டிராகன் படகு திருவிழா: பாரம்பரிய மற்றும் நவீன கலாச்சாரத்தின் இணைவு
நான் கடந்த 20 ஆண்டுகளாக மலேசிய நாட்டில் வாழ்ந்து வருகிறேன். இந்த காலகட்டத்தில், மலேசிய நாட்டின் பல்வேறு பாரம்பரியங்கள் மற்றும் கலாச்சாரங்களின் மீது நான் அபரிமிதமான ஈடுபாட்டை வளர்த்துக் கொண்டேன். இந்த புரிதலே, மலேசியா நாட்டில் எனக்கு பிடித்த விஷயங்களைப் பற்றி எழுதுவதற்கு தூண்டுகோளாக அமைந்துள்ளது.
அவற்றில் ஒன்றுதான், சீனாவில் தோன்றி, மலேசிய நாட்டின் கலாச்சாரத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட டிராகன் படகு திருவிழா. இந்த விழாவை மலேசிய நாட்டில் ஏற்றுக் கொண்டது, பல இன மக்களின் இயல்பு தன்மையைப் பறைசாற்றுகின்றது. இவ்வாறாக பல வகையான கலாச்சாரங்களை ஏற்றுக் கொண்டதன் மூலம் தான் மலேசியா தனது கலாச்சார அடையாளைத்தில் செழிப்பானதாக இருக்கின்றது.
ஆதலால், டிராகன் படகு திருவிழா பற்றி, குறிப்பாக அதன் தோற்றம், மலேசிய நாட்டின் கலாச்சாரத்துடன் எப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டது, மற்றும் எவ்வாறு மக்கள் இந்த திருவிழாவில் பங்கேற்பர் போன்ற தகவல்களை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்த கட்டுரையில் டிராகன் படகு திருவிழாவுடன் நெருங்கிய தொடர்புடைய ஹோங்சி, ஒட்டும் ரைஸ் போல்ஸ் போன்றவற்றின் தகவல்களும் பகிர்ந்து கொள்ளப்படும்.
திசெம் ரின்போச்சே
டிராகன் படகு திருவிழாவின் தோற்றம்
டிராகன் படகு திருவிழா (சீன: மொழியில் லோங்ச்சுவாஜீ), துவேன் ங், டுவாவூ திருவிழா அல்லது சோங்ஷியாவ் திருவிழா என்றும் அறியப்படுகின்றது. இந்த திருவிழா ஒருவரின் நாட்டுப்பற்றையும் பெற்றோர் மீதான பற்றையும் கொண்டாடும் ஒரு விழாவாக கருதப்படுகின்றது. பாரம்பரியமாக, இந்த விழா, சீனர் லுனார் நாட்காட்டியின் ஐந்தாவது மாதத்தில் ஐந்தாவது நாளில் கொண்டாடப்படுகின்றது. அதனால்தான், அனைத்துலக நாட்காட்டியில் இத்திருவிழாவின் திகதி ஒவ்வொரு வருடமும் மாறி வரும்.
இந்த டிராகன் திருவிழா, மலேசிய சீனர்கள், சீங்கப்பூரியர்கள் மற்றும் தைவான் மக்களிடையே ‘ஐந்தாவது மாத திருவிழா’ அல்லது ‘டம்பிளிங் திருவிழா’ என்றும் அழைக்கப்படுகின்றது. சீன ஹோக்கியன் சமூக மக்களிடையே இவ்விழா பே ச்சுன் என்று அறியப்படுகின்றது.
டிராகன் திருவிழாவின் தோற்றம் பற்றி மூன்று விதமான கதைகள் இருக்கின்றன. இந்த மூன்று கதைகளும் துயரமான ஏறக்குறைய ஒரே மாதிரியான முடிவுகளையே கொண்டுள்ளதுடன் நம்மைச் சிந்திக்க வைக்கும் நன்னெறி பாடங்களையும் அடக்கியுள்ளன.
முதல் கதை: க்யூ யுவனின் புராணக்கதை (340 – 278 கி.மு) – இரக்கமுள்ள பிரபு
க்யூ யுவனின் கதை எல்லோராலும் மிகப் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட டிராகன் படகு திருவிழா தோன்றிய கதையாகும். க்யூ யுவன், பண்டைய கால சீனா நாட்டிலிருந்த ச்சு மாநிலத்தில் வாழ்ந்த இரக்க குணம் நிறைந்த பிரபு ஆவார். சிமா கியானின் மாபெரும் வரலாற்றாசிரியர்கள் பதிவுகளின்படி, அவர் ஒரு ராஜ குடும்பத்தைச் சார்ந்தவர் ஆவார். ஆரம்பத்தில், ச்சுவின் அரசரான ஹுவாயின் ஆட்சிக் காலத்தில் அதாவது 328-299 கி.முவில் அவர் மந்திரியாக பணியாற்றினார். சில ஊழல் நிறைந்த மந்திரிகளின் தாக்கத்தினால், அரசர் ஹுவாய், க்யூ யுவனை ஹன் நதியின் வடக்குப் பிரதேசத்திற்கு நாடு கடத்தினார். அதன் பின்பு, அவரின் பதவி அவருக்கு மீண்டும் வழங்கப்பட்டு ச்சு மாநிலத்திற்கும் அண்டை அரசனான குய் மாநிலத்திற்குமிடையே பண்ணுறவை மேம்படுத்தும் பணியில் அமர்த்தப்பட்டார்.
அரசர் ஹுவாய் மறைந்ததும், அவரின் வாரிசான அரசர் குயிங்சியான் அரியணை ஏறினார். குன் மாநிலம், ச்சு மாநிலத்தைத் தாக்கக்கூடும் என்பதை உணர்ந்த க்யூ யுவன், அவர்களை எதிர்ப்பதற்கு அரசரை குய் மாநிலத்துடன் இணையுமாறு ஆலோசனை கூறினார். அந்த காலகட்டத்தில் பிரதமராக இருந்த சிலான் இந்த ஆலோசனையைக் கேட்டு அதிருப்தி அடைந்தார். அவர் அரசர் குயிங்சியானை க்யூ யுவானுக்கு எதிராக திருப்பினார். அரசர், பிரதமரின் ஆலோசனையைக் கேட்டதனால் க்யூ யுவன் மீண்டும் ஒரு முறை நாடு கடத்தப்பட்டார். இம்முறை யாங்சே நதியின் தெற்கு பகுதிக்கு அனுப்பப்பட்டார்.
நாடு கடத்தப்பட்ட காலத்தில், க்யூ யுவான் அவரின் பெரும்பாலான நேரத்தை, நாட்டுப்புற பாடல்கள் மற்றும் புராணங்களைச் சேகரிப்பதிலும் அவரின் நாட்டுப்பற்றைப் பற்றி கவிதை எழுதுவதிலும் செலவிட்டார், இன்று, அவரின் சில படைப்புகள் சீன இலக்கியங்களில் மிகச் சிறந்த படைப்புகளாக க் கருதப்படுகின்றது.
உள்ளூர் கிராமப்புற மக்கள் க்யூ யுவனின் மீது அதீத மரியாதை வைத்திருந்தனர். இதற்கு காரணம், அவர்கள் அவரை விவேகமானவராகவும் இரக்க குணமுள்ளவராகவும் பார்த்தனர். க்யூ யுவன், ச்சு மாநிலத்திற்கு எதிரான தாக்குதல் குறித்த தனது கணிப்பை எண்ணி மிகவும் கவலைப்பட்டார். இந்த கவலை அவரின் உடல் நலத்தை வெகுவாக பாதித்தது.
278 கி.முவில், க்யூ யுவனின் பயம் உண்மையில் நடந்தது. குன் மாநிலத்தின் படைத்தளபதியான பாய் குய், ச்சுவின் தலைநகரான யிங் நகரத்தைக் கைப்பற்றினார். இந்த செய்தியைக் கேள்விப்பட்ட, க்யூ யுவன் ‘யிங்கின் புலம்பல்’ என்ற ஒரு கவிதையை எழுதி விட்டு, மிலு நதியில் அதாவது இப்பொழுது சீனாவிலுள்ள ஹுனான் பகுதியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். க்யூ யுவனின் தற்கொலையைப் பற்றி கேள்விப்பட்ட உள்ளூர் கிராமப்புற மக்கள் மிலு நதிக்குச் சென்று அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர். அவர்கள் தங்களின் படகுகளில், பறைகளை (டிரம்சு) அடித்துக் கொண்டே க்யூ யுவனைத் தேடினர். க்யூ யுவனுக்கான இந்த தீவிரமான தேடலே டிராகன் படகு திருவிழாவின் தோற்றமாக மாறியது.
க்யூ யுவனின் உடலைத் தேடும் பணியின் போது, தீய சக்திகளிடமிருந்தும் நதியில் இருக்கும் உயிரினங்களிடமிருந்தும் அவரின் உடலைப் பாதுகாக்க, கிராம மக்கள் ரைஸ் போல்ஸ்களை நதியில் வீசினர். பிறகு, க்யூ யுவன் அவரின் தோழர்களின் கனவில் வந்து தன்னுடைய மரணத்திற்கான காரணத்தை விளக்கிய பின், டிராகனை அமைதிப்படுத்த ரைஸ் போல்ஸ்களை முக்கோண வடிவிலான பட்டுப் பொட்டலத்தில் மடிக்கச் சொன்னார். க்யூ யுவனின் நண்பர்கள் இந்த தகவலை மக்கள் அனைவருக்கும் பரப்பினர். அன்றையிலிருந்து முக்கோண வடிவிலான ரைஸ் போல்ஸ் பொட்டலங்களை சீன நாட்காட்டியின் ஐந்தாவது மாதத்தில் ஐந்தாவது நாள், டிராகனுக்கு படைக்கும் பாரம்பரியம் தொடங்கியது. இன்று, முக்கோண ரைஸ் போல்ஸ் பொட்டலங்கள் இலைகளில் மடிக்கப்படுகின்றன. அவை ஸோங்சி என்று அழைக்கப்படுகின்றன.
இரண்டாம் கதை: வூ ஷிசு (அறியப்படாத காலம் – 484 கி.மு) -தனது குருவால் விலக்கப்பட்ட பிரபு
சிமா கியானின் மாபெரும் வரலாற்றாசிரியர்கள் பதிவுகளின்படி, வூ ஷிசு ஷேன்னின் பிரபு அல்லது ஷேன் சு என்றும் அழைக்கப்படுகின்றார். வூவின் அரசர் ஹேலுவின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஆலோசகராக திகழ்ந்த வூ ஷிசு, போ பையின் சந்தேகப்படத்தக்க குணங்களைப் பற்றிய எச்சரிக்கைகளையும் தாண்டி, அவரை பிரதமராக பதவி உயர்வு கொடுக்க பரிந்துரைத்தார். அரசர் ஹேலுவின் மறைவிற்குப் பின், வூ ஷிசுவால் புதிய அரசரான வூச்சையுடன் ஒரு சுமூகமான உறவை வளர்க்க முடியவில்லை. யூவேவின் அரசரான கோஜியான் என்றாவது ஒரு நாள் வூ மாநிலத்தைத் தாக்கக்கூடும் என்றுணர்ந்த வூ ஷிசு, அரசர் வூச்சையை யூவே மாநிலத்தைக் கைப்பற்றுமாறு அறிவுரை கூறினார். ஆனால், அரசர் இதை நம்பவில்லை. அரசர் வூச்சை, போ பியின் அறிவுரையைக் கேட்டார். போ பி இரண்டு இராஜ்ஜியத்திற்கும் இடையில் சமரசம் பேசினார். ஆனால், நிலைமையை கையாள்வதற்காக யூவின் அரசர் போ பிக்கு லஞ்சம் கொடுத்திருந்தது எவரும் அறியவில்லை.
வூ ஷிசு, அரசர் வூச்சையைத் தன் அறிவுரையைக் கேட்கும்படி கெஞ்சினார். ஆனால், இது அவரை கோபத்திற்குள்ளாக்கியது. அரசர், வூ ஷிசுவிடம் ஒரு வாளைக் கொடுத்து தற்கொலை செய்து கொள்ளும்படி உத்தரவிட்டார். மரணிப்பதற்கு முன், வூ ஷிசு தன் கணிப்பு உண்மையாவதை தான் காண வேண்டுமென்பதற்காக, மரணத்திற்கு பிறகு தனது கண்களை நகரத்தின் நுழைவாயிலில் வைக்கும்படி கோரிக்கை விடுத்தார். ஆனால், அரசர் வூச்சை, ஐந்தாவது மாதத்தின் ஐந்தாவது நாளில் வூஷிசுவின் உடலை நதியில் வீசும்படி உத்தரவிட்டார். வூ ஷிசு மரணமடைந்து ஏறத்தாழ 10 மாதத்திற்குப் பின், அவரின் கணிப்பு உண்மையானது. அரசர் வூச்சை குய் மாநிலத்துடன் போரில் இருக்கும் பொழுது, யூவேவின் அரசர் கோஜியான் தாக்குதல் புரிந்து வூ மாநிலத்தைக் கைப்பற்றினார். மனமுடைந்து போன அரசர் வூச்சை, மரணத்திற்குப் பின்னான வாழ்வில் வூ ஷிசுவைப் பார்க்க வெட்கப்பட்டு, தனது கண்கள் மூடப்பட்ட நிலையில் தற்கொலை புரிந்து கொண்டார். அரசர் வூச்சைக்கு செய்த தேச துரோகத்திற்காகவும் வெளி மாநில அரசிடம் இலஞ்சம் வாங்கியதற்காகவும் போ பியை அரசர் கோஜியான் தண்டித்தார். இன்று வரை, டிராகன் படகு போட்டியின் போது குறிப்பாக சீன கிழக்கு மத்திய கடலோர மாநிலங்கள், வூஷிசுவை நினைவு கூருகின்றனர்.
மூன்றாவது கதை: சாவோ ஈ (130 – 143 கி.மு) தந்தையை இழந்த பெண்
சாவோ ஈ என்பவர் மதக்குரு சாவோ ஷுவின் மகளாவார். ஒரு நாள், வூ ஷிசுவின் நினைவு நாளையொட்டி சடங்குகள் செய்து கொண்டிருக்கையில் சாவோ ஷு தவறி ஷுன் நதியில் விழுந்து விட்டார். மனமுடைந்து போன சாவோ ஈ பல நாட்கள் தனது தந்தையை நதியில் தேடினார். அச்சம்பவம் நிகழ்ந்து ஐந்து நாட்களுக்குப் பிறகு, சாவோ ஈ மற்றும் சாவோ ஷுவின் உடல்கள் அந்நதியில் கிடந்தன.
எட்டு வருடங்களுக்குப் பிறகு, உள்ளூர் மக்கள், காவோ ஈயின் தந்தைப் பாசத்தை நினைவு கூறும் வகையில் ஷங்யூவில் ஒரு கோயிலைக் கட்டினார்கள். அதோடு, ஷுன் நதியை காவோ ஈ நதி என அவரின் நினைவாக மறுபெயரிட்டனர். காவோ ஈயின் தியாகம் டிராகன் படகு திருவிழாவின் போது குறிப்பாக சீனாவின் வடகிழக்கு ஜேஜியாங்கில் நினைவு கூறப்படுகின்றது.
சீன அரசர் காலத்தில் தங்களின் செல்வாக்கைப் பெருக்கி கொள்வதற்காக கன்பூசிய சிந்தனையாளர்கள் இந்த புராணக்கதைகளை ஊக்குவித்ததாக சில வாதங்கள் இருக்கின்றன. 20-ஆம் நூற்றாண்டின் அறிஞரான, பேராசிரியர் வென் இடுஹோவின் கருத்துப்படி, டிராகன் படகு திருவிழா டிராகன் வழிபாட்டின் மூலம் தோன்றிய பாரம்பரியமாகும். டிராகன் படகு போட்டி, டிராகனுக்கு மரியாதை செலுத்தும் ஒரு செயலாகவும் உலகத்தின் ஆண் சக்தியின் அடையாளமாகவும் நடத்தப்படுகின்றது. ஸோங்சி, டிராகன் அரசனுக்கு வழங்கப்படும் படையலாகும். பண்டைய கால சீனர்கள், தங்களின் வாழ்வாதாரத்திற்கு விவசாயத்தைப் பெரிதும் நம்பி இருந்ததால், வானிலை மிகப்பெரிய பங்கை ஆற்றியது. வானிலையைக் கட்டுப்படுத்தும் திறமை டிராகன்களுக்கு இருப்பதாகாவும் அதனால் விவசாயத்தின் விளைச்சல் நேரடியாக பாதித்ததாகவும் சொல்லப்பட்டது. டிராகன்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதன் மூலம் நல்ல வானிலை அமைவதோடு அதனால் ஏற்படும் நல்ல அறுவடையின் மூலம் உள்ளூர் சமூகத்தினரின் வாழ்வாதாரமும் அமைந்திருந்தது. டிராகன் ஓர் அடையாளமாக வூ மற்றும் யூவே மாநிலங்களில் வியாபித்திருந்தது. பேராசிரியர் வென் இடுஹோவின் கருத்துப்படி, டிராகன் படகு திருவிழா வூ மற்றும் யூவே மாநிலங்களின் மிகவும் தனித்தன்மை வாய்ந்த வழக்கமாகும் ஆனால், காலப்போக்கில் அது சீனா நாடு முழுதும் பிரசித்தி பெற்றது.
எப்படி மற்றும் ஏன் இந்த புராணக் கதைகள் விளம்பரப்படுத்தப்பட்டன என்பதை பொருட்படுத்தாமல் இன்று வரை டிராகன் படகு திருவிழா தொடர்ந்து கொண்டாடப்படுகின்றது.
இத்திருவிழா எப்படி மலேசியாவில் ஏற்றுக் கொள்ளப்பட்டது
எங்கெல்லாம் சீனர்கள் பயணம் மேற்கொண்டார்களோ (வணிகத்திற்காகவோ அல்லது மற்ற காரணங்களுக்காகவோ), அவர்கள் தங்களின் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் தங்களுடன் கொண்டு சென்றனர். மலேசிய புள்ளியியல் துறையின்படி, சீனர்களின் மக்கள் தொகை 2014-ஆம் ஆண்டிற்கும் 2016-ஆம் ஆண்டிற்கும் இடையில் குறைந்தது 23.4% இருந்தது. இது மலேசிய மக்கள் தொகையில் கால் பங்காகும். ஆதலால், டிராகன் படகு திருவிழா மலேசியாவில் புலம்பெயர்ந்து வாழும் சீன சந்ததிகள் உள்ளிட்ட பல இன மக்களும் பெரிதும் பங்கேற்கும் விழாவாக இருப்பதில் எள்ளவும் ஆச்சரியமில்லை.
மலேசிய அரசாங்கம் பல இன மக்கள் சுபீட்சமாக வாழ்வதற்கு இந்த டிராகன் படகு திருவிழா ஒரு முக்கியமான விழாவாக திகழ்கிறதென்று பெருமை கொண்டுள்ளது. மலேசிய சுற்றுலா மற்றும் கலாச்சார துறையின் துணை நிறுவனமான மலேசிய சுற்றலாத்துறை ஊக்குவிப்பு வாரியம் தன்னுடைய மலேசிய நிகழ்வுகள் மற்றும் விழாக்களின் பதிப்பகத்தில் டிராகன் படகு திருவிழாவையும் இணைத்துள்ளனர். மலேசிய சுற்றலாத்துறை ஊக்குவிப்பு வாரியம் டிராகன் படகு திருவிழாவை கீழ்கண்டவாறு அங்கீகரித்துள்ளது:
“…அணி ஒற்றுமை வளர்க்கும் விளையாட்டு, அதோடு கட்டொழுங்கு, உடற்பயிற்சி மற்றும் மனக் கட்டுப்பாடு போன்றவற்றை ஊக்குவிக்கும் விளையாட்டு. இன சுபீட்சத்தை வேரூன்ற செய்யும் சிறப்பான விளையாட்டாகும்.”
நடவடிக்கைகள்
ஒட்டும் ரைஸ் போல்ஸ் சமைத்தல் மற்றும் உண்ணுதல்
பாரம்பரிய சீன குடும்பங்கள் வருடந்தோரும் ஹோங்சி செய்வதற்காக ஒன்று கூடுவார்கள். டிராகன் படகு போட்டிகளை ஏற்பாடு செய்தல், கலந்து கொள்ளுதல் மற்றும் கண்டு களித்தல் போன்றவற்றுடன் மலேசிய சீன சமூகத்தினர், ஹோங்சி சமைத்து உண்டும் டிராகன் படகு திருவிழாவைக் கொண்டாடுகின்றனர். பண்டைய கால சீன கிராம மக்கள், டிராகனை திருப்தி படுத்துவதற்காகவும் மந்திரி க்யூ யுவனின் உடலைப் பாதுகாக்கவும் ரைஸ் போல்ஸ்களை நதியில் வீசிய காலத்தில் இந்த பாரம்பரியம் தொடங்கியது.
அதன் புகழின் காரணத்தால், ஹோங்சி மிகச் சாதாரணமான மூங்கிலில் மடிக்கப்பட்ட சோறு உருண்டைகளிலிருந்து வகைப்படுத்தப்பட்ட நிரப்பல்களுக்கு பரிணாமம் அடைந்துள்ளது. கடந்த காலங்களில், ஹோங்சி டிராகன் படகு போட்டிகளின் போது மட்டுந்தான் கிடைக்கும். இப்பொழுது, சீன மக்கள் வாழும் இடங்களில் ஆண்டு முழுதும் கிடைக்கப் பெறுகின்றது. ஹோங்சியின் வடிவம் இடத்திற்கு இடம் மாறுபட்டதாக இருந்தாலும் பொதுவாக முக்கோண வடிவில் இருக்கும். வழக்கமான, சீன குடும்ப பாரம்பரியத்தின்படி, ஹோங்சி செய்வது குடும்ப காரியமாகும். அனைவரும் பங்கு பெறுவர். வழக்கமாக மூங்கில் இலையில் மடித்தாலும், சோளம், வாழைப்பழம் மற்றும் பாண்டான் போன்றவற்றின் இலைகளைக் கொண்டும் ரைஸ் போல்ஸ்களை மடிக்கலாம். ஒவ்வொரு இலையும் வெவ்வெறான சுவையையும் மணத்தையும் அந்த உணவிற்குக் கொடுக்கின்றன.
ஹோங்சினுள் நிரப்படும் பொருட்கள் விருப்பத்திற்கு தகுந்தாற் போல் வேறுபட்டாலும் பெரும்பாலும் ஒட்டும் அரிசிதான் பயன்படுத்தப்படும். ஹோங்சியை மடிப்பதே ஒரு கலையாகும். ஹோங்சியை வேக வைக்கும் பொழுது அதனுள் நிரப்பப்பட்ட பொருட்கள் நிலைகுலையாமல் அப்படியே இருந்தால், அதை சமைப்பவர்கள் வெற்றியடைந்தாக கருதப்படுகின்றது. பெரும்பாலும், ஹோங்சி செய்முறை மற்றும் அதனை மடிக்கும் திறன் காலங்காலமாக குடும்பத்தில் உள்ள சந்ததியினருக்கு கற்றுத் தரப்படுகின்றது.
டிராகன் படகு திருவிழாவிற்கு ஒரு நாள் முன்பு, பாரம்பரிய சீன குடும்பங்கள் ஹோங்சியை தங்களின் முன்னோர்களுக்கும் தெய்வங்களுக்கும் மரியாதை தெரிவிக்கும் வகையில் படைத்த பின்னர் உண்பார்கள்.
ஹோங்சி மலேசியாவில் பரவலாக சாங் என்று அழைக்கப்படுகின்றது, மலேசியாவில் பொதுவாக சாங் சில வகைகளில் கிடைக்கும்:
- பாக் சாங்: பாங் சாங் பொதுவாக தேவைக்கேற்ப பன்றிறைச்சியும் உப்பு போடப்பட்ட முட்டைக்கரு, கசுக்கொட்டை, காய்ந்த இறால் மற்றும் காளான் ஆகியற்றை உள்ளடக்கி இருக்கும். சோறு பொதுவாக பழுப்பு வண்ணத்தில் இருக்கும்.
- கியாம் தீ சாங் (ஞோஞ்ஞா ஒட்டும் சோறு உருண்டைகள்): கியாம் தீ சாங் மலேசிய சீனர்களின் நிபுணத்துவமாக கருதப்படுகின்றது. அது பொதுவாக மெல்லிசாக நறுக்கப்பட்ட பன்றிறைச்சியும் நீற்றுப்பூசணியோடு ஐந்து வகையான மசாலாக்களும் மிளகும் கொண்டிருக்கும்.
- கீ சாங்: கார நீருடன் (அல்கலைன்) ஒட்டும் சோறு. பொதுவாக இதை சீனியுடனோ அல்லது சர்க்கரையும் பழமும் கலந்து செய்யப்பட்ட பாகுடனோ சாப்பிடுவார்கள். இது ஒரு வகையான இனிப்பு பண்டமாகும்.கார நீருடன் (அல்கலைன்) ஒட்டும் சோறு. பொதுவாக இதை சீனியுடனோ அல்லது சர்க்கரையும் பழமும் கலந்து செய்யப்பட்ட பாகுடனோ சாப்பிடுவார்கள். இது ஒரு வகையான இனிப்பு பண்டமாகும்.
அப்படி நீங்கள் ஹோங்சி செய்வதற்காக கூடும் குடும்பத்திலிருந்து வரவில்லையென்றாலும், நீங்கள் இந்த சுவை நிறைந்த உணவை வாங்கி உண்ணலாம். நீங்கள் வாங்குவதற்கு நிறைய இடங்கள் இருக்கின்றன. இருப்பினும், கீழே சிறந்த இடங்களின் தகவல்களைப் பகிர்கின்றோம்:
ஹோ யோக் கீ
இந்த கடை கோலாலம்பூரிலுள்ள பெட்டாலிங் தெருவில் இருக்கின்றது. இந்த கடையை இக்குடும்பத்தினர் 1960-லிருந்து நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
முகவரி:
No. 327 Jalan Hang Lekir
50000 Kuala Lumpur
வணிக நேரம்: 7:00 – 22:00
யூக் தோ யின்
இந்த உணவகம் டாமான்சாரா அப்டவுனில் இருக்கின்றது. இவர்கள் கந்தோனீஸ் உணவுகளில் நிபுணத்துவம் பெற்றிருக்கின்றனர். இவர்கள் சிறிய அளவில் மற்றும் பெரிய அளவில் கந்தோனீஸ் முறையில் டம்பிலிங்ஸ் தயாரித்து விற்கின்றனர். இவர்களின் பெரிய அளவிலான டம்பிலிங்ஸ் கிட்டதட்ட ஒரு கிலோவாகும்.
முகவரி:
13 Jalan SS 21/37
Damansara Utama
Petaling Jaya
47400 Selangor
வணிக நேரம்: 10:30 – 15:00 & 18:00 – 23:00
இம்பி மார்கேட்
இம்பி மார்கேட்டினுள், பல வருடங்களாக மூன்று சகோதரிகள் நடத்தி வரும் கடை ஒன்று இருக்கின்றது. அவர்கள் கந்தோனீஸ் சோங் மற்றும் ஞோஞ்ஞா டம்பிளிங்ஸ் விற்கின்றனர்.
முகவரி:
12, 6, Jalan Kampung Pudu
55100 Kuala Lumpur
வணிக நேரம்: 6:30 – 12:00
நோபல் மென்சன்
நோபல் மென்சன், ஷீடேக் காளான் மற்றும் லிங்ஷீ போன்றவை நிரப்பப்பட்ட உயர் ரக ஹோங்சிகளை விற்கின்றனர்.
முகவரி:
1st Floor The Plaza at Jaya 33
1 Jalan Semangat, Seksyen 14
Petaling Jaya
46100 Selangor
வணிக நேரம்: 11:00-15:00 & 18:00 – 23:00
டிராகன் படகு போட்டியில் கலந்து கொள்ளுதல்
மலேசிய நிகழ்வு மற்றும் விழாக்கள் 2016-ன்படி, டிராகன் படகு போட்டிகள் கீழ்கண்ட இடங்களில் நடைபெற்றன:
- மலாக்கா – அனைத்துலக மலாக்கா நதி விழாவின் ஒரு பகுதி (25 மே – 4 ஜூன் 2016) மற்றும் மலாக்கா அனைத்துலக டிராகன் படகு போட்டி (11 ஜூன் 2016)
- பினாங்கு – பினாங்கு அனைத்துலக டிராகன் படகு திருவிழாவின் ஒரு பகுதி (28-29 மே 2016)
- சபா – சபா FCAS அனைத்துலக டிராகன் படகு போட்டியின் ஒரு பகுதி (21 -22 ஜூன் 2016)
- புத்ராஜெயா – மலேசிய அனைத்துலக டிராகன் படகு போட்டியின் ஒரு பகுதி (25-26 செப்டம்பர் 2016)
- சரவாக் – சரவாக் அனைத்துலக படகு போட்டியின் ஒரு பகுதி (11-13 நவம்பர் 2016)
அதன் தொடக்கத்திலிருந்து, டிராகன் படகு போட்டி ஒரு தொழில்முறை சார்ந்த விளையாட்டாக பரிணாமம் அடைந்திருக்கின்றது. இந்த நிகழ்வு சீன லூனார் நாட்காட்டியின் ஐந்தாவது மாதத்திற்கு மட்டும் உட்பட்டதாக இல்லை. சில டிராகன் படகு போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் உதாரணத்திற்கு அனைத்துலக டிராகன் படகு சங்கம் (IDBF) மற்றும் ஆசியான் ஒலிம்பிக் மன்றத்தின் துணை நிறுவனமான ஆசியான் டிராகன் படகு சங்கம், ஆகியவற்றின் விதிமுறைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் கட்டுப்படுவதாக சரவாக் அனைத்துலக டிராகன் போட்டி 2016, பகிங்கரமாக அறிவித்திருக்கின்றனர். அனைத்துலக டிராகன் படகு சங்கத்தின்படி, மலேசிய டிராகன் படகு சங்கம் 1991-ஆம் ஆண்டிலிருந்தே அடிப்படை உறுப்பினராக பதிவு செய்திருக்கின்றது.
புத்ராஜெயா டிராகன் படகு போட்டி – 300மீட்டர் 22 குழுக்கள் இறுதிச்சுற்று 2016
Or view the video on the server at:
https://video.tsemtulku.com/videos/DragonBoatRace.mp4
டிராகன் படகு போட்டிக்கான முன்னேற்பாடுகள்
தனிநபர் முன்னேற்பாடு
டிராகன் படகு போட்டியில் கலந்து கொள்வதற்கு பலமான தசையும் உறுதியான நுரையீரலும் ஒருவருக்கு இருக்க வேண்டும். ஆதலால், பங்கேற்பாளர்கள் காயங்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள உடலளவிலும் மனதளவிலும் வலிமைப் படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
குழு முன்னேற்பாடு
ஒவ்வொரு குழுவும் வெற்றி பெறுவதற்கான தங்களின் தனிப்பட்ட உத்திகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும் என்றாலும், சில அடிப்படை திறன்கள் உதாரணத்திற்கு குழு ஒருங்கிணைப்பு, துடுப்பைச் செலுத்தும் முறை போன்றவை அத்யாவசியமானவை. போட்டிக்கு முன்பாக, குழுவிலுள்ள அனைத்து உறுப்பினர்களும் ஒன்றிணைந்து பயிற்சி மேற்கொள்வது மிக அவசியமாகும். உலக டிராகன் படகு காலண்டர் வலைத்தளத்தின்படி,
“தீவிர டிராகன் படகு போட்டியாளர்கள், ஆண்டு முழுவதும் குளிரான குளிர் மாதத்திலும் பயிற்சி எடுப்பர்.”
http://www.dragonboatcalendar.com/training.htm
கட்டணம், பதிவு மற்றும் பரிசுகள்
கட்டணமும் பதிவும் 2016-ஆம் ஆண்டிற்கானது. ஆகவே, வரும் காலங்களில் மாறக்கூடும். போட்டியில் பங்கு பெறுவதற்கான கட்டணம் ஒரு நபருக்கு மலேசிய ரிங்கிட் 150-300 வரை வசூலிக்கப்படும். பரிசுகள் வெற்றிக் கோப்பை, பதக்கங்கள் மற்றும்/அல்லது பணம் சார்ந்த பரிசுகளாகவும் இருக்கும்.
பங்கேற்பாளர்களுக்கான தங்கும் வசதிகள்
டிராகன் படகு போட்டி பெரும்பாலும் நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு நீடிக்கும். இது பதிவு, குழு சந்திப்புக்கூட்டம், பயிற்சி, இரண்டு நாள் போட்டி நிகழ்வு மற்றும் உள்ளூரைச் சுற்றிப் பார்ப்பதற்கு ஒரு நாள் போன்றவற்றை உள்ளடக்கியது. பெரும்பாலும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பங்கேற்பாளர்களுக்குத் தேவையான தங்கும் வசதியையும் ஏற்பாடு செய்து கொடுப்பர்.
உடை தேவைகள்s
பயிற்சியின் போது அல்லது டிராகன் படகு போட்டியில் பங்கு பெரும் போது நீரில் நனையாத உடைகளை உதாரணத்திற்கு ட்ராய் விட் மற்றும் கூல்மேக்ஸ் துணி ஆகியவற்றை உடுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். இறுக்கமான உடைகளை அணிவது நல்லது ஏனெனில் தளர்வான உடைகள் நனைந்தவுடன் எளிதில் இழுக்க முடியும்.
மலேசியாவிற்கு வருகை புரிதல்
மலேசியாவிற்குள் நுழைவதற்குத் தேவையான பயண ஆவணங்கள்
மலேசியாவிற்கு வருகை புரிய விரும்பும் சுற்றுப்பயணிகளின் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) மலேசியாவிற்குள் நுழைவதற்கு முன் குறைந்த பட்சம் 6 மாதம் வரையிலான கால வரைமுறையில் (செல்லுபடியாக) இருத்தல் அவசியம். ஆசியான் நாடுகளின் பிரஜைகள் (புரூணை, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மியன்மார், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம்) மலேசியாவில் 30 நாட்கள் வரை விசா இல்லாமல் தங்கலாம்.
மற்ற நாடுகளிலிருந்து வரும் சுற்றுப்பயணிகள், விசாவிற்கு முன் விண்ணப்பம் செய்து கொள்ளலாம் அல்லது மலேசிய ரிங்கிட் 330-க்கு மலேசியா வந்தடைந்ததும் கிடைக்கும் விசாவை (Visa On Arrival) அல்லது 90 நாட்களுக்கான பார்வையாளர் பெர்மிட்டைப் பெறலாம். பயணத்திற்கு முன்பு அருகில் இருக்கும் மலேசிய தூதரகத்தில் அல்லது ஆன்லைனில் விசா தேவையைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். தற்பொழுது, சீனா, இந்தியா, வங்காளாதேசம் மற்றும் நேபால் நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளும் இ-விசாவிற்கு விண்ணப்பம் செய்யும் தகுதியைப் பெற்றிருக்கின்றார்கள்.
மலேசியாவில் உடுத்தும் உடைகள்
மலேசியா வெப்ப மண்டல நாடு என்பதை ஞாபகத்தில் கொள்ளுங்கள். ஆதலால், இங்கே பெரும்பாலான மக்கள் மெல்லிசான மற்றும் குளிர்ச்சி கொடுக்கும் துணிகளால் ஆன உடைகளையே அணிவார்கள். ஆகையால், மலேசியாவிற்கு வருகை தரும்பொழுது, மெல்லிசான சட்டைகள், அரை காற்சட்டைகள், முட்டி வரையிலான பாவாடைகள், உடைகள், முழு காற்சட்டைகள், குளுமைக் கண்ணாடிகள், தொப்பி, குளிருடை மற்றும் குறைந்தது ஒரு ஸ்கார்ஃப் அல்லது துப்பட்டா போன்றவற்றை கொண்டு வரும்படி அறிவுறுத்தப்படுகின்றனர். அதோடு, தட்டையான மற்றும் வசதியான காலணிகளையும் கொண்டு வருவது நல்லது.
மலேசியாவில் இருக்கும் பொழுது நீங்கள் எப்படி பயணம் செய்யலாம்
நீங்கள் மணி நேர கட்டணம் செலுத்தும் நீண்ட பயணத்திற்கான வாடகை வண்டி சேவையைப் பயன்படுத்தலாம் அல்லது முக்கிய நகரங்களில் மலிவான பொது போக்குவரத்துப் பயன்படுத்தலாம். நீங்கள், கோலாலம்பூரில் இருந்தால், இலகு இரயில் சேவை (எல்ஆர்டி) அல்லது மோனோரயில் சேவையைப் பயன்படுத்தலாம்.
மலாக்கா அல்லது பினாங்கில் இருக்கும் ஜோர்ஜ்டவுனுக்குச் சென்றால், நீங்கள் பராம்பரிய போக்குவரத்தான சைக்கிள் ரிக்ஷா சேவையை அனுபவிக்கலாம்.
மலேசியாவில் நீங்கள் எங்கு தங்கலாம்
மலேசியாவில் தங்குவதற்கு இடம் தேடுவது மிக எளிது. இங்கே நிறைய ஹோட்டல் மற்றும் தங்கு விடுதிகள் இருக்கின்றன. பார்வையாளர்கள் பதிவு செய்வதற்கு முன்பு, ஆன்லைனில் தேடி மற்றவர்களின் கருத்துக்களைப் படித்து தெரிந்து கொள்ளலாம்.
பினாங்கில் உள்ள சில ஹோட்டல்கள்
பெய்வியூ ஹோட்டல் ஜோர்ஜ்டவுன்
முகவரி:
Lebuh Farquhar
George Town
10200 George Town
Pulau Pinang
Malaysia
தொலைபேசி எண்: +60 4-263 3161
ஈஸ்டேன் & ஓரியன்டல் ஹோட்டல்
முகவரி:
Lebuh Farquhar
George Town
10200 George Town
Pulau Pinang
Malaysia
தொலைபேசி எண்: +60 4-222 2000
ஜி ஹோட்டல் பினாங்கு
முகவரி:
168A, Persiaran Gurney
Pulau Tikus
10250 George Town
Pulau Pinang
Malaysia
தொலைபேசி எண்: +60 4-238 0000
கோலாலம்பூரில் உள்ள சில ஹோட்டல்கள்:
ஆர்எச்ஆர் ஹோட்டல்
முகவரி:
Kampus Putrajaya University Tenaga Nasional, KM7
Jalan Ikram-Uniten
43009 Kajang
Selangor
Malaysia
தொலைபேசி எண்: +60 3-8922 2088
ஹோட்டல் பாங்கி புத்ராஜெயா
முகவரி:
Off, Persiaran Bandar
43650 Bandar Baru Bangi
Selangor
Malaysia
தொலைபேசி எண்: +60 3-8210 2222
எம்பெரஸ் ஹோட்டல் செப்பாங்
முகவரி:
Jalan ST 1c/7
43900 Sepang
Malaysia
தொலைபேசி எண்: +60 3-8706 7777
மலாக்கா நதியோரம் உள்ள சில ஹோட்டல்கள்:
குவாய்சைட் ஹோட்டல்
முகவரி:
Jalan Merdeka, Bandar Hilir
75000 Melaka
Malaysia
தொலைபேசி எண்: +60 6-284 1001
தி ஷோர் @ மலாக்கா ரீவர்
முகவரி:
Kampung Bunga Paya Pantai
75100 Malacca
Malaysia
தொலைபேசி எண்: +60 6-282 2666
906 ரீவர்சைட் ஹோட்டல் மலாக்கா
முகவரி:
52, Jalan Kampung Hulu
75200 Melaka
Malaysia
தொலைபேசி எண்: +60 6-282 8906
தகவல் மூலம்:
- https://en.wikipedia.org/wiki/Qu_Yuan
- https://en.wikipedia.org/wiki/Sima_Qian
- https://en.wikipedia.org/wiki/Wu_Zixu
- http://malaysia.com/duanwu-festival-culture.html
- http://www.freemalaysiatoday.com/category/nation/2016/07/26/chinese-population-continues-to-decline/
- http://www.penangdragonboat.gov.my/portal/
- Malaysia Tourism Promotion Board (Ministry of Tourism and Culture, Malaysia); Malaysia Events & Festivals 2016; December 2015
- http://www.idbf.org/members
- https://sarawaktourism.com/event/sarawak-international-dragon-boat-regatta/
- http://www.ocasia.org/Sports/SportsFed.aspx?PeMZ0l6yoEEW02q3HVv9iEEDm3tIwYs4
- https://en.wikipedia.org/wiki/Zongzi
- http://malaysia.com/blog/chinese-dumplings-chang/index.html
- http://www.mykeuken.com/2011/06/puah-kiam-ti-chang-nyonya-glutinous.html
- http://www.dragonboatcalendar.com/fitness_conditioning.htm
- http://www.dragonboatcalendar.com/training.htm
- http://www.kln.gov.my/web/are_dubai/other_information/-/asset_publisher/2TQe/content/visa-requirements-for-foreigners-application-requirements-forms
- https://www.windowmalaysia.my/evisa/evisa.jsp?lang=en
- http://www.lsa.umich.edu/chinanow/pdfs/FAQs.pdf
- http://travelfashiongirl.com/what-to-wear-in-malaysia/
- http://www.lonelyplanet.com/malaysia/transport/getting-around/local-transport
- http://www.hungrygowhere.my/dining-guide/best-picks/5-best-places-to-get-dumplings-in-kl-*aid-70533101/
- http://www.kuala-lumpur.ws/magazine/jalan-imbi-market.htm
- http://www.hoteltravel.com/malaysia/penang/penang-hotels-and-the-dragon-boat-festival.htm
மேலும் பல சுவாரஸ்யமான இணைப்புகளுக்கு:
- 25 Mouthwatering Dishes of Malaysia
- Thaipusam – The Festival of Lord Murugan
- Pilgrimage to Mount Wutai
- I Visited This Great Temple in Penang
- Why Malaysia?
- Must Visit Temple in Genting Highlands, Malaysia (Chin Swee)
- Kek Lok Tong Cave & Lost World in Ipoh
- Power Place: Jog Falls
- Plum Village
Please support us so that we can continue to bring you more Dharma:
If you are in the United States, please note that your offerings and contributions are tax deductible. ~ the tsemrinpoche.com blog team
நன்றி திசெம் ரின்போச்சே. டிராகன் படகு திருவிழா பற்றி, குறிப்பாக அதன் தோற்றம், மலேசிய நாட்டின் கலாச்சாரத்துடன் எப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டது, மற்றும் எவ்வாறு மக்கள் இந்த திருவிழாவில் பங்கேற்பர் போன்ற தகவல்களை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்த கட்டுரையில் டிராகன் படகு திருவிழாவுடன் நெருங்கிய தொடர்புடைய ஹோங்சி, ஒட்டும் ரைஸ் போல்ஸ் போன்றவற்றின் தகவல்களும் பகிர்ந்து கொள்ளப்படும்.