டோர்ஜே ஷுக்டேனுக்கு ஊதுபத்தி காணிக்கை
பௌத்த மதத்தில் ஊதுபத்தி நீண்ட காலமாக மிக முக்கியமான இடத்தைக் கொண்டுள்ளது. தேராவதா, மகாயனா, வஜ்ராயனா, ஜென் அல்லது திபெத்திய பாரம்பரியம் அல்லது வேறு எந்த பிரிவாக இருந்தாலும் சிந்தனைப் பள்ளியாக இருந்தாலும், ஊதுபத்தி என்பது புத்தர்களுக்கும் அறிவொளி பெற்றவர்களுக்கும் காணிக்கையாகப் பயன்படுத்தப்படும் மிகவும் பொதுவான மற்றும் அடிப்படைப் பொருள்களில் ஒன்றாகும்.
பௌத்த வரலாற்றின் படி, ஊதுபத்திப் பயன்பாடு புத்தர் ஷக்யமுனியின் காலத்தில் தொடங்கியதாக பதிவாகியுள்ளது. மகதா சாங்மோ என்ற பெண் ஊதுபத்தியையும், பிராத்தனையையும் காணிக்கையாக வழங்கி, புத்தரிடம் தனது கிராமத்திற்கு வரும்படி கேட்டுக் கொண்டார். மகதா சாங்மோ புத்தரின் பிரதான புரவலர் சுடத்தாவின் மகள். புத்தர் ஷக்யமுனி மீதான தனது தந்தையின் அபரிமிதமான நம்பிக்கையை அவள் பிரதிபலித்தாள். அவள் அவருடைய தீவிர பக்தை.
திருமணத்திற்குப் பிறகு புத்த மதம் பின்பற்றப்படாத ஒரு கிராமத்திற்குச் சென்றாள். தனது குருவான புத்தரை மீண்டும் சந்திக்க மிகவும் விரும்பினாள். ஆகவே ஒரு நாள் அவள் தன் மருவீட்டின் கூரையின் மீது ஏறி, ஊதுபத்தி எற்றி புத்தரின் தரிசனம் கிடைக்க மனதார வேண்டினாள். அவளுடைய வேண்டுதலைக் கேட்டு புத்தர் ஷக்யமுனி தனது பரிவாரங்களுடன் அவளுடைய கோரிக்கையை நிறைவேற்ற வானத்திலிருந்து இறங்கினார். புத்தரைச் சந்தித்ததும் அவருடைய போதனைகளைக் கேட்டதும் கிராம வாசிகள் அனைவரும் பௌத்தர்களாக மாறினர் என்று கூறப்படுகிறது. இதன் வழி மகதா சாங்மோவின் இதயப்பூர்வமான வேண்டுதல் தன்னைச் சுற்றி உள்ளவர்களுக்கும், அடுத்து வரும் தலைமுறையினருக்கும் பயனளித்தது.
மகதா சாங்மோ புத்தரிடம் வேண்டும் போது பின்வரும் வசனத்தை ஓதினாள்:
MA LU SEM CHEN KUN GYI GON GYUR CHING
DU TE PUNG CHAY MI ZAY JOM DZAY LHA
NGO NAM MA LU YANG DA KYEN GYUR PAY
CHOM DEN KOR CHAY NAY DIR SHEG SU SOLவிதிவிலக்கு இல்லாமல் அனைத்து உயிரினங்களையும் பாதுகாப்பவர்,
எண்ணற்ற எதிர்மறை சக்திகளின் தெய்வீக அடக்குமுறை,
தெய்வம், அனைத்தையும் பூரணமாக அறிந்தவர்,
பகவான் மற்றும் உதவியாளர்கள், தயவுசெய்து இங்கே வாருங்கள்.
டோர்ஜே ஷுக்டேனுக்கு சாங்சோல் அல்லது ஊதுபத்தி காணிக்கை வழங்குவது குறிப்பிட்ட முக்கியத்துவமானது. ஏனெனில் மகதா சாங்மோ டோர்ஜே ஷுக்டேனின் முந்தைய பிறப்பின் ஒருவராக கருதப்படுகிறார்.
திபெத்திய பாரம்பரியத்தில் ஊதுபத்தி காணிக்கை
திபெத்திய பௌத்தத்திலும் மற்ற பௌத்த மரபுகளைப் போலவே மூன்று தங்கங்களுக்கு (புத்தம், தர்மம் மற்றும் சங்கம்) ஊதுபத்தி காணிக்கை செலுத்தும் பாரம்பரியம் பல நூற்றாண்டுகளாக வழக்கத்தில் இருந்து வருகிறது. சடங்கில், நீர், உணவு மற்றும் ஒளி போன்ற பிரசாதப் பொருள்களைச் சுத்திகரிக்க ஊதுபத்திப் பயன்படுத்தப்படுகிறது.
திபெத்திய பாரம்பரிய மருத்துவத்தில் சில நோய்களைக் குணப்படுத்த ஊதுபத்தி ஒரு மருத்துவ பொருளாகப் பயன்படுத்தப்பட்டது. அதில் கலந்துள்ள பொருள்களின் குணப்படுத்தும் தன்மையின் காரணமாக, திபெத்திய ஊதுபத்தி மனச்சோர்வு, அமைதியின்மை, பதட்டம் மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட மனதை அமைதி படுத்தவும் உதவும். திபெத்திய மருத்துவர்கள் தங்களது அறிவை திபெத்தில் கியூட்ஜி என்று அழைக்கப்படும் நான்கு தாந்திரீகங்களிலிருந்து உருவான திபெத்திய மருத்துவ நூல்களில் கண்டுபிடித்தனர். அவை வேர் தாந்திரீகம், அறிவொளி தாந்திரீகம், வழிமுறை தாந்திரீகம், முடிவு தாந்திரீகம் ஆகியவை.
பாரம்பரிய திபெத்திய மருத்துவ கோட்பாட்டின்படி, பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் சா (நிலம்), மே (தீ), ஃசூ (நீர்), லுங் (காற்று) மற்றும் நம்கா (ஆகாயம்) ஆகிய ஐந்து கூறுகளால் ஆனது. இருப்பினும் மருத்துவத்தில் நோய்களை வகைப்படுத்துவதில் முதல் நான்கு கூறுகள் மட்டுமே பங்கு வகிக்கின்றன. மதமற்ற சூழல்களில், கண்டிப்பாக நோயைக் குணப்படுத்துவதற்கு மட்டும் ஊதுபத்தியைப் பயன்படுத்தலாம்.
சாங்சோல்: ஊதுபத்தி காணிக்கை சடங்கு
ஊதுபத்தி காணிக்கை நாம் கொண்டுள்ள சபதங்களை கடைப்பிடிக்க நினைவூட்டுவதோடு அவ்வாறு செய்வதற்கான காரணங்களையும் உருவாக்குகிறது. இந்த சபதங்களில் ரிவ்வுஜி சபதம், பிரதிமோக்க்ஷ சபதம், போதிசத்துவ சபதம் மற்றும் தாந்திரீக சபதம் ஆகியவை அடங்கும். பல மிக பெரிய துறவிகள், சபதங்களை நன்கு கடைப்பிடித்து மற்றும் அறநெறியில் பூர்ணத்துவம் அடைந்துவிட்டதன் விளைவாக அற்புதமான வாசனையை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. திபெத்திய புத்த மதத்தின் கெலுக் பரம்பரையின் நிறுவனர் உயர்ந்த லாமா த்சொங்காப்பா அத்தகைய ஒரு உதாரணம் என்று அறியப்படுகிறது.
பௌத்த சிந்தனையில், ஒரு போதிசத்துவ பயிற்சியாளரின் ஆறு பரிபூரணங்களில் ஒன்றாக அறநெறி கருதப்படுகிறது. எனவே, முழு அறிவொளியை அடைவதற்கான வழிகளில் இதுவும் ஒன்றாகும். எனவே நாம் புத்தர்களுக்கு ஊதுபத்தி காணிக்கை அளிக்கும்போது, அவர்களைப் போல் ஆகவும், நம்முடைய சபதங்களை முழுமையாக பின்பற்றவும் தகுதிகளை உருவாக்குகிறோம். தகுதிவாய்ந்த ஆசிரியர்களிடமிருந்து நாம் பெறும் மூன்று தொகுப்பு சபதங்களை (பிரதிமோட்க்ஷம், போதிசத்துவம் மற்றும் தாந்திரீகம்) பற்றிக்கொள்வதன் அடிப்படையில்தான் உயர்ந்த சாதனைகள் அமைகின்றன. இந்த சபதங்களைப் பற்றிக்கொள்வதன் வழி நாம் நம் பழக்கங்களை மாற்றியமைத்து, ஒரு உயர்ந்த உண்மைக்குத் திரும்பி விடுகிறோம். இந்த உண்மை சரியான பார்வையின் அடிப்படையில் சுயநலமற்ற செயல்களைக் கொண்டுள்ளது, மாறாக சுயநலமான திட்டங்களுக்கு, அதிக கர்மா மற்றும் முடிவுகளுக்கு வழிவகுக்கும். கர்மாவும் முடிவுகளும் ஒருவரை சம்சாரத்தில் முடிவில்லாமல் பிணைக்கின்றன. தவறான திட்டங்கள் உலகை சிதைக்க வழிவகுக்கும், எனவே அவை மற்றவர்களுக்கும், நமக்கும் தீங்கு விளைவிக்கும். இங்கு சிதைந்த என்பது சுயநல பார்வைகள் மற்றும் இது நிரந்தர நிகழ்வுகளாகக் கருதப்படுகிறது. அனைத்து உணர்வுள்ள மனிதர்களிடமும், “நான்” என்பதற்க்கு முக்கியதுவம் கொடுக்கும் எண்ணம் சிதைவாகும். சாதாரனமாகச் சொன்னால், இது ஆழமான சுயநலத்திற்க்கு வழிவகுக்கிறது. சுயநலம் எந்த நிலையிலும், எந்த சமூகத்திலும் பயனளிக்காது. மற்றவர்களின் தேவைகளைக் கைவிடுவதன் மூலம் சுயநலம் கூடுகிறது. எனவே ஊதுபத்தி காணிக்கை போதிசத்துவ நோக்கம்படி தகுதிகளைச் சேகரித்து உயர்ந்த எண்ணங்களை உணர வழிவகுக்கிறது, இது அனைத்து உணர்வுள்ள மனிதர்களின் தேவைகளை விட சுயநலமாக இருப்பதில் உள்ள தவறுகளைக் காட்டுகிறது. தனக்கு சேவை செய்வதே எல்லா தீங்குகளுக்கும், துயரங்களுக்கும் காரணம். மற்றவர்களுக்கு சேவை செய்வது சம்சாரம் மற்றும் நிர்வாணத்தில் உள்ள அனைத்து மகிழ்ச்சிக்கும் காரணம். ஆகவே, நமது சமயா, மரியாதைக்குரிய சொற்கள், வாக்குறுதிகள், மற்றும் சபதங்களைப் பற்றிக்கொண்டிருப்பது, அதிக நுண்ணறிவு, சிறந்த செயல்கள், நமது தீங்கு விளைவிக்கும் பழக்கங்களில் இருந்து விடுபடல் போன்றவற்றை உருவாக்கி நமக்கு குறைவான தீங்கு விளைவிக்கக் கூடிய கர்ம காரணங்கள் உருவாக வழிவகுக்கிறது. குறைவான தீங்கு விளைவிக்கும் செயல்கள் நமக்கும் நம்மைச் சுற்றியுள்ள அனைவருக்கும் குறைவான துன்பங்களுக்கு வழிவகுக்கிறது. நம்மை நாம் மீட்டுக் கொள்ளவில்லை என்றால் எவ்வாறு நாம் மற்றவர்களுக்கு நீடித்த உண்மையான சேவையை வழங்க முடியும்.
ஆகவே மிக உயர்ந்த உத்வேகத்துடன் சிறந்த தரத்தின் ஊதுபத்தி காணிக்கை வழங்குவது ஒரு எளிய ஆன்மீக செயலாகத் தோன்றலாம், ஆனால் அது அதிக நுண்ணறிவு, நடைமுறையின் ஒருமைப்பாடு, நடைமுறையின் நிலைத்தன்மை தகுதிகளின் தலைமுறை புண்ணியம், நமது சபதங்களை நிறைவேற்றும் திறன், உயர்ந்த சாதனைகள் மற்றும் தலைமுறைக்கும் நுண்ணறிவை பெறக்கூடிய வழிவகைகளை நம் எண்ணங்களில் உருவாக்குகிறது. எல்லா துன்பங்களிலிருந்தும் நம் மனதை விடுவிக்கும் உன்னதமான தர்மத்துக்கும், சம்சாரம் மீது பயணித்த புனித முனிவரான புத்தருக்கும் தினமும் ஊதுபத்தியை தொடர்ச்சியாக மிகுந்த நம்பிக்கையுடன் படைக்க வேண்டும். ஒருவர் துன்பத்தில் இருந்தாலும் பிறருக்கு துன்பம் விளைவிப்பவராய் இருந்தாலும் சம்சாரம் திரும்ப மாட்டார். ஊதுபத்தி காணிக்கை உண்மையில் ஆழமான பயிற்சி ஆகவே ஒருபோதும் நாம் அதைக் குறைத்து மதிப்பிடக் கூடாது.
ஆரம்பகால சாங்சோல் பதிப்பு திபெத்தில் 8ஆம் நூற்றாண்டில் சாம்யே மடாலயம் என்று அழைக்கப்படும் முதலாவது மடாலயம் நிறுவப்பட்ட காலத்திற்கு முந்தையது. இந்த மடாலயம் அரசர் திரிசோங் டெட்சன், சிறந்த தாந்திரீக குரு ரின்போச்சே மற்றும் சிறந்த சூத்திர குரு சந்தரக்ஷிதா ஆகியோரின் ஆதரவில் கட்டப்பட்டது. அசல் பதிப்பு மறைக்கப்பட்டு பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு பக்தர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. சாங்சோல் அல்லது ஊதுபத்தி காணிக்கை கிட்டத்தட்ட ஒரே மாதிரியானது என்பதை நினைவில் கொள்க. சாங் வெறும் தூள் அல்லது நொறுக்கப்பட்ட ஊதுபத்தி. ஊதுபத்தி என்பது ஒரு குச்சி.
திபெத்திய புத்த மதத்தில் கெலுக்பா பரம்பரையில் மிகவும் புத்திசாளியான புனிதர் 5ஆவது தலாய் லாமா ஙாவாங் லொப்சாங், லாமா யேஸே வாங்போ மற்றும் புனிதர் 4ஆவது பஞ்சென் லாமா லொப்சாங் சோக்யி கியால்சென் போன்ற தலைவர்களால் எழுதப்பட்ட சில சாங்சோல் பதிப்புகள் உள்ளன. டோர்ஜே ஷுக்டேனுக்கான சாங்சோல் காணிக்கை ஒரு சுருக்கப்பட்ட உரை (கீழே உள்ள உரை) மற்றொரு மிகச் சிறந்த குருவான புனிதர் செர்கோங் டோர்ஜே சாங் அவர்களால் தயாரிக்கப்பட்டது.
சாங்சோல் எப்பொழுது செய்வது?
சாங்சோல் வழக்கமாக மத கொண்டாட்டங்கள், திருமணங்கள், பிறந்த நாள், லோசர் (திபெத்திய புத்தாண்டு) மற்றும் பூஜைகள் போன்ற சிறப்பான நாள்களில் வெளிப்புறங்களில் நிகழ்த்தப்படுகிறது. திபெத்திய பாரம்பரியத்தின் படி, ஊதுபத்தி பொதுவாக சாங்புரில் வைத்து எரிக்கப்படுகிறது. இது ஒரு பெரிய தாழி வடிவிலான ஜாடி. சாங்புர்கள் பொதுவாக உயரமான தளங்களில் கட்டப்படுகிறது, எடுத்துக்காட்டாக மலைகள், குன்றுகளின் மேல். அவை உள்ளூர் தெய்வங்கள் இருக்குமிடத்திலும் நாகர்கள் வசிக்கும் பகுதிகளிலும் கட்டப்படுகின்றன. சாங்சோல் நிகழ்த்தப்படும்போது அந்தப் பகுதியில் வசிக்கும் மனிதர்கள் உட்பட சுற்றியுள்ள சூழலும் தெய்வீக சக்தியால் ஆசீர்வதிக்கப்படும். பாரம்பரியத்தின்படி, ஒருவரின் சமயாவை மீறுவது மூலம் சேகரிக்கப்பட்ட கர்மாவை சுத்தகரிக்க குறிப்பாக சாங்சோல் செய்யப்படுகிறது. சமயா பொதுவாக நமது ஆன்மீக வழிகாட்டியுடனான ஆன்மீக உறவைக் குறிக்கும், அதே வேளையில், சமயா நமது தர்ம சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் சகாக்களுடனான உறவையும் குறிக்கலாம். எனவே அத்தகைய நபர்களுடன் இணக்கமான உறவை ஏற்படுத்திக்கொள்வது மிகவும் ஊக்குவிக்கப்படுகிறது.
பெரும்பாலும் வீட்டிற்குள் இருக்கும் சூழலைச் சுத்தகரிப்பதற்கும் சாங்சோல் நிகழ்த்தப்படுகிறது. முக்கியமான நிகழ்வுகள் தொடங்குவதற்கு முன் புனிதர் திசெம் ரின்போச்சே, தனது மாணவர்களை வைத்து அந்த அறை அல்லது வீட்டை சாங் செய்வார். பங்கேற்பாளர்களின் தடைகளை நீக்குவதே இதன் நோக்கம், எடுத்துக்காட்டாக அவரைக் காண வருபவர்கள் தெளிவான மனதுடன் ஆலோசனைகளையும் போதனைகளையும் பெறலாம். வீடு, அலுவலகம் அல்லது வளாகம் முழுவதும் தினசரி சாங் செய்தால் அங்கு வசிக்கும் அனைவரின் எதிர்மறை ஆற்றல்கள் விளகி நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும். நமது சுற்றுச் சூழலில் எதிர்மறை ஆற்றல் அல்லது துஸ்ட சக்திகள் இருந்தால், புத்தர்களுக்கு ஊதுபத்தி ஏற்றுவது மூலம் வசிப்பிடங்கள் அல்லது அலுவலகம் முழுவதும் ஊதுபத்தி ஊடுருவி அவர்களை வெளியேற்றவோ அல்லது அமைதிபடுத்தவோ உதவும். வீடு அல்லது அலுவலகத்தில் மாசுபட்ட அல்லது இழந்த ஆற்றல் புத்துயிர் பெற இது மிகவும் சக்திவாய்ந்த வழியாகும். இதை ஆன்மீகத்தில் ஈடுப்பாடு இல்லாதவர்களும் செய்யலாம்.
ஒருவரின் கர்மா மற்றும் தடைகளை சுத்தம் செய்வதைத் தவிர, கட்டுமான தளங்களிலும் சாங்சோல் செய்யலாம். இது முடிந்ததும் ஞானம் பெற்ற மனிதர்கள் அந்த குறிப்பிட்ட இடத்திற்கு வந்து நமக்கு உதவ அழைக்கப்படுவார்கள். எடுத்துக்காட்டாக, டோர்ஜே ஷுக்டேனுடைய தெய்வீக சக்தி செயல்படுத்தப்படும்போது அது அங்குள்ள சுற்றுச் சூழலையும், அங்கு வசிக்கும் உள்ளூர் தெய்வங்கள், தங்கள் பிரதேசத்தைக் கட்டுமானத்தால் ஆக்கிரமிக்கும்போது எளிதில் மனம் புண்படும் நாகர்கள் போன்றவர்களையும் ஆசீர்வதிக்கும். சாங்சோல் சடங்கு அவர்களை ஆசீர்வதித்து அவர்களுக்கு அமைதியை அளித்து மேலும் அவர்களால் ஏற்படக்கூடிய சாத்தியமான தடைகள் மற்றும் விபத்துகளைத் தடுக்கும்.
எப்படி தொடங்குவது
சாங்சோல் வழங்குவதற்கு முன் மனதில் கொள்ளவேண்டிய சில முக்கியமான விஷயங்கள்:
- வழங்கப்படும் ஊதுபத்தி அல்லது சாங் நம்மால் இயன்ற அளவிற்க்கு தரமானதாக படைக்க வேண்டும். அது கண்டிப்பாக சுத்தமாகவும், தூய்மையாகவும் இருப்பது மிகவும் அவசியம்.
- ஊதுபத்தி தயாரிக்கும்போது அவை மனிதர்களாலும் பிராணிகளாலும் மிதிபடக் கூடாது.
- திபெத்திய கலாச்சாரம் அல்லது பாரம்பரியத்தின்படி ஊதுபத்தி பொதுவாக ஜுனிபர், ஊசியிலை, நறுமணம் கொண்ட இலைகள் மற்றும் குச்சிகள், பெரணிகள், சிவப்பு அல்லது வெள்ளை சந்தனம், அகில் கட்டைகள், தேவதாரு, கேதுரு, வெள்ளைப் போளம், குங்கிலியம், குமபஞ்சம், செம்பரத்தை, குங்குமப்பூ, பனித் தாமரை, பச்சைக் கற்பூரம், தாமரை, பூவரசு ஆகிய இன்னும் பல பொருள்கள் கலந்து செய்யப்படும். பெரும்பாலும் மற்ற மருத்துவ மூலிகைகள், வெண்ணெய், வருத்த பார்லி மாவு மற்றும் சர்க்கரை கலவையும் ஒன்றாக எரிக்கப்படுகிறது. நகரத்தில் வசிப்பவர்கள் மற்றும் இந்த இயற்கை பொருள்களை எளிதில் பெற முடியாதவர்கள் சாதாரண கலவையிலான ஜுனிபர் மற்றும் பாதுகாவலர் ஊதுபத்திகளை படைக்கலாம்.
- மதுபானம், வெங்காயம் மற்றும் பூண்டு போன்ற கலவைகளிலிருந்து சேர்க்கப்படாமல், கலவைப் பொருள்கள் அவற்றின் தூய்மையான நிலையில் இருக்க வேண்டும்.
எந்தவொரு பிரார்த்தனை அல்லது சிறப்பான செயல்களைத் தொடங்குவதற்கு முன்பு ஒரு நல்ல உந்துதலை அமைப்பது பொதுவான நடைமுறையாகும். சாங்சோல் சடங்கிற்கும் இதைப் பயன்படுத்த வேண்டும். ஒரு நல்ல உந்துதலை அமைப்பதற்கான கருத்தில் அறிமுகம் இல்லாதவர்களுக்கு, ஒரு குறிப்பிட்ட நல்லொழுக்கத்தின் மூலம் சேகரிக்கப்பட்ட தகுதிகளை அர்ப்பணிப்பதன் மூலம் அனைத்து உயிரினங்களுக்கும் பயனளிக்கக்கூடிய ஒரு உண்மையான நோக்கத்தைக் கொண்ட இந்த தலைமுறை, இந்த சந்தர்ப்பத்தில் ஊதுப்பத்தி காணிக்கை அவர்களின் நல்வாழ்வுக்காக வழங்கலாம்.
சரியான உந்துதலை அமைத்த பிறகு, அடைக்கல வசனங்களை நான்கு, அளவிட முடியாதவற்றைப் பற்றி நினைத்துக் கொண்டு ஓத வேண்டும். தாந்திரீக அதிகாரம் பெற்ற பயிற்சியாளர்கள் தங்களை தனிப்பட்ட யிடாம்கள் அல்லது தியான தெய்வங்களாக காட்சிப்படுத்தலாம். அதன் பிறகு நாங்கள் மூன்று முறை “ஓம் அஹ் ஹும்” என்ற கோஷத்துடன் சாங் சோல் பிரார்த்தனையைத் தொடங்குவோம்.
நமக்கு டோர்ஜே ஷுக்டேனிடம் ஏதேனும் சிறப்பு கோரிக்கைகள் இருக்குமாயின், அவற்றை எப்போது வேண்டுமானாலும் சாங்சோல் பாராயணத்தின் போது செய்யலாம். சாங்சோல் பிரார்த்தனையின் முடிவில் உள்ளூர் தெய்வங்கள் தங்கள் தங்கும் இடங்களுக்கு திரும்பும்படி கேட்டுக்கொள்கிறோம். அர்ப்பணிப்பு வசனங்களை ஓதிக் கொண்டு நாம் சாங்சோல் சடங்கை முடிக்கிறோம்.
குறிப்பு: ஊதுபத்தி படைக்கும்போது நாம் தெய்வங்களை தூய்மைப்படுத்துகிறோம் என்று படையல் தொகுப்பில் எழுதப்பட்டிருந்தாலும், பிரசாதத்தின் மூலம் நம்முடைய சொந்த எதிர்மறை கர்மங்களை அல்லது தடைகளை சுத்தகரிக்கிறோம் என்பதை இது குறிக்கிறது. ஒருவர் தினமும் அல்லது விரும்பும் போதெல்லாம் சாங்சோலை வழங்க முடியும். எந்த தீங்கும் இல்லை, வரம்புகளும் இல்லை.
டோர்ஜே ஷுக்டேனுக்கு தூப பிரசாதம் படைத்தல்
டோர்ஜே ஷுக்டேனுக்கு ஊதுபத்திகள் படைக்கும் இரண்டு வெவ்வெறு மந்திரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. சாங்சோல் சடங்கைச் செய்யும்போது இரண்டில் ஒன்றை ஓதலாம்.
காண்டென் செர்கொங் எழுதிய சாங்சோல் பிரார்த்தனை
JAM MGON RGYAL BA’I BSTAN SRUNG RDO-RJE SHUG-LDAN RTSAL CHEN PO’I BSANGS MCHOD [DGE LEGS MCHOG STSOL] BZHUGS SO
(சாங் படையல் செய்யும் முன், தூபப் பொருள்களைச் சேகரிக்கவும், பிறகு அடைக்கலம் மற்றும் போதி மனம் தலைமுறை வசனங்களை மூன்று முறை உச்சரிக்கவும்.)
ஹும்!
என்னை நான் யிடாமாக காட்சிபடுத்துகிறேன், இதயத்திலிருந்து,
தூபத்திலிருந்து அனைத்து தவறுகளையும் அழிக்க ஒளி வெளிப்படுகிறது,
பரிபூரணத்தில் ஐந்து விரும்பத்தக்க குணங்கள் நிறைந்த வாசனை,
களங்கமற்ற ஆனந்தத்தை வழங்குவது விழிப்புணர்வின் அளவைக் கூட்டுகிறது.
ஓம் அஹ் ஹும் (ஆசீர்வதிக்க பல முறை செய்யவும்)
ஹும்!
வேர் மற்றும் பரம்பரை குருக்கள், மூன்று நகைகள்,
டகாக்கள், டகினிகள் மற்றும் தர்ம பாதுகாவலர்கள்,
குறிப்பாக டோர்ஜெ ஷுக்டேன் மற்றும் பரிவாரம்,
எல்லையற்ற மந்திர சக்தியால் இங்கு வாருங்கள்.
மேலும் பிறப்பு, போர் வீரர், புரவலர் தெய்வங்கள்,
உள்ளூர் தெய்வங்கள், ஆவிகள் மற்றும் எட்டு பிரிவுகளுடன் பாதுகாவலர்கள்,
படையலுக்கு தகுதியான விருந்தினர்களின் கூட்டம்,
தயவுசெய்து இங்கே வாருங்கள்.
ஒவ்வொருவரும் மகிழ்ச்சியுடன் தங்கள் இருக்கையில் வசிக்கிறார்கள்,
யோகியின் ஒப்படைக்கப்பட்ட செயல்பாடுகளை நிறைவேற்றுவதற்காக,
வெளிப்புற உட்புற படையல்கள், அர்ப்பணிப்பு பொருள்கள் மற்றும் பரிசுகள்,
இவற்றை ஏற்றுக் கொண்டு ஒப்படைக்கப்பட்ட செயல்களை நிறைவேற்றுங்கள்.
க்யே!
அகர், சந்தன கட்டை, ஆறு மருத்துவ பொருள்கள், மற்றும் தாவரங்கள்,
எரியும் ஞான நெருப்பிலிருந்து வரும் புகை மேகம் வானத்தை முழுவதும் சூழ்கிறது,
லாமாக்கள், யிடாம்கள் மற்றும் மூன்று நகைகள் ஆகியவற்றின் வேர் மற்றும் பரம்பரையை சுத்தகரிக்கிறது.
டகாக்கள், டகினிகள் மற்றும் தர்ம பாதுகாவலர்களையும் சுத்தகரிக்கிறது.
குறிப்பாக வெற்றியாளர் மஞ்சுநாதரின் தலைமை பாதுகாவலரை சுத்தகரிக்கிறது,
டோர்ஜே ஷுக்டேன் மற்றும் நான்கு அதி முக்கிய வெளிப்பாடுகள்.
பிறப்பு, போர், மற்றும் ஐந்து புரவலர் கடவுள்களை சுத்தகரிக்கிறது.
உள்ளூர் தெய்வங்கள், ஆவிகள், பாதுகாவலர்கள் மற்றும் எட்டு வகுப்புகளைச் சுத்தகரிக்கிறது.
தகுதியான விருந்தினர்களுக்கு ஊதுபத்தி வழங்கும் சக்தியால்
சண்டை மற்றும் சமயாவின் அனைத்து தெளிவற்ற தன்மைகளும் சுத்தகரிக்கப்படட்டும்.
ஆயுட்காலம், தகுதி மற்றும் சக்தி அனைத்தும் அதிகரிக்கட்டும்.
மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பஞ்சம், போர் மற்றும் தகராறு போன்ற அனைத்து நோய்களையும் சமாதானப்படுத்துங்கள்.
பயிர்கள் செழிப்பாக வளரட்டும், மழை சரியான நேரத்தில் பெய்யட்டும்.
இருண்ட பக்கத்தின் பேய்களின் பிரிவுகளை வென்று, நேர்மறை அதிகரிக்கட்டும்,
மேலும் தன்னிச்சையாகவும் சிரமமின்றி நட்புகொண்டு,
விரும்பியபடி எல்லா இலக்குகளையும் அடையுங்கள்.
KI KI SO SO, LHA GYEL LO!
ஹும்!
மகிழ்ச்சி மற்றும் திருப்தியடைந்து விருந்தினர்கள், தங்கள் தங்குமிடங்களுக்குத் திரும்புகிறார்கள்,
நடவடிக்கைகளுக்கான கோரிக்கையின் பேரில் மீண்டும் திரும்புகிறார்கள்.
இந்த நல்லொழுக்கத்தால் நானும் மற்றும் எல்லா தாய் மனிதர்களும்
மகிழ்ச்சி மற்றும் நன்மைக்கான நிரந்தர நல்வாழ்வைக் கொண்டிருக்கிறோம்.
இந்த சிறப்பான சாங் காணிக்கையை தொகுத்தவர் மஞ்சள் தொப்பி பரம்பரையைச் சார்ந்த காண்டென் செர்கொங் என்ற மறுபிறப்பு பெயரைக் கொண்டவர்.
கெயில்சென் டோர்ஜே ஷுக்டேனுடைய மங்களகரமான எரியும் ஒளி என்ற சாங் படையல்
கடுமையான சக்திவாய்ந்தவர்களின் கூட்டத்திற்கு மரியாதை
மற்றவர்களை விட அதிக வலிமையான சக்தியுடன்
புத்தர் லோசாங் வஜ்ரதாராவின் அந்த போதனைகள்!
போதனைகளின் சாரத்தைப் பாதுகாக்க தைரியம்
(இங்கே, ஒருவர் டோர்ஜே ஷுக்டேனின் ஐந்து குடும்பங்களுக்கு,கெடெனை சார்ந்த அசாதாரணமான தர்மபாலா ஆகியோருக்கு ஒரு மலையின் உச்சியைப் போன்ற ஏற்றுக் கொள்ளக் கூடிய இடத்தில் சாங் (மணம் புகை பிரசாதம்) படைக்க விரும்பினால்,சமயாவின் சிதைவு இல்லாமல் பல்வேறு வகையான மணம் கொண்ட மருந்துகள், குச்சிகள், விலைமதிப்பற்ற மணல் மற்றும் தூபங்கள், சந்தனம் மற்றும் கற்றாழை போன்ற சேகரிக்கப்பட்ட பொருள்களிலிருந்து தடை செய்யும் ஆவிகளை நீக்க, ஓதுங்கள்:)
ஹும்
நானே வஜ்ரா பைரவ வடிவில் உருவாக்கப்பட்டேன்
என் இதயத்தின் ஹும்மிலிருந்து மிகப் பெரிய ஒளி கதிர்கள் பரவுகிறது
சாங் பொருள்களில் இருக்கும் அனைத்து அசுத்தங்களையும் தூய்மை செய்கிறது
எனவே அவை மூன்று கோளங்களின் மறுக்க முடியாத வெறுமையில் நிலைத்திருக்கின்றன.
(ஆறு மந்திரங்கள் மற்றும் ஆறு முத்திரைகளுடன் ஆசீர்வதித்து, சத்தியத்தின் சக்தியை வெளிப்படுத்துங்கள், “டாக் கி சாம் பாய்… என் விருப்பத்தின் சக்தியால்…” மேலும். அர்ப்பணிப்பு மனிதர்களை உருவாக்க:)
மரணமில்லாத பிரிக்க முடியாத பேரின்பம் மற்றும் வெற்றிடத்தின் பரந்த இடத்தில்,
விரும்பத்தக்க மரத்தின் நுனியில், சிங்க சிம்மாசனத்தின் மேற்பரப்பில், தாமரை, சூரியன் மற்றும் சந்திரன்,
குரு புத்தர் லோசாங் வஜ்ரதாரா
மற்றும் தெய்வங்களின் முழுமையான கூட்டம், சிரித்துக்கொண்டே இருக்கிறது.
(ஞான மனிதர்களை அழைக்க:)
காண்டென் அரண்மனையிலிருந்து, யிகா சோட்ஜின்
மைத்ரேயா, மஞ்சுஸ்ஶ்ரீ, மற்றும் அதிஷா,
மஞ்சுநாதா குரு மற்றும் யூ சன்ஸ்
பரந்த மற்றும் ஆழமான பரம்பரையின் முழு கூட்டமும், பிரார்த்தனைக்கு வாருங்கள்!
உச்ச, அழியாத எ வாம்மின் மாளிகையிலிருந்து,
எல்லாவற்றிலும் பரவக்கூடிய, மாறாத குஹயசமாஜா, ஹெருகா,
வஜ்ரா பயங்கரவாதி மற்றும் தெய்வங்களின் புரவலர்கள்
தாந்திரீகத்தின் நான்கு வகுப்புகளிலும், பிரார்த்தனைக்கு வாருங்கள்!
த்சாம்பூலிங்கின் இருபத்து நான்கு உச்ச இடங்களிலிருந்து,
ஹீரோக்கள் மற்றும் ஹீரோயின்களின் சேனைகள், ஒரு தாயின் அன்புடன்,
உயர்ந்த பேரின்பத்தின் சிறந்த பாதையில் உதவி வழங்கவும்,
உங்கள் சக்தியின் மூலம் நினைத்தபடி விரைவாக பிரார்த்தனைக்கு வாருங்கள்!
சில்வா த்செல் (கூல் வூட்) போன்ற எட்டு கல்லறைகளிலிருந்து
ஒவ்வொரு வஜ்ரா அரண்மனையும், நீங்கள் எங்கிருந்தாலும்,
பிரதான மனிதர்களின் மூன்று நோக்கங்களின் பாதுகாவலர்களே
பாதுகாவலர்களைப் பாதுகாக்கும் தர்மத்தின் புரவலர்கள் பிரார்த்தனைக்கு வாருங்கள்!
குறிப்பாக வலிமை மிக்க டோர்ஜே ஷுக்டேனின் ஐந்து குடும்பங்கள்
யாருடைய சக்தி, மற்றும் திறன் மற்றவர்களை விட பெரியது, விரைவானது,
மற்றும் ஒன்பது தாய்மார்கள், எட்டு துறவிகள், பத்து இளமையான பாதுகாவலர்கள்
மற்றும் உதவியாளர் காச்சே மார்போ, பிரார்த்தனைக்கு வாருங்கள்!
மேலும் எனது யோகியின் தனிப்பட்ட பாதுகாவலர்,
எதிரியை அழிக்கும் பாதுகாவலர்கள், இடப் பாதுகாலர்கள், பிறப்பு பாதுகாவலர்கள், போன்றவர்கள்,
நல்லொலுக்கத்தின் பக்கத்தில் பாதுகாக்கும் அனைத்து தேவர்களும், நாகர்களும்,
தயவுசெய்து சாங் படையலுக்கு விருந்தினர்களாக வாருங்கள்!
மூன்று இடங்களிலிருந்து வெளிவரும் ஒளி மூலம் மூன்று வஜ்ராக்கள்,
அவற்றின் இயற்கையான தங்கும் இடங்களிலிருந்து, ஞான உண்மை உடல்கள் மற்றும் உடல்களிலிருந்து
அர்ப்பணிப்பு மனிதர்களுடன் பிரிக்க முடியாமல் நிலைத்திருக்க வாருங்கள்,
அவர்கள் விரும்பிய ஒவ்வொரு இருக்கைகளிலும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
(பிறகு, உண்மையான மந்திரம் மற்றும் சாங் படையலைப் பொறுத்தவரை:)
BHRUM (བྷྲཱུཾ),இல் இருந்து எரியும் நகைக் கப்பல், அதன் உள்ளே,
உருகிய தங்கத்தின் மேடுகளை எரிப்பது போன்ற ஒரு பெரிய நெருப்பு.
சமாதி, மந்திரம் மற்றும் முத்ரா, ஆசீர்வதிக்கப்பட்ட வாசனைகள் மற்றும் சிறந்த மருந்துகள்,
மேகங்கள் போல் உருவாக்கப்பட்ட சமந்தபத்ராவின் படையல்கள்,
மூன்று மடங்கு அன்பான ரூட் குருக்களுக்கு சாங்.
தயவுசெய்து இந்த வாழ்க்கையில் யுகநாதத்தை அடைவதற்கான சித்தியை வழங்குங்கள்.
புத்தர் லோசாங் வஜ்ரதாராவுக்கான சாங் படையல்.
ஆன்மீக வழிகாட்டியை சரியான முறையில் நம்புவதற்கு சித்தியை வழங்கவும்.
மைத்ரேயாவுக்கும் மற்றும் பரந்த செயல்பாட்டின் பரம்பரைக்கும் சாங் படையல்.
பரந்த கடந்த கால நிலைகளின் சித்தியை தயவுசெய்து வழங்கவும்.
மஞ்சுஶ்ரீ மற்றும் அவருடைய ஆழமான பார்வையின் பரம்பரைக்கும் சாங் காணிக்கை.
ஆழமான பார்வையின் நிலைகளின் சித்தியை தயவுசெய்து வழங்கவும்.
பரம்பரை ஒன்றுபட்ட கடம்ப குருக்களுக்கு சாங் காணிக்கை.
மனப் பயிற்சியின் கட்டளைகளை நிறைவேற்ற தயவுசெய்து சித்தியை வழங்கவும்.
குறிப்பாக மஞ்சுநாதா குருவுக்கும் (த்சொங்காப்பா) மற்றும் மகன்களுக்காக சாங் படையல்.
தூய பார்வை, தியானம் மற்றும் செயலின் சித்தியை தயவுசெய்து வழங்கவும்.
புகழ்பெற்ற உண்மையான மற்றும் பரம்பரை குருக்களை சேர்ப்பதற்காக சாங் படையல்.
மாசற்ற வாழ்க்கை வாழ தயவுசெய்து சித்தியை வழங்கவும்.
பகவான் குஹாசமாஜாவின் தெய்வங்களின் தொகுப்பிற்காக சாங் படையல்.
மாயை உடலில் விரைவாக எழுவதற்கு தயவுசெய்து சித்தியை வழங்கவும்.
விரைவாக பெரிய ஆசீர்வாதங்களை வழங்கும் சக்கரசம்வராவுக்காக சாங் காணிக்கை.
ஆனந்தத்தின் தெளிவான ஒளியின் சித்தியை தயவுசெய்து வழங்கவும்.
ஐந்து தனித்துவமான அம்சங்களைக் கொண்ட வஜ்ரா பைரவருக்கான சாங் படையல்.
மாராசை வென்ற மாயம் வெளிப்பாட்டின் சித்தியை தயவுசெய்து வழங்கவும்.
காலச்சக்ரா, இரட்டை அல்லாத பேரின்பம் – வெற்றிட மகிமைக்காக சாங் படையல்.
வெற்று வடிவத்தின் முத்ராவை நிறைவேற்ற தயவுசெய்து சித்தியை வழங்கவும்.
Sவரையறுக்கப்படாத ஆனந்தத்தை வழங்கும் சக்திவாய்ந்த யோகினிக்காக சாங் படையல்.
உள் மற்றும் வெளிப்புற டக்னிலாந்தை நிறைவேற்ற தயவுசெய்து சித்தியை வழங்கவும்.
செயல்பாட்டுடன் விரைவாக பாதுகாக்கும் வணக்கத்திற்குரிய தாராவுக்கு சாங் படையல்.
எட்டு பெரிய ஆபத்துகளிலிருந்து எல்லையற்ற பாதுகாப்பின் சித்தியை தயவுசெய்து வழங்கவும்.
தாந்திரீகத்தின் எல்லையற்ற நான்கு தொகுப்புகளின் தெய்வ பரிவாரங்களுக்கு சாங் படையல்.
ஒவ்வொரு தாந்திரீக தொகுப்பின் சிறப்புக்கும் தயவுசெய்து சித்தியை வழங்கவும்.
பத்து திசையின் எண்ணற்ற புத்தர்கள் மற்றும் போதிசத்துவர்களுக்கு சாங் பிரசாதம்.
இரண்டு தெளிவற்ற தன்மைகளை முற்றிலுமாக வெளியேற்ற தயவுசெய்து சித்தியை வழங்கவும்.
வேதம் மற்றும் உணர்தல், அமைதியின் கதவு ஆகியவற்றின் இரட்டை அல்லாத விழுமிய தர்மத்திற்காக சாங் படையல்.
உண்மையான பாதைகள் மற்றும் நிறுத்தங்களை ஆர்யா உணர்ந்ததன் சித்தியை தயவுசெய்து வழங்கவும்.
அறிவு மற்றும் சுதந்திரத்தின் எட்டு குணங்களைக் கொண்ட சங்க நகைக்காக சாங் காணிக்கை.
சேர்ப்பது, தயாரிப்பது, பார்ப்பது மற்றும் தியானம் போன்ற பாதைகளின் சித்தியை தயவுசெய்து வழங்கவும்.
தாய்மார்களைப் போல அன்பு காட்டும் ஹீரோக்கள், ஹீரோயின்களுக்கு சாங் படையல்.
சிறந்த பேரின்ப அனுபவத்தை அதிகரிப்பதற்கான சித்தியை தயவுசெய்து வழங்கவும்.
ஞானக் கண் பெற்ற பாதுகாக்கும் பாதுகாவலர்களுக்காக சாங் படையல்.
நான்கு நடவடிக்கைகளை நிறைவேற்றுவதற்கான சித்தியை தயவுசெய்து வழங்கவும்.
மற்றும் குறிப்பாக எதிரி அழிப்பாளர்களின் கெடென் தர்மபாலாவுக்கு
அரசன், பேரரசன் என்ற தலைப்பில் வஜ்ரா, இதய நகை, உங்களுக்காக,
நகை செல்வ தெய்வம், தர்மத்தின் அரசன் டுல்சின்னுக்கு, சாங் படையல்,
சாங் படையல் ஏற்றுக்கொள்ளப்பட்டது, நான்கு நடவடிக்கைகளுக்கு தயவுசெய்து சித்தியை வழங்கவும்.
கண்ணாடி போன்ற ஞானத்தின் விளையாட்டு, வைரோச்சனாவின் உடல்,
இலையுதிர் நிலவு போன்ற உடல் நிறம், மிகவும் அமைதியானது
அமைதிபடுத்தும் கெயில்சென், அனைத்து கண்காணிப்பையும் அகற்றுபவருக்கு சாங் படையல்.
நோய், ஆவிகள் மற்றும் தடைகளை அகற்றுவதற்கு தயவுசெய்து சித்தி வழங்கவும்.
சமத்துவ ஞானத்தின் விளையாட்டு, ரத்னசம்பவாவின் உடல்,
ஒரு லட்சம் சூரியனின் ஒளியைப் போன்ற உடல் நிறம், அதிகரிப்பு நிறைந்தது,
அதிகரிப்பவர் கியால்சென்னுக்கு, மூன்று பகுதிகளின் மகிமையின் அதிகரிப்புக்கு, சாங்
ஆயுள், தகுதி மற்றும் செழிப்பு அதிகரிப்புக்கு சித்தியை வழங்கவும்.
ஞானத்தைப் பாகுபடுத்தும் விளையாட்டு, அமிதாபாவின் உடல்,
ரூபி போன்று பிரகாசமான உடல் நிறம், மூன்று பகுதிகளை அடக்கியாள்பவர்,
மனிதர்களையும் நிலங்களையும் அடக்கியாளும் கியால்சென்னுக்கு, சாங் படையல்.
சக்தியுடன் மூன்று பகுதிகளையும் சேகரிப்பதற்கான சித்தியை தயவுசெய்து வழங்கவும்.
அனைத்தையும் நிறைவேற்றும் ஞானம் விளையாட்டு, அமோகசித்தியின் உடல்,
தாங்க முடியாத அடர் சிவப்பு நெருப்பின் உடல் நிறம், மிகவும் திகிலூட்டும்
அச்சுருத்தும் கியெல்சென், டோர்ஜே ஷுக்டேனுக்கு, சாங் காணிக்கை.
தயவுசெய்து கொலை, குழப்பம், ஈர்த்தல் போன்ற கோபமான சித்தியை வழங்குங்கள்.
சுத்தகரிக்கப்பட்ட ஐந்து கூறுகளாக இருக்கும் தாய்மார்களுக்காக சாங் படையல்.
உயிருள்ள, உயிரற்ற உலகங்களின் செழிப்பு மற்றும் அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் சித்தியை தயவுசெய்து வழங்கவும்.
வடிவம் போன்ற ஐந்து வஜ்ரா தெய்வங்களுக்குப் படையல்.
ஒரே நேரத்தில் ஆனந்தத்தை உருவாக்கும் சிற்றின்ப பொருள்களின் திருவிழாவின் சித்தியை தயவுசெய்து வழங்கவும்.
எட்டு துறவிகளுக்காகவும், இயற்கையின் நெருக்கமான எட்டு போதிசத்துவர்களுக்காகவும் சாங் படையல்.
கற்பித்தல் மற்றும் நடைமுறையின் தர்ம செயல்பாட்டின் அதிகரிப்புக்கு தயவுசெய்து சித்தியை வழங்கவும்.
பத்து இளம் போராளிகள், சுத்தகரிக்கப்பட்ட பத்து அறிவுறைகளுக்காக சாங் படையல்.
தயவுசெய்து எதிரிகளின் மாயாஜால தாக்குதல்களை மாற்றியமைக்கும் சித்தியை வழங்கவும்.
அமைச்சரின் உதவியாளரான காச்சே மார்ப்போவுக்கு சாங் படையல்.
தயவுசெய்து போதனைகளின் எதிரிகளை சாம்பலாக குறைப்பதற்கான சித்தியை வழங்கவும்.
மறுபிரவேச படைகளின் புரவலர்களின் ஏற்ற இறக்கமான கடல்களுக்காக சாங் காணிக்கை.
பகல் மற்றும் இரவின் ஆறு காலக்கட்டங்கள் முழுவதும் எங்களைத் தொடர்ந்து கவனித்துக் கொள்ளுங்கள்.
இந்தப் பகுதியின் நில உரிமையாளர்களுக்கும் மற்றும் நாட்டின் தெய்வங்களுக்காக சாங் காணிக்கை.
எரிச்சலையும் பொறாமையையும் அமைதிபடுத்தி எங்களுக்கு உதவுங்கள்!
எனது யோகியின் குடும்பத்தின் பாதுகாவலருக்காக சாங் படையல்.
உடலும் அதன் நிழலும் போல எங்களுடன் செல்லுங்கள்.
சுருக்கமாக, இந்த காணிக்கையுடன் மேகம் போன்ற சமந்தபாராவின் இந்த சாங் படையல் கூடியிருந்த
உயர்ந்த மற்றும் குறைந்த விருந்தினர்களை மகிழ்ச்சியடையச் செய்து திருப்திபடுத்திய பின்னர்,
அனைத்து தீங்கு, சர்ச்சை, பின்னடைவு மற்றும் குற்றங்களை சமாதானப்படுத்துதல்,
உயர்ந்த மற்றும் சாதாரண சித்திகளை சிரமமின்றி தன்னிச்சையாக நிறைவேற்றுங்கள்!
(இவ்வாறு வழங்கப்பட்டு அறிவுறுத்தப்பட்ட பின்னர், சம்சாரம் மற்றும் நிர்வாணத்தின் அனைத்து சிறப்பையும் அதிர்ஷ்டம், செழிப்பு மற்றும் முழுமையாக்குவதற்கான முறை இங்கே தொடர்கிறது:)
இவ்வாறு உங்கள் மனதை முன்வைத்து முழுமையாக அறிவுறுத்தியதன் மூலம்,
மகிழ்ச்சி அடைந்த குரு புத்தர் லோசாங் வஜ்ரதாரா மற்றும் தெய்வங்களின்
உடல்களிலிருந்து ஒளி மற்றும் தேன் நீரோடைகள் கீழே செல்கின்றன.
தயவுசெய்து தடைகளை சுத்திகரித்து, நான்கு உடல்களின் அதிர்ஷ்டத்தை வழங்குங்கள்.
தயவுசெய்து சிறப்பையும் சுபத்தையும் அழைக்க அதிர்ஷ்டத்தை வழங்குங்கள்.
எங்கள் எஜமானர்கள்’, சீடர்கள்’, ஆதரவாளர்கள்’, பரிவாரங்கள்’, ஆதரிக்கப்பட்டவர்கள்’,
வாழ்வுகள், தகுதி, செழிப்பு, புகழ், வேதப்பூர்வ மற்றும் உணர்திறன் தர்மம்
கோடைக்கடலின் நீர்த்தேக்கம் போல முழுமையாக அதிகரிக்கக்கூடும்.
இந்த நிலத்தால் அடையாளப்படுத்தப்பட்ட அனைத்து பரந்த பகுதிகளிலும், இங்கே
நோய், பஞ்சம், ஆலங்கட்டி, அழிவு, வறட்சி ஆகியவற்றை சமாதானம் செய்யுங்கள்.
சரியான நேரத்தில் மழை மற்றும் எப்போதும் நல்ல பயிர்களின் அதிர்ஷ்டத்தை வழங்குங்கள்
முழுமையான மகிழ்ச்சி மற்றும் ஆனந்தத்துடன் புதிய ஆஸ்தி.
ராஜாக்கள் தர்மத்திற்கு ஏற்ப தங்கள் ராஜ்யங்களை கவனித்துக் கொள்கிறார்கள்,
பத்து நல்லொலுக்கங்களின் ஒழுக்கநெறியில் வாழ்வது,
மாராக்கள் மற்றும் இருண்ட சக்திகளின் உடைமை அனைத்தும் தோர்க்கடிக்கப்பட்டது,
தீமைக்கு எதிரான போரில் வெற்றியின் அதிர்ஷ்டத்தை வழங்கவும்.
பொது பௌத்த போதனைகளின் தங்க மலை
மேலும் குறிப்பாக, ஜெ ரின்போச்சேயின் பிழையற்ற பார்வை தியானம் மற்றும் செயல்,
மோசமான கருத்தாக்கங்களின் கறைகளால் அறியப்படாத, அதிர்ஸ்டத்தை வழங்குங்கள்
பூமிக்கு மேலேயும், கீழேயும் வெளிச்சத்துடன் எரியுங்கள்.
போதனைகளை ஆதரிப்பவர்களைப் பொறுத்தவரை, அனைத்து உயர்ந்த மனிதர்களும்
அந்த தூய்மையான சிறந்த பாரம்பரியத்தின் விடுதலையான வாழ்க்கையை மேற்கொண்டவர்கள் யார்,
கிரீடம் ஆபரணத்தால் பரவியிருக்கும் கெடன், தந்தை புத்தர் மற்றும் அவரது இரண்டு மகன்கள்,
அவர்களின் வாழ்க்கையும் அறிவூட்டும் செயல்பாடும் அதிகரிக்கும் அதிர்ஸ்டத்தை வழங்குங்கள்.
சங்கா சமூகங்கள் தூய்மையான ஒற்றுமையுடனும், ஒழுக்கத்துடனும் வாழ்கின்றனர்,
அவர்களின் போதனை, நடைமுறை மற்றும் தர்மத்தின் மூன்று சக்கரங்களின் அனுபவம்
வளர்பிறை நிலவைப் போல உயர்விலிருந்து உயரும்,
அவற்றின் நிலை வானத்தை விட உயர்ந்ததாக இருக்கும் என்ற அதிர்ஷ்டத்தை வழங்குங்கள்.
பகுத்தறிவு, ஆதார அறிக்கைகள், மற்றும் மறுப்புகளின் பாதையின்
வழி மூன்று செயல்லுபடியாகும் அறிவாற்றல்களுடன் சரியான கண்டறிதல்,
மூன்று வகையான அறிவாற்றல் பொருள்களில் விதிவிலக்கு இல்லாமல் பரிமணாவின் அதிர்ஸ்டத்தை வழங்குதல்,
பகுத்தறிவு மூலம் சரியான அறிவாற்றலை உருவாக்குகிறது.
மூன்று அறிவுகள், நான்கு தயாரிப்புகள் மற்றும் அதன் விளைவாக வரும் சத்திய உடலின் செயல்பாடு,
எட்டு தலைப்புகள் மூலம் முழுமையாக உணரப்பட்டதன் பலனாக உணர்தல் பாதை,
பிரஜ்னபரமிதாவின் மறைக்கப்பட்ட பொருள்,
பாதைகளையும் மற்றும் நிலைகளையும் முழுமையாக நிறைவேற்ற அதிர்ஷ்டத்தை வழங்குங்கள்.
முடிவில்லாத சம்சாரத்தின் தவறுகளின் வேரான அறியாமையை,
முற்றிலுமாக அழிக்கும் சிறப்பு ஞானம்,
புத்தர்களை மகிழ்விக்கும் பாதை, நிரந்தரத்தன்மை மற்றும் வெறுமையின் உச்சத்திலிருந்து விடுபட்டு,
ஆழமான பாதையான மத்யாமிகாவின் அதிர்ஷ்டத்தை தயவுசெய்து வழங்கவும்.
உயிருள்ள மற்றும் உயிரற்ற முறையில் எழும் பயன்முறையில் உறுதியைப் பெறுதல்,
துன்பத்தின் அனைத்து காரணங்களும் எழும் கரடுமுரடான மற்றும் நுட்பமான ஆதாரங்கள்,
அவற்றின் நுணுக்கம், பரவல் மற்றும் கைவிடப்படுவதற்கான வழிமுறைகள் பற்றிய பிரமைகளின் அறிவு,
தயவுசெய்து கறைபடாத அபிதர்மகோஷாவின் அதிர்ஷ்டத்தை வழங்குங்கள்.
விதிவிலக்கு இல்லாமல் இவை உருவாக்கப்படும் தளத்தைப் போலவே, மறுப்பு,
ஆதாரம் மற்றும் அறிவுறுத்தலின் அடிப்படையில் எல்லைகளை நம்பி மூன்று உயர் பயிற்சிகளைப் பயிற்சி செய்தல்,
தயவுசெய்து புத்தரின் 100 000 வசனமான வினய வேதத்தின் அதிர்ஷ்டத்தை வழங்கவும்.
அதேபோல் மிகவும் சிறப்பாக, மற்றவர்களுக்கு உதவுவதற்காக,
இலக்கணம், ஜோதிடம், கவிதை, அகராதி, ஓவியம், கைவினைப் பொருள்கள் மற்றும் மருத்துவம்,
போன்ற துறைகளில் உள்ள அனைத்து குழப்பங்களையும் அறியாமையையும் நீக்குவதன் மூலம் தயவுசெய்து புத்திசாலித்தனமான மற்றும் நுட்பமான தேர்ச்சியின் அதிர்ஷ்டத்தை வழங்குங்கள்.
குறிப்பாக, தயவுசெய்து நடைமுறையில் உள்ள பார்வை, தியானம் மற்றும் செயலின் அதிர்ஷ்டத்தை வழங்கவும்,
அவை நிறுவனங்கள், ஒழுங்கு மற்றும் விளக்கமளிக்கும் மற்றும் உறுதியான அர்த்தங்கள் என்பதில் சந்தேகத்திற்கு இடமின்றி உள்ளன,
துறவறத்தின் அனைத்து நிலைகளிலும் போதிசித்தர், வெற்றிடத்தின் சரியான பார்வை,
ஆறு பரிபூரணங்ள் மற்றும் சேகரிப்பதற்கான நான்கு வழிமுறைகள்.
பின்னர் ஒரு தகுதிவாய்ந்த வஜ்ரா ஆசிரியரிடமிர்ந்து பெற்ற
நான்கு உடல்களின் அதிகாரம், தாந்திரீகத்தின் நுழைவாயிலின் கதவு,
என் வாழ்க்கையை நான் விரும்புவதைப் போலவே வேண்டுதல்களையும் கட்டளைகளையும்
பாதுகாப்பது,
நான்கு அமர்வு யோகாவில் வெற்றியின் அதிர்ஷ்டத்தை வழங்குங்கள்
பின்னர், அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்ட; பிறப்பு, இறப்பு மற்றும் பார்டோ,
அதன் சுத்தகரிப்பாளர்கள் மற்றும் சுத்தகரிப்புப் பலன்கள் சுத்தகரிக்கப்படவேண்டும்,
மொத்த நுட்பமான நிலைத்தன்மையை அடைய
ஆழ்ந்த மண்டல சக்கரங்கள், தெளிவான தெய்வங்கள், முதிர்ச்சியடைந்த தலைமுறையின் அதிர்ஷ்டத்துடன் என்னை ஆசீர்வதியுங்கள்,
வஜ்ரா பாராயணத்துடன் முக்கிய புள்ளிகளைத் துளைக்கும்,
அனைத்து வழிகளின் முடிச்சுகளையும் விடுவித்து அனைத்து காற்றுகளும்
மத்திய வழியில் நுழைந்து, தங்கி, கரைக்கவும்;
இவ்வாறு பேரின்ப வெற்றிட பாதையை வெளிப்படுத்தி, நிறைவு செய்யும் விடுதலை நிலைக்கு என்னை அதிர்ஷ்டத்துடன் ஆசீர்வதியுங்கள்.
அதிலிருந்து பெரிய தூய்மையான மற்றும் தூய்மையற்ற தெளிவான வெளிச்சம் பெறப்படும்,
மற்றும் வெறும் காற்றும் மனமும் நேரடியாக ஒரு முறையில் எழுகின்றது,
அறிகுரிகளும் அடையாளங்களும் கொண்ட வடிவத்தில் ஒரு மாயைப் போல,
தயவுசெய்து ஏழு அம்சங்களைக் கொண்ட யுகநாதாவின் அதிர்ஷ்டத்தை வழங்கவும்.
சுருக்கமாக, சேகரிக்கப்பட்ட அனைத்து நன்மைகளும்
சம்சாரம் மற்றும் நிர்வாணத்தின் ஆசீர்வாதங்களும் உலக மற்றும் உலகியல் ஆகிய அளவில் உருகுவது போல,
மாறாத நம்பிக்கை மற்றும் தூய சமயாவுடன் முழுமையாக அறிவுறுத்தப்பட்டு,
சிறந்த புனிதத்தன்மை மற்றும் சிறப்பான அதிர்ஷ்டத்தை வழங்குங்கள்.
(இவ்வாறு பாராயணம் செய்வது கெடனின் பேச்சு அறிவுறுத்தல்களின் மரபுக்கு ஏற்ப சம்சாரம் மற்றும் நிர்வாணத்தின் அனைத்து சிறப்பையும் பெற்ற ஆசீர்வாதத்தை உருகுவதற்கான வழியாகும். பொதுவான மற்றும் உயர்ந்த சாதனைகள் அனைத்தையும் நேரடியாக இணைத்துக்கொள்வதில் நிலையான நம்பிக்கை இருப்பது முக்கியம். பின்னர் நிறை குறைகளை 100 எழுதப்பட்ட மந்திரத்துடன் சுத்தகரிக்கவும். தவறுகளைத் தாங்கக் கோரிய பின்னர், புறப்படுவதைக் கோருங்கள்.)
ஹும்
தெய்வ புத்தர் லோசாங் வஜ்ரதாரா மற்றும்
அனைத்து நற்பலன்களும் என்னுள் கரைந்துபோகிறது, யோகி.
மூன்று கதவுகளின் அனைத்து அசுத்தங்களும் கறைகளும் சுத்தகரிக்கப்பட்டன,
நான் நான்கு துவக்கங்களைப் பெற்று நான்கு உடல்களை நிறைவேற்ற முடிகிறது.
உலகமயமானவர்கள் சாங் படையலால் திருப்தியடைந்தனர்,
ஒருவருக்கொருவர் பொறாமை மற்றும் தீமை பற்றிய எண்ணங்கள் இல்லாமல்,
அன்பான மனதுடன், அவர்களின் இயல்பான தங்குமிடங்களுக்குத் திரும்புங்கள்.
நான் குவித்த நல்லொலுக்கம் எதுவாக இருந்தாலும்
போதனைகள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு நன்மை பயக்கட்டும்,
மற்றும் குறிப்பாக இது என்றென்றும் தெளிவாக இருக்கும் மாஸ்டர் லோசாங் டிராக்பா போதனைகளின் சாரத்தை ஏற்படுத்தட்டும்!
(விரும்பிய பிரார்த்தனைகள் மற்றும் நல்ல வசனங்களை ஓதுங்கள்)
மேலும் சுவாரஸ்யமான தகவலுக்கு:
- எனது அழகான ஆலயத்தைக் காண்க
- நல்ல நட்புக்கு ஏற்றவர்
- எனது கடவுள் என்னை எவ்வாறு குணப்படுத்தினார்
- கருணா தேர்ந்தெடுத்த வழி
- டோர்ஜே ஷுக்டேன் அவர்களை வேண்டி சிறிய பிரார்த்தனை
- கேச்சாரா ஃபோரெஸ்ட் ரீட்ரீட்டிற்கு கியான்ஸே சிலை வந்தடைந்துள்ளது
- மலேசியாவில் உள்ள பெட்டாலிங் தெருவில் உற்சாகமூட்டும் டோர்ஜே ஷுக்டேன் விற்பனைக்கூடம்!
- புனிதர் பாபா சாவான் சிங் : தெய்வீகத்தன்மை கொண்ட சீக்கிய மத குரு
- உலகின் மிகப்பெரிய டோர்ஜே ஷுக்டேன் கோவில் மாடம்
- வாழ்க்கையின் ஆழமான அர்த்தத்தை அறிய டோர்ஜே ஷுக்டேனுன்
- தெய்வ சக்தியின் மகிமை< /li>
- பூச்சோங்கில் மனிதக்குரங்கா
- நல்ல நட்புக்கு ஏற்றவர்
- டோர்ஜே ஷுக்டேன் அவர்களை எல்லா இடங்களுக்கும் கொண்டு செல்வோம்! (ஆங்கிலம், திபெத், சீனம், ஹிந்தி, தமிழ் மற்றும் நேபாளம்)
- மலேஷியா பாரம்பரிய ஆடைகள்
- மலேசியாவில் விசாக தினம்
- குவான் யின் நாள்
- தைப்பூசம் – முருகப்பெருமானின் விழா
Please support us so that we can continue to bring you more Dharma:
If you are in the United States, please note that your offerings and contributions are tax deductible. ~ the tsemrinpoche.com blog team
DISCLAIMER IN RELATION TO COMMENTS OR POSTS GIVEN BY THIRD PARTIES BELOW
Kindly note that the comments or posts given by third parties in the comment section below do not represent the views of the owner and/or host of this Blog, save for responses specifically given by the owner and/or host. All other comments or posts or any other opinions, discussions or views given below under the comment section do not represent our views and should not be regarded as such. We reserve the right to remove any comments/views which we may find offensive but due to the volume of such comments, the non removal and/or non detection of any such comments/views does not mean that we condone the same.
We do hope that the participants of any comments, posts, opinions, discussions or views below will act responsibly and do not engage nor make any statements which are defamatory in nature or which may incite and contempt or ridicule of any party, individual or their beliefs or to contravene any laws.
Please enter your details