மலேசியாவில் உள்ள பெட்டாலிங் தெருவில் உற்சாகமூட்டும் டோர்ஜே ஷுக்டேன் விற்பனைக்கூடம்!
மலேசியாவின் சுற்றுலாத்துறை மிகவும் பரபரப்பான மற்றும் செழிப்பான ஒரு துறையாகும். நாட்டின் மிக முக்கியமான கவரக்கூடிய இடங்களில் பெட்டாலிங் தெருவும் ஒன்றாகும். தலைநகரமான கோலாலம்பூரில் மிகவும் புகழ்பெற்ற இரவு சந்தையாகவும் மற்றும் எல்லா சுற்றுப்பயணிகளும் கட்டாயம் காண வேண்டிய ஒரு இடமாகவும் திகழ்கின்றது. மழை அல்லது வெயில் காலத்திலும் சுற்றுப்பயணிகள் மலிவான துணிகள், மின்னணுவியல் பொருட்கள் வாங்குவதற்கும் உள்ளூர் மலேசிய உணவு வகைகளை உண்டு களிக்கவும் ஏதுவாக நூற்றுக்கணக்கான வெளிப்புற கடைகள் மறைக்கப்பட்ட சாலைகளுக்கு மத்தியில் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இன்று, அக்டோபர் 24, 2018-ல், என் மாணவர் குழு ஒன்று, டோர்ஜே ஷுக்டேன் விற்பனைக்கூடத்தை அமைத்து என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். அவர்கள், நீங்கள் கீழே கண்டு களிக்க உள்ள படங்களை எனக்கு அனுப்பினார்கள். விற்பனைக்கூடத்தின் அதிகாரப்பூர்வ திறப்பு விழா இன்று நிகழ்ந்தது, ஆனால், எனக்கு அவர்கள் இப்படியொரு திட்டத்தைத் தீட்டியது குறித்து எதுவும் தெரியாது. இந்த செய்தியை அறிந்தவுடன் நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். அவர்களுடைய எல்லா கடின உழைப்புகளுக்கும் நான் நன்றி தெரிவிக்கின்றேன். ஆயிரக்கணக்கான, இல்லை கோடிக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் இந்த பெட்டாலிங் தெருவை ஒவ்வொரு வருடமும் கடந்து போகின்றார்கள். இந்த டோர்ஜே ஷுக்டேன் விற்பனைக்கூடம் பொது வழியைப் பார்த்த வண்ணம் அமைந்துள்ளது. சுற்றுலாப்பயணிகள், உள்ளூர் மற்றும் வெளியூர் வருகையாளர்கள் தங்களுடன் வீட்டிற்கு எடுத்து செல்ல, விற்பனைக்கூடத்தின் உள் பல விதமான டோர்ஜே ஷுக்டேனின் பொருட்கள், உதாரணத்திற்கு, வலைத்தட்டுகள், அஞ்சல் அட்டைகள், பென்டன்கள், சிலைகள் மற்றும் பல இருக்கின்றன. மக்களில் பலர் டோர்ஜே ஷுக்டேனின் வழிபாட்டினால் கிடைக்கும் பலன்களைக் கண்டு கொள்ள முடிகின்றது மற்றும் படங்கள், சுவரொட்டிகள், சிலைகள், பென்டன்கள், ச-ச (புத்த கலை), புத்தகங்கள், சாவி கொத்துகள், தங்கா (பல விதமான துணிகளில் வரையப்படும் புத்தர் ஓவியங்கள்) மற்றும் பல வகையான அவரின் பொருட்களுக்கான கோரிக்கைகள் கூடிக் கொண்டே வருகின்றன. நாங்கள் இந்த பொருட்களை மக்களுக்கு இந்த புது விற்பனைக்கூடத்திலிருந்தும் எங்களிடம் இருக்கும் மற்ற இடங்களிலிருந்தும் (www.vajrasecrets.com) வழங்குவதற்கு எண்ணம் கொண்டுள்ளோம். எனக்கு டோர்ஜே ஷுக்டேன் மீது முழு நம்பிக்கை இருக்கின்றது மற்றும் அவரை முழு மனதுடன் வழிபடுபவர்க்ளுக்கு அவர் பல வகைகளில் பயனளிப்பார் என்று எனக்கு தெரியும்.
நான் மிகவும் நெகிழ்ந்து போனேன் என்பதனை தெரியப் படுத்த விரும்புகின்றேன். இப்படி ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது எனக்கு ஓர் அழகான அதிர்ச்சியாக வந்தது. உண்மையில், நான் சில கண்ணீர்துளிகளைச் சிந்தினேன், ஏனெனில், இந்நிகழ்விற்காக எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் என் மனதைத் தொட்டுவிட்டன. டோர்ஜே ஷுக்டேன் தொடர்ந்து தொடர்பில் இருந்து நான் என் புகலிடமாகக் கொண்ட மலேசியாவில் வாழும் எண்ணிலடங்கா மக்களுக்கு ஆசீர்வாதம் வழங்க வேண்டும் என்பதற்காக மிக கடினமாக உழைத்த அனைவருக்கும் மீண்டும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். மக்களில் பலர் தங்களின் துன்ப காலங்களில் அவர்கள் எந்த மதத்தைச் சார்ந்திருந்தாலும் அல்லது மதமற்று இருந்தாலும் அவர்கள் மனதார டோர்ஜே ஷுக்டேனை திருப்திப்படுத்தினால், அவர் நிச்சயமாக உதவி புரிவார் என்று நான் நம்புகின்றேன். இதுதான் நான் மற்றவர்களுக்கு நன்மை அளிக்கும் வழி. நான் உதவி தேவைப்படுபவர்களுக்கு டோர்ஜே ஷுக்டேனை கொண்டு செல்கின்றேன். அவரால் நிச்சயம் அவர்களுக்கு உதவி புரிய முடியும், ஏனெனில், அவர் புத்தர் மஞ்சுஸ்ரீயின் அவதாரமாவார்.
திசெம் ரின்போச்சே
தொடர் தகவல் : புதிய விளம்பர பலகை
டிசம்பர் 1, 2018-ல் ஒரு புதிய விளம்பரப் பலகை, பெட்டாலிங் தெருவில் உள்ள நமது விற்பனைக்கூடத்தின் இடதுபுறத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் விளக்கு ஏற்றப்படும் இந்த புதிய விளம்பரப் பலகை, தூரத்தில் நமது விற்பனைக்கூடத்தைக் தெளிவாகக் காணும் வாய்ப்பைக் கூட்டுகின்றது. இந்த விளம்பரப் பலகை, அழகான மிகப்பெரிய டோர்ஜே ஷுக்டேனின் படத்தினைக் கொண்டுள்ளது. இந்த விளம்பரப் பலகையைச் செய்து அதனை பொருத்துவதற்காகக் கடினமாக உழைத்த அனைவருக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மேலும் பல சுவாரஸ்யமான இணைப்புகளுக்கு:
- கேச்சாரா ஃபோரெஸ்ட் ரீட்ரீட்டிற்கு கியான்ஸே சிலை வந்தடைந்துள்ளது
- டோர்ஜே ஷுக்டேன் அவர்களை எல்லா இடங்களுக்கும் கொண்டு செல்வோம்! (ஆங்கிலம், திபெத், சீனம், ஹிந்தி, தமிழ் மற்றும் நேபாளம்)
- டோர்ஜே ஷுக்டேன் அவர்களை வேண்டி சிறிய பிரார்த்தனை
- தைப்பூசம் – முருகப்பெருமானின் விழா
- மலேசியாவில் இந்தியர்கள்
- Kechara Spreads the Practice of Dorje Shugden
- Dorje Shugden – The Protector of Our Time
- Spectacular Dorje Shugden Mural in Kathmandu, Nepal!
- What He Can Do For Us | 祂能为我们做些什么?
- Beautiful ancient Tibetan art to share with you
- Which Dorje Shugden Style Is Your Favourite?
- Dorje Shugden Retreat: A powerful practice to fulfill wishes
- Dorje Shugden Gyenze to Increase Life, Merits and Wealth
- Dorje Shugden Shize: A practice for healing and long life
- Dorje Shugden Trakze to Dispel Black Magic & Spirits
- Dorje Shugden Wangze for Power and Influence
- Dorje Shugden: My side of the story | 多杰雄登:我这方面的说法
- H.E. the 25th Tsem Tulku Rinpoche’s Biography
- Various prayers to Dorje Shugden composed by His Holiness the Omniscient 10th Panchen Lama (download PDF)
- The 14th Dalai Lama’s prayer to Dorje Shugden
- The Fifth Dalai Lama & Dorje Shugden
- Never Seen Before Footage of Dorje Shugden Oracles
- The Jolenpa (Bodhisattva) Gen Nyima
Please support us so that we can continue to bring you more Dharma:
If you are in the United States, please note that your offerings and contributions are tax deductible. ~ the tsemrinpoche.com blog team
தகவலுக்கு நன்றி ரின்பொன்செ. மலேசியாவின் தலைநகரமான கோலாலம்பூரில் இருக்கும் மிகப் பிரபலமான இரவு தெரு சந்தையான பெட்டாலிங் தெருவில் (PETALING STREET) டோர்ஜே ஷுக்டேன் விற்பனைக்கூடம் இருக்கின்றது. இங்கு பலவித பொ௫ட்கள் விற்கப்படுகின்றன. இவை அணைத்தும் திபத்திய நாட்டைச் சோ்ந்தவையாகும். மேலும் இவை அணைத்தும் ரின்பொன்சியாலசிா்வதிக்கப்பட்டதாகும்.
மேலும் விவரங்களுக்கு https://bit.ly/2GvJvaY