மலேசியாவில் விசாக தினம்
மலேசியாவில் வசிப்பதற்கு நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்.மேலும், மலேசியா என் வசிப்பிடம் என சொல்லிக் கொள்வதில் நான் பெருமை படுகின்றேன். நான் நானாக இருப்பதற்கும், என்னுடைய குறிக்கோளை தொடர்வதற்கும், அன்புள்ளம் கொண்ட மக்களை சந்திப்பதற்கும் மலேசிய திருநாடு வழிவகுத்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர், காடேன் ஷார்சே மடத்தைத் சேர்ந்த என்னுடைய ஆசிரியர்களுள் ஒருவரான கியாம்ஜே லாத்தி ரின்போச்சே அவர்களும், என்னுடைய பாதுகாவலரும் என்னை இங்கே இருக்கும்படி கேட்டுக்கொண்டனர். அந்த தருணத்தில், எனக்கு அது ஏன் என்று புரியவில்லை. ஆனால் இப்பொழுது அது புரிந்து விட்டது.நிறைய வாய்ப்புகள், நல்ல சூழல் மற்றும் நல்ல நண்பர்கள் நிறைந்த ஒரு நாட்டிற்கு என்னை அனுப்பியதில் நான் மிகுந்த நன்றியுடையவனாக இருக்கின்றேன். நான் மிகவும் பாராட்டுவது, மலேசியாவில் உள்ள பல்வேறு கலை கலாச்சாரங்கள் ஆகும். அதன் ஓர் உதாரணம் விசாக தின கொண்டாட்டம். விசாக தினம் உலகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்படுகின்றது. ஆனால், மலேசியாவில் விசாக தினம் ஒரு பொது விடுமுறையாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
விசாக் என்றும் அழைக்கப்படும் விசாக தினமானது, சாக்கியமுனி புத்தரின் வாழ்க்கை வரலாற்றில் மூன்று முக்கிய நிகழ்வுகளான அவருடைய பிறப்பு, 35-ஆவது வயதில் ஞானம் பெற்றது மற்றும் 80-ஆவது வயதில் உலகை விட்டு மறைந்தது ஆகியவற்றை பௌத்தர்கள் நினைவுகூர்ந்து கொண்டாடும் நாள் ஆகும். புத்த சமயத்தை ஒரு தத்துவமாகவும் அதே சமயத்தில் ஒரு மதமாகவும் வகைப்படுத்தலாம். வாழ்க்கை தத்துவமாக, ஒரு மனிதன் வாழும் முறையையும், மதமாக துக்கத்தை நீக்கும் வழிகளையும் புத்தராகும் மார்க்கத்தையும் புத்த சமயம் கற்று கொடுக்கின்றது.
நம்முடைய துக்கத்தை முழுமையாக ஒழிப்பது சாத்தியமாகும். மேலும் நாம் அந்நிலையை அடைந்து விட்டால், அதுவே நிர்வாணா என்று அழைக்கப்படுகின்றது. புத்தர் ஞானம் அல்லது நிர்வாணா அடைந்த அந்நாளை உலகம் முழுவதுமுள்ள பௌத்தர்கள் அந்த நோக்கம் அவர்கள் வாழ்விலும் நிறைவேற எண்ணி கொண்டாடுகின்றனர். நமது குறிகோள்களை நமக்கு நினைவுறுத்தவும் அதனை கடைபிடிப்பதன் நோக்கத்தையும் அதோடு ஒவ்வொருவரும் அவர்களின் புத்தராகும் உள்நிலை தகுதியுடன் இணைப்பதற்காகவும் விசாக தினம் கொண்டாடப்படுகின்றது. சாதாரண கொண்டாட்டம் என்பதனையும் தாண்டி இது ஆன்மீக நினைவுறுத்தல் மற்றும் உண்மையான உள் நிலையை மாற்றும் வாய்ப்பின் செயலாகும்.
உலகின் பழமையான மதங்களுள் புத்தமதம் ஒன்றாகும். சுமார் 2500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான புத்த மதத்தின் தோற்றுனர் வட இந்தியாவின் இளவரசரான சாக்கியமுனி புத்தர் ஆவார். மக்கள் சிலர் நம்புவது போல் அவர் புராண கதைகளில் வரும் ஒரு மனிதர் இல்லை. மாறாக, உண்மையாக வாழ்ந்த ஒரு வரலாற்று மனிதர் ஆவார். பகவான் புத்தர் வாழ்க்கையின் இயல்பு, தோற்றம், குடும்பம் மற்றும் மக்களைப் பற்றி அறிந்து கொள்ள தியானத்தில் ஆழ்ந்தார். நாம் செய்யும் அனைத்து செயல்களும் நமக்கு துயரத்தையும் துக்கத்தையுமே கொண்டு வரும் என அந்த தியானத்தின் மூலம் அறிந்து கொண்டார். நாம் அறியாமையின் காரணத்தால், செய்த செயல்களையே மீண்டும் செய்து, இந்த துக்க மற்றும் துயரத்தின் சுழற்சியில் சிக்குண்டு இருப்பதை அவர் அறிந்தார்.
இந்த உண்மையை அறிந்த புத்தர், நம் மேலுள்ள பெருமளவு கருணையால், நாம் இவ்வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கான வழிமுறைகளையும், நாம் எவ்வாறு நமது சுற்றுப்புறத்தைக் காண வேண்டும் என்பதனையும் நம்முடைய சுற்றுப்புறத்தையும் நம்மை சுற்றியுள்ளவர்களையும் நாம் எவ்வாறு கையாள வேண்டும் என்பதனையும் கற்றுத் தந்தார். இதன் மூலம் நாம் நம்முடைய எதிர்வினைகளை எவ்வாறு மாற்றி அமைத்து, நாம் உருவாக்கும் துயரத்தையும் துக்கத்தையும் குறைப்பது பற்றியும் அவர் கற்றுத் தந்தார். ஒரு பௌத்தரின் குறிக்கோள், அறிவொளியை பெறுவது ஆகும். ஆகவே, நம்முடைய துக்கத்தை முழுமையாக ஒழிப்பது சாத்தியமாகும். ஒரு பௌத்தரின் குறிக்கோள், அறிவொளியை பெற்று அதன் மூலம் நம்முடைய துக்கத்தை முழுமையாக ஒழிப்பதோடு அந்நிலையை அடைந்தவுடன் மற்றவர்களும் அதனை அடைவதற்கு உதவி புரிவதாகும். அதாவது, நம் வாழ்வின் துன்பங்களை முதலில் போக்கி விட்டு பின் மற்றவர்களுக்கும் உதவுதல் ஆகும். ஆகவே, அனைவரையும், மிருகங்களையும் மனிதர்களையும் கலாச்சாரங்களையும் மற்றும் செயல்முறைகளையும் மதித்தல் மிக அவசியம். இது புத்த போதனையில் வலியுறுத்தப்படுகின்றது.
விசாக தினத்தின் தோற்றம்

இளவரசர் சித்தார்த்தரின் புனித பிறப்பு
புத்தரின் வாழ்க்கை வரலாற்றுப்படியும், குலத்தை மையமாகக் கொண்டு கதை கூறும் இந்திய இலக்கியங்களின் படியும், இளவரசர் சித்தார்த்த கெளதமர், சாக்கிய வீர குலத்தில், அவரின் தாயார் மகாராணி மாயா, தனது தந்தையாரின் வீட்டிற்குச் செல்லும் வழியில் சாரா மரம் எனப்படும் நாகலிங்க மரத்தினில் சாய்ந்து ஓய்வெடுக்கையில் மிகவும் அதியசமான முறையில் பிறந்தார். பழங்காலத்தில் பிறப்பேறு காலத்தில் பெண்கள் தங்களின் பெற்றோரின் வீட்டிற்குச் செல்வது வழக்கமாகும். தனது தந்தையாரின் வீட்டிற்குச் செல்லும் வழியில், அவர் பயணத்தை நிறுத்தி, அழகான பூக்களும், கூவும் பறவைகளும் மற்றும் அற்புதமான மயில்களும் நிறைந்த்திருந்த பூங்கா ஒன்றில் இளைப்பாறினார். அண்மைய தொல்பொருள் கண்டுபிடிப்பில், இளவரசர் சித்தார்த்தர் பிறந்தது தற்பொழுது நேபாளத்திலுள்ள லும்பினி என்ற இடம் என்று கூறப்படுகின்றது.
இளவரசர் சித்தார்த்தர் பிறப்பதற்கு முன், அவரின் தாயார், சாக்கிய குலத்தின் மகாராணி மாயா, கனவொன்றைக் கண்டார். அக்கனவில், தெய்வலோகத்திலிருந்து தோன்றிய ஆறு தந்தங்கள் கொண்ட யானை ஒன்று அவரை நெருங்கி வந்தது. அந்த யானை மலைப்பனி போன்ற வெள்ளை நிறத்தில் இருந்ததோடு தனது தும்பிக்கையில் இளஞ்சிவப்பு நிறத்திலான ஒரு தாமரைப்பூவைக் கொண்டு வந்தது. அது அத்தாமரையை மகாராணி மாயாவின் கருவறைக்குள் வயிற்றின் வழி வைத்ததோடு அந்த யானையும் மறைந்து அவரின் கருவறைக்குள் நுழைந்தது. மகாராணி கண் விழித்த போது, அவர் மனத்திற்குள் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்திருந்தது.
மறுநாள், மகாராணி மாயாவின் கணவரான, மன்னர் சுதோதனர் அனைத்து ஜோதிடர்களையும் மற்றும் ஆன்மீகவாதிகளையும் அக்கனவினைப் பற்றி விளக்குவதற்காக தனது அரண்மனைக்கு வரவழைத்தார், அவர்களின் கணிப்பு என்னவென்றால், பிற்காலத்தில் குருவாகவோ அல்லது அரசனாகவோ ஆகும் மகன் ஒருவனை மகாராணி தனது கருவில் சுமக்கின்றார் என்பதாகும். அம்மகனின் விதி எதுவெனில், அவர் உண்மையையும் தெய்வலோகத்திற்குச் செல்லும் வழியையும் போதிக்கும் ஒரு மிகச்சிறந்த ஆன்மீக குருவாகவோ அல்லது நான்கு திசைகளையும் அரசாளும் பேரரசராகவோ வருவார்.

இளவரசர் சித்தார்த்தர் சன்னாவுடன் அரண்மனையை விட்டுச் செல்கிறார
இளவரசர் சுப சகுனத்தில் பிறந்தபோதும், அரண்மனைக்குள் ராஜ மரியாதையுடன் வளர்ந்தார். இதற்குக் காரணம், ஆன்மீக குருவைக் காட்டிலும் இளவரசர் பேரரசராக வருவதே சாலச் சிறந்தது என மன்னர் கருதினார். பின்னர், இளவரசர், நான்கு உண்மைகளை அதாவது, முதுமை, நோய், மரணம் மற்றும் துறவறம் ஆகியவற்றைக் கண்டார். இவற்றைக் கண்டவுடன், இளவரசர், நோய், முதுமை மற்றும் மரணம் ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமெனில், ஒருவர் ஆன்மீகத்தில் ஈடுபட்டு பின்பு ‘விழித்தெழுந்தவர்’ அல்லது புத்தராக ஆக வேண்டும், அதாவது இந்த துயரங்களிலிருந்து விடுதலை பெற்ற நிலையை அடைதல் என்பதை உணர்ந்தார். அவர் சந்தித்த வயதானவர், நோயாளி, பிரேதம் மற்றும் துறவி ஆகியோர் அவரின் மனதில் மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கி இருந்தனர். அந்த பாதிப்பு மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்ததால், அவர் தனது கேள்விகளுக்கு விடைகளும், தான் கண்ட துயரங்களுக்கு விடுதலையும் தேடி அரண்மனையை விட்டு வெளியேறி தியானத்தில் மூழ்கினார்.
இளவரசர் அரண்மனையை விட்டு வெளியேறாமல் இருப்பதற்கு பல முயற்சிகளை மன்னர் எடுத்த போதும், அவர் இரவு நேரத்தில் தனது நெருங்கிய உதவியாளரான சன்னா மற்றும் குதிரையுடன் வெளியேறினார். இளவரசர் அரண்மனையை விட்டு வெளியேறுகையில், அரண்மனை காவலர்களும் உதவியாளர்களும் மர்மமான முறையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். அவர் காட்டுப்பகுதியை அடைந்தவுடன், உலக வாழ்வை தான் துறப்பதை உணர்த்துவதற்காக தனது நீண்ட கூந்தலை வெட்டி எறிந்தார் மற்றும் தனது அரண்மனை உடைகளை சன்னாவிடம் கொடுத்தனுப்பினார்.

விடியற்காலையில், சித்தார்த்தர் வர்ஜா-போன்ற செறிவை அடைந்ததோடு அறியாமையின் இறுதி திரையை தனது மனதிலிருந்து அகற்றினார். அதன் பிறகு, உடனடியாக அவர் புத்தராக மாறினார் – முழுமையாய் விழிந்தெழுந்தவர்
உண்மையைத் தெரிந்து கொள்ளும் மன உறுதியுடன், அலாரா காலமா மற்றும் உடக்கா ராமபுட்டா என்ற இரண்டு ஆசிரியர்களிடம் இளவரசர் பயின்றார். அதோடு மட்டுமில்லாமல், ஆறு வருடங்களுக்குக் கடுமையான துறவற பயிற்சியில் ஈடுபட்டார். அச்சமயத்தில் அவர் ஒரு நாளைக்கு ஓர் அரிசி தானியத்தை மட்டுமே உண்பார். ஒரு நாள், மரத்தின் அடியில் தவம் செய்து கொண்டிருந்த வேளையில், அருகில் இருந்த நதியொன்றில் படகில் பயணம் செய்து கொண்டிருந்த இசைக்கலைஞர் ஒருவர் தன்னிடம் பயிற்சி பெறும் மாணவனிடம், இசைக்கருவியின் நரம்பு மிக இறுக்கமாக இருந்தால் அறுந்து விடும் அதே சமயம் மிகவும் தளர்ந்து இருந்தால் சரியான சுருதியை வாசிக்காதென்றும் கூறினார். இதனைக் கேட்ட, சித்தார்த்தர் தனது கடுமையான துறவறம் தவறானது என்பதை உணர்ந்தார். அவர் எழுந்து நதிக்கரைக்குச் சென்று தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு வழங்கப்பட்ட பாலை ஏற்று அதை அருந்தி தனது பலத்தினை மீட்டுக் கொண்டார். அதன்பின் போதி மரத்தடியில் அமர்ந்து தான் முழு அறிவொளியை அடையும் வரை எழ போவதில்லை என உறுதி பூண்டார். அவர், தனது 35-ஆவது வயதில், போதி மரத்தின் அடியில், அறிவொளி பெற்று பின் சாக்கியமுனி புத்தர், அதாவது சாக்கிய குலத்தின் விலையுயர்ந்த கல் என்று அறியப்பட்டார்.
அறிவொளி பெற்று புத்தரான பின்பு, அடுத்த 45 வருடங்களுக்கு அவர் சந்திக்கும் மனிதர் அனைவருக்கும் தர்மத்தைப் போதிப்பதை அவர் கை விடவில்லை. அவர் 80-ஆவது வயதை அடைந்த பொழுது, புத்தர் நோய் கண்டதோடு, இறந்திடும் அறிகுறிகளும் தென்பட்டன. புத்தரின் உறவினரான ஆனந்தா, சங்கத்திடம் அவரின் இறுதி கட்டளைகளைக் கூறுமாறு கூறினார். அதற்கு புத்தர் இவ்வாறு பதிலளித்தார் :
ஆதலால், ஆனந்தா உன்னை நம்பு, உன்னில் அடைக்கலம் அடை, வேறு அடைக்கலம் தேடாதே; தர்மம் உன்னுடைய நம்பிக்கையாகவும் தர்மம் உன்னுடைய அடைக்கலமாகவும், வேறு அடைக்கலத்தைத் தேடாதே.
குசிநகரில் உள்ள இரண்டு சால் மரங்களுக்கிடையில் வடக்கு திசையை நோக்கி தனது கை தாங்கிய வண்ணம் தலையைச் சாய்த்து கொண்டு, கால் ஒன்றை ஒன்றின் மேல் வைத்துக் கொண்டு ஒரு புறமாய் சாய்ந்த வண்ணம் படுத்திருந்தார். பூ பூக்கும் பருவம் இல்லையென்ற போதும், அந்த சால் மரம் பூக்கள் பூத்து புத்தரின் புனித உடலின் மேல் தூவிக் கொண்டே இருந்தது. சங்க உறுப்பினர்களும் அறிவொளி பெறுவார்கள் என்ற நம்பிக்கை கொண்டவுடன், புத்தர் நிர்வாணாவிற்குள் சென்றார். அவரின் இறுதி வார்த்தைகள்:
“நிலையற்ற பொருட்கள் எல்லாம் ஒரு நாள் அழிந்து விடும். விடாமுயற்சியுடன் போராடுங்கள்.”
மலேசியாவில் விசாக தினம்

விசாக தின ஊர்வலத்தில் வரும் தேர் ஒன்ற
மலேசியாவில், விசாக தினத்தை இரண்டு வகையாக பரவலாக கொண்டாடுவார்கள். அவை புத்தரை நீராட்டுதல் மற்றும் விசாக தின ஊர்வலத்தில் பங்கேற்பதாகும். நீராட்டு சடங்கிற்கு பொதுவாக குழந்தை பருவ புத்தர் சிலையைப் பயன்படுத்துவார்கள். இந்த உருவ சாக்கியமுனி புத்தர், கோவணம் அணிந்து கொண்டு தனது வலது கையை மேலே உயர்த்தி இருப்பது போல் இருக்கும். புத்தரின் வரலாற்றின்படி, இளவரசர் சித்தார்த்த கெளதமர் தூய்மையானவராகவும் புனிதமானவராகவும் பிறப்பெடுத்தார். அவர் பிறந்த உடனேயே, இளவரசர் ஏழு அடிகளை எடுத்து வைத்தார். ஒவ்வொரு அடியின் போதும் அவரின் பாதம் பதித்த நிலத்திலிருந்து ஒரு தாமரை பூத்தது. அவர் தனது வலது கையை வான் உயர்த்தி தனது விரலை நீட்டியதோடு தனது இடது கையை பூமியை நோக்கி நீட்டி இவ்வாறு கூறினார்:
“நான் இவ்வுலகின் தலைவன்,
நான் இவ்வுலகில் உயர்ந்தவன்,
நான் இவ்வுலகின் முதன்மையானவன்,
இதுதான் எனது இறுதி பிறப்பு
இனி எப்பிறப்பும் இல்லை”
குழந்தை புத்தரின் சிலை பொதுவாக கோவிலின் முக்கிய சந்நிதானத்தின் முன்பு நீர் மற்றும் பூக்களால் நிரம்பிய தொட்டி ஒன்றில் இருக்கும். பக்தர்கள் மந்திரங்கள் உச்சரித்த வண்ணம் அச்சிலைக்கு நீர் ஊற்றுவார்கள். சிலையின் மேல் நீர் ஊற்றுவது தங்களின் தீய எண்ணங்களைத் தூய்மைப்படுத்துவதை உணர்த்தும் ஒரு செயலாகும். அதோடு, அது புத்தர் பிறந்த பொழுது தெய்வங்கள் தெய்வலோக படையல்களை அவருக்கு படைத்ததை உணர்த்துவதாகும். புத்தரை நீராட்டும் சடங்கு வழக்கமாக மலேசியாவில் உள்ள சீன மகாயான பெளத்தர் கோவில்களில் காணலாம்.

குழந்தை புத்தரை நீராட்டும் காட்ச
விசாக தின ஊர்வலம் மலேசியாவில் பல இடங்களில் நடக்கும். இவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கவை அதாவது ஆயிரக்கணக்கான மக்களையும், சுர்றுலா பயணிகளையும் ஈர்க்கும் ஊர்வலம், தலைநகரமான கோலாலம்பூர், பினாங்கு மற்றும் மலாக்காவில் நடைபெறும்.
கோலாலம்பூரில், மிகப்பெரிய ஊர்வலம் பிரிக்ஃபில்ஸ்ஸில் உள்ள மகா விஹாரா புத்த கோவிலில் தொடங்கி, சுற்றி மீண்டும் கோவிலுக்குள் முடியும். ஊர்வலத்திற்கு முன்பு, பல்வேறு கோவில்களைச் சார்ந்த பெளத்தர்கள் புத்த சிலைகளை ஏந்தும் வாகனங்களைப் பூக்கள், விளக்குகள் மற்றும் பல பொருட்களைக் கொண்டு அலங்கரிப்பார்கள். இவற்றில் சில வாகனங்கள் தங்களின் கோவிலில் இருந்து புத்த பிக்குகளைச் சுமந்து வருவதோடு அவர்கள், ஊர்வலத்தில் பங்குபெறுபவர்களுக்கு ஆசீர்வாதமும் வழங்குவார்கள்.

புத்த பிக்குகள் விசாக தின பூஜையின் போது பக்தர்களுக்கு ஆசிகள் வழங்குகின்றார்கள
இந்த ஊர்வலத்தைத் தொடக்கம் முதல் கண்டுகளிக்க விரும்புபவர்கள், ஊர்வலம் துவங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பாகவே பிரிக்ஃபில்ஸ் பகுதிக்குச் சென்று விடுமாறு அறிவுறுத்துப்படுகின்றார்கள். இவ்விடத்தைச் சுற்றியுள்ள சாலைகள் ஊர்வலம் தொடங்குவதற்கு முன்பாகவே நெரிசல் அடைய தொடங்கி விடும். ஊர்வலத்தின் சிறந்த காட்சியைக் காண வேண்டுமெனில், புக்கிட் பிந்தாங் பகுதியில் உள்ள சுற்றுப்பயணிகள், ஜாலான் சுல்தான் இஸ்மாயிலில் உள்ள எச்எஸ்பிசி கட்டிடத்தின் பகுதிக்கும், சீனாடவுன் அல்லது அதன் பக்கத்தில் இருப்பவர்கள் சென்ட்ரல் மார்க்கேட் கட்டிடத்தின் முன் பகுதிக்கும் செல்லலாம். ஊர்வலம் கேஎல்சிசியிலிருந்து திரும்பி வருகையில் சீனாடவுனில் உள்ளவர்கள் புடு சென்ட்ரலில் உள்ள ஜாலான் புடுவில் காணலாம்.

விசாக தின ஊர்வலத்தில் வரும் ஒரு தேர்
இந்நாளில் செய்யப்படும் நற்செயல்கள் பன்மடங்கு அதாவது 100 மில்லியன் அளவிற்கு பெருகும் என்று நம்பப்படுகின்றது. ஆகவே, இந்நன்னாளில், நாம் மற்றவர்களுக்கும் நமக்கும் நன்மை அளிக்கக்கூடிய நற்செயல்களில் நம்மை அர்பணித்துக் கொள்ளுதல் நல்லதாகும். பெளத்தர்களாக, விசாக தினத்தன்று சடங்குகளில் பங்கேடுப்பதோடு, நற்காரியங்களில் ஈடுபடுவதோடு நாம் புத்தரின் உபதேசங்களைப் புரிந்து கொண்டு அதனை நமது தினசரி வாழ்க்கையில் கடைபிடித்து நமது எண்ணங்களையும் மற்றவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் மீதான நமது செயல்களையும் மாற்றிக் கொள்ளுதல் சிறப்பு.
Or view the video on the server at:
https://video.tsemtulku.com/videos/WesakDay2010.mp4
கொண்டாட்டங்கள்
விசாக தினம், புனித சுத்ராக்களை ஜபித்தல், மந்திரங்கள் ஓதுதல் மற்றும் மூன்று அணிகலன்களான புத்தம், தர்மம் மற்றும் சங்கம் ஆகியவற்றின் பெருமைகளைப் போற்றிப் பாடுதல் ஆகியவற்றுடன் தொடங்கும். இவை பெரும்பாலும் பூக்கள் மற்றும் விளக்குகள் ஏற்றி நடத்தப்படும். மற்ற நடவடிக்கைகளாக, புத்த வழக்கத்தின்படி ஆன்மீக நற்செயல்கள் உதாரணத்திற்கு தியானம், பிரார்த்தனைகள் ஓதுவது, புத்தர் சார்ந்த புத்தகாயா போன்ற புனித ஸ்தலங்களுக்கு செல்லுதல், ஆன்மீக குருக்களைச் சென்று காணுதல், ஒரு மாதம் கட்டுகோப்புடன் இருத்தல், மிருகங்களைக் காப்பாற்றுதல் மற்றும் பொது தொண்டுகளில் ஈடுபடுதல் போன்றவற்றில் ஈடுபடுவார்கள். படையல்கள் வாழ்வின் நிலையின்மையை பக்தர்களுக்குக் கற்பிக்கும். பூக்கள் வாடி விடுவதோடு மெழுகுவர்த்திகள் உருகி முடிந்து விடுவதை போன்றுதான் மனித வாழ்வும் ஒரு நாள் அழிந்து மறைந்து விடும்.
ஆழ்ந்த பக்தி கொண்ட பெளத்தர்கள் கொண்டாட்டத்தின் முதல் நாள், விசாக தினத்திற்கு உடலளவில் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்காக சைவமாக இருப்பார்கள். அதோடு, பக்தர்கள் ஆமைகள், மீன்கள் மற்றும் புறாக்களை விடுதலை செய்வார்கள், இச்செயல் மிருகங்கள் கொல்லப்படுவதிலிருந்தும் துன்பப்படுவதிலிருந்தும் மற்றும் அவற்றின் விருப்பத்திற்கு எதிராக அடைத்து வைப்பதிலிருந்தும் விடுதலை செய்யப்படுவதோடு புத்தரின் போதனையின் குறிக்கோளான உலக உயிர்களைத் துன்பத்திலிருந்து விடுவித்தலை நடைமுறையில் செயல்படுத்துவதையும் குறிக்கின்றது.

மிருகங்களை விடுதலை செய்யும் வழக்கம் பெளத்தர்களால் விசாக தினத்தன்று செய்ய வேண்டிய நற்செயல்களில் ஒன்றாக ஏற்றுக் கொள்ளப்பட்டத
சாக்கியமுனி புத்தர் அமைதியின் இளவரசர் , அன்பு மற்றும் எல்லா உலக உயிர்களின் மேலும் காட்டும் கருணையின் பிரதிநிதி. அவர் எல்லா உலக உயிர்களும் வலி, இன்பம், அன்பு மற்றும் அக்கறையை உணர முடியும் என்பதனை உணர்ந்தார். ஆதலால், விசாக தினத்தன்று, புத்தரின் கருணையைப் போற்றும் விதமாகவும் நமக்குள்ளும் கருணையை வளர்ப்பதற்காகவும் அதே சமயம் நம்மிடம் இருக்கும் அனைத்தையும் மற்றவர்களுக்கு எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் கொடுக்க வேண்டும் என்பதனை நினைவுறுத்துவதற்காகவும் நாம் மிருகங்களுக்கு விடுதலை கொடுக்கின்றோம். இதுதான் சைவமாக இருப்பதற்கும் மிருகங்களை விடுவிப்பதற்கும் பின்னால் இருக்கும் உண்மையான காரணம். நாம் பறவைகள், கொல்லுவதற்காக குறி வைக்கப்பட்டிருக்கும் மாடுகள், மீன்கள், பூச்சிகள் மற்றும் நமக்குப் பிடித்த எந்தவிதமான மிருகங்களையும் விடுதலை செய்யலாம். அதோடு நாம், முதியோர் இல்லங்கள், அனாதை இல்லங்கள், தங்கும் வசதி இல்லாதவர்கள், மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு பண உதவி செய்யலாம் அல்லது வசதி குறைந்த குழந்தைகளுக்கு துணிமணிகள் அல்லது விளையாட்டுப் பொருட்கள் கொடுக்கலாம். இவையனைத்தையும் நாம் இந்த கொண்டாட்டத்தில் செய்யலாம் அதற்குக் காரணம் விசாக தினம் பெறும் நாளன்று அது மற்றவர்களுக்கு கொடுக்கும் நாளாகும்.
புத்தருக்கு இரு வகைகளில் மரியாதை தெரிவிக்கலாம் : வெளி நிலையிலும் மற்றும் உள் நிலையும். வெளி நிலையில், நாம் பூக்கள், விளக்குகள், நீர், தேநீர், அகர்பத்திகள் மற்றும் மண்டியிடுதல் போன்ற வழிமுறைகளைச் செய்யலாம். இது புத்தருக்கு மரியாதை தெரிவிக்கும் மிகச் சிறந்த வழியாகும். நாம் புத்தருக்கு படையல்கள் வழங்குவதன் மூலமும் மரியாதை தெரிவிப்பதன் மூலமும், நாம் எதிர்காலத்தில் புத்தராவதற்கு தேவையான ஆற்றலையும் காரணங்களையும் உருவாக்குகின்றோம். நாம் புத்தரின் உடலுக்கு மரியாதை தெரிவிப்பதன் மூலம், நோய்களற்ற அறிவொளி பெற்ற உடலைப் பெற நாம் விருப்பம் கொள்வோம். நாம் புத்தருக்கு விளக்குகளை ஏற்றும் பொழுது, இருளை விலக்கும் விளக்கினைப் படைப்பதால், நமக்குள் இருக்கும் அறியாமை என்னும் இருளை விலக்கி நமது அறிவு மேலும் திறமை பெற்று பிரகாசமடைவதற்கான காரணங்களை நாம் உருவாக்குகின்றோம். அகர்ப்பத்திகள் மிகவும் வாசமாக இருக்கும். பழங்காலத்து இந்திய பாரம்பரியத்தின்படி, சிறந்த வாசம் நாம் நமது வாக்குகளையும் சிறந்த நல்லொழுக்கங்களையும் கடைப்பிடிப்பதைக் குறிக்கின்றது. ஆதலால், அகர்ப்பத்திகளைப் படைப்பதன் மூலம் நல்லொழுக்கம் பேணி முழுமையான மற்றும் பயனுள்ள வாழ்வினை வாழ்வதற்கான காரணங்களை நாம் உருவாக்குகின்றோம். உணவு படைக்கும் பொழுது நாம் இவ்வுலகில் மற்றும் மற்ற பரிமாணங்களில் உள்ள உயிர்கள் பசி, துன்பம் மற்றும் நோய்களிலிருந்து விடுபட வேண்டும் என நாம் பிரார்த்திப்போம். ஆகவே, புத்த சமயத்தில் நாம் புத்தருக்கு மரியாதை தெரிவிக்கும் பொழுது, அவை துன்பங்களை எதிர்கொள்ளவும் நமது தேவைகளைத் தாண்டி மற்றவர்களின் தேவைகளைக் கருத்தில் கொள்ளவும் நம்மை தூண்டும் காரணங்களை உருவாக்குகின்றன.
புத்தருக்கு விளக்கு ஏற்றுதல
உள் நிலையில், புத்தருக்கு மரியாதை செலுத்தும் மிகச் சிறந்த வழி எதுவெனில் நமக்கும் நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் கவலை, துன்பம், விவாதங்கள் மற்றும் கஷ்டங்கள் ஆகியவற்றை கொண்டு வரும் நமது குணங்களைக் கைவிடுதல் ஆகும். அதனால்தான், பெளத்தர்கள் விசாக தினத்தன்று நற்செயல்களைப் புரிந்து ஆன்மீக மாற்றங்களுக்கும் பின்பு புத்தராவதற்கும் தேவையான காரணங்களையும் பலன்களையும் உருவாக்கிக் கொள்கின்றனர்.
நமக்கு அருகில் கோவில்கள் இல்லை என்றாலோ நம்மால் கோவிலுக்குச் செல்ல இயலவில்லை என்றாலோ, நாம் நம் இல்லத்திலேயே பூஜை அறை ஒன்றை உருவாக்கலாம். அந்த பூஜை அறையில் அழகிய புத்தர் படம் ஒன்றை வைக்கலாம். நாம் அந்த படத்தை வணங்கவில்லை ஆனால் நாம் அடைய நினைக்கும் புத்தரின் குணங்களை அப்படம் நமக்கு நினைவுறுத்தும். நாம் இந்த பூஜை அறையில் படையல்களைப் படைத்து மண்டியிட்டு வணங்கலாம். நாம் நமது பூஜை அறையில் வசதியாக அமர்ந்து சுத்ராக்களை படிக்கலாம் அல்லது நாம் பின்பற்றும் சீன, திபெத்திய அல்லது ஆங்கில புத்த சமயத்தின்படி பிரார்த்தனைகளைச் சொல்லலாம். நமக்கு வயது முதிர்ந்திருந்தால், நாம் நாற்காலியிலோ அல்லது சோபாவிலோ அல்லது தரையிலோ அமர்ந்து கொள்ளலாம்.
பின்பு, நமது உள் நிலையில், நாம் விசாக தினத்திற்கு முன்பான கடந்த காலத்தில் நாம் செய்த எந்த செயல்கள் மற்றவர்களுக்குத் தீங்கை விளைவித்தது, நாம் செய்த தீமையான செயல்களைப் பற்றி சிந்தித்தல் மற்றும் ஏன் நாம் அச்செயல்களைச் செய்தோம் என நாம் கவனமுடன் எண்ணி தியானம் செய்ய வேண்டும். நாம் புத்தரை வணங்குவதன் மூலம் நமது மனதில் இருக்கும் தீய எண்ணங்களை மாற்றி நமக்கும் மற்றவர்களுக்கும் ஏற்படும் துன்பத்தைக் குறைக்கின்றோம் என்பதனை நாம் மிக தெளிவுடனும் கவனமுடனும் சிந்திக்க வேண்டும். வழிபாட்டின் இறுதியில், நாம் உறுதி எடுத்தது போல் நல்லவர்களாக மாறுவோம் என்று புத்தரிடன் ஓர் உறுதிமொழி கொடுக்க வேண்டும். இந்த தியானத்தை நாம் கோவில்களில் படையலுக்குப் பின்பு அல்லது நாமம் ஓதும் பகுதிக்குப் பின்பும் செய்யலாம். இதுதான் விசாக தினத்தை கொண்டாடும் மிகச் சிறந்த வழி.
எளிமையான ஆனால் அழகான பூஜை சந்நிதானம
கோவில்கள
ஸ்ரீ லங்கா வில் முதல் உலக பெளத்தர்கள் மாநாடு, 1950
மலேசியாவில், விசாக தினம் நாடு முழுவதும் பெளத்தர்களால் கொண்டாடப்படுகின்றது. புத்த சமயம் பரவலாக பின்பற்றப்படும் நாடுகளான ஸ்ரீ லங்கா, இந்தியா, நேபாளம், வங்காளதேசம், சிங்கப்பூர், இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்நாம், மியன்மார், கம்போடியா மற்றும் லாவோஸ் போன்ற நாடுகளில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது மேற்கு நாடுகளில் புத்த மதம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, அங்கும் இந்த பெருநாளைக் கொண்டாடுகின்றார்கள். பல நூற்றாண்டுகளாக விசாக தினம் பாரம்பரியமாகக் கொண்டாடப்பட்டாலும், புத்தரின் வாழ்வில் நிகழ்ந்த மூன்று சம்பவங்களை மையப்படுத்தி விசாக தினம் கொண்டாடப்பட வேண்டும் என்பது 1950-ஆம் ஆண்டு, ஸ்ரீ லங்காவில் நடந்த முதல் உலக பெளத்தர்கள் மாநாட்டில் நிர்ணயிக்கப்பட்டது. அந்த தீர்மானம் கீழ்கண்டவாறு ஏற்கப்பட்டது :
“அதாவது இந்த உலக பெளத்தர்கள் மாநாடு, பெளர்ணமி விசாகத்தை பொது விடுமுறையாக அறிவித்த மாட்சிமை தங்கிய நேபாள மன்னருக்கு எங்களின் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளும் அதே வேளையில், சிறிய அளவில் அல்லது பெரிய அளவில் பெளத்தர்கள் வாழும் அனைத்து நாடுகளின் தலைவர்களிடம், அனைத்துலக உயிர்களின் புரவலர் என்று போற்றப்படும் புத்தருக்கு வழங்கும் மரியாதையாக கருதி, மே மாதம் வரும் பெளர்ணமி நாளை பொது விடுமுறையாக அறிவிக்கும்படி தாழ்மையுடன் கோரிக்கை வைக்கின்றோம”
விசாக தினம் லூனார் திகதியின்படி அதாவது அந்த மூன்று நிகழ்வுகளும் நடந்ததாகக் கூறப்படும் நாளில் கொண்டாடப்படுகின்றது. இத்தினம் உள்ளூர் நாட்காட்டியின்படி வேறுபடுவதால், வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு திகதிகளில் கொண்டாடப்படுகின்றது. ஆசிய சூரிய சந்திர (சூரிய மற்றும் சந்திர இணைந்து) நாட்காட்டியின் படி, பெளத்தர்கள் மற்றும் இந்து நாட்காட்டியில் வரும் வைசாக மாதத்தில் விசாக தினம் கொண்டாடப்படுகின்றது. அதனால், மற்றுமொரு பெயர் விசாக் ஆகும். ஒவ்வொரு வருடமும் திகதி மாறும். இதற்குக் காரணம் பல்வேறு பெளத்தர் பாரம்பரியத்தின்படி, திகதியை நிர்ணயிக்க, வெவ்வேறு நாட்காட்டியைப் பயன்படுத்துவார்கள். ஜப்பான், கொரியா மற்றும் சீனாவில் விசாக தினம் பொதுவாக ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதத்தில் 8-ஆம் திகதியில் வரும். மலேசியா, ஸ்ரீ லங்கா, கம்போடியா, மியன்மார், தாய்லாந்து மற்றும் சிங்கப்பூரில் இத்தினத்தை மே மாதத்தில் கொண்டாடுவார்கள்.
ஒவ்வொரு வருடமும் மலேசியாவில், விசாக தின கொண்டாட்டம் விடியற்காலையிலேயே நாடெங்கிலும் உள்ள பல்வேறு பெளத்த கோவில்களில் துவங்கி விடும். தாங்கள் பின்பற்றும் வெவ்வேறு விதமான பாரம்பரியத்தின்படி, பெளத்தர்கள் பொதுவாக கோவில்களில் ஒன்றிணைந்து பல வகையான நற்செயல்களைச் செய்வார்கள். இதில், எட்டு மகாயன கட்டளைகள் ஏற்றல், மிருகங்களை விடுவித்தல், சங்கத்தினருக்கு தானம் போடுதல், தீபங்கள் ஏற்றுதல், சைவம் இருப்பது மற்றும் உறுதி மொழி எடுத்தல், ஏழை எளியவர்களுக்கு உதவி செய்தல், தர்மம் சார்ந்த நடவடிக்கைகளான, கோவில்கள் கட்டுவதற்காகவும் அவற்றை பராமரிப்பதற்காகவும் கோவில்களுக்கு நன்கொடை கொடுத்தல் போன்றவை அடங்கும்
ஸ்ரீ லங்காவின் தலைநகரமான கொழும்புவில், விசாக தினம் கொண்டாடப்படுகின்றத
விசாக தினத்தன்று மிகச் சிறப்பாக கொண்டாடும் பல பெளத்த கோவில்கள் இருக்கின்றன. கோலாலம்பூரில், பிரிக்ஃபில்ஸ்ஸில் உள்ள மகா விஹாரா பெளத்த கோவில், தாய் சேதாவன் பெளத்த கோவில் மற்றும் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள கெச்சாரா இல்லம் மற்றும் செந்தூலில் உள்ள ஸ்ரீ லங்கா பெளத்தர் கோவில் ஆகியவையும் அடங்கும். மலேசியாவின் வடக்கு பகுதியில், பினாங்கு பட்டவெர்த் பெளத்தர்கள் சங்கம் இருக்கின்றது. அதே வேளையில், தீபகற்ப மலேசியா கிழக்கு கடற்கரை பகுதியில், குவாந்தான் வான் ஃபோ தியென் பெளத்தர் கோவில் இருக்கின்றது. தெற்கு மலேசியாவில், மலாக்காவில் செக் கியா ஈன் கோவில் இருக்கின்றது கடந்த காலத்தில், இக்கோவில் ஏற்பாடு செய்த ஊர்வலத்தில் 10,000 மக்கள் கலந்து கொண்டனர். கிழக்கு மலேசியாவில் உள்ள சரவாக்கின் தலைநகரமான கூச்சிங்கில் இருக்கும் போ கா பெளத்தர் கோவில் இந்நாளில் அவர்களின் நடவடிக்கைகளுக்கு மிகவும் பிரபலமானது.
Or view the video on the server at:
https://video.tsemtulku.com/videos/WesakDay2014MahaViharaTemple.mp4
கோலாலம்பூர் பிரிக்ஃபில்ஸ்ஸில் உள்ள மகா விஹாரா பெளத்தர் கோவில்
விசாக தினத்திற்கு மகா விஹாரா பெளத்தர் கோவிலின் ஏற்பாடுகள
1894-ஆம் ஆண்டு, சிங்கள சமூகத்தினரால் தோற்றுவிக்கப்பட்ட, மகா விஹாரா பெளத்தர்கள், ஸ்ரீ லங்காவின் தேரவடா பாரம்பரியத்தைப் பாதுகாக்க இடம் வழங்குகின்றனர். உள்ளூர் மக்களால், பிரிக்ஃபில்ஸ் பெளத்தர் கோவில் என்றழைக்கப்படும் இது, பிரிக்ஃபில்ஸ்ஸில் உள்ள பால்ம் கோர்ட் அடுக்கு மாடிக்கு மிக அருகில் இருக்கின்றது.
ஒவ்வொரு வருடமும், விசாக தினத்தின் ஏற்பாடுகள் குறைந்தது ஒரு வாரத்திற்கு முன்பாகவே தொடங்கி விடும். இதில் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஊர்வல தேரை, பூக்கள் மற்றும் விளக்குகளால் அலங்கரிப்பது அடங்கும். அதோடு, ஒரு நாள் முன்பாக பல்வேறு விதமான பொருட்களை விற்கும் கடைகள் கோவிலைச் சுற்றி அமைக்கப்படும்.
மகா விஹாரா பெளத்த கோவிலுக்கு அருகினில் இருக்கும் தங்கும் இடங்கள
மகா விஹாரா பெளத்த கோவிலில் தொடங்கும் விசாக தின ஊர்வலத்தில் கலந்து கொள்ள விரும்புவர்கள் அல்லது பெருநாளின் போது கோவிலுக்கு வருகை புரிய விரும்புவர்களுக்கு கோவிலுக்கு அருகினில் இருக்கும் தங்கும் இடங்களின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன.
- லோட்டஸ் ஹோட்டல் கேஎல் சென்ட்ரல் (0.12மையில்/0.2கிமீ)
250, Jalan Tun Sambanthan,
Brickfields, KL Sentral,
50470 Kuala Lumpur,
Malaysia - OYO ரூம்ஸ் லிட்டல் இந்தியா ஜங்சன் (0.12மையில்/0.2கீமீ)
Plot No 250, Jalan Tun Sambanthan,
Brickfields, KL Sentral,
50470 Kuala Lumpur,
Malaysia - பிரிக்ஃபில்ஸ் பார்க் ஹோட்டல் (0.18மையில்/0.3கீமீ)
No. 262 A-C, Jalan Tun Sambanthan,
KL Sentral,
50470 Kuala Lumpur,
Malaysia
மகா விஹாராவிற்கு செல்லும் வழி
- கோலாலம்பூர் அனைத்துல விமான நிலையத்திலிருந்து : வாடகை வண்டியில் 47 நிமிடங்கள் (33.7 மையில்/ 54.3 கிமீ)
- கோலாலம்பூர் அனைத்துல விமான நிலையத்திலிருந்து : கேஎல்ஐஏ எக்ஸ்பிரஸ் வழி கேஎல் சென்ட்ரல் நிலையத்திற்கு 28 நிமிடங்கள்
- கோலாலம்பூர் சென்ட்ரல் நிலையத்திலிருந்து : 14 நிமிடங்கள் நடை (0.7மையில்/1.1 கீமீ)
- துன் சம்பந்தன் நிலையத்திலிருந்து : 5 நிமிட நடை (0.2 மையில்/0.4கிமீ)
மகா விஹாரா பெளத்தர் கோவிலுக்குச் செல்லும் வரைபடம
முகவரி மற்றும் தொடர்பு விவரங்கள
123, Jalan Berhala,
Brickfields,
50470 Kuala Lumpur,
Malaysia
தொலைபேசி எண்: +60 3-2274 1141
பெட்டாலிங் ஜெயாவில் உள்ள தாய் சேதாவன் பெளத்த கோவில்
தாய் சேதாவன் பெளத்த கோவிலில் பக்தர்கள் கூட்டமாக கோவிலுக்குள் ஆசிகள் பெறவும், புத்தருக்கும் சங்கத்திற்கும் தானம் செய்வதற்காகச் செல்கின்றனர
தாய்லாந்தின் பாரம்பரியமான மற்றும் சிக்கலான வடிவமைப்புகளைக் கொண்டு, தாய் சேதாவன் பெளத்த கோவில், பெட்டாலிங் ஜெயாவில் குடியிருப்பு பகுதியில் உள்ள ஜாலான் காசிங் நெடுகில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் பக்தர்களை வரவேற்க பல வர்ணங்களாலும், பல அடுக்கு கூரைகளாலும் மற்றும் வெவ்வேறு சிறு கோவில்கள் மற்றும் கட்டிடங்களும் கொண்டது. அக்கோவிலின் பின்பகுதியில் மக்களின் உடல் உபாதைகளைக் குணப்படுத்தும் இயற்கையான நீருற்று ஒன்று இருக்கின்றது. இக்கோவில் உள்ளூர் மக்களால் பிஜே சியாமிஸ் கோவில் என்று அன்புடன் அழைக்கப்படுவதோடு இங்கே லோய் கிராதோங் (பறக்கும் கூடை பெருநாள்) மற்றும் சொங்ரான் (தாய்லாந்து பாரம்பரிய புத்தாண்டு) போன்ற முக்கிய நாள்களிலும் பெருநாள் காலங்களிலும் மக்கள் கூட்டமாக இருக்கும்.
விசாக தின பெருநாளின்போது, மக்கள் புத்த பிக்குகளிடம் ஆசிகள் வாங்க வருவதோடு, அதைத் தொடர்ந்து புத்தர் சிலைகளின் மேல் தங்க இலை படைத்தல், தங்க புத்தர்களின் பிச்சை பாத்திரத்தில் காசுகள் போடுதல், குழந்தை புத்தரை நீராட்டுதல், குவான் யின் கூடாரங்களில் மணி அடித்தல், அங்கிகள் படைத்தல் போன்றவை நிகழும்.
தாய் சேதாவன் பெளத்த கோவிலுக்கு அருகினில் இருக்கும் தங்கும் வசதிகள்
- ஹில்டன் ஹோட்டல் பெட்டாலிங் ஜெயா (0.5 மையில்/0.8 கிமீ)
2 Jalan Barat,
Petaling Jaya,
46200 Selangor,
Malaysia - ஹோட்டல் அர்மாடா பிஜே (0.6மையில்/0.96கிமீ)
Lot 6, Lorong Utara C,
Section 52, Petaling Jaya,
46200 Selangor,
Malaysia - கிரிஸ்டல் க்ரெளன் ஹோட்டல் பெட்டாலிங் ஜெயா (0.6மையில்/0.96கிமீ)
12, Lorong Utara A,
Off Jalan Utara,
Petaling Jaya,
65352 Selangor,
Malaysia
தாய் சேதாவன் பெளத்த கோவிலுக்குச் செல்லும் வழ
- கோலாலம்பூர் அனைத்துல விமான நிலையத்திலிருந்து : வாடகை வண்டியில் 49 நிமிடங்கள் (34.5 மையில்/ 55.6 கிமீ)
- கோலாலம்பூர் அனைத்துல விமான நிலையத்திலிருந்து : கேஎல்ஐஏ எக்ஸ்பிரஸ் வழி கேஎல் சென்ட்ரல் நிலையத்திற்கு 28 நிமிடங்கள்
- கோலாலம்பூர் சென்ட்ரல் நிலையத்திலிருந்து : கேடிஎம்மில் தாமான் ஜெயா நிலையத்திற்கு 18 நிமிடங்கள், 10 நிமிடங்கள் நடக்க வேண்டும்
தாய் சேதாவன் பெளத்த கோவிலுக்குச் செல்லும் வரைபடம்
முகவரி மற்றும் தொடர்பு விவரங்கள்
No. 24 Jalan Pantai,
Off Jalan Gasing,
46000 Petaling Jaya,
Malaysia
தொலைபேசி எண: +603 7955 2443
பெட்டாலிங் ஜெயாவில் கெச்சாரா இல்லம் பெளத்தர்கள் சங்கம்
மாண்புமிக்கவர் கெச்சாரா இல்லத்தின் பீடத்தில் அமர்வதற்கு முன், தனது விரல்களைச் சுடக்கியபடி நிலையற்ற தன்மையைப் பற்றிய உபதேசத்தை ஓதுகின்றார
கெச்சாரா இல்லம், மாண்புமிகு 25- ஆவது திசெம் ரின்போச்சே அவர்களால் 2000-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது. இது லாமா சொங்காபா தோற்றுவித்த கெலுக் பாரம்பரியத்தின் திபெத்திய பெளத்தர் சங்கம். இந்த பாரம்பரியத்தின் விலைமதிப்பற்ற போதனைகளை பாதுகாக்கும் குறிக்கோளுடனும் தொலைநோக்குடனும் மாண்புமிக்கவர் கருத்தாக்கமிட்டு நவீன மற்றும் அமைதியான கெச்சாரா ஃபோரெஸ்ட் ரிட்ரீட்டை ஜாலான் ச்சாமங், பெந்தோங், பகாங் மாநிலத்தில் கட்டினார். இவ்விடம் உள்ளூர் மக்களால் அன்புடன் “லாமா கோவில்” என்று அறியப்படுகின்றது மற்றும் குணப்படுத்தும் நடவடிக்கைகள், உடலளவில் ஆன்மீக வழியில் மக்களுக்கு பயனளிக்கும் ஓர் இடமாகவும் திகழ்கின்றது.
விசாக தின பெருநாளின் போது, பக்தர்கள், மிருகங்கள் விடுதலை, எட்டு மகாயான கட்டளைகள் ஏற்றல், மற்றும் சைவ உறுதிமொழி எடுத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக பெட்டாலிங் ஜெயா கோவிலுக்கும் பெந்தோங் ஓய்வு மையத்திற்கும் வருகை புரிவார்கள். அவர்கள் புத்த போதகர்களின் ஒருங்கிணைப்பினை, அதாவது மக்கள் தங்களின் வாழ்வினை புத்தரின் போதனைகளைப் பகிர்வதன் மூலம் மற்றவர் நலனுக்காக அர்ப்பணிப்போம் என உறுதிமொழி எடுக்கும் ஒரு உத்வேகம் நிறைந்த நிகழ்வினை காணலாம்.அதோடு, மாண்புமிக்கவரின் உடல் நலத்திற்காகவும் நீண்ட ஆயுளுக்காகவும் லாமா சோபா பூஜை (சமஸ்கிருதத்தில் : குரு பூஜை) மற்றும் பூஜைகள் இந்நாளில் நடைபெறும். இது சற்றும் மனந்தளராமல் சமூகத்திற்காகவும் மனிதத்திற்காகவும் தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட கருணையான மற்றும் இரக்கமான ஆன்மீக தலைவருக்கு அளிக்கப்படும் நன்றியாகவும் பாராட்டாகவும் அமைகின்றது.
கெச்சாரா இல்லத்திற்கு அருகினில் இருக்கும் தங்கும் வசதிகள்
- ஓ’ புத்திக் சூட்ஸ் (1.80 மையில் /2.90 கிமீ)
B2-01, Casa Utama,
PJU6A, Petaling Jaya,
47400 Selangor,
Malaysia - மை ஹோம் ஹோட்டல் (2.48 மையில் /4.00கிமீ)
F-G-5, Pusat Komersial Parklane,
Petaling Jaya,
47301 Selangor,
Malaysia - ஐஃபில் ஹோட்டல் ( (4.35 மையில் /7.00 கிமீ)
12, Lorong Utara A,
No. 21, Jalan SS7/26,
Kelana Jaya, Petaling Jaya,
47301 Selangor,
Malaysia
கெச்சாரா இல்லத்திற்குச் செல்லும் வழி
- கோலாலம்பூர் அனைத்துல விமான நிலையத்திலிருந்து : வாடகை வண்டியில் 50 நிமிடங்கள் (37.15மையில்/ 59.80 கிமீ)
- கோலாலம்பூர் அனைத்துல விமான நிலையத்திலிருந்து : கேஎல்ஐஏ எக்ஸ்பிரஸ் வழி கேஎல் சென்ட்ரல் நிலையத்திற்கு 28 நிமிடங்கள்
- கோலாலம்பூர் சென்ட்ரல் நிலையத்திலிருந்து : எல்ஆர்டி வழி கெளானா ஜெயா நிலையத்திற்கு 1 மணி நேரம், கெச்சாரா இல்லத்திற்கு வாடகை வண்டி வழி 10 நிமிடங்கள்
மலேசிய பெளத்தர் சங்க கெச்சாரா இல்லத்திற்குச் செல்லும் வரைபடம
முகவரி மற்றும் தொடர்பு விவரங்கள்
No. 7, Jalan PJU 1/3G,
SunwayMas Commercial Center,
47301 Petaling Jaya,
Malaysia
தொலைபேசி எண: +603 7803 3908
மாண்புமிகு 25-ஆவது திசெம் ரின்போச்சே, கெச்சாரா ஃபோரெஸ்ட் ரிட்ரீட்டில் பாரம்பரிய திபெத்திய சடங்கு இசைக்கருவிகளின் துணையுடன் பூஜை ஒன்றை நடத்துகின்றார
கெச்சாரா ஃபோரெஸ்ட் ரிட்ரீட் அருகினில் இருக்கும் தங்கும் வசதிகள
- துமிகே ஹோட்டல் (2.92 மையில்/4.70 கிமீ)
P.6-G, Jalan MG3,
Pusat Perniagaan Mutiaramas Gemilang,
28700 Bentong,
Malaysia - திரஸ் முத்தியரா ஹோட்டல் (3.17 மையில்/5.10 கிமீ)
P.22, Jalan MG2,
28700 Bentong,
Malaysia - ஈவி வொல்ட் ஹோட்டல் (3.48 மையில்/5.60 கிமீ)
No. 107-108, Jalan Loke Yew,
Off Jalan Utara,
28700 Bentong,
Malaysia
கெச்சாரா ஃபோரெஸ்ட் ரிட்ரீட் செல்லும் வழி
கோலாலம்பூர் அனைத்துல விமான நிலையத்திலிருந்து : வாடகை வண்டியில் 1 மணி நேரம் 55 நிமிடங்கள் (82.64மையில்/ 133 கிமீ)
கெச்சாரா ஃபோரெஸ்ட் ரிட்ரீட் செல்லும் வரைபடம்
முகவரி மற்றும் தொடர்பு விவரங்கள்
Lot 3189, Jalan Chamang,
28700 Bentong,
Malaysia
தொலைபேசி எண்: +603 7803 3908
ஸ்ரீ ஜெயந்தி பெளத்தர் ஆலயம், செந்தூல், கோலாலம்பூர்
ஸ்ரீ லங்கா பெளத்தர் ஆலயம் என்றும் ஸ்ரீ ஜெயந்தி பெளத்தர் ஆலயம் அறியப்படுகின்றது. இது செந்தூலில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா பெளத்தர் ஆலயம் ஆகும். இக்கோவில் ஸ்ரீ ஜெயந்தி நலன்பேணும் இயக்கத்துடன் இணைந்து ஏழை எளியவர்களுக்கும் வயதானவர்களுக்கும் உதவி செய்கின்றது.
ஸ்ரீ ஜெயந்தி பெளத்தர் கோவில், செந்தூல், கோலாலம்பூர
இக்கோவிலுக்குள் ஏழை எளியவர்களுக்கு இலவச ஆலோசனை வழங்கும் அடிப்படை கிளிக் ஒன்றும் இறந்தவர்களின் அஸ்தியை வைக்கும் அமைவு பகோடாவும் இருக்கின்றது. அதோடு, தர்மம் கற்றுக் கொடுக்கவும் தர்மம் சம்பந்தமான நடவடிக்கைகள் நடத்தவும் மூன்று மாடி கல்விக் கட்டடமும் உள்ளது.
விசாக தினத்தின் போது, பூ கட்டுதல், விளக்கு ஏற்றுதல், புத்த பிக்குகளிடமிருந்து ஆசிகள் பெறுதல் போன்ற நடவடிக்கைகளுடன் மற்றும் பல நிகழ்வுகளும் நடக்கும். பூஜை மண்டபத்திற்கு வெளியே, பக்தர்கள் தானம் கொடுக்க, ஒரு பெரிய தங்க புத்தர் சிலை பூக்களாலும் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது.
ஸ்ரீ ஜெயந்தி பெளத்தர் கோவிலுக்கு அருகினில் இருக்கும் தங்கும் வசதிகள
- அர்கியோடெல் ஹோட்டல் (0.08 மையில்/0.14 கிமீ)
No 10 & 12, Jalan Haji Salleh,
51100 Kuala Lumpur,
Malaysia - அர்கியோடெல் ஹோட்டல் (0.22 மையில்/0.37கிமீ)
10, Jalan Haji Salleh,
Sentul,
51100 Kuala Lumpur,
Malaysia - தாமாரின் ஸ்தேயிஸ் (0.29 மையில்/0.48கிமீ)
E1A-25-7, The Tamarind,
2, Jalan Sentul Indah,
Sentul,
51000 Kuala Lumpur,
Malaysia
ஸ்ரீ ஜெயந்தி பெளத்தர் கோவிலுக்கு செல்லும் வழ
- கோலாலம்பூர் அனைத்துல விமான நிலையத்திலிருந்து : வாடகை வண்டியில் 59 நிமிடங்கள் (39.7 மையில்/ 63.9 கிமீ)
- கோலாலம்பூர் அனைத்துல விமான நிலையத்திலிருந்து : கேஎல்ஐஏ எக்ஸ்பிரஸ் வழி கேஎல் சென்ட்ரல் நிலையத்திற்கு 28 நிமிடங்கள்
- கோலாலம்பூர் சென்ட்ரல் நிலையத்திலிருந்து : கேடிஎம் வழி செந்தூல் நிலையத்திற்கு 14 நிமிடங்கள், சுமார் 10 நிமிடங்கள் நட
ஸ்ரீ ஜெயந்தி பெளத்தர் கோவிலுக்குச் செல்லும் வரைபடம்
முகவரி மற்றும் தொடர்பு விவரங்கள
Jalan Tujuh, Sentul Selatan,
51000 Kuala Lumpur,
Malaysia
தொலைபேசி எண: +016 311 0009
பட்டவெர்த் பெளத்தர் சங்கம், பட்டவெர்த், பினாங்கு
பக்தர்கள் தங்களின் தானங்களை பட்டவெர்த் பெளத்தர் சங்கத்தில் கொடுக்கின்றனர
பரபரப்பான தொழிற்துறை நகரமான மக் மண்டினில் இருக்கின்றது பட்டவெர்த் பெளத்தர் சங்க கோவில். இக்கோவில் பட்டவெர்த் முழுதும் வாழும் பெளத்தர்களை விசாக தினத்தன்று பூஜைக்காகவும் ஆசிகளுக்காவும் தானங்களுக்காகவும் மற்றும் குழந்தை புத்தரை நீராட்டுதல் போன்ற சடங்குகளுக்காகவும் ஒன்று திரட்டும். கோவிலைச் சுற்றி உணவுக் கடைகள் இருக்கின்றன மற்றும் விசாக தினத்தன்று சைவத்தையும் பெருந்தன்மையையும் ஊக்குவிக்கும் பொருட்டு ரத்த தானமும் நடைபெறும்
பட்டவெர்த் பெளத்தர் சங்கத்திற்கு அருகினில் இருக்கும் தங்கும் வசதிகள
- அரோமா ஹோட்டல் (1.67 மையில்/ 2.7 கிமீ)
11, Butterworth Business City Centre,
Jalan Raja Uda,
12300 Butterworth,
Malaysia - டீ கார்டன் ஹோட்டல் பட்டவெர்த் ( 2.05 மையில்/ 3.3 கிமீ)
Lorong Cempa (Off Jalan Telaga Air),
12200 Butterworth,
Malaysia - தி+ ஹோட்டல் பட்டவெர்த் ( 2.29 மையில்/ 3.7 கிமீ)
4476, 4477, 4478, Jalan Bagan Luar,
12000 Butterworth,
Malaysia
பட்டவெர்த் பெளத்தர் சங்கத்திற்குச் செல்லும் வழி
பினாங்கு அனைத்துல விமான நிலையத்திலிருந்து : வாடகை வண்டியில் 32 நிமிடங்கள் (18.2 மையில்/ 29.3 கிமீ)
பட்டவெர்த் பெளத்தர் சங்கத்திற்குச் செல்லும் வரைபடம
முகவரி மற்றும் தொடர்பு விவரங்கள
7156, Tingkat Mak Mandin 3,
Mak Mandin,
Butterworth,
Malaysia
தொலைபேசி எண: +604 333 4499
வான் ஃபோ தியென் பெளத்தர் கோவில், குவாந்தன் பகாங
பத்தாயிரம் புத்தர்கள் மண்டபம் என்றும் அறியப்படும் வான் ஃபோ தியென் பெளத்தர் கோவில், பகாங் பெளத்தர்கள் சங்கத்துடன் இணைந்துள்ளது. மண்டபத்திற்குள் உள்ள சுவர்கள் கீழிலிருந்து மேல் வரை புத்தர் படங்கள் பொறிக்கப்பட்ட பளிங்குகற்களால் கட்டப்பட்டுள்ளது. முக்கிய பூஜை மண்டபத்தின் சந்நிதானத்தில் அற்புதமான பச்சை மாணிக்கல் புத்தர் அமர்ந்திருக்கின்றார்.
வான் ஃபோ தியென் பெளத்தர் கோவிலின் அமைதியான சுற்றுப்புறம்
விசாக தினத்தன்று, பக்தர்கள் கோவில்களுக்கு செல்லுதல் மற்றும் தர்ம உபதேசம், ஓதுதல், கண்காட்சி மற்றும் பொதுச்சேவை செய்தல் போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்வதன் மூலம் கொண்டாட்டங்களில் இணைவர். கோவிலுக்குப் பக்கத்தில் உள்ள பூங்காவில் சைவ உணவுகள் பரிமாறப்படும். அதனுடன் இசை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
வான் ஃபோ தியென் பெளத்தர் கோவிலின் அருகினில் இருக்கும் தங்கும் வசதிகள
- ஸ்ரீ மஞ்சா புத்திக் ஹோட்டல் (1.67 மையில்/2.7 கிமீ)
B2-34, Jalan IM 7/1,
Bandar Indera Mahkota,
25300 Kuantan,
Malaysia - அரேனா பாத்திக் புத்திக் ஹோட்டல் (2.29 மையில்/3.7 கிமீ)
E2324-2326, Jalan Dato’ Wong Ah Jang,
25100 Kuantan,
Malaysia - ஹோட்டல் சென்ட்ரல் குவாந்தன் ( (2.54 மையில்/4.1 கிமீ)
No. 45-P, Jalan Besar,
Kuantan City,
25000 Kuantan,
Malaysia
வான் ஃபோ தியென் பெளத்தர் கோ விலுக்குச் செல்லும் வழ
குவாந்தன் சுல்தான் அமாட் ஷா விமான நிலையத்திலிருந்து: வாடகை வண்டியில் 16 நிமிடங்கள் (9.87 மையில்/15.9 கிமீ)
வான் ஃபோ தியென் பெளத்தர் கோவிலுக்குச் செல்லும் வரைபடம
முகவரி மற்றும் தொடர்பு விவரங்கள்
Jalan Sungai Lembing,
Bandar Indera Mahkota,
25200 Kuantan
Malaysia
தொலைபேசி எண்: +609 573 9744
செக் கியா ஈன் கோவில், மலாக்கா
1960-ஆண்டிலிருந்து, மலாக்கா மாநிலத்தின் விசாக தின கொண்டாட்டங்கள் செக் கியா ஈன் கோவிலால் ஏற்பாடு செய்யப்படுகின்றன. மலாக்காவின் விசாக தின ஊர்வலம் நிறைய மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்குக் காரணம் விசாக தினத்திற்கு முதல் நாள், மறைந்த மதிப்பிற்குரிய ஆனந்தா மங்கள மகா நாயக தேரா, ஊர்வல தேர்களை ஆசிர்வதிப்பார் என நம்பப்படுகின்றது.
செக் கியா ஈன் கோவில், மலாக்க
செக் கியா ஈன் கோவிலில் விசாக தினத்தைத் தொடர்ந்து 7 நாட்களுக்குக் கொண்டாடுவார்கள். எட்டு மகாயானா கட்டளைகள் ஏற்றல், தர்ம உபதேசங்கள் மற்றும் ஓதுதல் போன்ற நிகழ்வுகள் நடக்கும். அதோடு, புனித ‘பிண்டபதா’ பாரம்பரியம் பின்பற்றப்படுகின்றது, அதாவது மக்கள் சங்கத்திற்கு அன்னதானம் வழங்குவார்கள்.
ஊர்வலம் தொடங்குவதற்கு முன்பாக, பக்தர்கள் செக் கியா ஈன் கோவிலில் சுமார் மாலை மணி 5 அளவில் பிரார்த்தனைகளை ஓதுவதற்காக ஒன்று கூடி பின்பு தங்களின் வாகனங்களில் வரிசையாக ஊர்வலத்திற்கு நிற்பார்கள். மாலை மணி 7-க்கு, ஊர்வலம் ஜாலான் காஜா பேராங்கில் இருக்கும் கோவிலிலிருந்து புறப்பட்டு ஜாலான் துன் பேராக் வழி ஜாலான் பெங்காலான் நோக்கி பின் ஜாலான் லக்சமானாவில் டான் கிம் செங் பாலத்தின் மேல் கடந்து பின்பு லோரோங் ஹங் ஜேபாட், ஜாலான் துன் தன் செங் லோக் (ஹீரின் சாலை) மற்றும் இறுதியாக கோவிலுக்குள் நுழைவதற்கு முன், ஜாலான் தெங்கெராவைக் கடந்து போகும். இரவு மணி 10.30-க்கு நிறைவுறும் இந்த பெருநாள் கொண்டாட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட பெளத்தர் கோவில்களும் சங்கங்களும் கலந்து கொள்ளும். இருப்பினும், கொண்டாட்டம், இரவு முழுதும் பல்வேறு பிரார்த்தனைகளை ஓதிய வண்ணம் கோவில்களில் தொடரும்.
செக் கியா ஈன் கோவிலில் ஊர்வல கூட்டம
செக் கியா ஈன் கோவிலுக்கு அருகினில் உள்ள தங்கும் வசதிகள்
- ஹோட்டல் புரி மலாக்கா (0.4 மையில்/ 0.64 கிமீ)
118, Jalan Tun Tan Cheng Lock,
Jonker,
75200 Malacca
Malaysia - தே பாபா ஹவுஸ் ஹோட்டல் (0.4 மையில்/0.64 கிமீ)
No. 121 – 127, Jalan Tun Tan Cheng Lock,
Jonker,
75200 Malacca
Malaysia - காசா டெல் ரியோ மலாக்கா ஹோட்டல் (0.4 மையில்/0.64 கிமீ)
88, Jalan Kota Laksamana,
Malacca City Center,
75200 Malacca
Malaysia
செக் கியா ஈன் கோவிலுக்குச் செல்லும் வழி
மலாக்கா விமான நிலையத்திலிருந்து : வாடகை வண்டியில் 19 நிமிடங்கள் (5.40 மையில்/8.7 கிமீ)
செக் கியா ஈன் கோவிலுக்குச் செல்லும் வரைபடம்
முகவரி மற்றும் டொடர்பு விவரங்கள
No. 57, Jalan Gajah Berang,
75200 Melaka,
Malaysia
தொலைபேசி எண்: +606 283 7440
தொலைபேசி எண்
போ கா பெளத்தர் கோவில் 1900-ஆம் ஆண்டில் கட்டப்பட்டு கூச்சிங், சிம்பாங் தீகாவில் அமைந்துள்ளது, மலேசியாவில் உள்ள பழம்பெரும் பெளத்தர் கோவில்களில் இதுவும் ஒன்று. இக்கோவிலுக்கு அருகினில் மூன்று மாடி போ கா மடாலாயம் என்றழைக்கப்படும் மடாலயம் ஒன்று கட்டுவதற்கு திட்டமிட்டு அது 3 வருடங்களில் பூர்த்தி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. போ காவின் விசாக தின கொண்டாட்டங்களில் பக்தர்களும் வருகையாளர்களும் பிராத்தனைகள், மந்திரங்கள் ஓதுதல் தானங்கள் மற்றும் புத்தரின் வாழ்வை நினைவுகூறும் நிகழ்வுகளில் பங்கெடுப்பதைக் காணலாம்.
பக்தர்கள் குழந்தை புத்தரை நீராட்டும் சடங்கில் ஈடுபட்டுள்ளனர்
போ கா பெளத்தர் கோவிலுக்கு அருகினில் இருக்கும் தங்கும் வசதிகள்
- சிதாடைன்ஸ் அப்லெண்ட்ஸ் கூச்சிங் (6 நிமிடம் நடக்கும் தூரம்)
No. 55 Jalan SPG,
93300 Kuching,
Malaysia - பப்ளிக் லோட்ஜ் கூச்சிங் (4 நிமிடம் நடக்கும் தூரம்)
1st & 2nd Floor, Lot 8644, Jalan Simpang Tiga,
93300 Kuching,
Malaysia - மெகா இன் (14 நிமிடம் நடக்கும் தூரம்)
King’s Centre, Jalan Simpang Tiga,
93300 Kuching,
Malaysia
போ கா பெளத்தர் கோவிலுக்குச் செல்லும் வழ
கூச்சிங் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து : வாடகை வண்டியில் 14 நிமிடங்கள் (5.28 மையில்/8.5 கிமீ)
போ கா பெளத்தர் கோவிலுக்குச் செல்லும் வரைபடம
முகவரி மற்றும் தொடர்பு விவரங்கள்
No. 2222, Jalan Uplands,
Simpang Tiga,
93200 Kuching,
Sarawak
தொலைபேசி எண: +6082 231 007
தொலைபேசி எண
இந்த அழகான கொண்டாட்டம் மலேசியாவில் வேரூன்றி இருப்பதையும் அதன் சாரமும் முக்கியத்துவமும் பாதுகாக்கப்படுவதோடு உள்ளூர் கலாச்சாரத்தோடு ஒருங்கிணைந்திருப்பதையும் பார்க்கும் பொழுது மிகவும் ஆனந்தமாக இருக்கின்றது. விசாக தினம் பெளத்தம் மற்றும் பெளத்தம் அல்லாத நாடுகளால் உலகம் முழுதும் அங்கீகரிக்கப்பட்டுள்ள போதும், மலேசியாவில் தேசிய விடுமுறையாகும். விசாக தின கொண்டாட்டம், மனிதாபிமானம், கருணை, பரிவு மற்றும் மன அமைதியின் கொண்டாட்டமாகும். புத்த சமயம் நமக்கு போதிப்பது போல் புத்தருக்கு மரியாதை தெரிவிப்பதன் மூலம், நாம் இக்குணங்களை அடைவதற்கு நம்மை மேம்படுத்த முயற்சி செய்வோம்.
நாம் எந்த மதமாக இருந்தாலும் நாம் மற்றவர்களின் மத பாரம்பரியங்களை மதிக்க வேண்டும். மத சகிப்புத்தன்மைக்கும் மற்றும் ஏற்றுக் கொள்ளுதலுக்கும் மலேசியா ஒரு மிகச் சிறந்த உதாரணமாகும். இங்கே பெளத்தர்கள் இப்புனித நாளை சுதந்திரமாக கொண்டாவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள். அனைவரும் அவர்களின் நம்பிக்கை எதுவாக இருந்தாலும் இன்பம், பரிவு மற்றும் சமமான அன்பு ஆகியவற்றை பெறுவதற்கு உரியவர்கள் ஆவர்கள். நாம் அனைவரும் இம்மாதிரியான எண்ணங்களைக் கொண்டிருந்தால்தான் உலகம் அமைதியாக இருக்கும். இப்படித்தான் நாம் விசாக தினத்தைக் கொண்டாட வேண்டும் – துன்பம் குறைந்த வாழ்வு வாழ நமது உறுதியை பலப்படுத்துதல், நமது மனங்களை மாற்றுதல், கருணையாக இருத்தல் மற்றும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் அனைத்து மனித குலத்திற்கும் வழங்குதல்.
குறிப்புகள்:
- Rinpoche on National TV2’s Wesak Day Special!
- Appreciation Movie for KH Wesak Fair Volunteers
- Double Rainbow at Kechara Wesak Day Fair
- I Was So Happy Yesterday!!!
- My Thank You Message to Wesak Volunteers 2011
- Special Day!!
- Spiritual Fun at Kechara’s Wesak Fair 2011
- Sunway Pyramid Wesak Fair 2012
- Wesak Day The World Over
- 12,0000 People To Take Part In Wesak Day Procession In Melaka from Malaysiandigest.com
- 5 places to celebrate Wesak Day in Malaysia from Star2.com
- Celebration Of Wesak from Maithri.com
- Devotees help spruce up temple for Wesak celebration from TheStar.com.my
- Everything you need to know about Wesak Day from Expatgo.com/my/
- Vesak from Wikipedia.org
- Wesak Day from Explorer.justenglish.com
- Wesak Day from Officeholidays.com
- Wesak Day 2017 and 2018 from Publicholidays.com.my
- Wesak Day in Asia – Significance and Celebration! from Asiaplacestosee.com
- Wesak Day in Malaysia from Wonderfulmalaysia.com
மேலும் பல சுவாரஸ்யமான இணைப்புகளுக்கு:
- மலேசியாவில் இந்தியர்கள்
- தைப்பூசம் – முருகப்பெருமானின் விழா
- நாவில் சுவையூறும் 25 வகையான மலேசிய உணவுகள்
- காவாய் டாயாக் – அறுவடை திருநாள் கொண்டாட்டம்
- டிராகன் படகு திருவிழா: பாரம்பரிய மற்றும் நவீன கலாச்சாரத்தின் இணைவு
- மலேசியாவில் முடியாட்சி முறை
- Chenrezig Ngesung Kundrol
- Blessing Eye Problems
- The Buddhist Protectors of the Chinese Zodiac
- Holy Place of Kuan Yin
- Ganapati Ragavajra
- 1000-Armed Kuan Yin-Foo Hai Ch’an Monastery
- Deaf Blind and Mute Transforms into 1,000 Arm Chenrezig
- Avalokiteshvara, Turkey Swamp, Marc & Me
- Visiting the Huge Kuan Yin in Pinang
- Something Simple for the Deceased
- Pu Tuo Shan
- The Meaning of OM MANI PADME HUNG
- Kuan Yin of Macau City
Please support us so that we can continue to bring you more Dharma:
If you are in the United States, please note that your offerings and contributions are tax deductible. ~ the tsemrinpoche.com blog team
நன்றி ரின்போச்சே அவா்கேள இந்த தினத்தை பற்றி விழக்கியதற்க்கு.மலேசியாவில் விசாக தினம் ஒரு பொது விடுமுறையாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.விசாக் என்றும் அழைக்கப்படும் விசாக தினமானது, சாக்கியமுனி புத்தரின் வாழ்க்கை வரலாற்றில் மூன்று முக்கிய நிகழ்வுகளான அவருடைய பிறப்பு, 35-ஆவது வயதில் ஞானம் பெற்றது மற்றும் 80-ஆவது வயதில் உலகை விட்டு மறைந்தது ஆகியவற்றை பௌத்தர்கள் நினைவுகூர்ந்து கொண்டாடும் நாள் ஆகும்.