கேச்சாரா ஃபோரெஸ்ட் ரீட்ரீட்டிற்கு கியான்ஸே சிலை வந்தடைந்துள்ளது
ரத்னா ஷுக்டேன் என்றழைக்கப்படும் கியான்ஸே, தர்மத்தின் பாதுகாவலரான டோர்ஜே ஷுக்டேன் அவர்களின் மிக முக்கியமான ஐந்து அவதாரங்களில் ஒருவராவார். இந்த குறிப்பிட்ட அவதாரத்தில் டோர்ஜே ஷுக்டேன் அவர்கள் விருத்தி செய்யும் அவதாரமாக உருவெடுத்திருக்கின்றார். உண்மையான நம்பிக்கையுடையோர் அவரை சாந்தப்படுத்தும் பொழுது, பொருட்செல்வம், அருட்செல்வம், ஆரோக்கியம் மற்றும் பல ஆன்மீக நன்மைகளை ஆசீர்வாதமாக அடையலாம்.
இதை மனதில் நிறுத்தி, தூர நோக்கு சிந்தனையுடன், மாண்புமிகு 25-ஆம் திசெம் ரின்போச்சே அவர்கள் கோயில் ஒன்றை குறிப்பாக கியான்ஸே அவர்களுக்கும் அவருடைய பயனுள்ள ஆற்றல்களுக்கும் சமர்பிக்க உருவாக்கினார். கேச்சாரா ஃபோரெஸ்ட் ரீட்ரீட் முன்புறத்தில் அமைந்துள்ள இந்த கோயில், பல்வேறு மதநம்பிக்கைகள் கொண்டவர்கள் ஆன்மீக யாத்திரை மேற்கொள்ளும் ஓர் இடமாக அமைந்துள்ளது. கியான்ஸே அவர்களும் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் அறிகுறிகளை வெளிப்படுத்தியுள்ளார்.
கியான்ஸே அவர்களை வழிபடுவதால் ஏற்படும் நன்மைகளை நிறைய மக்கள் அனுபவித்திருந்ததால், ஒரு புதிய ஐந்தடி சிலையை கோயிலின் உள்ளே நிறுவ ஏற்பாடு செய்யப்பட்டது. நவம்பர் 3-ஆம் திகதி 2017-ல், கியான்ஸே அவர்களின் புதிய சிலை கேச்சாரா ஃபோரெஸ்ட் ரீட்ரீட்டை வந்தடைந்தது. அதே சுபதினத்தில் கேச்சாராவின் டோர்ஜே ஷுக்டேன் அவர்களின் மாதாந்திர பூஜையும் நடைபெற்றது! கியான்ஸே அவர்களின் சிலை நிறுவப்பட்டதும், பால், ஊதுபத்திகள் மற்றும் பட்டுத்துணி படைத்து கியான்ஸே அவர்களை வரவேற்றனர்.
இரண்டு நாட்கள் ஏற்பாடுகளுக்குப் பிறகு, கேச்சாரா சரஸ்வதி கலைக் குழுவினர் கியான்ஸே சிலையின் முகத்திற்கு பாரம்பரியத்தின்படி தங்கமுலாம் பூசி, பவளம் மற்றும் நீல மணிகளை கொண்டு அவருடைய புனித முகத்தை அலங்கரிக்க அங்கு வந்தடைந்தனர். மறுநாள், கியான்ஸே அவர்களின் கழுத்திற்கு காணிக்கை செலுத்தவும் கியான்ஸே குதிரையின் கீழே தூவி விடவும் வெண்கல மணி அட்டிகையை அவர்கள் செய்தனர்.
நவம்பர் 8-ஆம் திகதி, 2017 ஆண்டு, கேச்சாரவிலுள்ளவர்கள், அப்புனித சிலையை கேச்சாரா ஃபோரெஸ்ட் ரீட்ரீட்டின் பிரதான நுழைவாயிலின் இடது பக்கம் அமைந்துள்ள கியான்ஸே கோயிலுக்கு கொண்டு சென்றனர். இந்த புதிய சிலை கோயிலில் முன்பிருந்த சிறிய சிலைக்கு பதிலாக வைக்கப்பட்டது. இந்த கியான்ஸே கோயில் கேச்சாரா ஃபோரெஸ்ட் ரீட்ரீட்டில் உள்ள புகழ்பெற்ற இடங்களுள் ஒன்றாகவும் தற்போது பலரின் வேண்டுதல்கள் நிறைவேற்றப்படும் மிக பிரபலமான இடமாகவும் வளர்ந்து வருகின்றது. அதன் பயனாக, நன்றியைத் தெரிவிக்கும் வகையில் முன்பிருந்த சிலைக்குப் பதிலாக பெரிய கியான்ஸே சிலையை வைப்பதற்கு நிதி உதவி அளிக்கப்பட்டது.
கேச்சாராவில் உள்ள பலரும், செல்வ கடவுள் சிலையின் வருகையைக் கோயிலுக்குள் வரவேற்பதற்காக ஆர்வமுடன் காத்திருந்தனர். கியான்ஸே சிலை வந்தடைந்ததும் தூள் பத்திகள், மந்திரங்கள்,டோர்ஜே ஷுக்டேன் அவர்களின் வழிதோன்றல்கள் உட்பட, சிறிய புத்தர் சிலைகள் மற்றும் புனித பொருட்கள் அனைத்தும் கியான்ஸே சிலையின் உள்ளே வைக்கப்பட்டது. அந்த பொருட்கள் அனைத்தும் சிலையின் உள்ளே வைத்தவுடன், சிலை அதிக கனமாகி, சிலையை தூக்கி பூஜை மேடையின் மேல் வைப்பதற்கு 10 பேர் தேவைப்பட்டனர்.
கியான்ஸே சிலையை அரியணையில் வைத்த பிறகு, பங்கேற்பாளர்கள் எஞ்சிய பூஜை மேடையை அமைத்து முடித்தனர். கேச்சாராவின் பூஜை குழுவினரின் தேவையான பிரசாதங்களை கியான்ஸே /டோர்ஜே ஷுக்டேன் அவர்களுக்கு படைத்தனர். அபரிமிதமான ஆன்மீக மற்றும் பொருட்செல்வத்தைக் குறிக்கும் பொருட்டு பித்தளை மணிகள், சிவப்பு பவளம், ரத்தினங்கள், முத்துக்கள் அனைத்தும் கியான்ஸே குதிரையின் கீழ் தூவப்பட்டன. உயரமான ஒன்பது 8-அடி ஊதுபத்திகள் மற்றும் அதிகமான சிறிய ஊதுபத்திகள் ஏற்றப்பட்டதால், அங்குள்ள காற்று நறுமணம் வீசியது. 108 ஆரஞ்சுகள், நிறைய பிஸ்கட்ஸ், பானங்கள் மற்றும் 2500 மெழுகுவர்த்திகள் பூஜையின் போது கியான்ஸே அவர்களுக்கு படைக்கப்பட்டது.
மறுநாள், சோக் உடனான கியான்ஸே மற்றும் டோர்ஜே ஷுக்டேன் பூஜைகளைத் தொடர்ந்து ரப்னீ மற்றும் சூன்ரப் பூஜைகள் அக்கோயிலில் மேற்கொள்ளப்பட்டன. சூன்ரப் என்பது புத்தர் சிலைகள், மந்திரங்கள் மற்றும் பிற தெய்வீக பொருட்களைப் புனிதமாக்கும் மற்றும் ஆசீர்வதிக்கும் சடங்கு ஆகும். இதனைத் தொடர்ந்து சீல் செய்யப்பட்ட சிலைக்கும் புனித பொருட்களுக்கும் ஆற்றலை கொடுக்கும் விதமாக சக்தி வாய்ந்த ரப்னீ பூஜை, மூன்று நவரத்தினங்களின் ஆசீர்வாதத்துடன் மேற்கொள்ளப்பட்டது. இதனால் தொடர்ச்சியான நல்ல ஆற்றல்கள் கொண்ட சூழ்நிலைகள் உருவாக்கப்படுகின்றன.
டோர்ஜே ஷுக்டேனின் சேமிக்கப்பட்ட புனித உணர்வுகளின் அவதாரமான கியான்ஸின் ஒவ்வொரு உடல் அங்கங்களும் ஞானம் பெற்றவரின் பல்வேறு குணங்களைக் குறிக்கின்றன. அதோடு மட்டுமில்லாமல், உயிரினங்களுக்கு உட்புற மற்றும் வெளிப்புற செல்வங்களை வரமாக அளிக்கும் அவரின் நன்மை பயக்கும் திறனையும் சக்தியையும் கியான்ஸேயின் உடல் வடிவம் பிரதிபலிக்கின்றது.டோர்ஜே ஷுக்டேனின் மண்டலாவில், கியான்ஸே பிரதான தெய்வத்தின் வலது புறத்தில் ஒரு முகம் மற்றும் இரண்டு கரங்களுடன் இருக்கும் தேவலோக இளவரசர் உருவில் தோன்றுகின்றார்.
தனது வலது கரத்தில், அமிர்தம் வழிந்தோடும் மற்றும் வரங்களை வழங்கும் மரத்தின் கிளைகளால் அலங்கரிக்கப்பட்ட பொன்னிறத்திலான ஆயுள் ஜாடி ஒன்றினை வான் நோக்கி அவர் ஏந்தியிருப்பார். இந்த ஜாடி, நாம் தடையின்றி தர்மத்தின் வழி நடப்பதற்காக, உலக தேவைகளான செல்வம், ஆரோக்கியம், நல்லுறவு மற்றும் அனைத்து வளங்களும் வழங்கும் சக்தியைப் பிரதிபலிக்கின்றது. மற்றொரு கரத்தில் அவர் ஆபரணங்கள் நிறைந்த கிண்ணம் ஒன்றினையும் அவரின் தோளில் நகை உமிழும் கீரிப்பிள்ளை ஒன்றையும் ஏந்தியிருப்பார். இது கியான்ஸே பொருட்செல்வம் மற்றும் அருட்செல்வம் வழங்கும் தெய்வம் என்பதனைக் குறிக்கின்றது.
மேலும், மஞ்சள் காவி உடையால் கியான்ஸே ஓர் இளவரசரைப் போல் அலங்கரிக்கப்பட்டு பலோமினோ குதிரையில் சவாரி செய்கிறார். மஞ்சள் நிறம் வளத்தினைப் பெருக்கும் நடவடிக்கைகளைக் குறிக்கின்றது. இதுதான் கியான்ஸே தனது வழிப்பாட்டாளர்களை ஆசிர்வதிக்கும் முறையாகும். அவரின் இடது கையின் இடையிலே, அவர் வெற்றிக் கொடியையும் வஜ்ரா கொக்கியையும் பிடித்திருப்பார். அந்த வெற்றிக்கொடி, நாம் விரும்புவதைத் தடுக்கும் மாரா அல்லது மாயத்தோற்றம், எதிர்மறையான உணர்வுகள் மற்றும் தீய முன்வினைப் பயன்களை வெற்றிக் கொண்டதைக் குறிக்கும். எனவே, கியான்ஸே வழங்கும் அனைத்தும் இறுதியில் களங்கங்களையும் தடைகளையும் அகற்ற வழிவகுக்கும். கியான்ஸே ஏந்தியிருக்கும் வஜ்ரா கொக்கியானது தடைகளையும் தீமைகளையும் நீக்கும் அவருடைய வல்லமையையும், விடுதலைக்கு வழிகாட்டும் ஆன்மீகம் மற்றும் பொருட்செல்வத்தை ஈர்ப்பதையும் குறிக்கும். அந்த மஞ்சள் பலோமினோ குதிரை அவர் தடைகளைத் துரிதமாக தடுத்து நமக்கு துணை புரிவதைக் குறிக்கின்றது.
எந்தவொரு புத்தராலும் அல்லது தர்ம காவலராலும் நமது கர்மாவை மாற்ற இயலாது; ஆனால், கியான்ஸேவால் நமது உதவிக்கு வர முடியும், ஏனெனில் அவர் சேமிக்கப்பட்ட புண்ணியங்களின் வழி வேலை செய்து நாம் அவரிடம் சரணடைவதன் மூலம் டீய கர்மாக்களைப் புனிதமாக்குவார். வேறு வழியில் கூறுவதென்றால், அவரின் வழிபாட்டின் மூலம் புண்ணியங்கள் சேர்த்து உதவி புரியும் கியான்ஸேவின் தெய்வீக சக்தியை நம்மால் அடைய முடியும்.
கியான்ஸே மீது நம்பிக்கை வைத்து, காணிக்கைகள் அளித்து, மனதில் அவர் உருவத்தை தியானித்து, அவருடைய மந்திரங்களை ஓதினால் நாம் பல நன்மைகளை அடையலாம். இந்த நன்மைகளைக் கொண்டு கியான்ஸே நல்வினைப்பயன்களைச் செயல்படுத்தி, தீவினைப்பயன்கள் பழுத்து நம்மை துன்பத்தில் தள்ளுவதை தடுத்து நிறுத்துவார். கியான்ஸே நம் தீவினைப்பயன்களைத் தடுக்கும் பொழுது, அவைகள் நம்மை விட்டு முழுமையாக மறைவதில்லை. ஆனால் அவைகள் பழுத்து துன்பப் பலனை அளிக்கமால், நாம் அந்த தீவினைகளை நல்லவைகளால் முழுமையாக சுத்தப்படுத்தும் வரை தற்காலிகமாக கியான்ஸேவால் தடுத்து வைக்கப்படுகின்றது. இதனால் நம் தீவினைப்பயன்களால் இனி நமக்கு தீங்கில்லை.
அனைவரும் வசதியாக வருகை புரிந்து வழிபாடு செய்ய கியான்ஸே கோயில், வாரத்தின் 7 நாட்கள், 24 மணி நேரமும் திறந்திருக்கும். வருகையாளர்கள் கியான்ஸே அவர்களை வழிபட்டு பிரார்த்தனைகள் செய்ய மெழுகுவர்த்திகள், ஊதுபத்திகள் மற்றும் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் பலகைகள் கோயிலில் வைக்கப்பட்டிருக்கும். மேலும், இலவச கல்வி மற்றும் பிரார்த்தனைகள் சார்ந்த பிரசுரங்கள் ,பதக்கங்கள், டிவிடிகள், புத்தகங்கள், சிற்றேடுகள், மற்றும் படங்கள் அங்கே வைக்கப்பட்டிருக்கும்.
கியான்ஸே சிலையைப் பற்றிய தகவல்கள்
உயரம்: 5 அடி ( 1.52 மீட்டர்)
பொருள்: வெண்கலம்
இடம்: கேச்சாரா ஃபோரெஸ்ட் ரீட்ரீட்டின் பிரதான நுழைவாயிலின் இடது பக்கம்
மேலும் தகவல்கள் தெரிந்து கொள்ளவோ அல்லது எங்களது நடவடிக்கைகளில் கலந்து கொள்ள ஆர்வம் இருந்தால், நீங்கள் கேச்சாரா அலுவலகத்தை care@kechara.com அல்லது +603 78033908 தொடர்பு கொள்ளலாம்.
காணொளி : 5 அடி கியான்ஸே சிலை கேச்சாரா ஃபோரெஸ்ட் ரீட்ரீட் வந்தடைதல்
மேலும் பல சுவாரஸ்யமான இணைப்புகளுக்கு:
- தனேஷ்வரர் பகவான் டோர்ஜே ஷுக்டேன்
- புனிதர் பாபா சாவான் சிங் : தெய்வீகத்தன்மை கொண்ட சீக்கிய மத குரு
- தைப்பூசம் – முருகப்பெருமானின் விழா
- மலேசியாவில் இந்தியர்கள்
- மலேஷியா பாரம்பரிய ஆடைகள்
- மலேசியாவில் விசாக தினம்
- டோர்ஜே ஷுக்டேன் அவர்களை எல்லா இடங்களுக்கும் கொண்டு செல்வோம்! (ஆங்கிலம், திபெத், சீனம், ஹிந்தி, தமிழ் மற்றும் நேபாளம்)
- நாவில் சுவையூறும் 25 வகையான மலேசிய உணவுகள்
- ஆயுள், நன்மைகள் மற்றும் செல்வத்தை பெருக்க டோர்ஜே ஷுக்டேன் கியான்ஸே
- கருப்பு மாந்திரீகம் மற்றும் தீய சக்திகளை விரட்டும் டோர்ஜே ஷுக்டேன் திராக்சே
- டோர்ஜே ஷுக்டேன் அடைக்கலம் :விருப்பங்களை நிறைவேற்ற சத்தி வாய்ந்த பயிற்சி
- Kechara Forest Retreat
- Vajrasecrets: Wealth Vase
- Vajrasecrets: Yang Dzay Rilbu
Please support us so that we can continue to bring you more Dharma:
If you are in the United States, please note that your offerings and contributions are tax deductible. ~ the tsemrinpoche.com blog team
நன்றி ரின்போன்சே இந்த புனிதமான தி௫த்தலத்தை வழங்கியதற்கு. இதன் மூலம் மக்கள் நிறைய நன்மை பெற்றுள்ளனா்.
Beautiful billboard just came up in our hometown of Bentong where Kechara Forest Retreat (KFR) in Malaysia is located. All of us in Bentong are warm, simple and very friendly people. Our beautiful billboard depicts Dorje Shugden statue in KFR and Dorje Shugden is a hero (pahlawan) and a powerful being from Tibet. He is highly respected for giving great inspirations and blessings from his life story.~Tsem Rinpoche- See more beautiful pictures- https://bit.ly/2UltNE4
这个美丽的布告板刚在我们的家乡——文冬安装好。文冬是克切拉禅修林的所在地。我们文冬人热情、朴实和友善。我们美丽的布告板描绘着禅修林里的多杰雄登像,而多杰雄登是位英雄,也是一位来自西藏强大的守护者。从他的生平我们得知他因赐人加持和灵感而备受尊崇。詹仁波切- 点击链接查看更多图片: https://bit.ly/2ThOvVa