குமோ அதையெல்லாம் கொடுத்தார். 81 வயது வரை பயனுள்ள தர்ம வாழ்க்கையை வாழ்ந்தார். எனக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பதை அவர் அறிந்திருந்தார். என் முன்வினை என்னை ஆட்கொள்ளும் போது நான் தடுமாறி இருக்கிறேன். தனிமை, கவலை, பிரச்சனைகள், பொருளாதார பிரச்சனைகள் இவையெல்லாம் மேலோங்கி நான் நம்பிக்கையை இழக்கும்போது எல்லாம் பல முறை டோர்ஜே ஷுக்டேனை நாடி இருக்கிறேன். தெளிவான அறிகுறிகளுடன் டோர்ஜே ஷுக்டேன் என்னைக் கைவிடாமல் எனது குரு கூறியது போல் வழிநடத்திச் சென்றுள்ளார். நான் அவருடைய நம்பிக்கைக்கு ஏற்ப வாழ்கிறேன். நான் தர்ம வழியைப் பயிற்சி செய்து சிந்தனை மாற்றம், மனதை ஒருநிலைப் படுத்துதல், மற்றவர்களுக்கு மிகவும் உதவியாக இருத்தல் என்பதைத் தவிற வேறு எதையும் டோர்ஜே ஷுக்டேன் என்னிடம் எதிர்பார்க்கவில்லை. நான் மற்றவர்களுக்கு மிகவும் உதவியாக இருந்ததில்லை, ஆனால் புத்தரின் தர்ம போதனையின் வழி என் மனம் எப்பொழுதெல்லாம் தளர்கிறதோ அப்பொழுதெல்லாம் என் மனதை வெற்றி கொள்ளப் பயன்பட்டது. டோர்ஜெ ஷுக்டேன், நாம் புத்தரிடம் அடைக்களம் புக வேண்டும் என்றும் புத்தரின் போதனைகளை மற்றவர்களுக்குப் போதிக்கவேண்டும் என்றும் கூறுவார். குறைபாடு உள்ள இந்த உலகத்தில் டோர்ஜே ஷுக்டேன் புத்தரின் மிகப் பெரிய விசுவாசியாக இருந்தார். டோர்ஜே ஷுக்டேன் குறி சொல்பவர் வழி இதை அடிக்கடி என்னிடம் கூறியுள்ளார். பூஜை புத்தகங்களிலும் எழுதப்பட்டுள்ளது. டோர்ஜே ஷுக்டேனின் வழிகாட்டலும் சக்தியும் கெச்சாராவின் வளர்ச்சியின் வழி தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. இதை நீயும் வைத்துக் கொள்ளலாம்.
30 வருடங்களாக டோர்ஜே ஷுக்டேனை நம்பியதால் பல நன்மைகளை அடைந்துள்ளேன். அவருக்கான வழிபாட்டு முறையை, நண்பர்கள், மாணவர்கள், இந்த உலகத்தில் என்னைச் சுற்றியுள்ள மக்கள் அனைவரிடமும் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். எனக்கு உதவி செய்ய நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். நாங்கள் எப்பொழுதும், துறவி எந்த அளவிற்கு மாணவர்களுக்கு வழிகாட்டிகிறார் என்பதைப் பற்றிதான் பேசுவோம். ஆனால் நான் எனது நண்பர்களும், மாணவர்களும் எந்த அளவிற்கு சென்ற பத்தாண்டுகளில் எனக்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பதைப் பற்றி கூற விரும்புகிறேன். நான் அவர்களுக்கு நன்றி உள்ளவனாக இருக்கிறேன். அவர்கள் இல்லாவிட்டால் எனது வேலைகளை நான் செய்திருக்க முடியாது. எனது நண்பர்களுக்கும் மாணவர்களுக்கும் நான் என்றென்றும் கடமைப் பட்டவனாக இருப்பேன். அதனால் நான் எப்பொழுதும், இந்த ஜென்மத்தில் எப்படி அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்க முடியும் என்பதைப் பற்றி யோசித்துக்கொண்டிருப்பேன். இதற்கு விடை, தர்மா போதனைகளும், டோர்ஜே ஷுக்டேனும். டோர்ஜே ஷுக்டேன் இலக்கை அடைவதற்கும் , தர்ம போதனைகள் வாழ்க்கைக்கும் நமக்குத் தேவை. எனவே டோர்ஜே ஷுக்டேனைப் பற்றி அவர்களிடமும் மற்றவர்களிடமும் பகிர்ந்து கொண்டே.ன். இந்த வழிபாட்டு முறையை பயிற்சி செய்யும் எனது செயலின் நோக்கம், நானும், மற்றவர்களும் பயன் பெறவேண்டும் என்பதே. நடைமுறையில் இந்த வழிபாட்டு முறையின் நன்மைகளைத் தெளிவாகக் கண்டு கொண்டதால் மற்றவர்களும் பயன்பெறவேண்டும் என்பதே எனது உள்நோக்கம். அவர்களுடைய அன்பையும், கருணையையும் ஈடுசெய்ய எண்ணுகிறேன். திறமைகளற்ற சாதாரண மனிதனான நான், பலருக்கு உதவி செய்யவோ, குணப்படுத்தவோ முடியாத நிலைமையில் இருப்பது வருத்தமளிக்கிறது. ஆனால் அவர்களுக்கு டோர்ஜே ஷுக்டேனை அறிமுகப்படுத்தினால், அவர் உதவி செய்வார். டோர்ஜே ஷுக்டேன் உதவுவார், காரணம் அவர் எனக்கும் உதவி செய்திருக்கிறார். தர்ம போதனைகளையும், டோர்ஜே ஷுக்டேனின் வழிகாட்டல்களையும் எனது நண்பர்களிடமும், உலகத்தில் உள்ளவர்களிடமும் சேர்த்திருப்பதால், நான் அவர்களுக்கு நன்மையையே செய்திருக்கிறேன் என்று எண்ணுகிறேன்.
இன்று கெச்சாராவில் இருக்கும் நல்ல உள்ளங்கள் டோர்ஜே ஷுக்டேனுக்கு மாதாந்திர பூஜைகள் (kangsol) செய்தனர். (see photos) அவர்களின் செய்கையைப் பார்த்து நான் மகிழ்ச்சியடைந்தேன். பூஜை செய்பவர்களில் பலர் நல்லவர்கள். அவர்களுக்கும் நம்மைப் போன்று பிரச்சனைகள் உண்டு. எப்பொழுது நான் வழங்கிய டோர்ஜே ஷுக்டேனை அவர்கள் முழுமையாக நம்பினார்களோ அப்பொழுதே நல்லவர்களைத்தான் உலக அமைதியைக் காக்கும் திறமைசாலியான டோர்ஜே ஷுக்டேனிடம் ஒப்படைத்து விட்டேன் என்று எண்ணினேன். எதிர்காலத்தைக் கணிப்பதற்கும், காப்பதற்கும், ஆசீர்வதிப்பதற்கும், வளமையை அறிவதற்கும், நம்பிக்கைக் கொடுப்பதற்கும், அறிவுரை கூறுவதற்கும், இலக்கை அடைவதற்கும் டோர்ஜே ஷுக்டேன் உதவ முடியும். இவர் எல்லோருடனும் நண்பனாகவும் இருக்க முடியும். இவர் சுறுறுப்பானவர், உண்மையானவர், உயிரானவர் ,இரக்கக் குணம் உள்ளவர், மற்றும் பாதுகாப்பதில் தந்தை போன்றவர். டோர்ஜே ஷுக்டேன் எப்பொழுதும் அவர்களைக் கவனித்துக் கொண்டே இருப்பார். இதைப் பற்றி எனது குருவும் சொல்லியிருக்கிறார், நானும் எனது வாழ்க்கையில் பார்த்திருக்கிறேன். இந்த உலகத்தில் உள்ளவர்களும், எனது நண்பர்களும் பாதுகாப்புக்காகவும், வழிகாட்டலுக்காகவும் என்னிடம் உதவி கேட்பவர்களுக்கு டோர்ஜே ஷுக்டேனை அறிமுகப்படுத்துவதில் பெறுமைப் படுகிறேன். சாதாரண மனிதனான என் மீது நம்பிக்கை வைப்பவர்களும் சம்சார வாழ்க்கையில் திலைப்பவர்களும் வெறுங்கையுடன் தான் செல்ல வேண்டும். ஆனால் என்னிடம் வந்து டோர்ஜே ஷுக்டேனை முழுமையாக நம்பி செல்பவர்கள், பலமும், விவேகமும் கொண்ட ஒருவரின் பாதுகாப்பில் இருப்பதாக எண்ணுகிறேன். ஆகவே அவர்கள் என் மீது வைத்த உண்மையான நட்புக்கும், அன்புக்கும் அவர்களுக்கு நன்மை தரும் பிரதி உபகாரம் செய்திருக்கிறேன் என நம்புகிறேன். வாழ்க்கையில் நமக்குக் கிடைப்பதை மற்றவர்களுக்கும் கொடுக்க வேண்டும். நாம் என்ன கொடுக்கிறோம் என்பது முக்கியம். நான் டோர்ஜே ஷுக்டேனை வணங்கும் முறையை எல்லோருக்கும் தாழ்மையுடன் வழங்குகிறேன். இந்த பலம் வாய்ந்த நட்பான டோர்ஜே ஷுக்டேனை ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறேன். யாரெல்லாம் ஏற்றுக்கொண்டார்களோ அவர்களுக்கெல்லாம், அவர்கள் காட்டிய அன்புக்கு கைமாறு எதிர்பார்க்காமல் திருப்பி செலுத்திவிட்டேன் என எண்ணுகிறேன். உலகம் முழுவதும் சமூக ஊடகத்தின் வழி என்னைப் பின் தொடர்பவர்களுக்கு, உதவும் வகையில் டோர்ஜே ஷுக்டேனை அறிமுகப்படுத்தியதில் மகிழ்ச்சியடைகிறேன். சமூக ஊடகத்தில் இருக்கும் எனது நண்பர்களை என்றாவது சந்திக்கலாம், சந்திக்காமலும் போகலாம். ஆனால் டோர்ஜே ஷுக்டேனை அவர்களிடம் சேர்த்ததால் சமூக ஊடகத்தின் வழி நாம் சந்தித்தது பயனுள்ள ஒன்றாக அமைகிறது. அந்தப் பயனை உங்களுக்கும் கொடுக்க விரும்புகிறேன். நீங்கள் பல பிரச்சனைகளைக் கடந்திருப்பீர்கள். வழி காட்டுவதற்கென சிலருக்கு அருகில் யாரும் இருந்திருக்க மாட்டார்கள். அதற்காக நான் வருத்தப்படுகிறேன். ஆனால் டோர்ஜே ஷுக்டேன் உங்களுடன் இருந்தால் அவர் உதவி செய்வார். தர்ம போதனைகளக் கடைபிடித்து அவருடைய ஆசீர்வாதத்தைப் பெற்றால் அவர் எப்படி உதவி செய்வார் என்பதைக் காலம் சொல்லும். டோர்ஜே ஷுக்டேன் உதவி செய்வார். டோர்ஜே ஷுக்டேனை உண்மையான தர்ம போதனைக்கு ஈடுகட்ட முடியாது. ஆனால் உண்மையான வேண்டுதல் வழி அவர் உங்களுக்கு வழிகாட்டுவார். காரணம் நாம் அனைவரும் நமது கர்ம வினைகளால் பல தடைகளைக் கடந்து வந்துள்ளோம். இதுதான் தர்மா காவளரின் வேலையும் கூட. இதுதான் எனது நெருங்கிய நண்பர்கள், மாணவர்கள், ஆதரவாளர்கள் மற்றும் உலகத்தில் நான் சந்தித்த சந்திக்காத அனைவருக்கும் நான் வழங்கும் பிரசாதம்.
ஆழ்ந்து கற்ற உயர்ந்த இடத்தை அடைந்த குரு மூலம் டோர்ஜே ஷுக்டேன் என்னிடம் ஒப்படைக்கப்பட்டார். நான் இப்பொழுது என்னை அணுகிய ஒவ்வொருவரிடமும், மற்றும் சமூக ஊடகங்கள் வழியும் தாழ்மையுடன் டோர்ஜே ஷுக்டேனை வழங்கிக்கொண்டிருக்கிறேன். என் இரு கரம் கூப்பி டோர்ஜே ஷுக்டேனின் கைகளைப் பிடித்துக்கொள்ளுமாறு வேண்டுகிறேன். இதனால் நீங்கள் மீண்டும் தனியே விடப்படமாட்டீர்கள். புத்தரின் போதனைகளைப் பின்பற்றும் இவர் உங்களுக்குக் காவலனாகவும், நண்பனாகவும் உங்களுடனேயே இருப்பார். ஞானமும், அன்பும் இவரை இயக்குகிறது. நமது வாழ்நாளில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதற்காக டோர்ஜே ஷுக்டேனை உங்களுக்கு வழங்குகிறேன். விலைமதிக்க முடியாத எனது நண்பனை உங்களிடம் கொடுக்கிறேன். ஆகவே உங்கள் நட்புக்குப் பாத்திரமாக நான் விளங்கவேண்டும்.
திசெம் ரின்போச்சே
மேலும் சுவாரஸ்யமான தகவல்களுக்கு கீழுள்ள வலைதலத்தில் பாருங்கள்: bit.ly/1zzvKkh
டோர்ஜே ஷுக்டேன் அவருடைய அதிகாரப்பூர்வ குறிசொல்பவரின் அருளில் இருக்கும்போது விசுவாசமுள்ள பல நூறு துறவிகளால் வரவேற்கப்பட்டார்.
பல லாமாக்கள் குறி சொல்பவரிடம் ஆலோசனை கேட்பர். இங்கு வணக்கத்திற்குரிய தலாய் லாமா குறிசொல்லும் ஒருவரிடம் ஆலோசனை கேட்கிறார்.
Please support us so that we can continue to bring you more Dharma:
If you are in the United States, please note that your offerings and contributions are tax deductible. ~ the tsemrinpoche.com blog team
DISCLAIMER IN RELATION TO COMMENTS OR POSTS GIVEN BY THIRD PARTIES BELOW
Kindly note that the comments or posts given by third parties in the comment section below do not represent the views of the owner and/or host of this Blog, save for responses specifically given by the owner and/or host. All other comments or posts or any other opinions, discussions or views given below under the comment section do not represent our views and should not be regarded as such. We reserve the right to remove any comments/views which we may find offensive but due to the volume of such comments, the non removal and/or non detection of any such comments/views does not mean that we condone the same.
We do hope that the participants of any comments, posts, opinions, discussions or views below will act responsibly and do not engage nor make any statements which are defamatory in nature or which may incite and contempt or ridicule of any party, individual or their beliefs or to contravene any laws.
Please enter your details