புனிதர் பாபா சாவான் சிங் : தெய்வீகத்தன்மை கொண்ட சீக்கிய மத குரு
உலகம் முழுதும் வாழும் அன்பார்ந்த நண்பர்களே,
நம்மை தெய்வீகத்தன்மைக்கு அழைத்துச் செல்ல, ஒரு பாதை அல்லது சிந்தனை, ஒரு குரு அல்லது ஆசான், அல்லது ஒரு மதம் அல்லது குறிப்பிட்ட வழி மட்டும் இல்லை, மனிதர்கள் தெய்வீகத்தன்மைக்குச் செல்லும் இப்பாதையை பல வழிகளில் வரையறுக்கின்றார்கள். சிலருக்கு, இந்த பாதை தாங்கள் தோன்றிய வெளிப்புற தெய்வீகத்தன்மையிடம் சரணடைதல் ஆகும். மற்றவர்களுக்கு இப்பாதை தங்களை முழுமைப்படுத்தும் உட்புற தெய்வீகத்தன்மை ஆகும். ஆகையால், தெய்வீகத்தன்மை அல்லது தெய்வீகம் என்பதற்குள் மிகப் பெரிய ஞானமும் முற்போக்கு சிந்தனையும் உள்ளது; அதற்கு தோன்றுதலுக்கு உட்பட்ட அனைத்தும் தெரியும்.
தெய்வீகத்தன்மை நம்மை எப்படி தெளிவுபடுத்துகின்றது மற்றும் நமக்கு வாழும் முறையை எப்படி எடுத்துரைக்கின்றது என்பதனை ஒரு மதம், ஒரு குரு அல்லது ஒரு வழி என்று வரையறுக்க முடியாது. ஆதலால், ஒரு மதம் அல்லது பாதை மற்றொன்றை விட சிறந்தது, ஒரு கடவுள் மற்றொரு கடவுளை விட சிறந்தவர் அல்லது ஒரு குறிப்பிட்ட கடவுள் அல்லது குரு நல்லது இல்லை என்பதெல்லாம் நிச்சயமாக தவறான கருத்தாகும். இதற்கு காரணம் நான் உட்பட நாம் அனைவரும் ஞானம் பெற்றவர்கள் இல்லை என்பதே ஆகும். நாம் தெய்வீகம் அல்ல. ஆனால், தெய்வீகமாகும் சாத்தியம் நமக்கு இருக்கின்றது. நம்மிடம், (சரியான வார்த்தை இல்லாத காரணத்தினால்), “பிரபஞ்ச முழுமை” அடையும் சாத்தியம் இருக்கின்றது.”பிரபஞ்ச முழுமை” அடைந்த ஒருவர் அல்லது தெய்வீகத்தன்மை அடைந்து தெய்வீகமான ஒருவரால் மற்றவற்றை தங்களின் புனித நிலையிலிருந்து காண முடியும் மற்றும் மற்றவர்கள் குறித்து எந்தவொரு மதிப்பீடும் அவர்களிடம் இருக்காது.
இருந்தாலும், தீயவர்களும் தவறான பாதைகளும் இல்லை என்று அர்த்தமா? தீயவர்களும் தீய பாதைகளும் இருக்கத்தான் செய்கின்றன, ஆனால், நாம்தான் நமது செயல்களைத் தீர்மானிக்க வேண்டும். மற்றவர்களை மதீப்பீடு செய்வதன் மூலம் நமது ஆன்மீக பாதை குழம்பாமல் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
புத்த சமயத்தின் பால் மிகுந்த விருப்பம் கொண்ட போதிலும், நான் பல ஆன்மீக வழிகளைப் பற்றிய காணொளிகளைக் காண்பதற்கும் நூல்களைப் பற்றி படிப்பதற்கும் மிகுந்த ஆர்வம் கொண்டவன். ஆயினும், நான் மற்றவர்களிடம் புத்த சமயம் ஒன்றே சிறந்த வழி என்று கட்டுப்பாடுகள் விதிப்பதில்லை. அது காரணமற்றது. ஆதலால், நாம் அனைவருக்கும் அவரவர் பாதைகள், வழிமுறைகள், மதங்கள், குருக்கள் இருக்கின்றன. ஆனால், ஒன்றுக்கொன்றுடன் தொடர்புடைய மிகச் சிறிய உலகினில் , நாம் ஒருவரை ஒருவரும், நமது மதங்கள் மற்றும் நமது தனிப்பட்ட பாதைகளையும் மதிக்க வேண்டியது மிக முக்கியமாகும். நாம் மற்றவர்களை மதம் மாற்றுவதோ அல்லது தாழ்த்தவோ கூடாது. நாம் மற்றவர்களின் நடைமுறையை மதிப்பீடு செய்யக் கூடது. மாறாக, நாம் அவர்களைச் சகிப்புத்தன்மையுடனும் அன்புடனும், பராமரிப்புடனும் மற்றும் கருணையுடனும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஈஸ்வர் பூரி எனப்படும் 92- வயது குரு ஒருவரின் காணொளியைக் கண்டு பிரமித்து போனேன். ஏனெனில் அவர் பேசியவை புத்த சமயத்துடன் ஒத்து போனது. நான் கூற வருவது என்னவென்றால் உண்மையை நாம் வெவ்வேறு வழிகளில் அணுகினாலும் அது உண்மையாகவே இருக்கும். ஈஸ்வர் பூரியின் குரு, சீக்கிய மத குரு புனிதர் பாபா சாவான் சிங் ஆவார்.
அதனால், நான் புனிதர் பாபா சாவான் சிங் பற்றி வலைப்பதிவு ஒன்றை எழுத முடிவெடுத்தேன். அதற்குக் காரணம், உலக மக்கள் அப்பதிவைப் படித்து அவரைப் பற்றி தெரிந்து கொண்டு அவர் வாழ்வினைப் பற்றி கற்றுக் கொண்டு அவரை புரிந்து கொள்ள வேண்டும் என்பதாகும். அவரின் பயணமானது அனைத்து மதங்களையும், வழிகளையும் பின்னனிகளையும் மற்றும் பிரிவுகளையும் ஏற்றுக் கொள்வதாகும். இது ஒரு பயணம். இதற்குக் காரணம் புனிதர் பாபா சாவான் சிங் போன்று, தெய்வீகத்தன்மையை அடைவதற்கு நாம் இப்பயணத்தை அன்பெனும் விழி வழியும் கருணையுடனும் ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையுடனும் காண வேண்டும்.
பாதைகளையும், செயல்முறைகளையும் மற்றும் மற்ற ஆன்மீக பாரம்பரியத்தையும் புரிந்து கொள்ளாமல் அப்பயணத்தில் போவது கடினமாகும். மக்களின் ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை, சகிப்புத்தன்மை மற்றும் அன்பு என்ற பயணத்தில் உதவு வேண்டும் என்பதே நான் இந்த பதிவை உருவாக்குவதற்கு உந்துதலாய் இருந்தது. அதே சமயம், நம் ஆழ்மனதில் நாம் அனைவரும் வேண்டுவது ஒரே விஷயம்தான் -மகிழ்ச்சி, நிம்மதி மற்றும் ஞானம் என்பதனை மக்களுக்கு பாடம் புகட்டுவதற்கு ஆகும். ஆதலால், நான் உங்கள் அனைவரையும் இந்த பதிவைக் கவனமுடன் படிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன், நான் பணிவுடனும் பெருமையுடனும் உங்களுக்கு புனிதர் பாபா சாவான் சிங்கைப் பற்றி கூறுகின்றேன்.
செம் ரின்போச்சே
பாபா சாவான் சிங் க்ரேவால் (1858-1948), “மகாகுரு” என்று தனது சிஷ்யர்களால் அறியப்படும் இவர், சீக்கிய மதத்தின் தெய்வீகத்தன்மை கொண்ட இந்திய மதகுரு ஆவார். இவர், தனது குருவான பாபா ஜைமால் சிங் அவர்களின் ஆன்மீக வாரிசாவார். அதோடு ராதா சோயாமி சத்சாங் பியாஸ் (RSSB) என்றும் அறியப்படும் டேரா பாபா ஜைமால் சிங்கின் தலைமை பொறுப்பினை மரபுரிமையாகப் பெற்றார். பாபா சாவான் சிங்கின் ஆன்மீக வழிகாட்டுதலின் கீழ், RSSB வளர்ச்சியடைந்து கோடிக்கணக்கானவர்கள் வாழ்வின் ஆழமான அர்த்தத்தைத் தேடி செல்லும் இடமாகவும் அமைந்தது.
பாபா சாவான் சிங் எப்பொழுதும் தனது சிஷ்யர்களுக்கு கருணை மற்றும் மத சகிப்புத்தன்மை, அனைத்து உயிரினங்களையும் மதித்தல் மற்றும் போதை தருபவற்றைத் தவிர்க்குமாறும் வலியுறுத்துவார்.அனைத்து மகா ஆன்மீக மனிதர்களைப் போல், தான் போதிக்கும் ஞானம், பாபா சாவான் சிங்கின் செயல்களில் உள்ளடக்கி இருக்கும். அதிலும், இந்திய வரலாற்றில் மிகவும் பேரதிர்ச்சி காலமான பாகிஸ்தானின் உருவாக்கம் பல்வேறு மத சண்டைகளை ஏற்படுத்திய காலக்கட்டத்திலும் பாபா சாவான் சிங் தொடர்ந்து பிரபஞ்ச அளவிலான கருணையையும் மத சகிப்புத்தன்மையையும் தொடர்ந்து செயல்படுத்தி வந்தார். அவர் தனது சிஷ்யர்களுகளை வழிநடத்தியதோடு மத பேதமின்றி மற்றும் பின்புலம் எதையும் பொருட்படுத்தாமல் துன்பத்தில் உள்ளவர்களுக்கு உதவி புரிய எடுத்துக் காட்டினார்.
இன்று, அவர் மறைந்து சுமார் 70 வருடங்களுக்குப் பிறகும், பாபா சாவான் சிங்கின் உபதேசங்கள் பலரின் மனங்களில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றன.
“மனித உடல் ஒரு கூண்டு. அதனுள் ஆன்மா அல்லது ஆத்மா, கூண்டிற்குள் இருக்கும் பறவை போன்று சிறைப்படுத்தப்பட்டுள்ளது. அப்பறவை கூண்டின் மேல் காதல் கொண்டுள்ளதோடு அது தினமும் உலகப்பற்று பாடல்களைப் பாடிக் கொண்டே இருக்கின்றது. இருப்பினும், மூடிகள் அல்லது உடல்கள் ஆன்மாவிலிருந்து பிரியும் பொழுது, அப்பறவை உண்மையைச் சுவைக்க தொடங்குகின்றது. அக்கூண்டு பல துண்டுகளாய் உடைந்து விடுகின்றது. அப்பறவை தனது கூட்டிற்குள் அதாவது சச் காந்திற்குள் (உண்மையின் சாம்ராஜியம்) சென்றடைகின்றது… திரைகள் கிழித்தெறியப் படும் பொழுது, “புரிந்துணர்வை உணர்த்தும் அமைதி” அளிக்கும் கோடிக்கணக்கான பரவசமூட்டும் இன்பங்கள் கிட்டும்.”
~ பாபா சாவான் சிங் (1858 – 1948)
ஆரம்ப வாழ்க்கை
பாபா சாவான் சிங் மிகவும் மரியாதைக்குரிய ஜட் சீக்கிய குடும்பத்தில் இந்தியா பஞ்சாப்பில் உள்ள லுதியானா வட்டாரத்தில் 27–ஆம் திகதி ஜூலை மாதம் 1858-ல் பிறந்தார். அவர், இந்திய ராணுவத்தில் சுபேதர்-மேஜர் (நியமிக்கப்பட்ட அதிகாரி படிநிலை) காபூல் சிங் க்ரேவா மற்றும் ஸ்ரீமதி ஜிவானி தம்பதியரின் தவப்புதல்வராவார். காபூல் சிங் க்ரேவால் மிகுந்த மதப் பற்று கொண்டவர். ஸ்ரீமதி ஜிவானி எளிமையின் எடுத்துகாட்டு ஆவார். அவர் மிகவும் இனிமையான இயல்பு மற்றும் தனது நிலையில் திருப்தி கொண்டவர் ஆவார். தனது பெற்றோருக்கு ஒரே மகன் என்பதால் பாபா சாவான் சிங் தனது பெற்றோரின் கனவுகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் மையமானார்.
அவர் பெற்றோரின் நற்குணங்கள் பாபா சாவான் சிங்கின் வாழ்வில் மிக முக்கியமான பங்கை ஆற்றின. இள வயது முதற்கொண்டே, மன்னிப்பு, நிறைவான மனம், பக்தி மற்றும் அடக்கம் போன்ற பாராட்டுதலுக்குரிய நற்பண்புகளை அவர் கொண்டிருந்தார். அவரின் மனம் குறுகிய சிந்தனை மற்றும் பொறுமையின்மை போன்றவற்றிலிருந்து சுதந்திரம் பெற்றிருந்தது. காபூல் சிங் புனித மனிதர்களின் துணையை மிகவும் விரும்பியதோடு அவர்களுக்கு மிகுந்த மரியாதையுடனும் நேர்மையுடனும் சேவை புரிந்து வந்தார். அவர் தனது மகனை அவர்களைச் சந்திக்க செல்லும் பொழுது உடன் அழைத்துச் செல்வார். பாபா சாவான் சிங் தனது தந்தையுடன் மிக நெருக்கமான உறவை வளர்ந்திருந்ததோடு அவரின் சேவை செய்யும் ஆர்வத்தையும் தனக்குள் வளர்த்துக் கொண்டார்.
குஜார்வாலில் உள்ள பள்ளிக்கூடமொன்றில் பட்டம் பெற்றவுடன், பாபா சாவான் சிங் ஃபாருக்காபாட்டில் உள்ள ராணுவ பள்ளியொன்றில் பாடம் புகட்டினார். 1878-ல் அவர் நோய்வாய்ப்பட்டதனால் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, குணமடைய இரண்டு வருடங்கள் எடுத்துக் கொண்டார். குணமடைய எடுத்துக் கொண்ட காலகட்டத்தில்தான் பாபா சாவான் சிங், பூப் சிங் ஜி என்ற யோகி ஒருவரைச் சந்தித்தார். இந்த யோகியுடன் சில காலங்கள் கழித்த பிறகு, அவர் தனது உலக வாழ்வினைத் துறந்து சாதுவாக மாறிட ஆசை கொண்டார்.
இருப்பினும், தனது பெற்றோரின் ஒற்றை மகன் என்பதால், அவர்களுக்குத் தான் சேவை செய்ய வேண்டும் என்பதனை பாபா சாவான் சிங் உணர்ந்திருந்தார். அவர், உலக வாழ்வைத் துறக்கும் தனது ஆசையை மறைத்து விட முடிவெடுத்தார். ஏனெனில், தனது மகன் என்ற கடமையைத் தான் செய்யாது போனால் ஆன்மீக வழியில் முழுமையை அடைய அது தடையாக இருக்கும் என்று அவர் நம்பினார்.
1884-ஆம் ஆண்டில், பாபா சாவான் சிங், இன்று இந்திய தொழில்நுட்ப தாபனம், ரூர்கீ என்றறியப்படும் தோமசன் கட்டிட பொறியியல் கல்லூரியில் நுழைந்தார். அவர் தனது சக மாணவர்களால் மிகவும் விரும்பப்பட்டதோடு தனது அறிவுத்திறனுக்காகவும் விடாமுயற்சிக்காகவும் பெயர் பெற்றிருந்தார்.
அவரின் பட்டமளிப்பிற்கு முன், அவரின் தந்தை அவர் இராணுவத்தில் இணைய வேண்டும் என்று வற்புறுத்தியதால் பாபா சாவான் சிங் பட்டம் பெற்றதும் இராணுவத்தின் ஆணை பெற்றார். அவர் பின்பு, நாவ்ஷேராவில் (இப்பொழுது பாகிஸ்தானில் உள்ள கைபர் பாக்தூன் குவா மாகாணம்) உள்ள இராணுவ பொறியியல் சேவையில் மேற்பார்வையாளர் பதவிக்கும் நியமனம் பெற்றார். இங்கும், பாபா சாவான் சிங் தனது சக பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் புகழ் பெற்றிருந்தார்.
பாபா சாவான் சிங் தனது ஓய்வு நேரங்களில் ஆன்மீக நூல்களைப் படித்தார். அவர் ஆங்கிலம், இந்தி, பஞ்சாபி, உருது மற்றும் பாரசீக மொழிகளில் புலமை பெற்றிருந்தார், இந்த மொழி ஆளுமை அவரின் ஆன்மீக பாடத்திற்குப் பெரிதும் துணை புரிந்தது, அவர் கிறிஸ்துவம், இஸ்லாம், மற்றும் இந்து மதங்களின் புனித நூல்களைப் படித்த போதிலும் சீக்கிய பிரபல எழுத்தாளர்கள் மற்றும் குருக்களால் எழுதப்பட்ட ஆன்மீக புத்தகங்களான குரு கிராந்த் சாயிப் மற்றும் குர்பானி போன்றவற்றில் இருந்த தனது கவனத்தைத் தொடர்ந்து வந்தார். பாபா சாவான் சிங் அடிப்படை கோட்பாடுகளான நன்னெறி ஒழுக்கங்கள், பக்தி மற்றும் அன்பிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.
நாவ்ஷேராவில், பாபா சாவான் சிங், பாபா கரம் சிங் எனப்படும் உள்ளூர் சீக்கிய குரு ஒருவரின் உபதேசங்களுக்குச் சென்றார். அவர், பேஷாவருக்குச் சென்று அங்கு பாபா கான் என்ற யோகியைச் சந்தித்து அவருடன் பல மணி நேரங்கள் கலந்துரையாடலில் செலவழித்தார். அவர்களின் சந்திப்பின் போது நிகழ்ந்த பாபா கானின் மாய சக்திகள், பாபா சாவான் சிங்கிற்குள் ஆழமான பக்தியை ஏற்படுத்தியதோடு அந்த புனித மனிதரிடன் தனக்கு அறிமுகம் தருமாறு அவர் கேட்டு கொண்டதாகக் கூறப்படுகின்றது. இருப்பினும், அவரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அவர் வேறொரு புனித மனிதரைச் சந்திப்பாரென்றும் அவரே பாபா சாவான் சிங்கின் குருவாக வேண்டும் என்று விதித்திருப்பதாகவும் பாபா கான் அவரிடம் கூறினார்.
பாபா கான்: நீ நிச்சயமாக ஒரு முழுமை பெற்ற ஞானியின் கரங்களிலிருந்து ஆன்மீக ஆசிர்வாதம் பெறுவாய். ஆனால், அந்த ஞானி நான் இல்லை.
பாபா சாவான் சிங்: நான் அப்படி ஒருவரை எங்கே தேடுவது?
பாபா கான்: உன் முயற்சிகள் அனைத்தும் வீணாய் போகும். ஆனால், காலம் கனிந்து வருகையில் அந்த மனிதர் அவரே உன்னை தேடி வருவார்.
மூலம் : சிங், சாந்த் கிர்பால், ஹாசூர் பாபா சாவான் சிங் வாழ்க்கை வரையுருவம் மற்றும் அவர் உபதேசங்களின் சுருக்கம்.
அவர், சிறுவனாக இருந்த பொழுது தனது பெற்றோர் தேர்ந்தெடுத்த மணப்பெண்ணிடம் வாக்குறுதி அளித்திருந்தார். இருப்பினும், அவர்களின் கவுனா சடங்கிற்கு (சிறார் திருமணங்களில் பொதுவாக இருக்கும் கன்னியிழப்பு சடங்கு) முன்பே அப்பெண் மரணமடைந்து விட்டார், வாழ்வில் கல்விக்கும் பிரம்மச்சரியத்திற்கும் முக்கியத்துவம் அளித்த காலகட்டத்திற்கு பிறகு மற்றும் 25 வருட பிரம்மச்சரியத்திற்குப் பின், பாபா சாவான் சிங், ஸ்ரீமதி கிஷான் கோர் என்பவரை திருமணம் செய்தார். இத்திருமண வாழ்வு அவர்களுக்கு மூன்று குழந்தைச் செல்வங்களை வழங்கியது. ஒரு குழந்தை மரணமடைந்து விட, சர்தார் பாச்சிந்த் சிங் மற்றும் சர்தார் ஹர்பான்ஸ் சிங் என்ற இரண்டு குழந்தைகள் அவர்களுக்கு இருந்தனர்.
அவரின் குருவைக் காணுதல்
பாபா சாவான் சிங்கின் இராணுவ தொழில் அவரை ராவல்பிண்டி மாவட்டத்தில் இருக்கும் மிகப்பிரபலமான மலைவாழிடமான மூரேவிற்கு கொண்டு வந்தது. இந்த பணி நியமனம் இந்தியாவிலுள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருக்கும் ஸ்ரீ அமர் நாத்திற்குச் செல்லும் யாத்ரீகர்களைச் சந்தித்து கலந்துரையாடும் வாய்ப்பை அவருக்கு அளித்தது.
1894-ஆம் ஆண்டில், பாபா கானின் கணிப்பு நிஜமானது. ஒரு நாள், பாபா சாவான் சிங், பொறியியல் இராணுவ சேவையின் துணைப்பிரிவு அதிகாரியாக கோமாரி சாலையின் வேலைகளைக் கண்கானித்துக் கொண்டிருக்கும் பொழுது, ஒரு வயதான சீக்கியரும் நடுத்தர வயது பெண்மணியும் அவரைக் கடந்து சென்றனர். அப்பெரியவர் பாபா ஜைமால் சிங் மற்றும் அப்பெண்மணி அவரின் சிஷ்யை, பிபி ருக்கோ.
பாபா ஜைமால், ராதாசோயாமி (அல்லது ராதா சோயாமி) சமய நம்பிக்கையைத் தோற்றுவித்த ஷிவ் தயால் சிங் அவர்களின் ஆன்மீக வாரிசுகளில் ஒருவராவார். இந்த சமய நம்பிக்கை சீக்கிய மதத்துடன் ஒத்துப் போன போதும் அது வாழும் சத்குருக்களின் தலைமைத்துவத்தை வலியுறுத்துகின்றது. பாபா சாவான் சிங் தனது வாழ்வையே புரட்டி போடப் போகும் இந்த மனிதரை அவ்வளவாகக் கவனிக்கவில்லை. ஏனெனில், கமிஷனரிடம் மனு கொடுக்க போகும் மனுதாரர்கள் என்று அவர் அவர்களைப் பற்றி கருதியதே அதற்குக் காரணம் ஆகும்.
பாபா ஜைமால் சிங், பாபா சாவான் சிங் இருக்கும் இடத்தை நோக்கிக் காட்டி, பிபி ருக்கோவுடன் ஒரு தீர்க்கத்தரிசன உரையாடலில் ஈடுபட்டார்:
பாபா ஜைமால் சிங்: இவர் பொருட்டுதான் நாம் இங்கே வந்திருக்கின்றோம்
பிபி ருக்கோ: ஆனால், அவர் உங்களுக்கு வணக்கம் கூட சொல்லவில்லையே.
பாபா ஜைமால்: அவருக்கு என்ன தெரியும்? நான்காம் நாள், அவர் நம்மிடம் வருவார்…
மூலம் : லேன், டேவிட் கிறிஸ்தோபர், கவரும் நிலம் : இந்தியாவின் ஞானிகளுடன் ஒரு பயணம் , அமெரிக்கா, MSAC, மெய்யியல் குழு, 2008. ப. 18
சீக்கிய மதத்திற்குள் அறிமுகம்
நான்கு நாட்களுக்குப் பின், பாபா சாவான் சிங், பாபா ஜைமால் சிங் தங்கியிருந்த இடத்திற்குச் சென்றார். சில நாட்கள் உரையாடலுக்குப் பின் பாபா ஜைமால் சிங் இவருக்குள் இப்புனித மனிதரைப் பற்றி இருந்த சந்தேகங்களைத் தீர்த்து வைத்தார். பாபா சாவான் சிங், “தனது வாழ்க்கைப் பயணத்தின் கலங்கரை விளக்கு” என்று பாபா ஜைமால் சிங்கைக் கருதினார். 15-ஆம் திகதி அக்டோபர் மாதம் 1894-ல், பாபா ஜைமால் சிங், சுராத் ஷப்த் யோகாவின் ரகசியங்களை பாபா சாவான் சிங்கிற்கு அறிமுகம் படுத்தி வைத்தார்.
அந்த அறிமுகத்திற்குப் பின், பாபா சாவான் சிங் தனது குருவுடன் இரண்டு மாதங்கள் தங்கி இருந்தார். பாபா ஜைமால் சிங் பின் அப்பட்டணத்தை விட்டுச் சென்று விட்டார். பாபா சாவான் சிங் தன்னை ஆழ்ந்த தியானத்திற்குள் ஈடுபடுத்திக் கொண்டு அவருக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட நுணுக்கங்களைப் பயன்படுத்தினார்.
அவர் தனது குருவின் மேல் வைத்திருந்த பக்தியும் அன்பும் நாளுக்கு நாள் பெருகி அவருடன் இருக்க வேண்டும் என்ற ஆழ்ந்த ஏக்கத்தை அவருக்குள் ஏற்படுத்தியது. பாபா சாவான் சிங் தனக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி பாபா ஜைமால் சிங்கை சந்தித்து அவரின் மதிப்பற்ற ஆசிகளையும் உபதேசங்களையும் பெற்றார்.
பாபா ஜைமால் சிங்கின் வழிகாட்டுதலின் கீழ் பாபா சாவான் சிங் வளர்ச்சி அடைந்து வந்தார். ஒன்பது வருடங்களில், அவர் “கால நேர இடங்களுக்கு அப்பாற்பட்ட ஞானிகளின் நித்திய உண்மைகளின் சாம்ராஜ்ஜியம்” பற்றி உணர்ந்ததோடு ராதாசோயாமி மற்றும் சந்த் மட் பாரம்பரியத்தின் குருவானார். டேவிட் கிறிஸ்தோபர் லேன் தனது கவரும் நிலம் என்ற புத்தகத்தில் இதைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்:
“முதலில் ஒரு நம்பிக்கையான குருவுடன் தொடர்பு ஏற்படுத்தி; பின் இரண்டாவதாக தனது குருவின் கட்டளைகளைக் கவனமுடன் பின்பற்றி (தினசரி தியானம், தூய நன்னெறி ஒழுக்கமான வாழ்க்கை, உடல்/மனம்/ஆத்மா ஆகியவற்றை தற்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் சப்த்திடம் சரணடைதல்); மூன்றாவதாக தனது நிஜ சுயம் என்பது உடலோ மனமோ இல்லை, அது பிரகாசமான மனசாட்சியின் அலையாகும் என்பதனை அனுபவபூர்வமாக உணருதல்.”
மூலம் : லேன், டேவிட், ‘கவரும் நிலம்’ : இந்திய ஞானிகளுடன் ஒரு பயணம், அமெரிக்கா, MSAC, மெய்யியல் குழு, 2008. ப. 12
மற்ற மத பாரம்பரியங்களில் உதாரணத்திற்கு புத்த மதம், தகுதியான மற்றும் நம்பிக்கையான குருவே ஆன்மீக பேறு பெறுவதற்கு முக்கியமானது ஆகும். இது குரு கிராந்த் சாயிப் மற்றும் மௌலானா ரூமியில் எழுதப்பட்டிருப்பதுடன் ஒத்துப் போகின்றது.
“குருவின் கரத்தினைப் பிடித்துக் கொள், அவரில்லாமல் இப்பாதை யாரும் அறியா ஆபத்துகளும் கஷ்டங்களும் கொண்டிருக்கும். எந்தவொரு நொடியும் குருவை விட்டு விலகி விடாதே. உன்னுடைய சுய வலிமை மற்றும் அறிவின் மேல் அளவுக்கு மீறிய நம்பிக்கையை வைத்து விடாதே.”
~ மௌலானா ரூமி
“குருவைச் சந்தித்து அவருடைய தீட்சைப் பெறுங்கள். உன் உடல் மற்றும் மனதை அவரிடம் சரணடையச் செய்யுங்கள். உன்னை ஆராய்வதன் மூலமே பாதையைக் கண்டறிய முடியும்.”
மூலம் : குரு கிராந்த் சாயிப் (சீக்கியர்களின் புனித நூல்)
காணொளி : பாபா சாவான் சிங் –
ஓவியம் மற்றும் ஞானம் நிறைந்த வார்த்தைகள்
Or view the video on the server at:
https://video.tsemtulku.com/videos/BabaSawanSinghCombined.mp4
1891-ஆம் ஆண்டில், பாபா ஜைமால் சிங், முகாம் (டேரா) ஒன்றில் இருந்து கொண்டு ராதா சோயாமி சத்சாங் பியாஸ் (RSSB) வேலைகளைப் பார்த்துக் கொண்டார். 1902-ஆம் ஆண்டில், பிரதான சத்சாங் மண்டபத்தின் அடிக்கல் நாட்டு விழாவிற்குப் பிறகு, பாபா ஜைமால் சிங், பிபி ருக்கோவிடம் இவ்வாறு கூறினார், “நான் இந்த மண்டபத்தில் சத்சாங் நிகழ்த்த மாட்டேன்”. இந்த கூற்றினை கேட்டவுடன் பிபி ருக்கோ அழ ஆரம்பித்து விட்டார். அவருக்குப் பின் யார் சத்சாங் நடத்துவார் என பிபி ருக்கோ வினவியபோது, அவர், பிபி ருக்கோவை மண்டப்பத்திற்குள் சென்று பார்க்கச் சொன்னார். பிபி ருக்கோ அங்கே சென்ற பொழுது, பாபா சாவான் சிங் அங்கே இருந்தார்.
1903-ஆம் ஆண்டு, அவர் மரணமடைவதற்கு முன், பாபா ஜைமால் சிங், ஆன்மீக பொறுப்புகளை பாபா சாவான் சிங்கிடம் வழங்கினார். நிறைய பக்தர்கள் அவரை, “மகாராஜா ஜீ” அல்லது ஹாசூர் மகாராஜா சாயிப்” என அழைக்கத் துவங்கினர்.
ராதா சோயாமி சத்சாங் பியாஸ்ஸின் சத்குரு
பாபா ஜைமால் சிங்கின் மரணத்திற்குப் பின், பாபா சாவான் சிங் தனது நேரத்தின் பெரும் பகுதியை ஆன்மீகம் மற்றும் பக்தி நெறிமுறைகளுக்குச் செலவிட்டார். அதோடு அவர் இராணுவ பொறியியல் சேவையிலும் தனது பதவியை வகித்து வந்தார். இருப்பினும், அவர் தனது வாழ்வினை ஆன்மீகம் பற்றிய தகவல்களைப் பரப்புவதற்கும் உண்மையைத் தேடுபவர்களுக்குச் சேவை புரியவும் வேண்டிய அவசியத்தை உணர்ந்தார். ஆதலால், அவர் முந்திய ஓய்வை 1911-ஆம் ஆண்டில் தேர்ந்தெடுத்தார்.
பாபா ஜைமால் சிங்கால் அமைக்கப்பட்ட முகாம் பியாஸ், இரயில் நிலையத்திலிருந்து (கிழக்கு பஞ்சாப் இரயில் பாதை) சுமார் 3 மைல்களுக்கு அப்பால் இருந்தது. பாபா சாவான் சிங் பியாஸ் நதிக்கரையோரம் ஒர் அழகான குடியிருப்பை அமைத்து அதற்கு “டேரா பாபா ஜைமால் சிங்” என்று பெயர் வைத்து தன் அன்பான குருவைக் கெளரவப்படுத்தினார். திறமை வாய்ந்த பொறியியலாளரான பாபா சாவான் சிங், பெருகி வரும் உண்மை தேடுபவர்களுக்கு வசதியாக சில பெரிய கட்டிடங்களைக் கட்டினார். அம்முகாம் மெதுவாக பங்களாக்கள், ஒரு சத்சாங் மண்டபம் மற்றும் வீடுகள் உள்ளடக்கிய சத்சாங்காக வளர்ந்தது.
1934-ஆம் ஆண்டிற்கும் 1935-ஆம் ஆண்டிற்கும் இடையில், சத்சாங் கர் எனப்படும் ஓர் அழகான ஆடம்பர மண்டபம் “T” என்ற எழுத்து வடிவில் 200,000 ரூபாய் செலவில் கட்டப்பட்டது. அது முகாமில் மட்டுன்றி வடக்கு இந்தியாவிலேயே மிகவும் கவரக்கூடிய கட்டிடமாக திகழ்ந்தது. அக்கட்டிடம் சத்சாங் நிகழ்த்துவதற்காக கட்டப்பட்ட போதும், பெருகிக் கொண்டே வந்த வருகையாளர்களின் எண்ணிக்கையால் அதுவும் சிறியதென்று நிருபணம் ஆனது. இன்று, சத்சாங் இல்லம், அறிமுக நிகழ்வுகளுக்குப் பயன்படுத்தப் படுகின்றது.
அவரின் ஞானம் மற்றும் தெய்வீகத்தன்மையினால், பாபா சாவான் சிங்கின் புகழ் காட்டுத் தீ போல பரவியது; உலகம் முழுதும் உள்ள பல மதப் பிரிவுகளைச் சார்ந்த உண்மையைத் தேடுபவர்கள் அவரின் அறிவுரைகளையும் ஆசிகளையும் பெறுவதற்காக அவரைத் தேடி வந்தார்கள். கீழ்காணும் பகுதி, பக்தர்கள் மத்தியில் பிரபலமாக்கிய அவரின் விதிவிலக்கான குணங்களைப் பற்றி எடுத்துரைக்கின்றது
“[பாபா சாவான் சிங்] தெய்வீக மர்மங்களை மிக எளிதாகவும் கருணையான எளிமையுடனும் திறந்ததால் அவரின் வார்த்தைகள் ஆழ்மனதைத் துளைத்து அழியா பாதிப்பை ஏற்படுத்தி விட்டன. ஓர் உண்மையான தகுதியுள்ள மனிதர், ஆன்மீக ஆராய்ச்சியில் உண்மையின் அதிசய அனுபவங்களை உணர்ந்து, மூளையின் ஆழ்பகுதிக்கு உட்புகுந்து, வெறும் வார்த்தைகளால் மட்டுமில்லாது தனது பரந்த ஆன்மீக அனுபவத்தின் மூலம் விதைத்த முக்கிய கோட்பாடுகள் கொண்ட ஒருவரால் மட்டுமே இது சாத்தியமாகும்.”
மூலம் : சிங், சாந்த் கிர்பால், ஹாசூர் பாபா சாவான் சிங்கின் வாழ்க்கை வரலாறு
அவரைப் பின்பற்றுபவர்களில் அப்பிரதேசமின்றி அமெரிக்கா மற்றும் சுவிட்ஸலாந்து, ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் ஜெர்மனி போன்ற ஐரோப்பா நாடுகளைச் சார்ந்த முஸ்லிம்கள், சீக்கியர்கள், இந்துக்கள் மற்றும் கிறிஸ்த்துவர்கள் ஆகியவர்களும் அடக்கமாகும்.
அவரின் தெய்வீகத்தன்மையும் அசாதரணமான குணங்களும்
பாபா சாவான் சிங்கின் தெய்வீகத்தன்மைக்கும் அசாதாரணமான குணங்களுக்கும் மயங்காமல் இருப்பது மிகவும் கடினமாகும். அவர் உடலளவில் அழகானவர், நேர்த்தியானவர் மற்றும் அழகிய முக லட்சணங்கள் கொண்டவர், நீண்ட வெள்ளை தாடி மற்றும் அவரின் வலது கன்னத்தில் ஒரு மச்சமும் இருக்கும். அவர் தனது பாதத்தில் பதம் ரேகா (தாமரை வரிசை ரேகை) கொண்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.
அவர் எங்கு சென்றாலும் பலரின் விழிகள் ஏங்கும் பொருளாகவே இருந்தார். ஒரு பாரசீக பாடல் அவரின் உடல்வாகுவை மிகச் சரியாக வர்ணிக்கும்:
ஹுஸ்னே யூசோப், டேம் ஈசா, யாட்-இ-பைசா டாரி
அஞ்சே ஹாமா குபான் டரான் டோ தன்ஹா டாரிஜோசப்பின் அழகு, ஏசுநாதரின் குணப்படுத்தும் சக்தி மற்றும் மோசஸின் அறிவார்ந்த கரம். சுருக்கமாக, இவர் ஒருவர் இவ்வனைத்து அழகான உடல் வாகுவின் மொத்த தன்மைகளையும் பெற்றிருக்கின்றார்.
மூலம் : சிங், சாந்த் கிர்பால், ஹாசூர் பாபா சாவான் சிங் வாழ்க்கை வரையுருவம் மற்றும் அவர் உபதேசங்களின் சுருக்கம்
அவரின் உடல்வாகுவைக் காட்டிலும் அவரின் மனம் இன்னும் கவரக்கூடியது. பாபா சாவான் சிங் அறிவு, ஞானம், கருணை, அமைதி, உண்மை மற்றும் சகோதரத்தன்மை ஆகியவற்றின் ஊற்றாவார்.
அவரிடம் எந்தவொரு தீய குணங்களும் இருந்ததில்லை மற்றும் அவர் யாரையும் கொள்கை, சாதி அல்லது நிறம் கொண்டு பாகுபாடு பார்க்க மாட்டார். உலக வாழ்க்கை பிரச்சனைகளில் துன்பப்படும் மனிதர்களுக்கு பாபா சாவான் சிங்கின் வருகை ஒன்றே அவர்களின் மனநிலையைச் சரி செய்து விடும். அவரின் கரங்கள், வக்கிரத்தனம், தீய எண்ணம் மற்றும் பணத்தாசையிலிருந்து விடுபட்டு இருந்தன. பாபா சாவான் சிங் அவரின் சீடர்கள் உட்பட எவரிடமும் இருந்து தனிப்பட்ட பரிசுகளை வாங்க மாட்டார் மற்றும் அவர் தனது அதிகாரி தொழிலிருந்து கிடைக்கும் ஓய்வூதியத்தை மட்டுமே நம்பி இருந்தார்.
அவரின் அசாதாரணமான ஆன்மீக பலத்தோடு, பாபா சாவான் சிங் அவர் போதிக்கும் மனித நேயத்தின் படியும் வாழ்ந்து வந்தார். அவர் மத பிரிவுகள் பற்றிய பாகுபாடு இல்லாமல் துன்பப்படுபவர்களுக்குத் தோழனாக திகழ்ந்தார். பாபா சாவான் சிங் அடிக்கடி இப்படி கூறுவார், ” எல்லா மதங்களும் மற்றும் எல்லா நாடுகளும் எனது. நான் அவர்களின் மேல் எந்த பாகுபாடு இன்றியும் அன்பு செலுத்துவேன்.”
உபதேசங்களை வழங்குகையில், பாபா சாவான் சிங்கின் உரையும் வழிமுறைகளும் மிகவும் தெளிவாக இருக்கும். அவரின் அறிவும் ஞானமும் கேட்பவர்களின் பின்புலம் அல்லது அறிவு நிலைக்கு அப்பாற்பட்டு மனதிற்குள் துளைத்து விடும். சாந்த் கிர்பால் சிங், பாபா சாவான் சிங் எப்படி பேசுவார் என்று விவரிக்கின்றார்:
“நிஜ வாழ்வின் பிரச்சனைகளைக் களைய அவர் கூறும் மிக எளிமையான வார்த்தைகளும் சொற்றொடர்களும் மிகவும் இனிமையாகவும் போதை தருபவையாகவும் இருக்கும். சாதாரண மேடை பேச்சாளர்கள் தங்களின் உரைகளை அறிவு சார்ந்து என்ற பெயரில் வழங்கும் பொழுது அது போலியான கலை போல அதாவது மணமற்ற பூக்களைச் சிதறுவது போன்று, போதையற்ற பழச்சாறுகள் பரிமாறுதல் போன்று, கவர்ந்திடா அழகு போன்று மற்றும் உயிரற்ற உடல் போன்று இருக்கும்.”
மூலம் : சிங், சாந்த் கிர்பால், ஹாசூர் பாபா சாவான் சிங் வாழ்க்கை வரையுருவம் மற்றும் அவர் உபதேசங்களின் சுருக்கம்
அவரின் அசாதாரணமான அறிவு, ஞானம், கருணை மற்றும் தெய்வீக தன்மை ஆகியவற்றினால் பாபா சாவான் சிங் கடந்த கால புனித மதகுருக்களான குரு நானக், துள்சி சாயிப், கபீர் சாயிப், சோயாமி ஷிவ் தயால் சிங், பல்து சாயிப் மற்றும் மெளலானா ரூமி அவர்களின் உபதேசங்களைக் கொண்டு சேர்க்கும் சரியான பாத்திரமானார்.
அவரின் ஆன்மீக செய்தி
பாபா சாவான் சிங் தன்னை பின்பற்றுவர்கள் சைவ உணவுமுறையை ஏற்றுக் கொண்டு, அனைத்து வகை வாழ்வினையும் மதித்து தேவையில்லாமல் உயிர் பலி கொடுப்பதினால் நாம் எதிர்காலத்தில் கர்ம பலனை அனுபவிக்க வேண்டி வரும் என்பதனை ஏற்றுக் கொள்ளவும் அறிவுறுத்தினார். அதோடு அவர் தியானம் செய்கையில் அமைதியான மனம் பெற அவர்களை எல்லாவிதமான போதைகளிலிருந்தும் தங்களை தவிர்த்துக் கொள்ள ஊக்குவித்தார்.
1911-ஆம் ஆண்டிற்கு பின், பாபா சாவான் சிங் தனது வாழ்வினை ஆன்மீக செய்திகள் பரப்புவதற்கு பிரத்தியேகமாக அர்ப்பணித்தார். அவரின் பெரும்பாலான பக்தர்களை பஞ்பாப் தாண்டி உள்ள கிராமங்களில் காண முடியும். ஆனால், அவர் இந்தியா முழுதும் பயணம் புரிந்தார். அவரின் மர்மமான வருகையும் ஆளுமையும் எண்ணற்ற சிஷ்யர்களை அவர் செல்லும் இடமெல்லாம் கவரச் செய்தன.
இந்தியாவில் மட்டும், 30-க்கும் மேற்பட்ட சத்சாங் மண்டபங்கள் அவரின் ஆன்மீக அறிவினை தனது பிரார்த்தனைக் கூட்டத்துடன் பகிர்ந்து கொள்ள கட்டப்பட்டன. RSSB-யில் மாதாந்திர பிரார்த்தனைக் கூட்டத்தில் 60,000-லிருந்து 80,000 வரையிலான உண்மை தேடுபவர்கள் கலந்து கொண்டு தங்களின் ஆன்மீக தாகத்தைத் தீர்த்துக் கொள்வார்கள்.
மனிதர்களால் உருவாக்கப்பட்ட அந்தஸ்து, பதவி, நம்பிக்கை, சமய பற்று மற்றும் தேசிய பிரஜை கூட அவரின் புகழுக்கு தடை விதிக்க முடியவில்லை.அவரின் வாழ்நாளில், பாபா சாவான் சிங் பல வகையான, மதங்களிலிருந்து, சாதிகளிலிருந்து, பின்னணிகளிலிருந்து மற்றும் சமூக அந்தஸ்த்திலிருந்து சுமார் 200,000 தொண்டர்களை கொண்டிருந்தார். ஆன்மீக ஆர்வலர்கள் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற தூரங்களிலிருந்து அவரின் உபதேசங்களில் கலந்து கொள்ள இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டார்கள். ஆயிரக்கணக்கான அவரின் மேற்கத்திய தொண்டர்களில் மகாதேசாதிபதி மற்றும் இந்தியாவின் இராஜ பிரதிநிதி, காலனல் சோண்டர்ஸ் (மாண்புமிகு லோர்ட் ஈர்வினின் செயலாளர்), டாக்டர் ஜூலியன் பி. ஜோன்சன் (அமெரிக்க அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் கிழக்காசிய ஆன்மீகம் பற்றிய சில புத்தகங்களின் எழுத்தாளர்) மற்றும் பியர் ஷிமிட் (சுவிட்சலாந்திலிருந்து வந்த மருத்துவர்) ஆகியோரும் அடங்கும்.
மனிதாபிமானத்தின் கலங்கரை விளக்கம்
1940-களில் இந்தியாவின் பிரிவினால் பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையில் பஞ்சாப் பிரிக்கப்பட்ட பொழுது மிகக் கொடூரமான கலவரம் மற்றும் இனவாத மோதல் ஏற்பட்டது. பெருபான்மை முஸ்லிம்கள் வாழ்ந்த மேற்கத்திய பஞ்சாப் பாகிஸ்தானின் மாகாணமாகவும் பெருபான்மை சீக்கியர்கள் மற்றும் இந்து மக்கள் தொகை கொண்ட கிழக்கு பஞ்சாப் இந்தியாவின் மாநிலமாகவும் பிரிக்கப்பட்டது. இக்கால கட்டத்தில், வெறுப்பும் இனவாத சண்டைகளும் இரு தரப்பிலும் துன்பங்களையும் உயிர்சேதங்கள் மற்றும் பொருட்சேதங்களில் முடிவடைந்தது. இந்நிலை யாருக்கும் சாதகமாக அமையவில்லை.
முனைவர் இஸ்தியாக், ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் எமிரியூட்ஸ் முனைவர்:
“மார்ச் மாதம் 1947-ல், முஸ்லிம்கள் பெரிய அளவில் வடக்கு பஞ்சாப்பில் உள்ள மாவட்டங்களில் குறிப்பாக சீக்கியர்கள் மற்றும் இந்துக்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டனர். இருப்பினும், அவ்வாண்டு இறுதிக்குள், மேற்கு பஞ்சாப்பில் கொல்லப்பட்ட இந்துக்களையும் சீக்கியர்களையும் விட அதிகமான முஸ்லிம்கள் கிழக்கு பஞ்சாப்பில் கொல்லப்பட்டனர்”.
மூலம் : அமெட், இஸ்தியாக் ‘பஞ்சாப் ரத்தக் கறை படிந்தது, பிரிக்கப்பட்டது மற்றும் தூய்மைப்படுத்தப்பட்டது’, நியாயமான பார்வையாளர், 2012.
இந்த மதத்திற்கு இடையிலான வன்முறை மற்றும் வெறுப்புக்கிடையில், பாபா சாவான் சிங் மனிதாபிமானத்தின் கலங்கரை விளக்கமானார். அதோடு தனது உலகளாவிய கருணையை மீண்டும் ஒரு முறை நிரூபித்தார். அவர் டேரா பாபா ஜைமால் சிங்கிற்கு அருகில் வாழ்ந்த 100 முஸ்லிம்களுக்கு பாதுகாப்பான அடைக்கலம் கொடுத்தார். அவர்கள் பாதுகாப்புடன் பாகிஸ்தானிற்குச் செல்ல அவர் ஏற்பாடும் செய்து கொடுத்தார்.
இறுதி வாழ்க்கைப்பயணமும் மரணமும்
தன்னிடம் போதனை கேட்க வரும் மில்லியன் கணக்கான உண்மை திருப்தி படுத்த பாபா சாவான் சிங் நீண்ட மணி நேரம் செலவழித்து, தன்னுடைய முதுமை காலம் வரை அயராது உழைத்தார். பாபா சாவான் சிங் அவர்களுக்கு 90 வயது இருக்கும் பொழுது, ஒரு நாளுக்கு சராசரி 18 மணி நேரம் வேலை செய்தார். இந்த ஓய்வில்லா பணி அட்டவணை அவருக்கு பாதகமான விளைவுகளைக் கொடுத்து, அவரின் உடலை மேலும் பலவீனமாக்கியது. அவருடைய மாணவர்கள் அவரை சிகிச்சை எடுத்துக் கொள்ள மன்றாடினர்.
செப்டம்பர் மாதம் 1947-ஆம் ஆண்டு, ஒவ்வொரு நாளும் நடைபெறுகின்ற விவகாரங்களை கையாள நிர்வாக குழு ஒன்றை அமைத்த பின், சிகிச்சை பெற அவர் அம்ரிட்சர் சென்றார். அங்கே, அவருடைய சிறுநீர்ப்பையில் கட்டி ஒன்று வளர்வதாக கூறப்பட்டது. அவர் அங்கிருந்து திரும்பியபின் அவருடைய உடல் ஆரோக்கியம் சீராக இல்லாமல் இருந்தது.
பயனுள்ள மருத்துவ சிகிச்சையை தேடும் முயற்சியில் அவருடைய மாணவர்கள் ஈடுபட்டும், அது பயனளிக்கவில்லை. பாபா சாவான் சிங் அவர்களைப் போல உள்ள புனிதர், நீடித்த நோயில் பாதிப்படைந்து துன்பப்பட்டால், உண்மையில் அது அவருடைய தொண்டர்களின் தீய கருமவினைகளை அவருடைய உடல் ஏற்றுக்கொள்வதாக நம்பப்படுகிறது.
பாபா சாவான் சிங் அவர்கள், அந்த தீராத நோயிலும் டேரா (முகாம்) நிர்வாகத்தில் தீவிரமாக பங்கேற்று அவருடைய மறைவிற்குப் பின் செய்ய வேண்டியவைகளை தன்னுடைய மாணவர்களுக்கு கட்டளையிட்டார்.
பிப்ரவரி 1948 ஆம் ஆண்டு, பாபா சாவான் சிங் அவர்களுக்கு ஏற்பட்ட தீராத நோய் அவரை படுக்கையை விட்டு எழமுடியாமல் செய்தது. அதே மாதத்தின் கடைசியில், தன்னால் போதித்து உருவாக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையை ஆராயச் செய்தார். அவருடைய பதிவுகளை ஆராய்ந்த அவருடைய மாணவர்கள், “இதுவரை, ஹாசூர் அவர்களால் நூற்றைம்பதாயிரம் ஆன்மாக்கள் விழித்தெழுந்துள்ளார்கள்” என கூறினார்கள். ஹாசூர் என்பது பாபா சாவான் சிங் அவர்களின் புனைப்பெயர் ஆகும். அன்றைய மாலைப்பொழுதிலேயே பாபா சாவான் சிங் அவருடைய முக்கியமான மாணவர் ஒருவரான கிர்பால் சிங்கை அழைத்து “நான் உன்னுடைய வேலைகளில் பாதியை செய்து முடித்து விட்டேன். மேலும் அரை லட்சம் மக்களுக்கு நாம் (அறிமுகம்) கொடுத்து விட்டேன். மீதமுள்ளவர்களுக்கு நீ நிறைவேற்றி விடு” என கூறினார். மேலும் ஒரு சமயம் கிர்பால் சிங்கை தன் சொந்த சத்சாங்கை நிறுவும்படியும் அறிவுறுத்தினார்.
29-ஆம் திகதி மார்ச் மாதம் 1948-ஆம் ஆண்டு, பாபா சாவான் சிங் அவர்களின் உடல்நிலை மோசமடைந்தது. இந்த நிலைமை, எவர் அவர் மீது அன்பு வைத்திருந்தார்கள் எவர் அவருடைய மறைவிற்கு காத்திருந்தார்கள் என சோதனை செய்யக் கூடிய சூழ்நிலையாக அமைந்தது. 1-ஆம் திகதி ஏப்ரல் மாதம் 1948-ஆம் ஆண்டு, கிர்பால் சிங் அவர்கள் பாபா சாவான் சிங் அவர்களிடம் அவருடைய உடலிலிருந்து நோயை நீக்கும்படி கேட்டுக் கொண்டார்.
மூலம்: சிங், சந்த் கிர்பால், ஹாசூர் பாபா சாவான் சிங் வாழ்க்கை வரலாறு
இரக்க குணத்தால், பாபா சாவான் சிங், கிர்பால் சிங்கின் வேண்டுகோளை நிறைவேற்றினார்:
“பிரார்த்தனைக்குப் பிறகு, நான் என் கண்களை திறந்த பொழுது, ஹாசூர் அவர்களின் உடல் பூரண நலத்துடன் இருந்தது. ஹாசூர் அவர்களின் நெற்றி பிரகாசித்தது. அவர் தன்னுடைய கருணை நிறைந்த கண்களைத் திறந்தார். அந்த அழகான கண்கள் தெய்வீக அன்பைக் கொண்டு, பணிவுடன் இருந்த என் மீது ஒரு பார்வை வீசியது. இரண்டு கண்களும் சிங்கத்தின் கண்களைப் போல பிரகாசமாக மின்னின. நான் பவித்திரமாகவும் அமைதியான வணக்கத்துடனும் தலை வணங்கி ‘இவை அனைத்தும் ஹாசூர் அவர்களின் அருளுடைமை’ “என கூறினேன்.
மூலம்: சிங், சந்த் கிர்பால், ஹாசூர் பாபா சாவான் சிங் வாழ்க்கை வரலாறு
அதற்கு அடுத்த நாளான 2-ஆம் திகதி ஏப்ரல் மாதம் 1948- ஆம் ஆண்டு, காலை மணி 8.30-க்கு டேரா ஜைமால் சிங்கில் பாபா சாவான் சிங் காலமானார். பாபா சாவான் சிங் அவர்களின் உடல் மறைந்தாலும், அவருடைய ஆன்மா வெகு தொலைவில் இல்லை என அவருடைய மாணவர்கள் நம்பினர்.
பாபா சாவான் சிங் அவர்களின் மறைவிற்குப்பின், அவருடைய ஆன்மீக வாரிசுகள் அவருடைய போதனைகளை உலகம் முழுவதும் உண்மையை தேடிக்கொண்டிருப்பவர்களிடையே பரப்பி அவர்களுடைய ஆன்மீக சந்தேகங்களைத் தீர்த்தனர். தன் மறைவிற்கு முன், பாபா சாவான் சிங், பாபா ஜகட் சிங் அவர்களை அடுத்த ஆன்மீக வாரிசாக நியமித்தார். பாபா சாவான் சிங் அவர்களின் சீடர்களில் சிலர், கிர்பால் சிங் மற்றும் மஸ்தானா பலோச்சிஸ்தானி அவர்களை விரும்பினாலும், பின்னர் அவர்கள் தங்களின் சொந்த ஆன்மீக பணிகளை வெற்றிகரமாக நிலைநாட்டினர். அவர்கள் தங்கள் சத்குருவின் நினைவிலும் போதனைகளிலும் தொடர்ந்து விசுவாசமாக இருந்தனர்.
குறிப்பிடத்தக்க மாணவர்கள்
பாபா ஜகட் சிங் (1884-1951)
பாபா ஜகட் சிங், பாபா சாவான் சிங் அவர்களின் ஆன்மீக வாரிசு ஆவார். தன்னை முழுமையாக ஆன்மீக பாதையில் ஈடுபடுத்திக் கொள்வதற்கு முன்னர், அவர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள விவசாய கல்லூரியில் வேதியியல் பேராசிரியராக பணிபுரிந்தார். அவர் சுராத் ஷப்த் யோகாவின் தொடக்க பயிற்சியை பாபா சாவான் சிங் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
அவரின் சீடரான பிறகு, பாபா ஜகட் சிங் அதிகமான வார இறுதிகளை அவருடைய குருவுடன் டேரா பாபா ஜைமால் சிங்கில் செலவழித்தார். 1943-ஆம் ஆண்டு, அவருடைய மதச்சார்பற்ற பணியிலிருந்து ஓய்வு பெற்று அவருடைய வாழ்க்கையை ஆன்மீகத்திற்காக அர்ப்பணித்துக் கொண்டார். அவருடைய குருவின் மறைவிற்குப் பின்னர், பாபா ஜகட் சிங் RSSB-யின் மூன்றாவது குருவாக, 23-ஆம் திகதி அக்டோபர் மாதம் 1951-ஆம் ஆண்டு, அவரின் மறைவு வரை இருந்தார்.
கிர்பால் சிங் (1894 – 1974)
பாபா சாவான் சிங் அவர்களின் நெருங்கிய சீடர்களுள் ஒருவராக கிர்பால் சிங் திகழ்ந்தார். பாபா சாவான் சிங் அவர்களைச் சந்திப்பதற்கு முன், கிர்பால் சிங் அரசாங்க அதிகாரியாக பணிபுரிந்தார். தன்னுடைய அன்புக்குரிய குருவின் மறைவிற்குப் பின், கிர்பால் சிங் பாபா சாவான் சிங் அவர்களின் விருப்பத்திற்கு இணங்க தன் சொந்த ஆன்மீக பணியான ருஹானி சத்சாங்கை நிறுவினார்.
கிர்பால் சிங் சில புத்தகங்களை எழுதியுள்ளார். மேலும், உலக தோழமை மதங்களின் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக சில காலம் தொண்டு செய்யும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது.
மஸ்தானா பலோச்சிஸ்தானி (1891-1960)
மஸ்தானா பலோச்சிஸ்தானி அவர்கள் பலோச்சிஸ்தானிலிருந்து வந்தவர் ஆவார். இளமை பருவத்திலிருந்தே அவருக்கு ஆன்மீகத்தில் நாட்டம் இருந்தது. தன்னுடைய 14-வது வயதில், ஒரு ஆன்மீக குருவை தேடி அவர் வீட்டை விட்டு வெளியேறினார். அவருடைய முயற்சி மற்றும் தேடல் ஒன்பது வருடங்களுக்கு பிறகு பாபா சாவான் சிங் அவர்களுடனான சந்திப்பால் பயனளித்தது.
பலோச்சிஸ்தானி அவர்கள் 29-ஆம் திகதி ஏப்ரல் மாதம் 1948-ஆம் ஆண்டு, தன் குருவின் அறிவுரைக்கு ஏற்ப பஞ்சாப், சின்ந் மற்றும் பலோச்சிஸ்தான் மக்களுக்கு தியானங்கள் கற்றுக் கொடுக்கவும் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றவும் டேரா சச்சா சௌடாவை நிறுவினார்.
சீக்கிய மதத்தின் ஒரு சுருக்கமான அறிமுகம்
சீக்கிய மதம் 16-ஆம் நூற்றாண்டில் குரு நானக் (1469-1538) மற்றும் அவரை பின்பற்றிய ஒன்பது சீடர்களால் தோற்றுவிக்கப்பட்டது:
- குரு அங்கட் (1504-1552)
- குரு அமர் தாஸ் (1479-1574)
- குரு ராம் தாஸ் (1534-1581)
- குரு அர்ஜுன் (1563-1606)
- குரு கர்கோபின் (1595-1644)
- குரு ஹர் ராய் (1630-1661)
- குரு ஹர்கிருஷ்ணன் (1656-1663)
- குரு தெஃ பஹதூர் (1621-1675)
- குரு கோபின் சிங் (1666-1708)
சீக்கிய மதம் ஒரு கடவுள் வழிபாட்டை வலியுறுத்தும் ஒரு சமயமாகும். சீக்கிய மதத்தினர் கடவுளின் மீது அதி பக்தி கொண்டதோடு மட்டுமில்லாமல், எப்பொழுதும் தங்களுடைய மனம் மற்றும் எண்ணங்களில் கடவுளை நினைத்து, வெறும் சமயச்சடங்குகளின் மட்டும் கவனம் செலுத்தாமல் நல்ல செயல்களைச் செய்வதில் நம்பிக்கை கொண்டுள்ளனர். சீக்கிய மதத்தினர், அனைவரையும் சரிசமமாக மதித்து, நேர்மையாக இருந்து, கடுமையாக உழைத்து, பெருந்தன்மையோடு மற்றவர்களுக்கு தொண்டு செய்வதில் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
பத்தாவது சீக்கிய மத குருவான குரு கோபின் சிங், தன் மறைவிற்கு முன், புனித நூலான குரு கிராந்த் சாயிப், வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மத குருவிற்கு ஈடான அந்தஸ்த்தைக் கொண்டிருக்கின்றது என பிரகடனப்படுத்தினார். சீக்கிய மதத்தை பின்பற்றுபவர்கள் அந்த புனித நூலை ஒரு குருவை வணங்குவதைப்போல் வணங்க வேண்டும் என அறிவித்தார். புனித நூல் குரு கிராந் சாயிப்பில் தேடும் பதில் கிடைக்கவில்லை என்றால், சீக்கிய மதத்தினர் அவர்களின் புனித நூல்களின் கொள்கைகளின் அடிப்படையில் முடிவுகளைச் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். தற்போது உலகம் முழுவதும் ஏறத்தாழ 27 மில்லியன் சீக்கிய மதத்தினர் உள்ளனர்.
ராதா சோயாமி சத்சாங் பியஸ்
டேரா பாபா ஜைமால் சிங் என்றும் அறியப்பட்ட ராதா சோயாமி சத்சாங் பியஸ் (RSSB), ஒரு இலாப நோக்கமற்ற தத்துவ ஞானம் சார்ந்த அமைப்பு ஆகும். இந்த அமைப்பு ஒரு ஆன்மீக குருவின் வழிகாட்டுதலின் கீழ் ஆழ்மன வளர்ச்சியை வலியுறுத்துகிறது. இந்த அமைப்பு பாபா ஜைமால் சிங் அவர்களால் 1891-ஆம் ஆண்டு நிறுவப்பட்டு சர்வதேச அமைப்பாக உருவானது. தற்போது, RSSB உலகம் முழுவதும் உள்ள 90 நாடுகளில் அதன் கூட்டங்களை நடத்துகின்றது. மேலும், இந்த அமைப்பு எந்த ஒரு வணிகம் மற்றும் அரசியல் இணைக்கமில்லாமல் தன்னிச்சையாக செயல்படுகின்றது.
‘ ராதா சோயாமி’ என்கின்ற பெயர் ‘ஆத்மாவின் கடவுள்’ எனும் அர்த்தமுள்ள ஒரு ஹிந்தி சொற்கூறு ஆகும். சத்சாங் என்பது உண்மை ஞானத்தை தேடுபவர்களைக் குறிக்கும். மேலும் வட இந்தியாவிலுள்ள பியஸ் எனும் சிறுபட்டணத்தில்தான் இதன் முதல் மையம் அமைந்துள்ளது. தற்போதைய RSSB வின் சத்குரு, பாபா குரின்டெர் சிங் ஆவார். அவர் வட இந்தியாவில் அமைந்துள்ள பியஸ் எனும் நகரத்தில், இந்த அமைப்பின் தலைமை மையத்தில் வசிக்கின்றார். RSSB-யின் உறுப்பினர்கள் தங்களின் விருப்பத்திற்கேற்ப எந்த மதத்தையும் பின்பற்றலாம். இந்த அமைப்பு அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் எந்த ஒரு குறுக்கீட்டையும் கொண்டிராது. இருப்பினும், RSSB-யின் உறுப்பினர்கள் சைவ உணவு முறையை கடைப்பிடித்து, மயக்கம் தரும் போதை மாத்திரைகள், குடிவகைகள், புகைப்பிடித்தல் போன்றவற்றை தவிர்த்து வாழ வேண்டும் என அறிவுறுத்துகின்றது. அவர்கள் மேன்மையான நல்லொழுங்களைக் கடைப்பிடித்து ஒருவருக்கொருவர் உதவி புரிந்து வாழ ஊக்கமூட்டுகிறது.
காணொளி : டேரா பாபா ஜைமால் சிங் ஜீ
Or view the video on the server at:
https://video.tsemtulku.com/videos/DeraBabaJaimalSinghJi.mp4
பரிந்துரைக்கப்படும் வாசிப்புகள் (இலவச பதிவிறக்கம்)
மேற்குறிப்பிடப்பட்டுள்ள புத்தகங்கள் சட்டப்பூர்வமான இலவச பதிவிறக்கம் சேவையை வழங்கும் புத்தக மூலத்திலிருந்து வழங்கப்படுகின்றன. அவை இங்கே கல்விக்காகவும் விற்பனை அற்ற காரணங்களுக்காகவும் மட்டுமே வழங்கப்படுக்கின்றன.
இணைப்பு
முன்னுரையில் குறிப்பிட்டுள்ளபடி, மாண்புமிக்க செம் ரின்போச்சே அவர்கள் பாபா சாவான் சிங் அவர்களின் மாணவரான ஈஸ்வர் பூரியின் காணொளியை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, பாபா சாவான் சிங் அவர்களைப் பற்றி அறிந்து கொண்டார். “பற்றுகளை அன்பென்று தவறாக அறிவது” எனும் அந்த காணொளி ரின்போச்சே அவர்களின் கவனத்தை ஈர்த்தது. அந்த காணொளியில், ஈஸ்வர் பூரி வெளிப்புற ஆசானை ‘வாழும் முற்றுப்பெற்ற குரு’ அல்லது ஹிந்தியில் சத்குரு, என விவரித்துள்ளார். உண்மையில் அவை நாம் தான் (அல்லது ஆழ்மனம்), மனித உருவில் நமக்கு வழிகாட்ட தோன்றியுள்ளது. நீங்கள் இந்த சக்திவாய்ந்த காணொளியை கீழே குறிப்பிட்டபடி காணலாம்:
காணொளி: “பற்றுகளை அன்பென்று தவறாக அறிவது” – ஈஸ்வர் பூரி
Or view the video on the server at:
https://video.tsemtulku.com/videos/AttachmentsAreMistakenToBeLoveIshwarPuri.mp4
தெ பாத் ஒஃப் தெ மாஸ்டர்ஸ்
பாபா சாவான் சிங்கின் போதனைகளை உள்ளடக்கிய மிகவும் பிரபலமான புத்தகங்களில் ஒன்றை அவருடைய அமெரிக்க மாணவரான டாக்டர் ஜுலியன் ஜோன்சன் எழுதியுள்ளார். டாக்டர் ஜுலியன் ஜோன்சன் தத்துவ அறிஞராகவும் அறுவை சிகிச்சை நிபுணராகவும் இருந்தாலும், இவை இரண்டிற்கும் மேல் உண்மையை தேடும் ஒரு மனிதராக நினைவில் இருக்கின்றார். பல உலக வெற்றிகளை அடைந்து, உச்சத்தில் இருந்தாலும், அவர் தன் பதவியை கைவிட்டு, பாபா சாவான் சிங் அவர்களிடம் பயில இந்தியா வந்தடைந்தார். அவர் தன்னுடைய நேரத்தை மகா குருவின் காலடியில் கற்பதிலும் அவற்றை விடாமுயற்சியுடன் கடைப்பிடிப்பதிலும் செலவழித்தார். உண்மையில், உருவங்களுக்கு அப்பால் தெரியும் மெய்யை காணும் ஆற்றலை அவர் பெற்றிருந்தார் என கூறப்படுகிறது. தன் குருவின் மீது டாக்டர் ஜோன்சன எல்லையில்லா அன்பும், திடமான நம்பிக்கையும் தளராத பக்தியும் கொண்டிருந்தார். இந்தியாவிற்கு வந்தபின், அவர் ஒருமுறை கூட தான் பிறந்த நாடான அமெரிக்கா திரும்பவில்லை.
டாக்டர் ஜோன்சன் ‘தெ பாத் ஒஃப் தெ மாஸ்டர்ஸ்’ எனும் நூலை பாபா சாவான் சிங் வழிகாட்டலின் கீழ், அவருடைய கால வரையற்ற போதனைகளை மேற்கு நாடுகளுக்கு பரிமாற்றம் செய்யும் பொருட்டு எழுதினார்.அவர் இந்த நூலில் போதனைகளைப் பகிர்ந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் அவருடைய சொந்த அனுபவங்களையும் சேர்த்துள்ளார். இதை படிப்பவர்களுக்கு தெய்வீகத்தன்மையை நோக்கி பயணம் செய்வது பற்றிய ஒரு கண்ணோட்டம் தெரியும்.
பஜனைகள்
பஜனைகள் என்பது இந்தியர்களின் பக்தி பாடல்களுக்கு வழங்கப்படும் பொதுவான பெயர் ஆகும். ராதாசோயாமி பாபா சாவான் சிங் பாரம்பரியப்படி தெய்வீகத்தன்மைக்கும் அவர்களின் குருவிற்கும் தங்களின் பக்தியுணர்வை வெளிப்படுத்தும் அம்மாதிரியான பக்தர்களின் பாடல்கள் நிறைய இருக்கின்றன. கீழே அது போன்ற மிக இனிமையான மேரி ஃபெவெல் துலினின் இரண்டு பாடல்கள்.
மேரே விச் நா குருஜி குன் கோய்
மேரி ஃபெவெல் துலினால் எழுதப்பட்டது
Mere Vich Na Guru Ji Gun Koi.mp3கோப்பை பதிவிறக்கம் செய்ய (வலது பக்கம் சொடுக்கி ““save link as” தேர்வு செய்யவும்)
வரிகள்
மேரே விச் நா குரு ஜி குன் கோய் அகுனா தா மை பார்யா
மொழிபெயர்ப்பு : ஓ குரு ஜி, எமக்குள் நல்லது ஏதுமில்லை, நான் தீய குணங்கள் கொண்டிருக்கின்றேன்.
சாப் அவ்குன் மை குன் நயி கோய், கியோ கட் கந்த் மிலவா ஹோய்
கியோ கட் கந்த் மிலாவா ஹோய்… அகுனா தா மை பார்யாமொழிபெயர்ப்பு : உமக்குள் எல்லா நற்குணங்களும் இருக்கின்றன – எமக்குள் ஏதுமில்லை. அன்பானவரைச் சந்திப்பது எப்படி நடக்கும்?
நா மை ருப் பன்கே நைனா, நா குல் டங் நா மிதே பேனா
நா குல் டங் நா மிதே பேனா … அகுனா தா மை பார்யாமொழிபெயர்ப்பு: எம்மிடம் அழகோ மயக்கும் விழிகளோ இல்லை. எம்மிடம் நல்ல வழிகளோ இனிமையான சொற்களோ இல்லை.
அசி பபி ஹா அகுன் ஹாரே, ஆகே திக் பி தேரே பி தேரே வாரே
தேரே பினா கிதே மில்தி நா தோய்…. அகுனா தா மை பார்யாமொழிபெயர்ப்பு: நாங்கள் பாவமிழைத்தவர்கள்- எமக்குள் முழுதும் தீய குணங்கள் நிறைந்திருக்கின்றன. உமது கதவுக்கடியில் நாங்கள் விழுந்து கிடக்கின்றோம்.
உம்மையல்லால் யாரிடமும் நாங்கள் அடைக்கலம் காணோம்.
யாதிம் சமாஜ் கி சாமி லாரா, கெர் சோரசி தா பிர் நா பரா (மீண்டும் ஒருமுறை)
பிச்சே சடே நால் ஹோய் ஜோ ஹோய்… அகுனா தா மை பார்யாமொழிபெயர்ப்பு: எங்களை ஆதரவற்றவர்களாக புரிந்து கொண்டு, எங்களை உங்களின் காலடியில் சேர்த்துக் கொள்ளுங்கள். எங்களை 84 இலட்ச சுழலில் மீண்டும் ஈடுபடுத்தாதீர்.
கடந்த காலத்தில் எங்களுக்கு என்ன நிகழ்ந்ததோ அது நிகழ்ந்து விட்டது.
தெரே பினா சப் சட்தே சஹாரே, தில் சடே விச் வஸ்ஜா பிராதே
ஹத் பன் கர்தா அர்ஜோய்… அகுனா தா மை பார்யா
மொழிபெயர்ப்பு: நாங்கள் உங்களின் ஆதரவைத் தவிர மற்றனைத்தும் விட்டு விட்டோம். அன்பானவரே, எங்களின் மனங்களில் வசித்திடுங்கள்
எங்களின் கரங்களை கூப்பி நாங்கள் இவ்வேண்டுகோளை வைக்கின்றோம்.
மை பபி மை அகுன் ஹரவு காரிப் அஜைப் தாஸ் துமாரா
கிர்பால் குரு பினா ஆஸ்ரா நா கோய்… அகுனா தா மை பார்யாமொழிபெயர்ப்பு: நான் பாவம் செய்தவன், தீய குணங்கள் நிறைந்தவன். பரிதாப அஜைப் உங்களின் அடிமை.
கிர்பால் இல்லாமல் அடைக்கலம் இல்லை.
லிக்கான் வல்யா து ஹோகே
மேரி ஃபெவெல் துலினால் எழுதப்பட்டது
Likhan Valya Tu Hoke.mp3.mp3கோப்பை பதிவிறக்கம் செய்ய (வலது பக்கம் சொடுக்கி ““save link as” தேர்வு செய்யவும்)
வரிகள்
லிக்கான் வல்யா து ஹோகே, தயலிக் தே,
மேரே ஹிர்தே விச் குரா தா, பியார் லிக் தே.
லிக்கான் வல்யா து ஹோகே, தயலிக் தே,
மேரே ஹிர்தே விச் குரா தா, பியார் லிக் தே.மொழிபெயர்ப்பு: ஓ நற்பேறுகளின் எழுத்தாளரே,
என் மனதினில் கருணையுடன் எழுதுங்கள்,
குருவிற்கான அன்பினை.ஹத் விச் லிக் தே, சேவை குரு ஜி தி
மேரா தன் மன் குரு உதேம் வார் லிக் தே,
மேரே ஹிர்தே விச் குரா தா,
பியார் லிக் தே ….லிக்கான்…மொழிபெயர்ப்பு: எனது கரங்களில், குரு சேவையை எழுதுங்கள்
குருவிற்காக எமது உடல் மற்றும் மனம் ஆகியவற்றை அர்ப்பணிக்க எழுதுங்கள்.ஜிபா தே லிக் தே, நாம் குரு ஜி தா
மேரே கன் விச் துன் தி, அவாஸ் லிக் தே,
மேரே ஹிர்தே விச் குரா தா,
பியார் லிக் தே… லிக்கான்…மொழிபெயர்ப்பு: எமது நாக்கினில் குருவின் பெயர் எழுதுங்கள்
எமது காதுகளுக்கு, மின்சார சத்தத்தின் குரலை எழுதுங்கள்.மாதே தே லிக் தே, ஜோட் குரு ஜி தி
மென் அங்க் விச் குரு தா, திதார் லிக் தே,
மேரே ஹிர்தே விச் குரா தா,
பியார் லிக் தே… லிக்கான்…மொழிபெயர்ப்பு: எமது நெற்றிப்பொட்டில், குருவின் ஒளியை எழுதுங்கள்
எமது கண்களில், குருவின் தர்ஷனை எழுதுங்கள்இக் நா லிக்கி மேரே, சத்குரு தா விச்சோரா
பாவே சுட் ஜே சாரா, சன்சார் லிக் தே,
மேரே ஹிர்தே விச் குரு தா,
பியார் லிக் தே… லிக்கான்…மொழிபெயர்ப்பு: ஒன்றை எழுதாதீர்கள் : குருவிடமிருந்து எங்களை பிரிக்காதீர்கள்
உலகை விட்டுச் செல்லும் பிரிவைப் பற்றி எழுதி இருந்தாலும் பரவாயில்லை.
அருஞ்சொற்பொருள்
பிரம்மச்சாரியா
பிரம்மச்சாரியா (இளங்கலை மாணவர்) வாழ்க்கை படிநிலை – குழந்தை பருவத்திலிருந்து 25 ஆம் வயது வரை- கல்வியிலும் துறவிலும் கவனம் செலுத்துதல்.
மூலம்: https://en.wikipedia.org/wiki/Brahmacharya
கௌனா
வட இந்திய சொல்லான கௌனா, திருமண பந்தங்களை ஏற்படுத்தும் சம்பிரதாயங்கள் மற்றும் சடங்குகளை குறிக்கும். தொன்மையான பழக்கமான சிறார் திருமணங்களைத் தொடர்புபடுத்தும் இந்தச் சொல், திருமணத்திற்குப்பின் மணப்பெண் தான் பிறந்த வீட்டிலேயே இருப்பதற்கு காரணம், இது ஒரு சமயச்சடங்கு சார்ந்த ஒன்று கூடும் நிகழ்வு மட்டுமே என்பது ஆகும். அவளுக்குத் தக்க வயது வந்ததும், அவள் தன் கணவன் வீட்டிற்குச் செல்லும் பொழுது, கௌனா சடங்குகளை மேற்கொண்டு, அவர்கள் தங்களுடைய மண வாழ்க்கையை தொடங்குவர்.
மூலம்: https://en.wikipedia.org/wiki/Gauna
குர்பானி
குர்பானி அல்லது குன் பானி எனும் சொற்கள், சீக்கிய குருக்கள் மற்றும் பல எழுத்தாளர்கள் எழுதிய பல்வேறு கட்டுரைகள், தொகுப்புகள் அடங்கிய குரு கிராந்த் சாயிப்பைக் குறிக்கும். பொதுவாக, குரு கிராந்த் சாயிப்பில் உள்ள தேவாரங்களையே குர்பானி என்று குறிப்பிடுவர். அம்ரித்ஹரி சீக்கியர்கள் தசாம் கிராந்தில் இருக்கும் நிட்னம் (தினசரி பாடல்கள்) என்றழைக்கப்படும் சில தொகுப்புகளையும் குர்பானி என கருதுகின்றனர்.
ஒப்புயர்வற்றவரிடமிருந்து நேரடியாக வந்த ஒலியின் எழுத்து வடிவங்களே குர்பானி ஆகும் என ஆடி கிராந்த் விவரிக்கின்றது. குர்பானியில் கூறப்பட்டுள்ள மூலமுதலான கடவுள் மற்றும் ஆன்மாக்களின் தன்மைகளை புரிந்துகொள்வதன் மூலம், ஒரு சீக்கியர் மிக உயர்ந்த நிலையை அடைய முடியும்.
சீக்கியர்களின் வரலாற்று கட்டுரைகள், அதிகாரப்பூர்வமற்ற கட்டுரைகள் மற்றும் சீக்கிய குருக்களின் பெயர்களில் எழுதிய உறுதிப்படுத்தப் படாத தொகுப்புகள் ஆகியவை குர்பானி என கருத்தில் கொள்ளப்பட மாட்டாது. அவை கச்சி பானி என குறிப்பிடப்படும்.
மூலம்: https://en.wikipedia.org/wiki/Gurbani
குட்வாரா
சீக்கிய மதத்தினர் ஒன்று சேர்ந்து வழிபாடு செய்யும் இடத்தையே குட்வாரா என்பர்.
மூலம்: http://www.bbc.co.uk/religion/religions/sikhism/ritesrituals/gurdwara_1.shtml
குரு கிராந்த் சாயிப்
சீக்கியர்கள் குரு கிராந்த் சாயிப் எனும் நூலை வாழும் குருவாக கருதுகின்றனர். சீக்கிய குருக்களில் இறுதியான மற்றும் பத்தாவது குருவான குரு கோபின் சிங் (1666-1708) தன் மறைவிற்குப் பின் சீக்கியர்களின் ஆன்மீக வழிகாட்டி, அந்த புத்தகத்தில் உள்ள போதனைகள் தான் என பிரகடனபடுத்தினார். சீக்கியர்கள் ஒரு குருவிற்கு கொடுக்கும் மதிப்பையும் மரியாதையையும் குரு கிராந்த் சாயிப் எனும் நூலுக்கு கொடுக்கின்றனர்.
மூலம்: http://www.bbc.co.uk/religion/religions/sikhism/ataglance/glance.shtml
குரு நானக் ஜி தேவ்
குரு நானக் (15 ஏப்ரல் 1469 – 22 செப்டம்பர் 1539), சீக்கிய மதத்தின் தோற்றுனரும் பத்து குருக்களில் முதலாவது குருவும் ஆவார். கடவுள் ஒருவர்தான் எனும் தத்துவத்தை உபதேசித்து, நித்திய உண்மைகளை உள்ளடக்கி கடவுள் தன் ஒவ்வொரு படைப்பிலும் வாசம் செய்கிறார் என போதனை செய்தார். சமத்துவம், சகோதரத்துவம், நற்குணம் மற்றும் நல்லொழுக்கம் ஆகிய பண்புகளை அடிப்படையாகக் கொண்டு ஆன்மீகம், சமூகம் மற்றும் அரசியல் கலந்த ஒரு அஸ்திவாரத்தை உருவாக்கினார்.
குரு நானக்கின் சொற்கள் 974 பாசுரங்களாக சீக்கியர்களின் புனித நூலான குரு கிராந்த் சாயிப்பில் அமைந்துள்ளது. குரு நானக்கின் புனிதம், தெய்வீகத்தன்மை, மத மேலாண்மை வெற்றிகரமாக அவருக்குப்பின் வந்த ஒன்பது குருக்களுக்கும் பின்பு குரு கிராந்த் சாயிப் புனித நூலிலும் பரிமாற்றம் செய்யப்பட்டது.
மூலம்: https://en.wikipedia.org/wiki/Guru_Nanak
ஜட் சீக்
சீக்கிய சமுதாயத்தின் ஜட் மக்களின் வம்சமே ஜட் சீக்கியர்கள் ஆவர். இந்தியாவின் பஞ்ஜாப் மாநிலத்தின் மக்கள் தொகையில் 21% முதல் 25 % வரை இவர்கள் ஆதிக்கம் செய்கின்றனர்.
மூலம்: https://en.wikipedia.org/wiki/Jat_Sikh
கல்சா
இந்தச் சொல் சீக்கிய மதத்தில் நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்ளும் ஆண்கள் மற்றும் பெண்களை குறிக்கும்.
மூலம்: http://www.bbc.co.uk/religion/religions/sikhism/ataglance/glance.shtml
ராதாசோயாமி நம்பிக்கை
குரு நானக், கபிர் சஹாப் மற்றும் சுஃபி துறவிகள் கற்பித்தது போல் துறவிகளின் மதம் அல்லது சன் மட் என்பது ராதாசோயாமி நம்பிக்கைக்கு ஒப்பானதாகும்.
ராதாசோயாமி நம்பிக்கையின் உறுதிகள்:
- கடவுளின் தோற்றத்தில்
- மனிதர்களின் ஆன்மாக்கள் கடவுளின் சாராம்சம்சத்திற்கு ஈடானது
- மறுப்பிறப்பில்
பிரபஞ்சத்தை படைத்தவரான ஒப்புயர்வற்ற கடவுளின் தோற்றத்தை அந்த நம்பிக்கை வலியுறுத்துகிறது. மனிதனின் ஆன்மா ஒப்புயர்வற்ற கடவுளிடமிருந்து தோன்றியதே என அது போதிக்கின்றது.
மூலம்: http://www.dayalbagh.org.in/radhasoami-faith/basic-concepts.htm
சாது
புனிதர், பிச்சைக்காரன், முனிவர் அல்லது துறவி.
மூலம்: https://en.oxforddictionaries.com/definition/sadhu
சத்குரு
சமஸ்கிருத சொல்லான சத்குருவின் பொருள் ‘உண்மையான குரு’ என்பதாகும். கடவுளையும் குருவையும் குறிக்க சீக்கியர்கள் இதை பயன்படுத்துகின்றனர். சத்குரு தன்னை பின்பற்றுபவர்களை மோட்சத்திற்கு அழைத்துச் செல்வார்- ஞானம் அல்லது ஆழ்மன அமைதி.
மூலம்: http://www.sikhiwiki.org/index.php/Satguru
சத்சாங்
சமஸ்கிருத சொல்லான சத்சாங் என்பதன் பொருள், ‘உண்மையான மக்களின் நட்பு’ என்பதாகும். சீக்கிய மதத்தில் இதன் துல்லியமான பொருள் ‘ உண்மையான நம்பிக்கை கொண்டவர்களின் சங்கம்’ என்பதாகும். சீக்கிய சத்சாங், அதன் முதல் குருவான குரு நானக் வாழ்ந்த காலத்திலிருந்து செயல்படுகின்றது.
இந்திய துணைக்கண்டங்களில் உள்ள அனைத்து மதங்களுக்கும் சத்சாங் பொதுவானது. ஆனால் சீக்கிய மதத்தில் அதற்கு தனித்தன்மைவாய்ந்த ஓர் இடம் உண்டு. குட்வாராவில் ஒன்று கூடி மத குருவின் மத பாடல் தொகுப்புகளை பாடும் மரபு, குருவிற்கு விசுவாசத்தை தெரிவிக்கும் ஒரு அங்கமாக காணப்படுகின்றது. அதே சமயம் தெய்வீக சக்தி கொண்ட சொற்குவியல்களில் பங்கு பெறும் ஒரு வாய்ப்பாகவும் கருதப்படுகின்றது. சட்சாங் சபையில் கலந்து கொள்ள எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை. எவராகினும் அதில் கலந்து கொள்ளலாம்.
மூலம்: https://www.britannica.com/topic/Satsang
சீக்கிய மதகுருக்கள்
சீக்கிய மதம், சீக்கியர்களால் குருக்கள் என்றழைக்கப்படும் மத ஆசிரியர்களைக் கொண்டது. 1469-ஆம் ஆண்டு நம்பிக்கையை விதைத்த முதல் குரு, குரு நானக் ஆவார். அவரைப் பின்தொடர்ந்து ‘நானக்’ எனும் பெயரில் ஆன்மீக வாசகங்களை எழுதிய ஒன்பது குருக்கள் உள்ளனர்.
இந்த பத்து குருக்களை அடுத்து, தற்போதைய குரு, சீக்கிய மதத்தில் புனித நூலாக கருதப்படும் குரு கிராந்த் சாயிப் ஆகும். சீக்கிய மதத்தின் குருவாக குரு கிராந்த் சாயிப் என்றென்றைக்கும் நிலைத்து இருக்கும்.
மூலம்: https://en.wikipedia.org/wiki/Sikh_gurus
5 K-க்கள்
சீக்கிய மதத்தில் 5 K-க்கள் என்பது, உண்மையான ஒரு சீக்கியர் எல்லா நேரங்களிலும் அவருடன் வைத்திருக்க வேண்டிய ஐந்து பொருட்கள் ஆகும். இந்த பொருட்கள் கல்சா உறுப்பினரை மற்றவர்கள் அடையாளம் காண்பதற்கும் பக்திச் சின்னத்திற்காகவும் குருவிற்கு கீழ்பணியவும் இருக்கின்றது.
அந்த 5 K க்கள்:
- கேஷ் (வெட்டப்படாத முடி)
- காரா (எஃகு காப்பு)
- கிர்ப்பான் (எஃகு பட்டாக்கத்தி)
- கங்கா (மரத்தாலாகிய சீப்பு)
- கச்சா ( பருத்தி உள்ளங்கி)
மூலம்: http://www.bbc.co.uk/religion/religions/sikhism/customs/fiveks.shtml
மூலங்கள்:
- Lane, David Christopher, ‘The Enchanted Land: A Journey with the Saints of India’, USA, MSAC Philosophy Group, 2008.
- Singh, Huzur Maharaj Sawan, ‘Spiritual Gems’, Punjab, Radha Soami Satsang Beas, 1965.
- Singh, Dr. Harbhajan, ‘The relation of Baba Sawan Singh and Kirpal Singh’, [PDF], www.kirpalsingh-teachings.org
- Singh, Sant Kirpal, ‘Hazur Baba Sawan Singh: Pictures & Quotes’, [PDF], kirpalsingh.org
- Lane, David, ‘Radhasoami: A Critical History of Guru Succession’, USA, Lulu Press, Inc. 2015.
- Sawan Singh, Wikipedia, the free encyclopedia, [website], 2018, https://en.wikipedia.org/wiki/Sawan_Singh (accessed 7 April 2018).
- Singh, Sant Kirpal, The Life of Hazur Baba Sawan Singh, [website], http://www.kirpalsingh-teachings.org/fr/talks/in-india/343-the-life-of-hazur-baba-sawan-singh.html (accessed 8 April 2018).
- Singh, Sant Kirpal, A Brief Life-sketch of Hazur Baba Sawan Singh with a short narrative of His Teachings, [website], http://www.ruhanisatsangusa.org/BabaSawanSingh.htm (accessed 8 April 2018).
- Baba Sawan Singh, Sikh Wiki: Encyclomedia of the Sikhs, [website], http://www.sikhiwiki.org/index.php/Baba_Sawan_Singh (accessed 7 April 2018).
- Radha Soami Satsang Beas: Science of the Soul, [website], https://www.rssb.org/index.php (accessed 7 April 2018).
- Sikhism at a glance BBC Religion, [website], http://www.bbc.co.uk/religion/religions/sikhism/ataglance/glance.shtml#findoutmore (accessed 8 April 2018).
- Khalsa initiation, BBC Religion, [website], 2009, http://www.bbc.co.uk/religion/religions/sikhism/customs/fiveks.shtml (accessed 8 April 2018).
- Guru Nanak, BBC Religion, [website], 2011, http://www.bbc.co.uk/religion/religions/sikhism/people/nanak.shtml (accessed 9 April 2018).
- Shiv Dayal Singh, Wikipedi, the free encyclopedia, [website], 2018, https://en.wikipedia.org/wiki/Shiv_Dayal_Singh (accessed 15 April 2018).
- Jagat Singh, Wikipedia, the free encyclopedia, [website], 2018, https://en.wikipedia.org/wiki/Jagat_Singh (accessed 9 April 2018).
- Guru Granth Sahib, Wikipedia, the free encyclopedia, [website], 2018, https://en.wikipedia.org/wiki/Guru_Granth_Sahib (accessed 9 April 2018).
- Gurbani, Wikipedia, the free encyclopedia, [website], 2017, https://en.wikipedia.org/wiki/Gurbani (accessed 10 April 2018).
- Gauna, Wikipedia, the free encyclopedia, [website], 2018, https://en.wikipedia.org/wiki/Gauna (accessed 9 April 2018).
- The Gurdara, BBC Religion, [website]. 2009, http://www.bbc.co.uk/religion/religions/sikhism/ritesrituals/gurdwara_1.shtml (accessed 9 April 2018).
- Ahmed, Istiaq, ‘The Punjab Bloodied, Partitioned and Cleansed’, Fair Observer, 2012, https://www.fairobserver.com/region/central_south_asia/punjab-bloodied-partitioned-and-cleansed/ (accessed 15 April 2018).
- Brahmacharya, Wikipedia, the free encyclopedia, [website], 2018, https://en.wikipedia.org/wiki/Brahmacharya (accessed 8 April 2018).
மேலும் பல சுவாரஸ்யமான இணைப்புகளுக்கு:
- Dhaneshwar Bhagawan Dorje Shugden | धनेश्वर भगवान दोर्जी शुगदेन। | தனேஷ்வரர் பகவான் டோர்ஜே ஷுக்டேன் | धनेश्वर भगवान दोर्जे शुग्देन। | རྡོ་རྗེ་ཤུགས་ལྡན།
- டோர்ஜே ஷுக்டேன் அவர்களை எல்லா இடங்களுக்கும் கொண்டு செல்வோம்! (ஆங்கிலம், திபெத், சீனம், ஹிந்தி, தமிழ் மற்றும் நேபாளம்)
- குவான் யின் நாள்
- மலேசியாவில் விசாக தினம்
- மலேஷியா பாரம்பரிய ஆடைகள்
- மலேசியாவில் இந்தியர்கள்
- மலேசியாவில் முடியாட்சி முறை
- தைப்பூசம் – முருகப்பெருமானின் விழா
- நாவில் சுவையூறும் 25 வகையான மலேசிய உணவுகள்
- பூச்சோங்கில் மனிதக்குரங்கா
Please support us so that we can continue to bring you more Dharma:
If you are in the United States, please note that your offerings and contributions are tax deductible. ~ the tsemrinpoche.com blog team
முற்றிலும் உன்மை.பாபா சாவான் சிங் எப்பொழுதும் தனது சிஷ்யர்களுக்கு கருணை மற்றும் மத சகிப்புத்தன்மை, அனைத்து உயிரினங்களையும் மதித்தல் மற்றும் போதை தருபவற்றைத் தவிர்க்குமாறும் வலியுறுத்துவார்.அனைத்து மகா ஆன்மீக மனிதர்களைப் போல், தான் போதிக்கும் ஞானம், பாபா சாவான் சிங்கின் செயல்களில் உள்ளடக்கி இருக்கும். அதிலும், இந்திய வரலாற்றில் மிகவும் பேரதிர்ச்சி காலமான பாகிஸ்தானின் உருவாக்கம் பல்வேறு மத சண்டைகளை ஏற்படுத்திய காலக்கட்டத்திலும் பாபா சாவான் சிங் தொடர்ந்து பிரபஞ்ச அளவிலான கருணையையும் மத சகிப்புத்தன்மையையும் தொடர்ந்து செயல்படுத்தி வந்தார்.
Nice short video of a new LED signage reminding us of who we can go to for blessings in case of need: https://www.youtube.com/watch?v=EBwrkaKUoH0
Listening to the chanting of sacred words, melodies, mantras, sutras and prayers has a very powerful healing effect on our outer and inner environments. It clears the chakras, spiritual toxins, the paths where our ‘chi’ travels within our bodies for health as well as for clearing the mind. It is soothing and relaxing but at the same time invigorates us with positive energy. The sacred sounds invite positive beings to inhabit our environment, expels negative beings and brings the sound of growth to the land, animals, water and plants. Sacred chants bless all living beings on our land as well as inanimate objects. Do download and play while in traffic to relax, when you are about to sleep, during meditation, during stress or just anytime. Great to play for animals and children. Share with friends the blessing of a full Dorje Shugden puja performed at Kechara Forest Retreat by our puja department for the benefit of others. Tsem Rinpoche
Listen here: https://www.youtube.com/watch?v=ZbzgskLKxT8&t=5821s