டோர்ஜே ஷுக்டேனின் அற்புதங்கள்
இளகிய மனம் கொண்ட காப்பாளர் டோர்ஜே ஷுக்டேன் அவர்களுக்குக் காணிக்கையாக இந்தக் கதையை எழுதும் போது எனக்கு ஒரு யோசனைத் தோன்றியது. சிறந்த டோர்ஜே ஷுக்டேன் அவர்கள் நிறைய அற்புதங்கள் செய்திருக்கும் வகையில் அதிகமான மக்கள் அவர் நிகழ்த்திய அற்புதங்களைக் கதையாகக் கூறியிருக்கின்றனர், இதுவும் அது போன்ற அன்றாட கதையா? என் கதையும் ஏற்கனவே சொல்லப்பட்ட கதைகளுள் ஒன்றா?
நிச்சயமாக, டோர்ஜே ஷுக்டேனின் அற்புதங்கள் பெரும்பாலும் அவருடைய பக்தர்களோடு தொடர்புடையது. டோர்ஜே ஷுக்டேனின் கருணையும், இரக்கமும், அவருடைய பக்தர்களின் வாழ்க்கை அனுபவங்களோடு தொடர்பு கொண்டவை. நான் இப்பொழுது உங்களுடன் பகிர்ந்துகொள்ள இருக்கும் அற்புதங்கள் கெச்சாரா சுற்றுவட்டத்தில் இருப்பவர்கள், அவருடைய பக்தர்களும், அல்லது மகா காப்பாளரைப் பற்றி அறிந்தவர்களோ அல்ல. ஆனால் சிக்கலான பிரச்சனைகள் வரும்போது என்னையும், என் மகளையும் அனுகி உதவி கேட்டவர்கள்.
ஷங்ஙாயில் நாங்கள் சிற்றுண்டிச் சாலையின் கிளைகளில் ஒன்றை நிர்வகிக்கும் போது முதல் அனுபவம் கிடைத்தது. அதிகமான சீனர்களை எங்கள் வேலைக்காரர்களாகப் பயன்படுத்துவதில் எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. நாங்கள் அவர்களுடன் நல்ல நட்புறவு வைத்திருந்தோம். நாங்கள் வேற்று நாட்டவர்களாக இருந்ததால் சீனாவின் அதிகமான சட்டதிட்டங்களும், நடைமுறைகளும் எங்களுக்குத் தெரியவில்லை. ஆகவே சீன வேலைக்காரர்கள் எங்கள் வியாபாரத்திற்குப் பல விதத்தில் உதவியாக இருந்தனர்.
2009 ல் ஒரு நாள் எங்கள் உதவி பேக்கரி சமையல்காரர் பொது இடத்தில் அழுவதைப் பார்த்தோம். ஒரு சீன ஆண் பொது இடத்தில் அழுவது இயல்பான ஒன்று அல்ல. சில நாட்களுக்கு முன் அவர் ஒரு குழந்தைக்குத் தந்தையாகியிருக்கிறார். ஆனால் அந்தக் குழந்தையின் மூளையில் இயற்கைக்கு மாறாக இரத்த உறைவு ஏற்பட்டுள்ளது. ஆகவே அந்தக் குழந்தை இன்னும் சில நாட்களே உயிருடன் இருக்க முடியும் என மருத்துவர்கள் நம்பிக்கையைக் கைவிட்டுவிட்டனர்.
இயற்கயான உந்துதலில், நானும் என் மகளும் அவரிடம் தன் குழந்தையை மற்றொரு மருத்துவரிடம் சென்று மீண்டும் பரிசோதனை செய்து, இதற்கு முன்னால் மருத்துவர் செய்த பரிசோதனை சரியானதா என்று உறுதி செய்யுமாறு கேட்டுக்கொண்டோம். அவர் தன் குழந்தையை மற்ற மருத்துவரிடம் காட்டியதாகவும், மற்ற மூன்று மருத்துவர்களும் அதையே கூறியதாகவும் சொன்னார்.
உடனே நாங்கள் எங்கள் குருவான வணக்கத்திற்குரிய 25th ஆவது திசெம் ரென்போச்சே அவர்களின் ஆலோசனையைக் கேட்டோம். ரென்போச்சே அவர்கள் அந்தக் குழந்தையின் அப்பா, டோர்ஜே ஷுக்டேனுக்கு முழு நம்பிக்கையோடு பிரசாதம் கொடுத்து,ஓம் பென்சா விகி பிதானா சோஹா என்ற மந்திரத்தை 10,000 முறை உச்சரிக்க வேண்டும் எனக் கூறினார். அந்தக் குழந்தைக்காகவும், அப்பாவுக்காகவும் எங்களையும் மந்திரத்தை உச்சரிக்கச் சொன்னார்.
கூறப்பட்ட எண்ணிக்கையில் மந்திரங்களை உச்சரித்து முடித்த மூன்று நாட்களில் அந்த அப்பா தன் குழந்தையைப் பரிசோதனைக்காக அதே மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்.
இதுதான் அந்த அற்புதம்- இரத்த உறைவு குறைந்து காணப்பட்டது! மருத்துவர்களுக்கு மிகவும் வியப்பாக இருந்தது. குழந்தையை குணமாக்கிவிடலாம் என மருத்துவர்கள் நம்பிக்கைக் கொண்டனர். குழந்தைக்கு மருத்துவர்கள் சிகிட்சை அளிக்கும்போது குழந்தையின் அப்பா தொடர்ந்து மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்தார். குறிப்பாக குழந்தைக்கு மருத்துவம் செய்யும்போதெல்லாம்.
இறத்த உறைவுடன் பிறந்த இந்த சிறு குழந்தை இன்று உயிருடன் இருக்கிறது, பள்ளிக்கும் செல்கிறது. திடகாத்திரமாகவும் இருக்கிறது.
அப்பா அல்லது மகள் இருவருமே வருமையின் காரணமாக கெச்சாராவுக்கு வந்ததே இல்லை. ஆனால் இந்த அற்புதத்திற்காக அவர்கள் என்றும் நன்றி உள்ளவர்களாக இருப்பார்கள்.
மற்றொரு தருணத்தில் 2016 இல் எனது மகள் எங்களிடம் ஒரு அருமையான வியக்கத்தகு செய்தியைக் கூறினாள். ஐரோப்பாவில் எனது மகளுடைய சிநேகிதி கர்ப்பத்தில் இரட்டைக் குழந்தையைத் தாங்கி இருந்தாள். எனினும் சிநேகிதியின் சந்தோசம் நிலைக்கவில்லை. பேறு காலம் நெருங்கும்பொழுது குழந்தைகளின் நலம் கருதி மருத்துவரிடம் சோதனை செய்தாள். ஒரு குழந்தைக்கு வழக்கத்திற்கு மாறான வளர்ச்சி காணப்பட்டது. நுட்ப சோதனைக்குப் பிறகு அந்தக் குழந்தையின் வயிற்றினுள் இருக்கவேண்டிய உறுப்புகள் வயிற்றுக் குழியை விட்டு வெளியே வளர்ந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் கலக்கமடைந்த என் மகளின் சிநேகிதி தெய்வீக சக்தியின் உதவியை நாடும் பொருட்டு என் மகளிடம் உதவி கேட்டாள். இந்த விநோதம், மரபனு பிரச்சனையால் ஏற்பட்டதா அல்லது உடல்கூறு பிரச்சனையா என்பதை அறிய மேலும் பரிசோதனை செய்ய மருத்துவர்கள் நினைத்தார்கள். அது உடல்கூறு பிரச்சனையாக இருந்தால் கர்ப்பத்தைத் தொடரலாம் எனவும் இல்லாவிட்டால் ஒரு கருவை கலைக்க வேண்டும் எனவும் முடிவெடுத்தனர். இது சரியான முன்கணிப்பாக படவில்லை. காரணம் இந்த நிலையில் இன்னொரு குழந்தைக்கும், தாயிக்கும் பாதிப்பில்லாமல் ஒரு கருவை கலைப்பது சரியான கணிப்பாகவும் இருக்கமுடியாது, சாத்தியமும் ஆகாது.
அந்த சோதனையின் முடிவு கர்ப்பத்தைத் தொடருவதற்கு சாதகமாக அமைய வேண்டும் என்பதற்காக கெச்சாராவில் உள்ள பூஜை செய்பவர்கள் பூஜை செய்யத் தொடங்கினர். இந்தப் பூஜைக்குப் பின் சிநேகிதியின் கர்ப்பத்தில் உள்ள வளக்கத்திற்கு மாறான வளர்ச்சி மரபனு பிரச்சனையால் ஏற்பட்டது அல்ல, உடல்கூறு பிரச்சனைதான் என உறுதிபடுத்தப்பட்டது.
குழந்தைகளின் நலனுக்காகவும், பிரசவம் சுமுகமாக இருக்கவேண்டும் என்பதற்காகவும் கர்ப்ப காலம் முழுவதும் பூஜைகள் தொடரப்பட்டது.
பிரசவத்திற்குப் பிறகு, இரண்டு முறை அறுவை சிகிட்சை செய்யப்பட்டு குழந்தையின் உறுப்புகள் வயிற்றுக்குள் வைக்கப்பட்டது. சிகிட்சைகள் முடியும் வரை தாயின் வேண்டுகோளுக்கு இணங்க பூஜைகள் தொடரப்பட்டது. அறுவை சிகிட்சையின்போது தொற்று நோய் வரும் அறிகுறி இருந்ததால் சில நேரங்களில் அதிக பதற்றம் ஏற்பட்டது. முடிவில் எல்லாம் நலமாக அமைந்ததால் எனக்கு சந்தோசமே. தடைகளையும், ஆபத்தையும் அகற்றும் பொருட்டு அறுவை சிகிட்சை முடியும் வரை பூஜைகள் தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தது.
மருத்துவ சிகிட்சை வழி இந்த சிக்கலுக்குத் தீர்வு கண்ட பிறகு, குழந்தைகள் எந்தவித பிர்ச்சனைகளுக்கும் ஆளாகாமல் வளர டோர்ஜே ஷுக்டேனின் ஆசி தொடர்ந்து இருக்க வேண்டுகிறேன்.
இந்த அற்புதம் நிகழ்ந்த பிறகு, டோர்ஜே ஷுக்டேன் அன்னியருக்கும் கூட உடனே முன் வந்து உதவி செய்வதை எண்ணி வியந்துள்ளேன்.
இந்த அற்புதங்களைப் பிரதிபலிக்கும் வகையில் எந்தவித சந்தேகமும் இல்லாமல், டோர்ஜே ஷுக்டேன் தன்னை வணங்காவிட்டாலும் கூட அனைத்து உயிர்களுக்கும் காப்பாளராகவும், காவலராகவும் இருக்கிறார் என்பது தெளிவாகிறது. உதவி வேண்டும் என்று அழைக்கப்பட்டால் அவர் அங்கு இருப்பார்.
தேவைப்படும் மக்களுக்கும், நண்பர்களுக்கும் டோர்ஜே ஷுக்டேனை வணங்கி உதவி செய்கிறோம் என்றால் நாம் எப்படிப்பட்ட அதிர்ஷ்டசாலிகள்.
ஓம் பென்சா விகி பிதானா சோஹா.
கணிப்பு (“mo”) உரை டோர்ஜே ஷுக்டேன்
இந்த முக்கியமான கணிக்கும் (‘mo’) முறையை வடிவமைத்தவர் டோர்ஜே ஷுக்டேன் அவர்களே. காடென் ஷர்ட்சி வடிவமைத்த கணிப்பு முறை சோயாங் டுல்சின் அருள் வழி பரம்பரையில் வந்த மூத்தசொல்லும் குறியின் வழி டோர்ஜே ஷுக்டேனேஇரண்டு மணி நேரத்திற்குள் வடிவமைத்த கணிப்பு முறை.
இந்த முக்கியமான எழுத்துப்படிவத்தில் எப்படி பகடையைப் பயன்படுத்தி எதிர்காலத்தைத் துள்ளிதமாகக் கணிப்பது என்ற தகவல் உள்ளது. குறி சொல்பவர் டோர்ஜே ஷுக்டேனின் நேரடி தொடர்பில் இருந்து எதிர்காலம் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்குப் பதில் கூறுவார். டோர்ஜே ஷுக்டேனின் உண்மையான நோக்கங்களை நன்கு தெரிந்து கொண்டவர்களும் எட்டு உலக வாழ்க்கைத் தர்மங்களிலிருந்து விடுபட்டவர்களும்மற்றவர்கள் பயன்படும் வகையில் எதிர்கால நடப்பைத் துள்ளிதமாக கணித்துக் கூற முடியும்..
தி செம் ரென்போச்சே
பொறுப்புத்துறப்பு: மேலே உள்ள பதிவு முறையான புத்தக தொகுப்பாளர் சேவைகளிலிருந்து இலவசப் பதிவிறக்கத்திற்காக பெறப்பட்டது. இது முற்றிலும் கல்வி நோக்கத்திற்க்கானது, வணிக நோக்கத்திற்க்கு அல்ல.
மேலும் சுவாரஸ்யமான தகவல்களுக்கு:
- கருணா தேர்ந்தெடுத்த வழி
- தெய்வ சக்தியின் மகிமை
- வாழ்க்கையின் ஆழமான அர்த்தத்தை அறிய டோர்ஜே ஷுக்டேனுன்
- உலகின் மிகப்பெரிய டோர்ஜே ஷுக்டேன் கோவில் மாடம்
- மலேசியாவில் உள்ள பெட்டாலிங் தெருவில் உற்சாகமூட்டும் டோர்ஜே ஷுக்டேன் விற்பனைக்கூடம்!
- கேச்சாரா ஃபோரெஸ்ட் ரீட்ரீட்டிற்கு கியான்ஸே சிலை வந்தடைந்துள்ளது
- டோர்ஜே ஷுக்டேன் அவர்களை வேண்டி சிறிய பிரார்த்தனை
- எனது கடவுள் என்னை எவ்வாறு குணப்படுத்தினார்
- நல்ல நட்புக்கு ஏற்றவர்
- டோர்ஜே ஷுக்டேனுக்கு ஊதுபத்தி காணிக்கை
- எனது அழகான ஆலயத்தைக் காண்க
- குணப்படுத்தும் தெய்வம் – லோமா கியோன்மா
- டோர்ஜே ஷுக்டேன் அவர்களை எல்லா இடங்களுக்கும் கொண்டு செல்வோம்! (ஆங்கிலம், திபெத், சீனம், ஹிந்தி, தமிழ் மற்றும் நேபாளம்)
- Dhaneshwar Bhagawan Dorje Shugden | धनेश्वर भगवान दोर्जी शुगदेन। | தனேஷ்வரர் பகவான் டோர்ஜே ஷுக்டேன் | धनेश्वर भगवान दोर्जे शुग्देन। | རྡོ་རྗེ་ཤུགས་ལྡན།
- தைப்பூசம் – முருகப்பெருமானின் விழா
- குவான் யின் நாள்
- மலேசியாவில் விசாக தினம்
Please support us so that we can continue to bring you more Dharma:
If you are in the United States, please note that your offerings and contributions are tax deductible. ~ the tsemrinpoche.com blog team
DISCLAIMER IN RELATION TO COMMENTS OR POSTS GIVEN BY THIRD PARTIES BELOW
Kindly note that the comments or posts given by third parties in the comment section below do not represent the views of the owner and/or host of this Blog, save for responses specifically given by the owner and/or host. All other comments or posts or any other opinions, discussions or views given below under the comment section do not represent our views and should not be regarded as such. We reserve the right to remove any comments/views which we may find offensive but due to the volume of such comments, the non removal and/or non detection of any such comments/views does not mean that we condone the same.
We do hope that the participants of any comments, posts, opinions, discussions or views below will act responsibly and do not engage nor make any statements which are defamatory in nature or which may incite and contempt or ridicule of any party, individual or their beliefs or to contravene any laws.
Please enter your details